கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>உலக பல்கலை விவாதம்: 2013ல் சென்னையில் நடக்கிறது
2013ம் ஆண்டுக்கான உலக பல்கலை விவாதம், சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள 70
முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவ, மாணவிகள் தமிழகத்திற்கு வருகை தர
உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 27ம்
தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை உலக பல்கலைக்கழக விவாதம் நடைபெறும். இந்த
ஆண்டு பெர்லின் நகரில் விவாதம் நடைபெறுகிறது. 1981ம் ஆண்டு முதல் தொடர்ந்து
நடத்தப்பட்டு வரும் இந்த விவாத நிகழ்ச்சி, கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ்
தலைநகர் மணிலாவில் நடைபெற்றது. அதில், 2013 ஆண்டு உலக பல்கலைக்கழக விவாதம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு
செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் நடத்துவது என முடிவு
செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் 2013ம் ஆண்டு இந்த விவாத நிகழ்ச்சி
நடத்தப்படுகிறது என இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நடராஜன்
தெரிவித்தார். உலகம் முழுவதும் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களான, Oxford, Cambridge, Harvard, Yale, MIT, Stanford, Monash, Sydney போன்றவை
இந்த விவாத நிகழ்ச்சிக்கு தங்களின் மாணவ, மாணவிகளை அனுப்பி வைப்பது
வழக்கம். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் உலக
சாம்பியன்களாகவே கருதப்படுவர். போட்டி விதிகளின்படி, முதலில் வரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு
முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதன் பின்னர்
மாணவர்களை குழுக்களாக பிரித்து போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு குழுவுக்கும்,
போட்டி தொடங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக, விவாதத்திற்கான தலைப்பு
வழங்கப்படும். சுமார் 100 அறைகளில் மாணவர்கள் தனித்தனியாக விவாதம்
நடத்துவார்கள். இதில் வழங்கப்படும் புள்ளிகளின் அடிப்படையில், படிப்படியாக அணிகளின்
எண்ணிக்கை குறைக்கப்பட்டு, முடிவில் இறுதிச் சுற்றுக்கான விவாதம்
நடத்தப்பட்டு, சாம்பியன் பட்டம் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான போட்டிகள்
நடக்கும் பெர்லின் நகரில், 2013ம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட உள்ள
போட்டிகள் பற்றி விளக்கமளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>>தஞ்சை, நெல்லையில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் திறப்பு [Veterinary Colleges Opened in Tirunelveli & Thanjavur]...
தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, புதிய கால்நடை
மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்சிங் மூலம்,
சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். கால்நடைகளுக்கு தரமான மருத்துவ
வசதிகளை அளிக்க, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலும், நெல்லை மாவட்டம், ராமையன்
பட்டியிலும் புதிய கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையம்
கட்ட முதல்வர் உத்தரவிட்டார். ஒரத்தநாட்டில், 177.92 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. கட்டமைப்பு
வசதிகளுக்காக, 16.34 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இக்கல்லூரிக்கு,
முதல்வர் மற்றும், 38 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நெல்லை
மாவட்டம் ராமையன் பட்டியில், மருத்துவக் கல்லூரிக்காக, 139.21 ஏக்கர்
நிலமும், கட்டமைப்பு வசதிகளுக்காக, 12.59 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு, முதல்வர் மற்றும், 32 ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கல்லூரிகளிலும், தலா, 40 மாணவ, மாணவியர்
முதலாண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த இரு கல்லூரிகளையும், "வீடியோ
கான்பரன்சிங்" மூலம், முதல்வர் ஜெயலலிதா நேற்று சென்னை கோட்டையில்
நடந்த நிகழ்ச்சியில், திறந்து வைத்தார்.
கால்நடை மற்றும் மீன் வளத் துறையினருக்கு, 3.99 கோடி ரூபாயில், 61 புதிய
வாகனங்களையும் முதல்வர் வழங்கினார். ஆவின் நிறுவனத்தில், பணியின்போது
உயிரிழந்த ஊழியர்களின், 56 வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையிலான பணி
நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.
>>>குரூப் 2 முறைகேடு வழக்கு: 8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி
குரூப் 2 வினாத்தாள் அவுட்டான வழக்கில் கைதான எட்டு
பேரின் ஜாமீன் மனுக்களை தர்மபுரி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகம்
முழுவதும் ஆகஸ்ட் 12ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது.
