கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>குரூப்-1 போட்டி தேர்வு டிசம்பர் 30ல் நடக்கிறது

இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

>>>நவம்பர் 18 [November 18]....

நிகழ்வுகள்

  • 1421 - நெதர்லாந்தில் கடல் தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம் பரவியதில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்,
  • 1477 - இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.
  • 1493 - கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.
  • 1626 - புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.
  • 1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.
  • 1863 - டென்மார்க்கின் ஒன்பதாம் கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம் டென்மார்க்குக்குச் சொந்தம் என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன்-டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
  • 1883 கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.
  • 1903 - பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.
  • 1909 - நிக்கராகுவாவில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 500 புரட்சியாளர்கள் அரசுப்படையினால் கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அந்நாட்டுக்கு அனுப்பியது.
  • 1918 - லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1926 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.
  • 1929 - அத்திலாந்திக் பெருங்கடலில் நியூஃபின்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேத எற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில் குண்டுகளை வீசியதில் 131 பேர் கொல்லப்பட்டனர். இச்சமரில் 9 பிரித்தானிய வான்கலங்கள் அழிக்கப்பட்டன.
  • 1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
  • 1947 - நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற இடத்தில் வர்த்தகத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
  • 1987 - லண்டனில் கிங் க்ரொஸ் சுரங்கத் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற தீயில் 31 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1989 - கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
  • 1991 - தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.
  • 2006 - ஈழப்போர்: மன்னார்க் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் இலங்கைக் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.

பிறப்புக்கள்

  • 1923 - அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (இ. 1998)
  • 1945 - மகிந்த ராஜபக்ச, இலங்கையின் 6வது ஜனாதிபதி

இறப்புகள்

  • 1936 - வ. உ. சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)
  • 1952 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1895)
  • 1962 - நீல்ஸ் போர், இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1885)

சிறப்பு நாள்

  • லாத்வியா - விடுதலை நாள் (1918)
  • ஓமான் - தேசிய நாள்

>>>10+D.T.Ed +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றதீர்ப்பு

D.TEd பட்டயம்  +2 கல்வி தகுதிக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது .10+D.Ted +degreee முறையில் B.Ed முடித்தவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது . முழு தீர்ப்பின் நகல்.

>>>பி.எட்., - எம்.எட்., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது. நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது.இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
வர்மா குழு:
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் நிலைப்பாடு:
வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக் கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.
30 ஆயிரம் மாணவர்கள்:
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டு தோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.
எப்போது வெளியாகும்?:
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது.இது குறித்து, பல்கலைக் கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது: கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும். இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும்.இவ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

