கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆகாஷ் 2 ‘ரிலீஸ்’

உலகின் குறைந்த விலை கம்ப்யூட்டர் என பெயரெடுத்த ஆகாஷ் டேப்லெட் கம்ப்யூட்டரின் அடுத்த பதிப்பு, ‘ஆகாஷ் 2’ டேப்லெட். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்தாண்டு டேட்டாவின்ட் நிறுவனம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து ஆகாஷை அறிமுகப்படுத்தின. இது, உலக கம்ப்யூட்டர் பயனர்களின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்தது. மாணவர்களுக்கு 1,100 ரூபாயில் வழங்கப்படும் என அப்போதைய மத்திய மனிதவள அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். லட்சக்கணக்கான மாணவர்கள் இக்கம்ப்யூட்டர் வேண்டி, பதிவு செய்திருந்தனர். சில தொழில்நுட்ப கோளாறுகளால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. தற்போது டேட்டவின்ட் நிறுவனம் இதிலிருந்து விலகி விட்டது. மும்பை ஐ.ஐ.டி.,யும், சி-டாக் இணைந்து ஆகாஷ் 2 டேப்லெட்டை வடிவமைத்துள்ளன. இது முழுக்க முழுக்க ஒரு இந்திய தயாரிப்பு.
இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்ரேட்டிங் சிஸ்டம், வி.ஜி.ஏ., முன்பக்க கேமரா, 4 ‘ஜிபி’ இன்டர்னல் மெமரி, 1 ஜிகா ஹெர்ட்ஸ் பிராசசர், 7 இஞ்ச் டச் ஸ்கீரின், 3 மணி நேர பேட்டரி சார்ஜ், ‘வைபை’ கனெக்ஷன் ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை 2,263 ரூபாய். ஆனால் மத்திய அரசு மானியத்துடன் 1,130 ரூபாய்க்கு மாணவர்களுக்கு வழங்க உள்ளது. முதலில் ஒரு லட்சம் கம்ப்யூட்டர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுõரிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் 22 கோடி கம்ப்யூட்டர்களை தயாரித்து வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

>>>கல்வித் துறையில் டாப் 15ல் இரு இந்தியர்கள்

அமெரிக்காவில் வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை, உலகளவில் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பல துறைகளில் உலகில் சிறந்து விளங்குவோரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. போர்ப்ஸ் வெளியிட்ட கல்வித் துறையில் சாதனை படைத்த டாப் 15 பேரின் பட்டியலில் 2 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
முதல் நபர், ‘டேட்டாவின்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., சுனித் சிங் துலி. இவர் உலகின் குறைந்த விலை கம்ப்யூட்டரான, ‘ஆகாஷ் டேப்லெட்’ கம்ப்யூட்டரை கண்டுபிடித்தவர். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வழி வகுத்துள்ளார்.
இரண்டாவது நபர், அமெரிக்காவின் எம்.ஐ.டி., பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் பேராசியர் ஆனந்த் அகர்வால். இவர், ஆன்லைன் வழி கல்வியை அறிமுகப்படுத்தியவர். இவரது கண்டுபிடிப்பால் 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் ஆன்லைன் வழி கல்வியை பயன்படுத்துகின்றனர்.

>>>யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள சி.டி.எஸ்., தேர்வு

இந்திய அரசின் அமைச்சகப் பணி இடங்களையும், இதர முக்கிய அரசுப் பணி இடங்களையும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது.
தற்போது இந்தியாவின் 3 முக்கிய படைப் பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு 2013 வரும் 2013 பிப்ரவரியில் நடத்தப்படவுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?:
யு.பி.எஸ்.சி.,யின் கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு மூலமாக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமி, எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி, ஐதராபாதிலுள்ள இந்தியன் ஏர்போர்ஸ் அகாடமி, சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, பெண்கள் (நான்-டெக்னிகல்) பிரிவு - ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, சென்னை ஆகிய அனைத்து பணிகளிலும் சேர்வதற்கானது ஆகும். இவற்றில் முறையே 250, 40, 32, 175, 12 காலியிடங்கள் உள்ளன.
தகுதிகள் என்னென்ன?:
இந்தியன் மிலிடரி அகாடமிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், இந்தியன் நேவல் அகாடமிக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பும், இந்தியன் ஏர்போர்ஸ் அகாடமிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 வரையிலான படிப்பில் இயற்பியல், கணிதத்துடன் படித்திருப்பதோடு பட்டப் படிப்பும் தேவைப்படும். இந்தப் பணிகள் அனைத்திற்குமே கல்வித் தகுதியுடன் சில குறைந்த பட்சம் உடற் தகுதிகளும் தேவைப்படும். உயரம், இதற்கேற்ற எடை போன்றவற்றின் பட்டியலைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறிய வேண்டும்.