தேர்வு வினாத்தாள் அவுட்டானது. இதை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,
விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். தர்மபுரி
மாவட்ட தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், 12 பேரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைதான ரங்கராஜன், விவேகானந்தன், பிரபாகரன், பூபேஷ், சுரேஷ்
உள்ளிட்ட எட்டு பேர் தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனு
தொடர்ந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, எட்டு பேரின் ஜாமீன்
மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
>>>மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
"குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடக்கிறது. 2009ல் நடந்த குரூப்-2 தேர்வில், பணியில் சேராதவர்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில், 150 காலி பணியிடங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வு வாரியம் நிரப்பியுள்ளது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்வில் நிரப்பப்படாத 330 பணியிடங்களையும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டி.என்.பி.எஸ்.சி நிரப்பியுள்ளது. இந்த விவரங்களை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்றாவது வாரத்தில் கலந்தாய்வு நடக்கிறது. 2009ல் நடந்த குரூப்-2 தேர்வில், பணியில் சேராதவர்களால் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில், 150 காலி பணியிடங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வு வாரியம் நிரப்பியுள்ளது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்வில் நிரப்பப்படாத 330 பணியிடங்களையும், காத்திருப்போர் பட்டியலில் இருந்து டி.என்.பி.எஸ்.சி நிரப்பியுள்ளது. இந்த விவரங்களை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
>>>டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி: "ரேங்க்' பட்டியல் மாறுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு என, அழைக்கப்படும் "டி.இ.டி.,'
தேர்வில், தேர்ச்சி பெற்ற, 2,448 பேரின், "ரேங்க்' பட்டியல், புதிய
விதிமுறைகளின்படி, மாற்றி அமைக்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த,
டி.இ.டி., தேர்வில், 2,448 பேர் தேர்ச்சி பெற்றனர். "இவர்களது பணி நியமனம்,
பணி நியமனத்திற்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாக
இருக்கும்' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்தது. அதன்படி, புதிய வழிகாட்டி
நெறிமுறைகளின்படி, தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு,
புதிய, ரேங்க் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனால், தேர்வு பெற்றவரின்,
ரேங்க் இடம் மாறலாம்; ஆனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படாது என,
டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தேர்வுப் பட்டியல், ஓரிரு நாளில்
வெளியிடப்படும்.புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், இடைநிலை ஆசிரியர்
பணி நியமனம் மட்டும், சுப்ரீம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வரும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையிலேயே (டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்) நடக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
>>>ஆசிரியர் நியமனத்திற்கு புதிய விதிமுறைகள்: "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, புதிய
விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2 முதல், பட்டப்
படிப்பு வரையில் பெற்ற மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெற்ற
மதிப்பெண்களை, "வெயிட்டேஜ்' அடிப்படையில் கணக்கிட்டு, இனி பணி நியமனம்
நடக்கும்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டப்படி, 1 முதல், 8 வகுப்பு வரை,
பாடம் எடுக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலையில்,
டி.இ.டி., தேர்வை, டி.ஆர்.பி., நடத்தியது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற
தேர்வில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தோற்றவர்களுக்கு,
மறுதேர்வு அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கிடையே, சென்னை
ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே;
அதில் வெற்றி பெறுபவரை, பணி நியமனம் செய்ய, தனி வழிமுறைகளை உருவாக்க
வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில், நான்கு
பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு, இரண்டு முறை கூடி,
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு
செய்து, புதிய விதிமுறைகளை, அரசுக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்று, புதிய
நியமன வழிமுறைகள் தொடர்பாக, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "வெயிட்டேஜ்'
மதிப்பெண்களாக, 15ம்; ஆசிரியர் பட்டயத் தேர்வில் பெற்ற மதிப்பெண்
அடிப்படையில், "வெயிட்டேஜ்' மதிப்பெண்களாக, 25ம் கணக்கிட்டு வழங்கப்படும்.
இத்துடன், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், அதிகபட்சமாக, 60க்கு
கணக்கிட்டு வழங்கப்படும். இந்த வகையில், 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ்
மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
பட்டதாரி ஆசிரியர்:
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண், 10; பட்டப்
படிப்பிற்கு, 15; பி.எட்.,டுக்கு, 15 மற்றும் டி.இ.டி., தேர்வுக்கு, 60
மதிப்பெண் என, 100 மதிப்பெண்களுக்கு, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு,
அதனடிப்படையில் தேர்ச்சி பெறுபவர், பணி நியமனம் செய்யப்படுவர். இவ்வாறு,
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 91: இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவ...
