கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண் வெளியிட ஐகோர்ட் உத்தரவு

வனச்சரகர் பணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்களின் மதிப்பெண்களை வெளியிட, அரசு பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஐகோர்‌ட், நீதிபதி நாகமுத்து பிறப்பித்த இடைக்கால உத்தரவு: அரசின் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள, மக்களுக்கு உரிமையுள்ளது. நாட்டின் பாதுகாப்பு பற்றிய தகவல் மற்றும் தடை செய்யப்பட்ட தகவல் தவிர, மற்றபடி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
வெளிப்படையாக தகவல்கள் அளிப்பதன் மூலம், ஊழல், முறைகேடு, சாதகமாகச் செயல்படுவது போன்றவை தடுக்கப்படும்.
தேர்வில் பெற்ற மதிப்பெண்களை தெரிந்து கொள்ளும் உரிமை, அடிப்படை உரிமை. சில உரிமைகள், நியாயமான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. எனவே, எழுத்துத் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட வேண்டும்.
கட்-ஆப் மதிப்பெண்களையும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களையும் வெளியிட வேண்டும். வரும், 17ம் தேதிக்குள் இந்த நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
மறுஉத்தரவு வரும் வரை, இறுதி பட்டியலை வெளியிடக் கூடாது. இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டு உள்ளார்


>>>Term-I - Std I-VIII Blue Print & Model Question Papers

>>>லேப்டாப் "பிதா மகன்'

"பெரியது, சிறியது ஆவதும், சிறியது பெரியது ஆவதும், விஞ்ஞான வளர்ச்சியின் அடையாளங்கள். கம்ப்யூட்டரும் இதற்கு தப்பவில்லை.

1940களில் கண்டுபிடிக்கப்பட்ட "கம்ப்யூட்டர்', வீட்டின் அறை முழுவதையும் அடைத்துக்கொண்டு இருந்தது. நாளடைவில், இது "சுருங்க'த் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக, 1979ம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த "பில் மாக்ரிட்ஜ்', கம்ப்யூட்டரின் தனித்தனி பாகங்களை ஒன்று சேர்த்தால் என்ன என சிந்தித்து, முதல் "லேப்டாப்' கம்ப்யூட்டரை வடிவமைத்தார்.
மாற்றி யோசித்த பில்:
இவர் வடிவமைத்த "கம்ப்யூட்டரில்' கீ போர்டும், மானிட்டரும் ஒன்றாக இணைக்கப்பட்டு, கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருந்தது. மானிட்டர் சிறிதாக இருந்ததால், அதை மடக்கி, கீ போர்டில் உள்ள இடைவெளியில் வைக்கும் வகையில் வடிவமைத்திருந்தார் பில். இதை கையடக்க கம்ப்யூட்டர் என்றே முதலில் அழைத்தனர். ஆரம்ப காலத்தில் இதை அமெரிக்க ராணுவ மையத்திலும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிலும் பயன்படுத்தினர். இதை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு நிறுவனங்கள், தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டன.

1983ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மேனி பெர்னான்டஸ் என்பவர், தான் கண்டுபிடித்த கையடக்க கம்ப்யூட்டரை, "லேப்டாப்' என அறிமுகப்படுத்தினர். இன்று நோட்புக் வடிவத்தில் லேப்டாப் வந்துவிட்டது. லேப்டாப்பை முதலாக வடிவமைத்த பில், சமீப காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். செப்.8ம் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஆனால், சதா "பிசி'யாக இருக்கும் கம்ப்யூட்டர் உலகம் என்னவோ, இவரை மறந்து விட்டது. இவர் இறந்ததே, உலகில் ஒரு செய்தியாக பேசப்படவில்லை என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

>>>தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு - நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மாணவர்கள் சேர்க்கையின்போது, இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின், தமிழக கிளையின் செயலரான டாக்டர் ஜெயலால் தாக்கல் செய்த மனு: தனியார் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இடங்களை ஒதுக்க வேண்டும் என, 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் இயற்றியது.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் கல்விக் கட்டண நிர்ணயம் செய்வதற்கு என, குழு உள்ளது. இந்தக் கல்வி நிறுவனங்கள் எல்லாம், தேசிய அளவிலான குழு அல்லது மாநிலக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை பின்பற்ற வேண்டும். தற்போது, தேசிய அளவிலான கட்டண நிர்ணயக் குழு செயல்படவில்லை. அந்தக் குழு செயல்படும் வரை, தனியார் மருத்துவக் கல்லூரிகளை மாநில அரசு ஒழுங்குமுறைபடுத்த வேண்டும்.
இந்த தனியார் கல்லூரிகள், சட்டம் மற்றும் விதிமுறைகளை மதிப்பதில்லை. தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்காக, தமிழக அரசு இயற்றிய சட்டம், மருத்துவக் கவுன்சில் ஒழுங்குமுறை விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

>>>நல்ல எதிர்காலம் பிரபல கல்லூரிகளால் மட்டுமா?

