மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான, தற்போதுள்ள கடுமையான விதிமுறைகளை
தளர்த்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுபற்றி
ஆலோசிக்க, அடுத்த மாதம், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள், செயலர்களின்
கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு
வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில் உள்ள மக்கள் தொகைக்கேற்ப, டாக்டர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அடுத்த
ஐந்தாண்டுகளில், புதிதாக, 5,000 எம்.பி.பி.எஸ்., "சீட்"களை ஏற்படுத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு, தற்போது கடுமையான விதிமுறைகள் உள்ளன;
இவை, மிகவும் பழைய விதிமுறைகள். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க வேண்டும்
என்றால், இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். தற்போதுள்ள விதிமுறைப்படி, மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு அதிகமான நிலம்
வேண்டும். விளையாட்டு மைதானம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் ஆகியவை,
பரந்த அளவில் அமைக்க வேண்டும் என்பதால், இந்த விதிமுறைகள்
உருவாக்கப்பட்டன. தற்போது நிலங்கள் மிகவும் பற்றாக்குறையாக உள்ளதால், பல மாடி
கட்டடங்களில், மருத்துவ கல்லூரி அமைக்கலாம். விதிமுறைகளை தளர்த்துவது
குறித்து பரிசீலிக்கும்படி, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம்,
ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்காக, எம்.சி.ஐ., சார்பில், குழு
அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம், அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள்,
செயலர்களின் கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. அப்போது, இந்த விவகாரம்
குறித்து, ஆலோசிக்கப்படும். புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரி, எம்.சி.ஐ.,க்கு, 120
விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்களை விரைவாக
பரிசீலிக்கும்படியும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவித்தன.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>அக்டோபர் 23 [October 23]....
- ஹங்கேரி தேசிய தினம்
- ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் வெளியிடப்பட்டது(2001)
- ஐ.நா., சபையின் முதலாவது கூட்டத் தொடர் நியூயார்க்கில் துவங்கியது(1946)
- முதல் முறையாக போரில் விமானம் பயன்படுத்தப்பட்டது(1911)
- லெனின், அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்(1917)
>>>பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடர் மழை, காரணமாக கடலூர் , விழுப்புரம் , நாகை ,சென்னை, திருச்சி,
காஞ்சி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அரியலூர், உதகை கோத்தகிரி குன்னூர்
குந்தா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
>>>பி.எட்., முடித்த 50 ஆயிரம் பேர் சான்றிதழ் இன்றி தவிப்பு
கடந்த, 2010- 11ம் ஆண்டில், பி.எட்., முடித்த, 50 ஆயிரம் பேர், சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில், 660 ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன;
இவற்றில், 2010- 11ம் ஆண்டில், 50 ஆயிரம் பேர், பி.எட்., படிப்பை
முடித்தனர். இவர்களுக்கு, இதுவரை பட்டம் வழங்கவில்லை.ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகம், மாணவ, மாணவியருக்கு, தற்காலிக சான்றிதழை மட்டும் வழங்கியது. இந்த சான்றிதழை, உயர் படிப்புகளில் சேரவும், வேலை வாய்ப்பிற்காகவும்
பயன்படுத்தலாம்; எனினும், பட்டப் படிப்பு சான்றிதழ் அவசியம். குறிப்பாக,
பலர், அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியராக வேலையில் சேர்ந்துள்ளனர்.
இவர்களின் பணி நியமனத்திற்கு, அரசின் ஒப்புதல் பெற வேண்டும் எனில்,
தற்காலிக சான்றிதழ் மட்டும் போதாது. இதுபோன்ற பிரச்னைகளால், பலர்
பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர், வீரமணி
கூறுகையில், "பட்டமளிப்பு விழாவிற்கு, ஆளுனரிடம் தேதி கேட்டுள்ளோம்.
விரைவில், தேதி கிடைத்து விடும். நவம்பருக்குள், பட்டமளிப்பு விழாவை
நடத்தி, சான்றிதழை வழங்கி விடுவோம்," என்றார்.
26 மாதிரி பள்ளிகள் கட்டுவதில் வந்தது சிக்கல்: நிதி ஒதுக்காததால் பணிகள் முடங்கின!
