பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, வீடு அல்லது காரை,
ரோபோட்டுகளை வைத்து சுத்தம் செய்யலாம் என்ற சிந்தனையானது, வெறும் பகட்டும்,
ஆடம்பரமும் நிறைந்தது என்று சொல்லி ஒதுக்கப்பட்டது. இன்றைய நிலையில்,
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற
நாடுகளில், ரோபோடிக் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் முழுவீச்சில்
நடைபெற்று வருகின்றன.
மனித வளத்திற்கு பஞ்சம் நிலவும்
இன்றைய காலகட்டத்தில், பலவிதமான வேலைகளை செய்வதற்கு, ரோபோட்டுகளைப்
பயன்படுத்துவது பயனுள்ளதாக உள்ளது. மேற்கூறிய நாடுகளில், எதிர்வரும்
குறுகிய காலத்தில், பலவிதமான வேலைகளுக்கு, மக்கள், ரோபோட்டுகளை
பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு, விலை மலிவான மற்றும் பலவிதமான வேலைகளை
செய்யும் ரோபோட்டுகளை அதிகளவில் தயாரிப்பதற்கான சூழல் உருவாகும் என்றால்
அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
ரோபோட்களின் பயன்பாடு
இன்றைய விஞ்ஞான யுகத்தில், ரோபோட்களின் பயன்பாடு என்பது விரிவடைந்த
ஒன்றாக விளங்குகிறது. வீட்டுப் பயன்பாடுகள் முதற்கொண்டு, பலவிதமான
தொழிற்சாலை பயன்பாடுகள் வரை, ரோபோட்கள் தேவை இருக்கிறது. தொடர்ந்து செய்ய
வேண்டிய பணிகள், பளுவான பொருட்களை கையாளுதல், வீட்டு வேலைகள், மனிதன் செய்ய
வேண்டிய சில கடினமாக வேலைகள் போன்ற பல பணிகளுக்கு அவை
பயன்படுத்தப்படுகின்றன.
பரந்துவிரிந்த துறை
ரோபோடிக்ஸ் என்பது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட்
எம்பெட்டெட் சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல்
போன்ற பல துறைகளில் சம்பந்தப்பட்டுள்ளது.
ரோபோடிக்ஸ் தொழில்துறையில், பொறியியல் செயல்பாட்டின் பல கட்டங்களில் பல
நிலைகள் உள்ளன. சில பொறியாளர்கள், சிக்கல்களை, ரோபோடிக்ஸ் எவ்வாறு
தீர்க்கிறது மற்றும் செயல்பாட்டை இன்னும் சிறப்புள்ளதாக மாற்றும்
செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள். வேறு சிலர், தற்போது இருக்கும் பொறியியல்
கோட்பாடுகளை, ரோபோட்களை மேம்படுத்துவதில் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் இதன் மேம்பாடுகள்
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது, அறிவியல்
மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில்(SERC) கட்டுப்பாட்டின் கீழ்,
ரோபோடிக்ஸ் துறை தொடர்பான ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகிறது.
பல பல்கலைகள், தேசிய ஆய்வகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றைச் சேர்ந்த பல
நிபுணர்களின் உதவியோடு மட்டும் அல்லாமல், பலவிதமான பிரிவுகளில், Programme
advisory committee ன் உதவியையும் SERC பெறுகிறது.
இந்தியாவில் பின்பற்றப்படும் தராளமய பொருளாதார கொள்கைகளால், நம்
நாட்டில் நிறுவப்பட்டிருக்கும் பன்னாட்டு கம்பெனிகள் மற்றும் பலவிதமான
ஆட்டோமொபைல் கம்பெனிகளில், ரோபோடிக்ஸ் பயன்பாடு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் பயிற்சி வாய்ப்புகள்
ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில், சில பல்கலைகள், பட்டப் படிப்பை
வழங்குகின்றன. இது highly interdisciplinary படிப்பாகும். அதேசமயம்,
இத்துறையில் நுழைய வேறு பல வாய்ப்புகளும் உள்ளன. இப்போதுவரை, இளநிலை
பட்டப்படிப்பு அளவில், ரோபோடிக்ஸ் படிப்பிற்கு, இந்தியாவில் மிகவும்
குறைந்த வாய்ப்புகளே உள்ளன.
அதேசமயம், ஒரு சில கல்வி நிறுவனங்கள், M.Tech மற்றும் MS நிலையில்
இத்துறை சார்ந்த சிறப்பு படிப்புகளை வழங்குகின்றன. Artificial Intelligence
என்பது ரோபோடிக்ஸ் துறையுடன் மிகவும் நெருங்கியவை. பல கல்வி நிறுவனங்கள்,
Artificial Intelligence மற்றும் ரோபோடிக்ஸ் துறையில், முதுநிலைப்
படிப்புகளை வழங்குகின்றன.
நம் நாட்டைப் பொறுத்தவரை, பாரம்பரிய படிப்புகளில் ஒன்றான, Theory of
machines & control போன்ற படிப்பைக்கூட சிறப்பாக கற்றுத்தரும் அளவிற்கு
தகுந்த ஆசிரியர்கள் பல பொறியியல் கல்லூரிகளில் இல்லை. இந்த நிலையில்,
ரோபோடிக்ஸ் துறையில், சிறப்பு பி.டெக் படிப்பை வழங்குவதென்பது இப்போதைக்கு
பயன்தராத ஒரு விஷயம் என்று சில கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இளநிலைப் படிப்பு
இளநிலை அளவில் ஒருவரின் படிப்புத் தேர்வு என்பது தனிப்பட்ட ஆர்வத்தைப்
பொறுத்தது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய
துறைகளில் பி.டெக் படிப்பதானது, ஒருவரின் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள
உதவியாக இருக்கும். முடிவாக, சிறப்பு படிப்பும் தேவை.
