கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ராணுவ மருத்துவமனைகளில் செவிலியர் பயிற்சி

ராணுவ மருத்துவமனைகள் மூலம் நடத்தப்படும் செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் இளநிலை நர்சிங் படிப்பு பயில விரும்புபவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அழைக்கப்பட்டுள்ளன.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில், வேதியியல், இயற்பியல், உயிரியலில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம், 12ம் வகுப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.   திருமணமாக பெண்கள், விதவைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பவர் 1988 ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 1996 ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் பிறந்தவராகவும், இந்தியராகவும்  இருக்க வேண்டும்.
உடல்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். A4 தாளில் தங்களது சுய விவரங்களை எழுதி அனுப்பி விண்ணப்பிக்கவும். 10ம்,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் 3 பிரதிகள் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பவும்.
அக்டோபர் 8ம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். Integrated Hq Of MoD(ARMY), DG Of Medical Services (ARMY)/DGMS-4B, AG&'s Branch, Room NO 45, &'L&' Block Hutments, New Delhi-110 001 என்ற  முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு www.indianarmy.nic.in, www.indianarmy.gov.in எனும் இணையதளங்களை அணுகலாம்.

>>>வி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியீடு: நட்ராஜ்

தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 500 தேர்வு மையங்களில் நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் இன்னும் ஒரு மாத காலத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நட்ராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆயிரத்து 870 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு, தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் பங்கேற்க 10ம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், பொறியியல் முடித்தவர்கள் அதிகளவில் போட்டி போட்டு விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை எழுத்து தேர்வு நடந்தது. 3483 தேர்வு மையங்களில் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் 9 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்கள் வீடியோ கேமரா மற்றும் வெப்கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டது.
இதுதவிர பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள், தாசில்தார்கள் இதில் இடம் பெற்று இருந்தனர்.
வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது. நேரடியாக வேலை கிடைத்து விடும். கடந்த ஆகஸ்டு மாதம் 12ம் தேதி ஆறரை லட்சம் பேர் தேர்வு எழுதிய குரூப்- 2 தேர்வின் போது விடைத்தாள் வெளியானதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுபோன்ற சம்பவம் வி.ஏ.ஓ. தேர்வில் நடந்து விடக்கூடாது என்பதற்காக கேள்வித்தாள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு இருந்தது.
இன்று நடந்த தேர்வு குறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் கூறியதாவது: வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியாகும். குரூப்- 2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இனி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.

>>>அக்டோபர் 01 [October 01]....

  • உலக முதியோர் தினம்
  • உலக சைவ உணவாளர்கள் தினம்
  • தென்கொரியா ராணுவ தினம்
  • சிங்கப்பூர் குழந்தைகள் தினம்
  • இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது(1854)

>>>நிலுவை உதவித்தொகை: விரைவில் வழங்க புதுச்சேரி அமைச்சர் உறுதி

ஆதி திராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ஸ்காலர்ஷிப் தொகை விரைவில் வழங்கப்படும் என புதுச்சேரி ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜவேலு கூறினார்.
புதுச்சேரியில், ஆதி திராவிட நல மாநில அளவிலான குழு கூட்டம், ஓட்டல் அண்ணாமலையில் நேற்று நடந்தது. முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். நலத்துறை அமைச்சர் ராஜவேலு முன்னிலை வகித்தார்.
ஆதி திராவிடர் தேசிய கமிஷன் துணை இயக்குனர் ராமசாமி, அரசு தெரிவு உறுப்பினர்கள் 18 பேர், அரசு சாரா உறுப்பினர்கள் 26 பேர், அரசின் சிறப்பு அழைப்பாளர்கள் 18 பேர், அரசு சாரா சிறப்பு அழைப்பாளர்கள் 30 பேர் கலந்து கொண்டனர்.
ஆதி திராவிட மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்தும், ஆதி திராவிட துணைத் திட்டத்தின் செயல்பாடு, ஆதி திராவிட மக்களுக்கு அரசுப் பணி ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் தொடர்பாகவும், ஆதி திராவிட மக்களின் நலன் மற்றும் உரிமைகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கலந்தாய்வு செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க, அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் அங்காளன், கார்த்திகேயன், பாட்கோ சேர்மன் பிரசாந்த்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாரிமுத்து, நீல கங்காதரன், தெய்வநாயகம், நலத் துறை செயலர் விவேக் பாண்டே, கலெக்டர்கள் தீபக்குமார், அசோக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நலத்துறை அமைச்சர் ராஜவேலு பேசுகையில், "ஆதி திராவிட மக்களுக்கான சிறப்புக் கூறு நிதி, சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதைக் கண்காணிக்கும் பொறுப்பு முதல்வருக்கு உள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள ரூ.18 கோடி ஸ்காலர்ஷிப் தொகை ஓரிரு தினங்களில் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் ஆதி திராவிட மக்களின் சேதமமைடந்த வீடுகளை இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
அதன் அடிப்படையில், ஹட்கோ உதவியுடன் ரூ.4 லட்சத்தில் வீடு கட்டிக்கொள்ள ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என குறிப்பிட்டார்.