பள்ளி படிப்பை முடித்ததும், மாணவர்களுக்கு முன்னாலுள்ள பெரிய சவால், நல்ல கல்லூரியில் இடம்பெற வேண்டும் என்பதுதான். அது பொறியியல் கல்லூரியாகட்டும், மருத்துவ கல்லூரியாகட்டும் அல்லது கலை-அறிவியல் கல்லூரியாகட்டும். நல்ல கல்லூரியில் படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்று நினைக்கின்றனர்.
பெரும்பாலான கல்வி ஆலோசகர்களும் இதையே வலியுறுத்துவது இன்றைய நடைமுறையாக உள்ளது.
நல்ல கல்லூரியில் படிக்கவில்லை என்றால், வாழ்வில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காமல் போய், சுகமான வாழ்க்கையை வாழ முடியாது என்று நினைத்து விடுகின்றனர்.
ஆற்றல் உங்களுக்குள்ளே...
அனைத்தும் உங்களுக்குள்...
நல்ல கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கான போட்டி, இன்றைய நிலையில் சாதாரணமானதாக இருப்பதில்லை. சில பெற்றோர்களும், மாணவர்களும், நல்ல கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக உள்ளனர். ஆனால் நல்ல கல்வி நிறுவனம் மட்டுமே அனைத்தையும் தந்துவிடாது என்பதை பல மாணவர்கள் மறந்து விடுகின்றனர்.
ஒரு புகழ்பெற்ற கல்லூரி என்பது மாணவர்களுக்கான சில ரெடிமேட் வாய்ப்புகளை வைத்திருக்கலாம். ஏனெனில், பல பெரிய நிறுவனங்கள், அங்கு வந்து தங்களுக்கான மாணவர்களை வேலை வாய்ப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.
ஒரு மாணவர் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், பலவிதமான திறன்களை தனக்குள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை மறத்தலாகாது. அதன்மூலமே, இந்த பரந்துபட்ட உலகில் ஒருவர் எதையும் எதிர்த்து நின்று சாதிக்க முடியும்.
மாணவர்கள் தங்களின் எதிர்மறை எண்ணத்தை கைவிட வேண்டும். ஐயோ, நல்ல கல்லூரி கிடைக்கவில்லையே, அவ்வளவுதான் என்று நினைக்கக்கூடாது.
படிப்புடன் கூடிய வேலை
பாரம்பரியமாக, இந்திய மாணவர்கள், கல்லூரிகளில் படிக்கும்போது வேலை செய்வதிலலை. பகுதிநேரம் அல்லது இன்டர்ன்ஷிப் போன்ற வாய்ப்புகளை பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால் பட்டப் படிப்பை முடித்து வெளிவருகையில், ஒரு மாணவர் அதிக நெருக்கடிக்கு உள்ளாகிறார். என்னதான் சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், பணி அனுபவம் இல்லாத நிலையில், சிறந்த வேலைவாய்ப்பை பெறுகின்ற அவரின் முயற்சியில் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, கேம்பஸ் சிறந்த கேம்பஸ் இன்டர்வியூ வாய்ப்பற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், இன்டர்ன்ஷிப் அல்லது பகுதிநேர பணி ஆகிய வாய்ப்புகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
வேலைக்கான திறனை மேம்படுத்தல்
இன்டர்ன்ஷிப் வாய்ப்பிற்கு பெரிய நிறுவனங்களைத்தான் நாடிச் செல்ல வேண்டும் என்பதல்ல. பல மாணவர்கள், பெரிய நிறுவனங்களில்தான் நல்ல வாய்ப்புகள் இருக்கும் என்று நம்புகின்றனர். ஆனால், பெரிய நிறுவனங்கள் பெரும்பாலும், குறுகிய நிலையிலான வாய்ப்புகளையே வழங்கும்.
கல்லூரி படிப்பின்போது, வெறுமனே விளையாட்டு மைதானம் அல்லது உணவகத்தில் சுற்றித் திரிவதைவிட, அந்த வட்டாரத்திலுள்ள ஏதேனும் ஒரு தொழில் நிறுவனத்தை அணுகி நட்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்ப ரீதியில் அவர்களுக்கு எழும் சிக்கல்களை நீங்கள் தீர்த்து வைத்து, பிரதியுபகாரமாய், தொழிலைக் கற்றுக் கொள்வதுடன், அனுபவச் சான்றிதழையும் பெறலாம்.
பரந்த வாய்ப்புகள்
அனைவராலுமே, உலகத்தரம் வாய்ந்த பல்கலையில் படித்துவிட முடியாது. ஆனால் அதற்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. பல்வேறான நிறுவனங்களிடமிருந்து பெரும் நிதியால், உலகின் புகழ்பெற்ற பல பல்கலைகள், ஆன்லைன் மூலமாக தங்களின் பாடத்திட்டங்களை வழங்கத் தொடங்கியுள்ளன.
இலவசமான பாட உபகரணங்கள், இலவச விரிவுரைகள், குறிப்புகள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை கிடைக்கப் பெறுகின்றன. இந்த முறையில், உங்களின் கற்றல் திறனை சோதிக்க, தேர்வும் உண்டு. எனவே, இத்தகைய வாய்ப்புகளின் மூலமாக, உங்களின் அறிவை நன்கு விசாலமாக்கிக் கொள்ளலாம். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்களின் கையில்.
நீங்கள்தான் தேட வேண்டும்
நீங்கள் படிக்கும் கல்லூரியானது, உங்களுக்கு தேவையான வாய்ப்புகளை வழங்கவில்லை என்றால், அதற்கான சோர்ந்துவிட வேண்டியதில்லை. தேவையான ஆற்றல்களை வளர்த்துக் கொள்வதற்கான நடைமுறை பயிற்சிகளை வெளியில்தான் பெற முயற்சிக்க வேண்டும். ஏனெனில், வெற்றிக்கான வழியானது, எப்போதுமே நேராகவும், எளிதாகவும் இருந்ததில்லை. தடைக்கல்லை படிக்கல்லாக மாற்றுவது முற்றிலும் உங்களின் சாமர்த்தியம் சார்ந்தது. வாழ்த்துக்கள்!