தற்போதைய நிலையில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணிப்பொறி
அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். தற்போது
இருக்கும் பாடத்திட்டங்களில் சில மாற்றங்களை கொணர்வது அவசியம். இதன்மூலம்,
மெக்கானிக்கல் பொறியாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் துறையில் திணற அவசியமில்லை.
அதேசமயம், மெக்கட்ரானிக்ஸ் துறையில் வழங்கப்படும் பி.டெக் படிப்பானது,
ரோபோடிக்ஸ் துறையுடன் ஓரளவு நெருங்கி வரும் ஒன்றாக திகழ்கிறது.
இந்தியாவிலுள்ள வேலை வாய்ப்புகள்
ரோபோடிக் தொடர்பான வேலை வாய்ப்புகள் இந்தியாவில் ஓரளவுக்கு
விரிவடைந்துள்ளது. ரோபோடிக்ஸ் துறையில் சிறப்பு(specialisation) படிப்பை
முடித்தவர்கள், மெக்கானிக்கல் தொடர்புகள், சென்சார் - ஆக்சுவேடர்
இன்டக்ரேஷன்ஸ், மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் ஆகியவற்றின்
அடிப்படையில், ரோபோடிக்ஸ் தொழில்நுட்பமாக, ஆட்டோமேஷன் பயன்படுத்தப்படும்
இடங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.
இந்தியாவிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவனங்கள்
Precision automation robotics India limited(PARI)
ABB
Kuka robotics and DiFACTO Robotics and Automation
போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டு அமைப்பு(DRDO), பலவிதமான சூழல்களையும், சிக்கல்களையும் கையாள,
பல்வேறு விதமான ரோபோட்களை வைத்துள்ளது. DRDO, நுண்ணறிவு அமைப்புகள் மற்றும்
ரோபோட்களை கட்டமைக்க, Centre for artificial intelligence and robotics
போன்ற நிறுவனங்களை அமைத்துள்ளது.
வரும் காலங்களில், வர்த்தகம், வீட்டு
உபயோகம், பாதுகாப்பு, போக்குவரத்து, விநியோகம், மெக்கானிக்கல் உள்ளிட்ட
மனித வாழ்வின் பல முக்கிய அம்சங்களில், ரோபோட்களின் பங்களிப்பு
அதிகரித்துவிடும்.
இத்துறையில், அதிகளவு வேலைவாய்ப்புகள் இருந்தாலும், பயிற்சிகள்
குறைவாகவே உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இது தொடர்பான படிப்புகள்
குறைவாகவே வழங்கப்படுகின்றன. ஒரு பல்துறை அம்சமாக இருக்கும் ரோபோடிக்ஸ்,
மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் அல்லது
கணிப்பொறி அறிவியல் துறைகளைப்போல், முதுநிலைப் பட்ட அளவில் ஒரு சிறப்பு
படிப்பாக உள்ளது.
இந்தப் படிப்பில் ஆர்வமுள்ள ஒருவர், இந்தியாவில் சிறந்த கல்வி
நிறுவனங்கள், இப்படிப்பை வழங்கும் வரை காத்திருக்கலாம். மற்றபடி,
இதுதொடர்பான சிறப்பு படிப்புகளுக்கு தற்போதைக்கு, வெளிநாடுகளுக்கு
செல்லலாம்.
ரோபோடிக்ஸ் பொறியாளரின் பணிகள்
* ரோபோட் வடிவமைப்பு.
* பல்துறைகளில் ரோபோடிக் பயன்பாடுகள் பற்றி ஆராய்தல்.
* ரோபோட் அமைப்புகளின் பயன்பாடு மற்றும் வடிவமைப்பில், பொறியாளர்களுக்கு உதவுதல்.
* ரோபோட் தயாரிப்பில் பயன்படக்கூடிய எலக்ட்ரானிக் உட்கூறுகளை ஆராய்தல்.
* ரோபோட்களை உருவாக்கிய பின்னர், குறைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சோதித்தல்.
* தேவைப்படும் இடங்களில், ரோபோட்களை அல்லது ரோபோட் அமைப்புகளை நிறுவுதல்.
* ரோபோட் பாதுகாப்பு அமைப்புகளை நிறுவுதல்.
* பயனாளிகளுக்கு உதவுதல்
உள்ளிட்ட பலவிதமான பணிகள் உள்ளன.
ரோபோடிக் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்
* IITs - Chennai, Delhi, Kanpur, Guwahathi, Powai, Roorki and Kharagpur.
* PSG College of Technology - Coimbatore.
* SRM institute of science and technology - Kanchipuram.
* International Institute of information technology - Hyderabad.
* The university of Hyderabad.
* University college of engineering under Osmania university - Hyderabad
* M.S. University - Baroda
* The institute of technology under the Banaras Hindu university - Varanasi
* The Birla institute of technology and Science - Pilani
* Sri sathya sai institute of higher learning - Prasanthi nilayam.