- சர்வதேச இயற்கை பேரிடர் தினம்
- தாய்லாந்து தேசிய காவல்துறை தினம்
- சர்வதேச நேரம் கணக்கிடும் இடமாக கிரீன்வீச் தேர்வு செய்யப்பட்டது(1884)
- வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டன் டிசியில் இடப்பட்டது(1792)
- துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>அக்டோபர் 13 [October 13]....
>>>அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 15-10-2012 அன்று நடைபெற உள்ளது...[Government/Municipal Higher Secondary School HeadMaster Promotion Counselling on 15-10-2012]...
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித்
தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் 15-10-2012 அன்று காலை 10 மணியளவில் ஆன்லைன் வழியாக நடைபெறவுள்ளது. இதற்கான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் முதுகலை ஆசிரியர்/உயர்நிலைப்பள்ளித்
தலைமையாசிரியர் ஒருங்கிணைந்த முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
>>>பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... [School Education Director's Proceedings]
>>>மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான முதுகலை ஆசிரியர்/உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஒருங்கிணைந்த முன்னுரிமைப்பட்டியல்....
>>>வங்கிகளில் வசூலாகாத கல்விக் கடன் அதிகரிப்பு
கடந்த, 10 ஆண்டுகளாக, பொதுத்துறை வங்கிகள் வழங்கும் கல்விக் கடன்
அதிகரித்து வருகிறது. அதேபோன்று, வசூலாகாத கல்விக் கடனும் உயர்ந்து
வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில், பொதுத்துறை வங்கிகள்
வழங்கிய கல்விக் கடனில், 15 சதவீதத்திற்கு அதிகமான தொகை, வசூலாகாமல்
உள்ளது. வளர்ச்சி விகிதம்: கடந்த 2003-04 முதல் 2011-12ம் நிதியாண்டு வரை,
பொதுத் துறை வங்கிகளின் கல்விக் கடன், ஒட்டுமொத்த அளவில், 35 சதவீத ஆண்டு
வளர்ச்சி விகிதத்தை கண்டு வந்துள்ளது. இதே காலத்தில், வங்கித் துறையின் கடன் வளர்ச்சி, 23 சதவீதமாக இருந்தது
என்பது குறிப்பிடத்தக்கது. "கல்விக் கடன் பிரிவின் வளர்ச்சியே, வங்கிகளின்
சொத்து மதிப்பு குறைவதற்கும் வழி வகுத்துள்ளது" என, எஸ்பிரிட்டோ சான்டோ
செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் சாய்கிரண் புலவர்த்தி தெரிவித்தார். பொதுவாகவே, கல்விக் கடன் என்பது, உத்தரவாதமற்றதாகவே வங்கித் துறையில்
கருதப்படுகிறது. பட்டம் பயின்ற மாணவர்கள், துவக்கத்தில் குறைந்த ஊதியத்தையே
பெறுகின்றனர். இதனால், அவர்கள் கல்விக் கடனுக்காக திரும்ப செலுத்தும்
தொகையும் குறைவாக உள்ளது.
நிதி பற்றாக்குறை: இது, வங்கிகள் கல்விக் கடன்
அளிப்பதற்கும், கடனை திரும்ப பெறுவதற்கும் உள்ள இடைவெளியை அதிகமாக்கி,
நிதிப்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. கடந்த 2007-08ம் நிதியாண்டு
நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய கல்விக் கடனில், மொத்த வசூலாகாத கடன், 2
சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6 சதவீதமாக
உயர்ந்துள்ளது. மத்திய அரசின், 2004-05ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், நிதி
அமைச்சர் ப.சிதம்பரம், வங்கிகளின் கல்விக் கடனை ஊக்குவிக்கும் வகையில்
பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து, வங்கிகள் கல்விக் கடன்
வழங்குவதில் தீவிரம் காட்டி வந்தன. இந்த வகையில், அதிக அளவில் கல்விக் கடன்
வழங்குவதில், தென்னிந்தியாவை சேர்ந்த தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா
ஆகிய நான்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. நடப்பு 2012ம் ஆண்டு, மார்ச் கடைசி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின்
மொத்த கல்விக் கடனில், மேற்கண்ட நான்கு மாநிலங்களின் பங்களிப்பு 56
சதவீதமாக உள்ளது. தென்னிந்தியாவை சேர்ந்த, பெரும்பாலான பொதுத் துறை
வங்கிகளின் மொத்த கடனில், கல்விக் கடன் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், தென்மாநிலங்களை சேர்ந்த பொதுத்துறை
வங்கிகளின் மொத்த கடனில், கல்விக் கடன், 2.55 சதவீதமாக இருந்தது. அதே சமயம், இந்திய அளவில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடனில்,
ஒட்டுமொத்த கல்விக் கடன், சராசரியாக 1.17 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.