இதர தகவல்கள்:
யு.பி.எஸ்.சி.,யின் கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை ஆகிய 2 மையங்களிலும், நமக்கு அருகிலுள்ள மாநில மையங்களான பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி மற்றும் திருப்பதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ள ரூ.200/-ஐ பணமாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் வங்கிக் குழுமம் சார்ந்த வங்கியில் செலுத்தலாம். அதே போல் ஆன்-லைன் முறையிலும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 10.12.2012
இணையதள முகவரி: http://upsc.gov.in/exams/notifications/2013/cds1/eng.pdf

>>>ஜே.இ.இ., தேர்வுக்கு ரெடியா

நாட்டின் சிறந்த தொழிற்கல்வி நிறுவனங்களில் இளநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்டுவந்த ஏ.ஐ.இ.இ.இ/ ஐ.ஐ.டி- ஜே.இ.இ., தேர்வுகள், வரும் கல்வியாண்டு முதல் ஜே.இ.இ., (மெயின்), ஜே.இ.இ., (அட்வான்ஸ்டு) என மாற்றம் பெறுகிறது.
ஜே.இ.இ.,(மெயின்) தேர்வு அடிப்படையில், என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் மத்திய, மாநில அரசு நிதி உதவி பெறும் பிற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே ஜே.இ.இ., (அட்வான்ஸ்டு) தேர்வு எழுதமுடியும். ஜே.இ.இ.,(அட்வான்ஸ்டு) தேர்வில் சிறந்து விளங்கும் மாணவர்கள் மட்டுமே நாட்டின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐ.ஐ.டி.,களில் சேர முடியும்.
தற்போது ஜே.இ.இ., (மெயின்) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி
வயது: எஸ்.சி/எஸ்.டி., உடல் ஊனமுற்றோர் 1983 அக்., 1க்கு பிறகும், மற்றவர்கள் 1988 அக்.,1க்கு பிறகும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களோடு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வை, மூன்று முறை எழுதலாம். 2011-12ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தற்போது பிளஸ் 2 படித்துக்கொண்டிருப்பர்கள் மட்டுமே எழுத முடியும்.
ஜே.இ.இ., மெயின் தேர்வு, இரண்டு தாள்களை கொண்டது. தாள் 2 பி.ஆர்க்/பி.பிளானிங் படிப்புகளுக்கும், தாள் 1 மற்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கும் நடத்தப்படுகிறது. தாள் 1 தேர்வை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் எழுதலாம். தாள் 2 தேர்வை ஆப்லைனில் மட்டுமே எழுத முடியும். மூன்று மணி நேரம் நடக்கும் இத்தேர்வில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வினாக்கள் இடம் பெற்றிருக்கும்.
தாள் 1ல் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் இடம் பெறும். தாள் 2ல் கணிதம், ஆப்டிடியூட் டெஸ்ட், டிராயிங் டெஸ்ட் என்ற பிரிவுகளில் அப்ஜெக்டிவ் வகையில் வினாக்கள் இடம் பெறும்.
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: பிளஸ் 2வில் பெறும் மதிப்பெண்களை 40 சதவீதத்திற்கும், ஜே.இ.இ., தேர்வில் பெறும் மதிப்பெண்களை 60 சதவீதத்திற்கும், கணக்கீடு செய்து, அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். ஆப்லைன் தேர்வு, 2013 ஏப்.,7 அன்று காலை தாள் 1ம், தாள் 2 அன்று மாலையிலும் நடைபெறும். தாள் 1ன் ஆன்லைன் தேர்வு 2013 ஏப்., 8ல் தொடங்கி 2013 ஏப்., 25 வரை நடைபெறும். இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள் டிச., 15.
கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு 1800 ரூபாயும், எஸ்.சி/எஸ்.டி., பிரிவினருக்கு 900 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு http://jeemain.nic.in/jeemain2013/welcome.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