கல்வியில் பின்தங்கிய, ஒன்றியங்களில் கட்டப்பட உள்ள, 26 மாதிரிப்
பள்ளிகளுக்கான திட்ட ஒதுக்கீடு, 117 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தலா, மூன்று கோடி வீதம், 78 கோடி ரூபாய் மட்டுமே, மத்திய அரசு
அனுமதி அளித்துள்ளது. ஆனால், கட்டடம் கட்ட, கூடுதலாக தலா, 1.5 கோடி ரூபாய்
கேட்பதால், கட்டுமானப் பணிகள் துவங்குவதில், கால தாமதம் ஏற்பட்டு
உள்ளது.தமிழகத்தில், கல்வியில் பின்தங்கியுள்ளதாக, 44 ஒன்றியங்கள் அடையாளம்
காணப்பட்டு உள்ளன. இந்த ஒன்றியங்கள், அரியலூர், கடலூர்,
தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம்,
திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய, 13
மாவட்டங்களில் வருகின்றன.மத்திய அரசு திட்டத்தின் கீழ், இந்த
ஒன்றியங்களில், தலா ஒரு மாதிரிப் பள்ளி வீதம், இரு கட்டங்களாக, 44
மாதிரிப் பள்ளிகள் துவங்கி, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு, நடவடிக்கை
எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக, 2010-11ல், 18 மாதிரிப் பள்ளிகள்
கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில், 14 பள்ளிகளுக்கான பணிகள்
மட்டும், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஒப்பந்ததாரர்
பிரச்னையால், இதில், நான்கு பள்ளிகளின் கட்டுமானப் பணியில், தேக்கநிலை
ஏற்பட்டு உள்ளது.அரசுப் பள்ளிகள் வளாகத்தில் இயங்கி வரும், 18 மாதிரிப்
பள்ளிகள், வரும் கல்வியாண்டில், புதிய பள்ளிகள் பட்டியலில் சேர்க்கப்படும்
என, தெரிகிறது. கல்வியில் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த, மாணவ,
மாணவியருக்கென துவங்கப்பட்டுள்ள இப்பள்ளிகள், நல்ல தரத்துடன் இயங்கி
வருகின்றன.கடந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விழுப்புரம் மாவட்டத்தில்,
பெரியசிறுவத்தூர் மாதிரிப் பள்ளி மாணவி, மதுராம்பிகை, 486 மதிப்பெண்கள்
பெற்று, அரசுப் பள்ளிகள் அளவில், முதலிடம் பெற்றார். இது, அங்குள்ள கல்வித்தரத்திற்கு சாட்சியாகும். மாதிரிப் பள்ளிகளில், தற்போது, 3,537 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
பணிகள் முடக்கம்:இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில் வெளியான நிலையில், இதுவரை பணிகளை ஆரம்பிக்கவில்லை. ஒரு பள்ளிக்கு, மூன்று கோடி ரூபாய் வீதம், 78 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு அனுமதித்து உள்ளது.ஆனால், தற்போதுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் கூடுதலாக, தலா, 1.5 கோடி ரூபாய் வீதம், மொத்தம், 117 கோடியை ஒதுக்கினால் தான், பணிகளை முடிக்க முடியும். இக்கட்டடங்களின், கட்டுமானப் பணியை எடுத்துள்ள காவலர் வீட்டுவசதிக் கழகம், தெளிவாக இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
கால தாமதம்:கூடுதலாக தேவைப்படும், 39 கோடி ரூபாயையும், மத்திய அரசிடம் இருந்து கேட்க வேண்டுமெனில், அதற்குள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, அதற்கான நிதியைப் பெற, மிகவும் கால தாமதம் ஆகும்.எனவே, கூடுதலாக கேட்கும் நிதி ஒதுக்கீட்டு அளவை, கணிசமாக குறைக்குமாறு, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம், காவலர் வீட்டு வசதிக் கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, தற்போது மீண்டும் ஆய்வு நடந்து வருகிறது. இதனால், திட்டமிட்டபடி, நடப்பு கல்வியாண்டில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பணிகள் முடக்கம்:இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், 26 ஒன்றியங்களில், 26 மாதிரிப் பள்ளிகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு, சட்டசபை கூட்டத் தொடரில் வெளியான நிலையில், இதுவரை பணிகளை ஆரம்பிக்கவில்லை. ஒரு பள்ளிக்கு, மூன்று கோடி ரூபாய் வீதம், 78 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு அனுமதித்து உள்ளது.ஆனால், தற்போதுள்ள கட்டுமானப் பொருட்களின் விலைவாசி அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் கூடுதலாக, தலா, 1.5 கோடி ரூபாய் வீதம், மொத்தம், 117 கோடியை ஒதுக்கினால் தான், பணிகளை முடிக்க முடியும். இக்கட்டடங்களின், கட்டுமானப் பணியை எடுத்துள்ள காவலர் வீட்டுவசதிக் கழகம், தெளிவாக இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