>>>செப்டம்பர் 12 [September 12]....

  • ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றலை கண்டுபிடித்தார்(1609)
  • சுவிட்சர்லாந்து, கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)
  • ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)
  • துருக்கியில் ராணுவ புரட்சி இடம்பெற்றது(1980)
  • ஹாங்காங்கில் ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)

>>>அறிவியல் ரீதியான மொழி ஆய்வுகள் : துணைவேந்தர் வலியுறுத்தல்

""மொழியியல் துறையில் அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,'' என்று மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கல்யாணி வலியுறுத்தினார். இப்பல்கலை மொழியியல் துறை மற்றும் தேசிய நுண்தேர்வு மையம் (மைசூர்) சார்பில் "சமச்சீர் கல்வி- தமிழ் பாடநூல் மதிப்பீடு' தொடர்பான தேசிய கருத்தரங்கு நேற்று துவங்கியது. துறை தலைவர் ரேணுகா தேவி வரவேற்றார்.

துணைவேந்தர் கல்யாணி தலைமை வகித்து பேசியதாவது: இந்திய மொழிகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. மொழியியல் தொடர்பான ஆய்வுகள், அறிவியல் ரீதியாக அமைய வேண்டும். மனித வாழ்வியல் முறைகளை படிப்பதில், மொழிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. மொழியியல் ஆய்வு முடிவுகள் என்பது சமுதாயம், கலாசாரம், பண்பாடு மற்றும் வரலாற்று தாக்கங்களை கொண்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையும் ஆய்வுகள் மாணவர் சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். தேர்வுகளில் மதிப்பீடு என்பது அவசியம். வினா தாள்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விடைத்தாள் தயாரிப்பதற்கும் கொடுக்கப்படும், என்றார்.

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் பேசியதாவது: தரமான கல்வி என்ற நோக்கத்தில் தான் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண்கள் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதற்கு பதிலாக, மாணவர்கள் புரிந்து படித்து, அவர்களின் தனி திறனை வளர்க்கும் விதமாக தற்போதைய சமச்சீர் பாட முறை அமைந்துள்ளது. பள்ளி கல்வி துறை தரமான மாணவர்களை உருவாக்கினால்தான் உயர்கல்வி தரமானதாக அமையும். எனவே, பள்ளி கல்வி துறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகள் இதுபோன்ற கருத்தரங்குகள் முன்எடுத்துசெல்ல வேண்டும் என்றார். தேசிய நுண்தேர்வு மைய அதிகாரி இளங்கோவன், சிண்டிகேட் உறுப்பினர் சாரதாம்பாள் பேசினர். உதவி பேராசிரியர் முனியன் நன்றி கூறினார். மொழியியல் துறை ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...