கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம்

இடஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தேர்வு பெற்றவர் பட்டியலும், இதன் மூலம் ரத்து செய்யப்படுகிறது. புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, 3 வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 2,395 முதுகலை ஆசிரியர் பட்டதாரி பணியிடங்களை நிரப்ப, பிப்ரவரி, 28ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டது. இத்தேர்வில், முதன்மை பாடம், கல்வி முறை மற்றும் பொது அறிவு ஆகியவற்றில் இருந்து, 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதில், கொள்குறி வினாக்களுக்கு, கொடுக்கப்பட்ட பதில், முற்றிலும் தவறாக இடம் பெற்றது. தேர்வாணையம் வெளியிட்ட, தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில், தேர்விலேயே முதல் மதிப்பெண் பெற்றவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், அவர்களின் சாதி அடிப்படையிலான பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து, தேர்வு எழுதியவர்களில் சிலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு:
பொதுப் பிரிவுக்கான தேர்வு முடிவுகளை, வாரியம் முறையாக பின்பற்றவில்லை. கேள்வித்தாளில் இடம் பெற்ற, வினாக்களுக்கான பதில், முற்றிலும் தவறானதாக இருந்ததால், மாணவர்கள் மதிப்பெண் பெறுவதும் தடைபட்டு உள்ளது.
எனவே, தேர்வாணையத்தின் தேர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று வாரத்திற்குள், புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்களை, தேர்வாணையம் வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது டி.ஆர்.பி: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான, "கீ ஆன்சர்" தவறு என்று, உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் குறித்து, மறுமதிப்பீடு செய்து, பிரச்னைக்குரிய விடைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே ஒரு பணியிடத்திற்கு ஒருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும். இதற்கு அழைக்கப்படுபவரின் பட்டியலும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>உணவுப் பதப்படுத்தல் தொழில்நுட்பத்தில் குறுகியகால படிப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் National Institute Of Food Technology Entrepreneurship And Management நிறுவனத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
Information And Communication Technology In Food Processing Industry, மற்றும் Functional Meat Products-ல் அக்டோபர் 26 முதல் 28ம் தேதி வரை பயிற்சிகள் நடைபெற உள்ளன. தொழில் முனைவோர், மாணவர்கள் போன்றோர் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணமாக 8ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
Export Procedure And Policy For Agro Exports pirivukku அக்டோபர் 29 முதல் 31 வரை பயிற்சிகள் நடைபெற உள்ளன. கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அக்டோபர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். www.niftem.ac.in எனும் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.niftem.ac.in எனும் இணையதளத்தை அணுகலாம் அல்லது  0130- 228 1000 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

>>>பொருளாதாரத்தில் பிந்தங்கிய இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு தொழில் குறித்த திறன் வளர்ப்பு இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெற உள்ளன.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு இந்த இலவச  பயிற்சி வழங்கப்படுகிறது. மொபைல் சர்வீசிங், வெப் டிசைனிங், நெட்வொர்க் & செக்யூரிட்டி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டயம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 55 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 735  எம்.எல்.ஏ கட்டடம், 3வது தளம், அண்ணா சாலை, சென்னை எனும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
முதல்வர், ராஜீவ் காந்தி நினைவு தொலைத் தொடர்பு பயிற்சி நிலையம் , ஜி.எஸ்.டி. சாலை, மீனம்பாக்கம், சென்னை - 16 எனும் முகவரியில் கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெற்ற முகவரிக்கு கொண்டு சேர்க்க வேண்டும். www.rgmttc.bsnl.co.in எனும் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 2524 1002 எனும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

>>>வங்கிப் பணியில் ஆர்வம் காட்டினால் சாதிக்கலாம்...

வங்கிப் பணியில் சேர, தமிழகத்தில் ஆர்வம் குறைவாக உள்ளது என, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மாருதி ஸ்கூல் ஆப் பாங்கிங் நிறுவனத்தின், நான்காம் ஆண்டு நிறைவு விழாவில் கோவை, இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: நம் நாட்டில், 1975 வரையிலான காலகட்டத்தில், வங்கிகளில் அதிக பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அக்காலகட்டத்தில், பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும், வரும் ஏழு ஆண்டுகளுக்குள், ஓய்வு பெற உள்ளனர்.
இதனால், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால், இத்துறையில் பல்வேறு நவீன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய தொழில்நுட்பங்களை, எளிதில் பயன்படுத்தும் திறமையை, இன்றைய இளைஞர்கள் கொண்டுள்ளனர்.
ஆர்வம், கடின உழைப்பு கொண்டிருந்தால், சாதிக்கலாம். பீகார் மாநிலத்தினர் அதிக எண்ணிக்கையில் இத்துறையில், பணியாற்றுகின்றனர். இதேபோல், சண்டிகர், மத்தியப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆர்வம் குறைவாக உள்ளது.
கிளர்க் அல்லது அலுவலர் பணியில் சேர்ந்தால், வரும் 15 ஆண்டுகளில், பொது மேலாளராக பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

>>>அக்டோபர் 03 [October 03]....

  • உலக வசிப்பிட தினம்
  • ஈராக் விடுதலை தினம்(1932)
  • கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
  • செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)

>>>பார்வையற்றோரும் கணினியை எளிமையாகக் கையாள்வற்கென இலவச மென்பொருள் [ NonVisual Desktop Access (NVDA)]...

NonVisual Desktop Access (NVDA) is a free and open source screen reader for the Microsoft Windows operating system. Providing feedback via synthetic speech and Braille, it enables blind or vision impaired people to access computers running Windows for no more cost than a sighted person. Major features include support for over 35 languages and the ability to run entirely from a USB drive with no installation. 

>>>பெருந்தலைவர் காமராஜரின் இறுதி ஊர்வலம் - வீடியோ...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...