>>>தோல்வியை வெல்வோம்! - வெ.இறையன்பு I.A.S

வெற்றியை காட்சிப்படுத்தியே நாம் முயற்சிகளை முன் வைக்கிறோம். பல நேரங்களில் செயல்படுகிறபோதே ஜெயித்துவிட்டதாகக் கருதுகிறோம். நாம் செல்கிற வேகத்தில் தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடுகிறோம். அடுத்து புதிய முயற்சிகளை மேற்கொள்வதில் சுணங்கி விடுகிறோம். வெற்றி என்கிற ஆளுயர மாலையை அநாயசமாகத் தாங்குகிற நாம், தோல்வி என்கிற சின்ன கருப்புத்துணியின் பாரம் தாங்கமுடியாமல் அமுங்கி விடுகிறோம். வெற்றி மினுமினுக்கிற பொன்னாடையை அணிவிக்கின்றது. தோல்வி கண்ணீரை ஒற்றிக் கொள்ளும் கைக்குட்டையை மட்டுமே காணிக்கை ஆக்குகிறது. முதல் மதிப்பெண் கிடைக்கவில்லையே, நினைத்த படிப்பில் சேர முடியவில்லையே என்றெல்லாம் நம்மை நாமே தாழ்த்திக்கொண்டு வாழ்க்கையை சேதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உற்று நோக்குபவர்களுக்கு மட்டுமே உண்மை தெரியும். வெற்றி தரக்கூடிய களிப்பைவிட, தோல்வி வழங்குகிற அனுபவம் ஆழ மானது. வெற்றி அஜாக்கிரதையையும், தோல்வி விழிப்புணர் வையும் அள்ளித்தருகின்றன. ஒரு முறை கிடைத்த பரிசு அதீத நம்பிக்கையையும், அலட்சிய மனப்பான்மையையும் அபரிமித மாகத் தந்துவிடுகிறது. மேடையில் ஒருமுறை நின்றுவிட்டதாலேயே நாம் அனைவரையும்விட உயரமானவர்கள் என்ற எண்ணம் உதித்துவிடுகிறது. அதே நேரம் வெற்றி பெறுகிற தருணத்தில் கவனக்குறைவாக இருந்து கேடயத்தை தவறவிட்டவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் வரலாறானது. ஜெயித்தவர்கள் தன் திறமையால் வென்றதாகக் கருதிக்கொள் கிறார்கள். தோற்றவர்கள், தான் குழுவைச் சரியாக வழிநடத்த வில்லையென்று சுயவிசாரணை செய்கிறார்கள். எதனால் வெற்றி பெற்றோம் என்று நாம் ஒரு நிமிடம்கூட அலசுவதில்லை. ஆனால், தோல்வி நம்மைத் துருவித்துருவி ஆராய வைக்கிறது. வெற்றியால் கிடைக்கின்ற பெருமை மின்னலாக மறைந்து விடுகிறது. தோல்வியால் பெற்ற அவமானங்கள் மழையாய் நம்மை நனைத்து விடுகிறது. ஒவ்வொரு தோல்வியும் மிகப் பெரிய வெற்றிக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது. சின்னச் சின்ன வெற்றிகளில் சிலிர்த்து போகிறவர்கள், பெரிய முயற் சியில் பாதாளத்தில் விழுந்து பரிதவிக்கிறார்கள். பதக்கங்களை காட்டிலும் நோக்கங்கள் முக்கியம். உயர்ந்த நோக்கத்துக்காக அடைகிற தோல்வி சின்ன சுகத்துக்காகக் கிடைக்கிற வெற்றியைக் காட்டிலும் உன்னதமானது. இன்று பெறுகிற தோல்வி வேறொரு உயர்ந்த லட்சியத் திற்காக நம்மை தயார்படுத்துகிறது எனக் கருதி, அதை சுட்டு விரலால் சுண்டி உதறி விட்டு நாம் முன்னேற வழிவகுப்போம்.

>>>2013ல் பயோமெட்ரிக் கார்டு சாத்தியமா?

