கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒலிம்பிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒலிம்பிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra wins Gold Medal in men's javelin throw at Tokyo Olympics)








டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா...


*டோக்கியோ ஒலிம்பிக் - இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை


*டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியின் தங்கத்தை உறுதி செய்த நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக இரண்டாவது தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்


*முதன்முதலில் 2004 ம் ஆண்டு அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..


*இந்தியாவிற்கு 2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கம்.


*நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார் நீரஜ் சோப்ரா.


*ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்...

Tokyo Olympic - ஆடவர் Hockey போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது...

 டோக்கியோ ஒலிம்பிக் - ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது...



Tokyo Olympic-ல் இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் - ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்...

 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது வெள்ளிப் பதக்கம் - ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்...



டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து - P.V.Sindhu wins bronze medal in women's badminton at Tokyo Olympics...

 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார் பி.வி.சிந்து...


டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்வு. 


சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தினார் சிந்து...


ஒலிம்பிக்கில் இரண்டு தனி நபர் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி பி.வி.சிந்து ஆவார்...







டோக்கியோ ஒலிம்பிக் -முதல் பதக்கத்தை வென்றது இந்தியா...

 டோக்கியோ ஒலிம்பிக்  முதல் பதக்கத்தை வென்றது இந்தியா


ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டி : பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.















டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம்...

 விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ்.


அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை.


அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெரிக் ரெட்மண்டைக் குறித்து தான் இங்கு பார்க்கப் போகிறோம்.


1992 பார்சிலோனா ஒலிம்பிக்ஸ்.


அதோ டிராக்கில் ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முதல் அரையிறுதிப் போட்டிக்கு வீரர்கள் தயாராகிறார்கள்.


ஆன் யுவர் மார்க்...


19 வயதிலேயே பிரிட்டனின் 400 மீட்டர் தடகளப் போட்டியின் சாதனை நேரத்தை முறியடித்த டெரிக் ரெட்மண்ட், 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் தான் யார் என்பதை நிரூபிக்க ஐந்தாவது ஓடுதளத்தில் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தார்.


கெட் செட்...


எல்லா போட்டிகளிலும் தன் மகனோடு பயணிக்கும் டெரிக்கின் தந்தை ஜிம், அப்போட்டியில் சுமார் 65,000 பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார்.


கோ... (துப்பாக்கி சத்தம்)


வீரர்கள் தங்களின் ஸ்டார்டிங் பிளாக்கில் இருந்து சீறிப் பாய்ந்தனர். ஓட்டத்தின் முதல் பகுதியிலேயே மெல்ல டெரிக் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.


போட்டியின் எல்லைக் கோட்டுக்கு இன்னும் சுமார் 175 மீட்டர்கள் மட்டுமே பாக்கி... அற்புதமாக ஓடிக் கொண்டிருந்த டெரிக் ரெட்மண்ட் திடீரென துள்ளிக் குதித்தார். அவரது வலது கால் தொடைப் பகுதியில் இருக்கும் ஹேம்ஸ்ட்ரிங்கில் பலத்த காயம் ஏற்பட்டது.


அதுவரை போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்த டெரிக்கை, அந்த ஒரு நொடியில் அவரோடு ஓடிய மற்ற ஏழு வீரர்களும் முந்திக் கொண்டு சென்றனர். அவர் கண் முன்னே, அவரின் ஒலிம்பிக் கனவுக் கோட்டை சுக்கு நூறானது. அவரும் ஓடுதளத்திலேயே சுருண்டு உட்கார்ந்தார். போட்டி அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் குழு அவரை சூழத் தொடங்கியது.


விளையாட்டில் இறுதி வரை வாள் வீசுபவர்களைத் தான் உலகம் உச்சி முகரும். எல்லா வீரர்களும் கிட்டத்தட்ட பந்தய தூரத்தை கடக்கும் போது, மீண்டும் எழுந்து நொண்டி அடித்து பந்தய தூரத்தைக் கடக்கத் தொடங்கினார்.


கண்கள் முழுக்க கண்ணீர், ஹேம்ஸ்ட்ரிங் காயம் கொடுக்கும் மரண வலி... இருப்பினும் எல்லைக் கோட்டை நோக்கிய டெரிக்கின் ஓட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.


அவரை அழைத்துச் செல்ல மருத்துவர்கள் குழு வந்த போதும் போதும் "இல்லை நான் அந்த படுக்கையில் ஏறமாட்டேன். நான் இந்த போட்டியை நிறைவு செய்ய வேண்டும்" என மறுத்தார் என்கிறது இ.எஸ்.பிஎன் வலைதளம்.


ஒற்றைக் காலில் 175 மீட்டர் தூரத்தை மெல்ல வலியோடு தவ்வித் தவ்வி கடந்து கொண்டிருக்க, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அவரது தந்தை, மகனின் வேதனையை அறிந்து தாவி குதித்து, ஒலிம்பிக் 400 மீட்டர் அரையிறுதிப் போட்டி நடந்து கொண்டிருந்த ஓடுதளத்தை நோக்கி விரைந்தார்.


அதிகாரிகள் ஜிம்மை தடுக்க முயல, அவர்களை எல்லாம் தள்ளிவிட்டு, தன் மகனோடு கைகோர்த்தார். தன் மகனை அணைத்துக் பிடித்தவாறு மீத தூரத்தை கடக்க உதவினார் ஜிம் ரெட்மண்ட்.



தன் ஒலிம்பிக் கனவு மீண்டும் சிதைந்ததை எண்ணி, தன் தந்தையின் தோலில் சாய்ந்து கதறி அழுது கொண்டே பந்தய தூரத்தைக் கடந்தார் டெரிக். மீண்டும் என்றால் ஏற்கனவே ஒலிம்பிக்கில் கலந்து கொண்டாரா?