கால தாமதம்:கூடுதலாக தேவைப்படும், 39 கோடி ரூபாயையும், மத்திய அரசிடம் இருந்து கேட்க வேண்டுமெனில், அதற்குள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, அதற்கான நிதியைப் பெற, மிகவும் கால தாமதம் ஆகும்.எனவே, கூடுதலாக கேட்கும் நிதி ஒதுக்கீட்டு அளவை, கணிசமாக குறைக்குமாறு, மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்ககம், காவலர் வீட்டு வசதிக் கழகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.அதன்படி, தற்போது மீண்டும் ஆய்வு நடந்து வருகிறது. இதனால், திட்டமிட்டபடி, நடப்பு கல்வியாண்டில் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
>>>இடைநிற்றலை தடுக்க தமிழகம், ஒடிசாவில் முன்னோடி திட்டம்
இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்கும் பணியை, தமிழகம்,
ஒடிசா மாநிலங்களில், சோதனை முயற்சியாக செயல்படுத்த, மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில் கல்லாமையை போக்க,
ஆஸ்திரேலிய நாட்டு ஆசிரியர் இயக்கம் உதவி வருகிறது. இதன்படி, 6 முதல், 14
வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை, பள்ளியில் சேர்க்க வேண்டும்; மாணவர்கள்
எக்காரணத்தை கொண்டும் இடை நிற்க கூடாது; இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து,
மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம், ஓடிசா மாநிலங்களில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த,
மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை, பெரம்பலூர் மாவட்டங்களில்,
முற்கட்டமாக இப்பணி நடக்க உள்ளது. மாவட்டத்திற்கு தலா, ஐந்து கருத்தாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து,
பள்ளியில் சேர்க்க வேண்டும். இதுகுறித்து, திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர், ஜோசப் சேவியர் கூறுகையில்,
"டிசம்பர் மாதத்திற்குள், இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளியில்
சேர்க்கப்படுவர். இதுகுறித்த அறிக்கையை, உலக ஆசிரியர் கல்வி அமைப்பு,
ஆஸ்திரேலியா நாட்டு கல்வி அமைப்பு ஆகியவற்றிக்கு அனுப்பப்படும்" என்றார்.
>>>எம்.பி.பி.எஸ். இடங்களை அதிகரிக்க கோரிய மனு தள்ளுபடி
எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, இடங்களை அதிகரிக்க, புதிதாக அத்தியாவசிய
சான்றிதழ் வலியுறுத்தாமல், விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யக் கோரிய,
தனியார் மருத்துவக் கல்லூரியின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
செய்தது.
சென்னை, குரோம்பேட்டையில், ஸ்ரீ
பாலாஜி மருத்துவக் கல்லூரி உள்ளது. எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100ல்
இருந்து, 150 இடங்களாக அதிகரிக்கக் கோரி, இந்திய மருத்துவ கவுன்சிலில்
விண்ணப்பிக்க, அத்யாவசிய சான்றிதழ் கேட்டு, தமிழக அரசிடம் விண்ணப்பித்தது.
அரசும், 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், அத்யாவசிய சான்றிதழ் வழங்கியது. இதன்பின், மருத்துவக் கவுன்சிலிடம் விண்ணப்பித்தது. கல்லூரியை,
மருத்துவக் கவுன்சில் ஆய்வு செய்து, சில குறைகளை சுட்டிக்காட்டியது. பின்,
அந்த விண்ணப்பத்தை, கல்லூரி தரப்பில் வலியுறுத்தவில்லை. 2010ம் ஆண்டு,
ஆகஸ்ட்டில், மருத்துவக் கவுன்சிலுக்கு, மீண்டும் விண்ணப்பித்தது. புதிதாக, அத்யாவசிய சான்றிதழ் தாக்கல் செய்யவில்லை, என,
நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஸ்ரீபாலாஜி
மருத்துவக் கல்லூரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "புதிதாக,
அத்யாவசிய சான்றிதழ் தேவை, என, வலியுறுத்தாமல், இடங்களை அதிகரிக்கக் கோரிய,
விண்ணப்பத்தை பரிசீலிக்க, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட
வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
புதிய அத்யாவசிய சான்றிதழ் அல்லது மூன்று ஆண்டு காலாவதிக்குப் பின்,
புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ், தாக்கல் செய்ய வேண்டும், என, இந்திய
மருத்துவக் கவுன்சில், முடிவெடுத்துள்ளது. தற்போது இடங்களை அதிகப்படுத்துவது தேவைதானா, கல்லூரியில் உள்கட்டமைப்பு
வசதிகள் உள்ளனவா, என்பதை பார்ப்பதற்காக தான், இந்தச் சான்றிதழ்
கோரப்படுகிறது. மருத்துவக் கவுன்சில் முடிவானது, சட்ட விதிகளுக்கு முரணாக
இல்லை. எனவே, கவுன்சில் உத்தரவில், எந்த சட்டவிரோதமும் இல்லை. மனு தள்ளுபடி
செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...