ரேஷன் கார்டுக்கு பதில், பயோமெட்ரிக் கார்டு, 2013ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வர சாத்தியமில்லை என, அதிகாரிகள் கருதுகின்றனர்.தமிழகம் முழுவதுமாக, 1.97 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன; போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய, முழு தணிக்கை செய்து, பல லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. தேவையான ஆவணங்களை வழங்கினால், ஒரு மாத காலத்தில், ஆய்வுக்கு பின், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என, அரசு அறிவித்தது.  பத்து மாதத்தில், எட்டு மாவட்டங்களில், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தோருக்கு, புதிய கார்டு வழங்கப்பட்டது. இதுபற்றி சந்தேகம் எழுந்தது. மீண்டும் போலி கார்டுகளை கண்டறிய இரண்டாம் கட்ட தணிக்கை நடக்கிறது.இதுபற்றி வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், முதியோர் உதவித் தொகை,1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ரேஷன் கார்டிலிருந்து, பெற்றோரை பிரித்து, தனி கார்டு வாங்கி, தவறான முறையில், முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு வெளியானது. மாவட்டந்தோறும், 1,000 புதிய ரேஷன்கார்டுகள், முதியோர் உதவித் தொகை பெறுவதற்காகவே வாங்கியுள்ளனர். எட்டு மாவட்டங்களிலும், போலியாக வாங்கிய ரேஷன் கார்டுகளை தணிக்கை செய்ய அரசு உத்தரவிட்டது. கடந்த, எட்டு மாதங்களாக, இப்பணி நடக்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்துடன், புதிய கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு, ஏற்கனவே விண்ணப்பித்து, தகுதி உடையவர்களுக்கு மட்டும், புதிய கார்டுகள் வழங்கப்படுகின்றன. தணிக்கை முடிந்த பின், பயோ மெட்ரிக் கார்டுகளுக்கு, போட்டோ எடுத்தல், பத்து வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்தல், ரேஷன் ஊழியர்களின், கைரேகை பதிவு செய்தல், கடைகளுக்கான கணினி மற்றும் ரேகை பதிவு இயந்திரம் வாங்கி, தனி சாப்ட்வேர் மூலமாக,இணைத்து, நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இப்பணிகள் நடைபெற ஓராண்டுக்கும் மேலாகும். தமிழகம் முழுவதுமாக தற்போது, 10 சதவீதம் தான் பணி நடந்துள்ளது. அதுவும், வனம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் முதற்கட்டமாக இப்பணி நடந்துள்ளது. எனவே, 2013ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வழக்கம் போல, கூடுதல் இணைப்புத் தாள் இணைக்கப்படும். பயோமெட்ரிக் கார்டு வழங்கும் திட்டம், 2013ல் பயன்பாட்டுக்கு கொண்டு வர சாத்தியமில்லை.என அதிகாரிகள் கூறினர்.

>>>நவம்பர் 17 [November 17]....

நிகழ்வுகள்

  • 1292 - ஜோன் பலியல் ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான்.
  • 1511 - ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன.
  • 1558 - இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார்.
  • 1796 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன.
  • 1820 - கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
  • 1831 - எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன.
  • 1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
  • 1873 - பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது.
  • 1878 - இத்தாலியின் முதலாம் உம்பேர்ட்டோ மீதான முதலாவது கொலை முயற்சி இடம்பெற்றது.
  • 1903 - ரஷ்யாவின் சமூக சனநாயக தொழிற் கட்சி போல்ஷெவிக் (பெரும்பான்மை), மேன்ஷெவிக் (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவுண்டது.
  • 1918 - யாழ்ப்பாணத்தில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிவாரண நிதியம் அமைக்கப்பட்டது.
  • 1922 - முன்னாள் ஓட்டோமான் பேரரசின் சுல்தான் ஆறாம் மெஹ்மெட் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டான்.
  • 1933 - ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.
  • 1939 - செக் நாட்டில் நாசி எதிப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து 9 மாணவர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
  • 1950 - 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார்.
  • 1968 - அலெக்சாண்ட்ரொஸ் பனகோலிஸ் என்பவருக்கு கிரேக்க சர்வாதிகாரி ஜோர்ஜ் பப்படொபவுலொசைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • 1970 - வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பாக அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
  • 1970 - சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும்.
  • 1970 - டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1989 - பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் கலகம் அடக்கும் காவற்துறையினரால் நசுக்கப்பட்டது. ஆனாலும் இந்நிகழ்வு பின்னர் டிசம்பர் 29 இல் கம்யூனிச அரசைக் கவிழ்க்க ஆரம்பமாக அமைந்தது.
  • 2003 - ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார்.

பிறப்புக்கள்

  • 1904 - இசாமு நொகுச்சி சிற்பக் கலைஞரும், கட்டடக் கலைஞரும் (இ. 1988)
  • 1909 - சி. இலக்குவனார், தமிழறிஞர் (இ. 1973)
  • 1920 - ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005)
  • 1927 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009)

இறப்புகள்

  • 1558 - இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516)

சிறப்பு நாள்

  • அனைத்துலக மாணவர் நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings

  மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...