>>>அரசு விடுதிகளுக்கும் சிலிண்டர் விலை உயர்வு

அரசு மாணவர் விடுதிகளுக்கு வழங்கும் எரிவாயு சிலிண்டர்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால், ஒதுக்கப்படும், உணவு செலவுக்குள், உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்பட்டோர், ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு துறை என 2,000க்கும் மேற்பட்ட அரசு விடுதிகள் உள்ளன. இதில், தங்கி படிக்கும் ஒரு மாணவருக்கு காய்கறி, பருப்பு, எரிவாயு செலவு உட்பட கல்லூரி விடுதி என்றால் மாதம் ரூ.750, பள்ளி விடுதி என்றால் மாதம் ரூ.650 வீதம், உணவுச் செலவாக அரசு வழங்குகிறது.
சமீபத்தில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் விலை உயர்வு, அரசு விடுதிகளையும் பாதித்துள்ளது. இதுவரை விடுதிகளுக்கு ரூ.390க்கு வழங்கப்பட்ட மானிய சிலிண்டருக்கு பதிலாக, இனி வர்த்தக சிலிண்டர், ரூ.1045க்கு வழங்கப்படுகிறது. இது கடந்த 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என, விடுதிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
சராசரியாக நூறு மாணவர்கள் உள்ள ஒரு விடுதியில், மாதம் குறைந்தபட்சம் 20 சிலிண்டர்கள் தேவைப்படும். விடுதிகளுக்கு அரசு வழங்கும் உணவு செலவில் எவ்வித மாற்றமும் அறிவிக்கவில்லை. "அரசு வழங்கும் பணத்தை சிலிண்டருக்கு மட்டுமே கொடுத்துவிட்டால், மாணவர்களுக்கு உணவு எப்படி சமைப்பது" என்று, விடுதி காப்பாளர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில துணை செயலாளர் ஜான் கூறுகையில், "தற்போது வழங்கப்படும் உணவு செலவு தொகையை, அண்மையில் தான் அரசு உயர்த்தியது. இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வு எங்களுக்கு சிக்கலாய் மாறியுள்ளது. ஒரு சிலிண்டருக்கு உயர்த்தப்பட்டுள்ள 655 ரூபாயை, அரசு ஏற்க வேண்டும்" என்றார்.

>>>வி.ஏ.ஓ. தேர்வு: தமிழகம் முழுவதும் 9.72 லட்சம் பேர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும், 4,000 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், வெப் கேமரா வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.
வி.ஏ.ஓ., பதவியில் காலியாக உள்ள, 1,870 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஜூலையில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கு, 9.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இன்று காலை, 10 மணிக்குத் தொடங்கி மதியம் ஒரு மணி வரை, தேர்வு நடக்கிறது. 4,000 மையங்களில் நடக்கும் தேர்வை, வீடியோவில் பதிவு செய்ய, தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வில், எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தேர்வாணையம் எடுத்துள்ளது.

>>>டி.இ.டி. மறுதேர்வு: 13 ஆயிரம் பேர் விண்ணப்பம்

டி.இ.டி. மறுதேர்விற்கு, 13 ஆயிரத்து 712 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில், ஆயிரத்து 793 பேரும், குறைந்தபட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 296 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்த வாரம் முதல், ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
டி.இ.டி. மறுதேர்வு, அக்டோபர் 14ம் தேதி நடக்கிறது. ஏற்கனவே நடந்த தேர்வில், தோல்வியடைந்தவர்கள் மட்டும், மறுதேர்வில் பங்கேற்கலாம் என, டி.ஆர்.பி., அறிவித்தது. இதையடுத்து, புதிய விண்ணப்பதாரர்களுக்கும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விவரங்களை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது.
அதன்படி, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...