போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, நேற்று பணி நியமன
உத்தரவுகளை வழங்கினார். ஆசிரியர் தேர்வு வாரியம், 34 உதவி தொடக்கக் கல்வி
அலுவலர் பணியிடங்களை நிரப்ப, சில மாதங்களுக்கு முன், போட்டித் தேர்வை
நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின், தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.
தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி அமைச்சர்
சிவபதி, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், பணி நியமன உத்தரவுகளை
வழங்கினார். தேர்வான, 34 பேரில், 16 பேர் ஆண்கள்; 18 பேர் பெண்கள். 34
பேரும், அவரவர் சொந்த மாவட்டங்களில், பயிற்சியை மேற்கொள்ளும் வகையில்,
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கல்வி அலுவலகங்கள், ஆசிரியர் பயிற்சி மையம்,
பள்ளிகள், ஆகியவற்றில், 59 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என,
தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில்,
துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர்
முகம்மது அஸ்லம், பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>கல்லூரிகளுக்கு கட்டட உறுதிச்சான்று அவசியம்: அண்ணா பல்கலை துணைவேந்தர் கண்டிப்பு
"பொறியியல்
கல்லூரிகள், அண்ணா பல்கலை உடனான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்திட,
கட்டட உறுதிச்சான்றிதழை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்,'' என, அண்ணா
பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு) கூறினார்.
அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரிகள், அதிக கட்டணம் வசூலித்ததாக, மாணவ, மாணவியரிடம் இருந்து, 10 கல்லூரிகள் மீது புகார்கள் வந்தன. அண்ணா பல்கலை பேராசிரியர் ஜெயபாலன் தலைமையிலான, மூவர் குழு, சம்பந்தபட்ட கல்லூரிகளில் விசாரணை நடத்தி வருகிறது. அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலை உடனான இணைப்பு அங்கீகாரத்தை புதுப்பித்திட, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களுடன், கட்டட உறுதிச் சான்றிதழையும் இணைத்து வழங்க வேண்டும். அண்ணா பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு, நான் நேரில் சென்று ஆய்வு செய்ததில், பல கல்லூரிகளில், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர் இல்லாதது தெரிய வந்தது. 100 ஆசிரியர், பணி நியமனம் செய்ய வேண்டியுள்ளது; இதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு, தாமதம் ஆகும் என்பதால், தற்காலிக அடிப்படையில், ஆசிரியரை நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர், எழுத்துத் தேர்வு அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர். எம்.இ., தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழ் கிடைக்கவில்லை என, கூறப்படுகிறது. மாணவ, மாணவியர், உடனடியாக சான்றிதழ் தேவை எனில், அண்ணா பல்கலைக்கு நேரில் வந்து விண்ணப்பித்தால், ஒருசில மணி நேரத்தில், சான்றிதழ் வழங்கப்படும். அண்ணா பல்கலை இணைப்பு காரணமாக, சான்றிதழ் அச்சடிப்பில், சிறிது தாமதம் ஏற்பட்டு, தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 10 நாட்களுக்குள், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு காளிராஜ் கூறினார்.

>>>தனியார் பள்ளிகளுக்கு 9 சதவீதம் கட்டணம் அதிகரிப்பு
"தனியார்
பள்ளிகளுக்கு, ஆண்டுக்கு, 9 சதவீதம் கட்டணத்தை உயர்த்தி
நிர்ணயித்துள்ளோம்,'' என, கட்டண நிர்ணய குழுத் தலைவர், சிங்காரவேலு
கூறினார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: இதுவரை, 1,000 பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் நிர்ணயித்துள்ளோம். புதிய கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், 400 பள்ளிகள் வழக்கு தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கு, டிசம்பருக்குள், புதிய கட்டணம் நிர்ணயிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. முதல் கட்டமாக, 200 பள்ளிகளிடம் விசாரணை நடத்தி, புதிய கட்டணத்தை நிர்ணயித்து விட்டோம். இம்மாத இறுதிக்குள், கட்டண விவரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும். மீதமுள்ள, 200 பள்ளிகளிடம், விசாரணை நடந்து வருகிறது. நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பரிலோ, அந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரம் வெளியிடப்படும். அனைத்துப் பள்ளிகளுக்கும், மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணங்களை, தனித்தனியே அட்டவணையிட்டு வழங்குகிறோம். விலைவாசி உயர்வு, சம்பளம் அதிகரிப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, ஆண்டுக்கு, 9 சதவீதம் வீதம், கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்துள்ளோம். "ஸ்மார்ட் வகுப்புகள்' நடத்துவதாக கூறி, பல பள்ளிகள் தனியாக கட்டணம் வசூலித்து வந்தன. தற்போது, அந்த வகுப்புகளுக்கும் சேர்த்தே, கட்டணம் நிர்ணயிக்கிறோம். எனவே, இனி, அதற்கென தனி கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான, கூடுதல் கட்டணங்களை திருப்பித் தந்துள்ளன. கூடுதல் கட்டணங்களை திருப்பி வழங்கியதற்கான ஆவணங்களை காட்டாவிட்டால், மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளிடம் கேட்டு, உறுதி செய்து கொள்கிறோம். இவ்வாறு சிங்காரவேலு கூறினார்.