ஆம், 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியில் கடைசி நேரத்தில் டெரிக் ரெட்மண்டுக்கு குதிகாலில் Achilles tendon என்கிற பகுதியில் ஏற்பட்ட காயத்தால் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பந்தைய தூரத்தை தன் தந்தையின் உதவியோடு, சில நிமிடங்கள் கழித்து நிறைவு செய்த டெரிக் ரெட்மண்டின் போராடும் குணத்துக்காகவும், விளையாட்டின் அடிப்படை தத்துவமான Sportsmanship-க்காகவும் 65,000 ஒலிம்பிக் பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தனர்.


1992 பார்சிலோனாவில் நடந்த இந்த சரித்திரப் புகழ் பெற்ற இந்த 400 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஸ்டீவ் லீவிஸ் முதலிடத்தைப் பிடித்தார்.


ஆனால் டெரிக் ரெட்மண்ட் பார்வையாளர்களின் இதயங்களிலும், விடாமுயற்சியின் குறியீடாக பல விளையாட்டு வீரர்களின் மனதிலும் ஒரு நீங்கா இடம் பிடித்தார்.


>>>துப்பாக்கி! * வெள்ளி வென்றார் விஜய் * இந்தியாவுக்கு 2வது பதக்கம்


லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்தது. துப்பாக்கி சுடுதலில் விஜய் குமார் (25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல்) வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்தார். இதன்மூலம் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.
லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் விஜய் குமார் பங்கேற்றார். நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதிச் சுற்றில் 292 புள்ளிகள் பெற்ற விஜய் குமார், இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றில் 293 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் மொத்தம் 585 புள்ளிகள் (292 + 293) பெற்ற விஜய் குமார் 4வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
வெள்ளி பதக்கம்:
முக்கியமான பைனலில் துவக்கத்தில் இருந்தே அபாரமாக ஆடிய விஜய் குமார், 30 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
* இது, ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த நான்காவது பதக்கம். முன்னதாக 2004ல் நடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் "டபுள் டிராப்' பிரிவில் இந்தியாவின் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2008ல் நடந்த பீஜிங் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். லண்டன் ஒலிம்பிக் 10 மீ., "ஏர் ரைபிள்' பிரிவில் இந்திய வீரர் ககன் நரங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
* இது, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 22வது பதக்கம்.
* தவிர இது, தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 9வது பதக்கம். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பிரிட்டன் வம்சாவளியை சேர்ந்த நார்மன் பிரிட்சர்ட் பங்கேற்றார். இவர் 200 மீ., ஓட்டம் மற்றும் 200 மீ., தடை ஓட்டத்தில் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு மொத்தம் 11 பதக்கம் கிடைத்துள்ளது.
இப்போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே கியூபாவின் புபோ (34 புள்ளி), சீனாவின் பெங் டிங் (27) கைப்பற்றினர்.
யார் இந்த விஜய் குமார்
இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்புர் மாவட்டத்தின் ஹர்சவுர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் குமார், 27. இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணிபுரிகிறார். 25 மீ., "ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் 2006 காமன்வெல்த் போட்டியில், 2 தங்கம் வென்றார். பின், 2010 டில்லி காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி கைப்பற்றினார். 
* லண்டன் ஒலிம்பிக்கில் 10 மீ., "ஏர் பிஸ்டல்' பிரிவில் பங்கேற்ற இவர், 31வது இடம் பிடித்திருந்தார்.
* துப்பாக்கிசுடுதலைத் தவிர, குத்துச்சண்டை, டேபிள் டென்னிசில் அதிக ஆர்வம் கொண்டவர்.
* இவருக்கு ரஷ்யாவின் பாவெல் ஸ்மிர்நாக், தனிப்பட்ட பயிற்சியாளராக உள்ளார்.
காலிறுதியில் விஜேந்தர்:
ஆண்களுக்கான குத்துச்சண்டை "மிடில் வெயிட்' 75 கி.கி., எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெரல் கவுஷாவை சந்தித்தார். இதில் விஜேந்தர் சிங் 16-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆக., 6ம் தேதி நடக்கவுள்ள காலிறுதியில் விஜேந்தர் சிங், உஸ்பெகிஸ்தானின் அபாஸ் அடோயிவை சந்திக்கிறார்.
ஜாய்தீப் ஆறுதல்:
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீ., "ரைபிள் புரோன்' பிரிவு பைனலுக்கான தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் ஜாய்தீப் கர்மகர், ககன் நரங் பங்கேற்றனர். இதில் ஜாய்தீப் கர்மகர் 595 புள்ளிகள் பெற்று 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் ககன் நரங் 593 புள்ளிகளுடன் 18வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
பைனலில் இந்திய வீரர் ஜாய்தீப் கர்மகர் 104.1 புள்ளி பெற்றார். மொத்தம் 699.1 (595+104.1) புள்ளிகள் பெற்ற ஜாய்தீப் கர்மகர் 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
லீக் சுற்றில் 600 புள்ளிகள் பெற்ற பெலாரஸ் வீரர் செர்ஜி மார்டினோவ், பைனலில் 105.5 புள்ளிகள் பெற்றார். மொத்தம் 705.5 புள்ளிகள் பெற்ற மார்டினோவ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். தவிர இவர், புதிய <உலக சாதனை படைத்தார். வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை முறையே பெல்ஜியத்தின் லியோனல் காக்ஸ் (599 + 102.2 = 701.2), சுலோவேனியாவின் ராஜ்மண்டு டெபிவச் (596 + 105.0 = 701.0) கைப்பற்றினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Why does heel pain occur?

குதிகால் வலி ஏற்படுவது ஏன்? - கு.கணேசன், மருத்துவர் Why does heel pain occur? தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சி...