>>>தொழிற்கல்வி தேர்வு ஹால்டிக்கெட் வினியோகம்

அரசு தொழிற்கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட், நாளை (20ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.
இது குறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட அறிக்கை: அரசு தேர்வு துறையால், ஓவியம், தையற்கலை, நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
நடனம், 21ம் தேதியும், ஓவியம், 22ம் தேதி முதல், டிச., 5ம் தேதி வரையும், தையற்கலை, டிச., 6ம் தேதி முதல், 12ம் தேதி வரையும், இந்திய இசை கீழ்நிலை, மேல் நிலை, டிச., 7ம் தேதியும் நடக்கின்றன. இத்தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவு சீட்டை, நாளை முதல், அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ள தேர்வு மையங்களில் பெற்றுகொள்ளலாம்.
தேர்வு மையங்கள் விவரம் அனைத்து முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் அரசு தேர்வுகள் மண்டல அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.

>>>ஏழை மாணவிக்கு நிதி திரட்ட பல்கலை தேர்வு ஒத்திவைப்பு

ஆந்திராவில், கல்லீரல் நோயால் அவதிப்படும், ஏழை மாணவியின் சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்ட வசதியாக, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகம், தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர், ப்ரீத்தி. நெல்லூரில் உள்ள, என்.பி.கே.ஆர்., தொழில்நுட்ப கல்லூரியில், பி.டெக்., இறுதியாண்டு படிக்கிறார். இவரது தந்தை, டாக்சி டிரைவராக பணிபுரிகிறார். இவரது குடும்பம், மிகவும் ஏழ்மையானது. ப்ரீத்திக்கு, கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்காக, பல லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தும் பயன் இல்லை. ‘ப்ரீத்தி, உயிர் பிழைக்க வேண்டுமானால், அவருக்கு உடனடியாக, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு, 50 லட்சம் ரூபாய் செலவாகும்’ என, டாக்டர்கள் கூறினர்.
ப்ரீத்தியின் உடல் நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரின் அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு, அவருடன் கல்லூரியில் படிக்கும், சக மாணவர்கள் திட்டமிட்டனர். அறக்கட்டளைகள் மூலமாகவும், வீடு, வீடாகச் சென்றும், நிதி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ப்ரீத்தி படிக்கும் கல்லூரிக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டதால், நிதி வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ப்ரீத்தியுடன் படித்த சக மாணவர்கள், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக அதிகாரிகளை சந்தித்து, நிதி வசூலிக்க வசதியாக, தேர்வை தள்ளி வைக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.
துவக்கத்தில், இதற்கு சம்மதிக்க தயக்கம் காட்டிய அதிகாரிகள், ப்ரீத்தியின் ஏழ்மை நிலையை, மாணவர்கள் எடுத்துக் கூறியதும், ஒரு வாரத்துக்கு தேர்வை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், உற்சாகம் அடைந்துள்ள மாணவர்கள், நிதி வசூலிக்கும் பணியை தீவிரப் படுத்தியுஉள்ளனர்.மாணவியின் உயிரை காப்பதற்காக, பல்கலை நிர்வாகம், தேர்வை தள்ளி வைத்துள்ளதற்கு, ஆந்திராவில் அனைத்து தரப்பினரும், பாராட்டு தெரிவித்துள்ளனர்.

>>>நவம்பர் 19 [November 19]....

நிகழ்வுகள்

  • 1493 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
  • 1794 - அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
  • 1816 - வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  • 1881 - உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
  • 1932 - சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
  • 1942 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை - சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
  • 1946 - ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
  • 1969 - அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
  • 1969 - பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.
  • 1977 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
  • 1977 - போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1984 - இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
  • 1984 - மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1985 - பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
  • 1991 - தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
  • 1999 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.
  • 2005 - மகிந்த ராஜபக்ச இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

பிறப்புக்கள்

  • 1831 - ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (இ. 1881)
  • 1835 - ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858)
  • 1909 - பீட்டர் டிரக்கர் ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (இ. 2005)
  • 1917 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984)
  • 1925 - சலில் சௌதுரி, வங்காள இசையமைப்பாளர் (இ. 1995_

இறப்புகள்

  • 1998 - டெட்சுயா ஃபுஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)
  • 2008 - எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919)

சிறப்பு நாள்

  • மாலி - விடுதலை நாள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.Ed., admission application period Extended

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நீட்டிப்பு - செய்தி வெளியீடு எண்: 1560, நாள்...