>>>கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாதிரி வினா-விடை புத்தகம் வெளியீடு
கல்வியில்
பின்தங்கிய, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை
மூலம், மாதிரி வினா - விடை அடங்கிய புத்தகம், தமிழகத்தில் முதல் முறையாக,
கோவை வருவாய் மாவட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில், நடந்து முடிந்த காலாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு, காலை, மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வியில் பின்தங்கியுள்ள, பொதுத் தேர்வு மாணவர்களுக்காக, "குறைந்தபட்ச கற்றல் பயிற்சி' என்ற மாதிரி வினா - விடை புத்தகம், பள்ளிக்கல்வி துறையால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட, வினா - விடை தொகுப்புகளில் இருந்து, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சை மாவட்ட ஆசிரியர்கள் குழுவினர், முக்கிய வினாக்கள் தெரிவு செய்து, இந்த புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட தொகுப்பை, அந்தந்த மாவட்டத்தில் உள்ள முன்னணி கல்வி நிறுவனத்தின் உதவியுடன், புத்தமாக அச்சடிப்பட்டு, மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக, புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியதாவது:
அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி எட்டும் வகையில், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும், இப்புத்தகம் வழங்கப்படுகிறது. பள்ளிகளில், 20 சதவீத மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோவை மாவட்டத்தில் தான், முதல்முறையாக இந்த வினா - விடை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

>>>மாநில அதிகாரிகள் பள்ளிகளில் நேரடி தொடர்பு கொள்ள விவரம் சேகரிப்பு
கல்வி
துறையில், பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில், மாநில அலுவலர்கள்
நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட கல்வி தகவல்
படிவத்தில், விவரங்கள் சேகரிக்கும் பணி, மாநிலம் முழுவதும் நடந்து
வருகிறது.
தமிழகத்தில், ஒன்று முதல், 12ம் வகுப்பு வரை, இந்த தகவல் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு, குடிநீர், கழிவறை வசதிகள், ஆசிரியர்கள் கல்வி தகுதி, இனத் தகுதி, மாணவர்களின் இன மற்றும் வகுப்பு வாரி விவரங்கள் உட்பட பல விவரங்களை சேகரித்து, கணினியில் பதிவு செய்ய உள்ளனர்.
இதன்மூலம், மாநிலத்தில், கடைக்கோடியில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், பள்ளி குறித்து, மாநில அலுவலர்கள் நேரிடையாக விவாதிக்கவும், தகவல் சேகரிக்கவும் முடியும். இதற்காக, தனி இணையதளம் துவக்கப்பட உள்ளது. விவரங்களை சேகரிக்கும் பணியில், அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

>>>பத்தாம் வகுப்பு தனி தேர்வு "ஹால் டிக்கெட்' வினியோகம்
பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தேர்வுத் துறை அறிவிப்பு:
எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., மற்றும் ஆங்கிலோ இந்தியன் தனித் தேர்வுகள், 15ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கின்றன. மெட்ரிக் தனித் தேர்வு, 15ம் தேதி துவங்கி, 29 வரை நடக்கிறது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் வெளியிடும் மையங்களில், "ஹால் டிக்கெட்' வழங்கப்படும்.
தேர்வர், நேரில் சென்று, ஹால் டிக்கெட்டை பெற வேண்டும். ஹால் டிக்கெட் கிடைக்காதவர், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை அணுகலாம்.இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

>>>நாளை ஆன் லைனில் பட்டதாரி ஆசிரியர் நியமன "கவுன்சிலிங்'
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்.,10ல் நடக்கிறது.
தமிழகத்தில், முதுகலை ஆசிரியர்களை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், ஆன்லைனில் நடக்கிறது. கடந்த 2010-11ம் கல்வியாண்டில், டி.ஆர்.பி., மூலம் நேரடியாக தேர்வாகி, இதில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் நடக்கும், இந்த ஆன்லைன் கவுன்சிலிங்கின்போது, சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து, அக்.,10 ம் தேதி காலை, காலி பணியிடம் பற்றிய விவரம், இன சுழற்சி முறையில் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்படும். விரும்பிய இடங்களை தேர்வு செய்து, நியமன உத்தரவை ஆசிரியர்கள் பெற்றுச் கொள்ளலாம் என, முதன்மை கல்வி அலுவலகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...