கடந்த சில மாதங்களாக, கல்விக் கடன் பிரிவின் சொத்து மதிப்பு குறித்து, பல
வங்கிகள் கவலை தெரிவித்து வருகின்றன. அதே சமயம், வங்கிகள் கல்விக் கடன்
வழங்க, மறுக்கும் வங்கிகள் குறித்த புகாரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக
ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள்: இதையடுத்து, வங்கிகள் மற்றும் கல்விக்
கடன் பெறுவோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள்
பற்றியும் மத்திய, மாநில அரசுகளுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
மாணவர்கள் சுலபமாக கல்விக் கடன் பெறும் வகையில், வட்டிச் சலுகை, கடன்
உறுதி திட்டம் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து
வருகின்றன. இத்திட்டங்களால், தென்னிந்தியாவை சேர்ந்த இந்தியன் பேங்க், இந்தியன்
ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஆந்திரா பேங்க், கனரா
பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிய வங்கிகள், மிகப் பெரிய
அளவில் பயனடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகள் வழங்கிய கல்விக்கடன் விபரங்கள்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - ரூ.12,566 கோடி
கனரா வங்கி - ரூ.3,948 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.3,309 கோடி
இந்தியன் வங்கி - ரூ.3,222 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.2,469 கோடி
சிண்டிகேட் வங்கி - ரூ.2,270 கோடி
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் - ரூ.2,263 கோடி
பேங்க் ஆப் இந்தியா - ரூ.2,193 கோடி
பேங்க் ஆப் பரோடா - ரூ.1,872 கோடி
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - ரூ.1,860 கோடி
ஆந்திரா வங்கி - ரூ.1,516 கோடி
கனரா வங்கி - ரூ.3,948 கோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.3,309 கோடி
இந்தியன் வங்கி - ரூ.3,222 கோடி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ரூ.2,469 கோடி
சிண்டிகேட் வங்கி - ரூ.2,270 கோடி
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் - ரூ.2,263 கோடி
பேங்க் ஆப் இந்தியா - ரூ.2,193 கோடி
பேங்க் ஆப் பரோடா - ரூ.1,872 கோடி
யூனியன் பேங்க் ஆப் இந்தியா - ரூ.1,860 கோடி
ஆந்திரா வங்கி - ரூ.1,516 கோடி
இந்த விபரங்கள் மார்ச், 2012 நிலவரப்படியானவை.
>>>புதுச்சேரி பல்கலையில் பழைய புத்தகங்கள் இலவசமாக வழங்க எதிர்ப்பு
புதுச்சேரி பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள பழைய புத்தகங்களை, இலவசமாகக் கொடுக்கும் முடிவிற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புதுச்சேரி பல்கலைக் கழகத்தில்,
ஆனந்தரங்கம் பிள்ளை நூலகம் உள்ளது. சர்வதேச தரத்திலான இங்கு, 2
லட்சத்திற்கும் மேற்பட்ட, பலதுறை நூல்கள், 31 மின் ஆய்வு இதழ்களை
பராமரிக்கின்றனர். பல்கலை மாணவர்கள் மட்டுன்றி, பிற மாநில ஆய்வு
மாணவர்களும் குறிப்பு எடுத்துச் செல்கின்றனர். புதுமையான பரிந்துரை: இங்குள்ள பழைய புத்தகங்களைப் பற்றி ஆராயக் குழு
ஏற்படுத்தினர். அவர்கள் நூலகத்தில் உள்ள, பழைய புத்தகங்களை பார்வையிட்டு,
அகடமி கவுன்சிலுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், பராமரிக்க முடியாத
புத்தகங்களை, மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து, அப்புறப்படுத்தி விடலாம்
என, புதுமையான பரிந்துரை செய்திருந்தனர். இதற்கு, பல்கலைக் கழக நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. மாணவர்களுக்குத்
தேவையான புத்தகம் இருந்தால், அதன் பெயரை எழுதிக் கொடுத்து விட்டு இலவசமாகப்
பெறலாம் என, அறிவித்தனர். கொந்தளிப்பு: இந்த விசித்திரமான அணுகுமுறை, பேராசிரியர்கள், ஆராய்ச்சி
மாணவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக
நிர்வாகத்தையும், நூலகத்தையும் தொடர்பு கொண்டு, இத்திட்டத்தை உடனே
நிறுத்துமாறு, எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: மிகப் பழமையான, அரிய நூல்கள் பல
உள்ளன. இவற்றில் பல மீண்டும் அச்சில் வருமா என்பது சந்தேகம். அவை வெளியில்
கிடைப்பதும் அரிது. அவற்றை இலவசமாகக் கொடுத்து, அழித்து விட்டால், ஆய்வு
மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். சிதம்பரம் ராஜா முத்தையா நூலகத்தில் பராமரிக்கும் நூல்கள் கிழிந்தாலும்,
அப்படியே வைத்துள்ளர். அவற்றை ஸ்கேன் செய்து, மீண்டும் உயிர் தருகின்றனர்.
அது போல், இங்கே செய்ய வேண்டும். இதற்கு, அதிக செலவாகாது. தனி நபர்களுக்கு
இலவசமாகக் கொடுப்பதை விட, துறை நூலகங்களுக்குக் கொடுத்தால், அனைத்து
மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
>>>அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வாய்ப்பு
அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும்
தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம்
தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.
துறையின் அறிவிப்பு: நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
துறையின் அறிவிப்பு: நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன. எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு. தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...