கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தியானமும் தூக்கமும்

 
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார்.

சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...

''முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!''

>>>இல்லறத்தின் ரகசியம்....

 
சுதந்திரமாகவும் சுகமாகவும் 60 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த தம்பதிகள் பலரிடம்..

”உங்கள் நீடித்த இல்லறத்தின் ரகசியம் என்ன...?” என்று தனித்தனியே கேட்டார்கள்.

”என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள்” என்று மனைவிமார்கள் சொன்னார்கள்...

”என் மனைவி எனக்காக செய்த தியாகங்கள்” என்று கணவன்மார்கள் சொன்னார்கள்...

ஆய்வாளர், தன் குறிப்பில் இப்படி எழுதினார்.

திருமண வாழ்க்கை என்பது, உரிமைகளை நிலை நாட்ட என்று நினைப்பவர்கள் தோற்கிறார்கள்...

உரிமைகளை விட்டுக் கொடுப்பதே உறவில் வளர்வது என்று தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்...!

>>>துவர்ப்பு சுவை - பயன்கள்...

 
இன்று நரம்புத் தளர்வை நீக்கும் துவர்ப்பு சுவை பற்றிய தகவல்.
மலச்சிக்கல் நீங்க:

மலச்சிக்கல் நோயின் ஆரம்ப அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள். மலச்சிக்கலை போக்கினாலே நோய்களின் கோரப் பிடியின்றி நாம் வாழலாம்.

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் துவர்ப்புத் தன்மை அதிகம் சேர்ந்திருந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும். இதனால்தான் நம்முன்னோர்கள் உணவுக்குப் பின் தாம்பூலம் தரிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதனால் ஜீரண சக்தி அதிகரித்து மலச்சிக்கலைப் போக்கும் தன்மையை அறிந்து அவற்றைப் பயன்படுத்தினர்.

இரத்தம் சுத்தமடைய:

துவர்ப்புச் சுவைக்கு இரத்தத்தை சுத்தப்படுத்தும் குணம் உண்டு.

மேலும் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்புப் படிவங்களை கரைப்பதும் துவர்ப்பு சுவையே. துவர்ப்பு வியர்வை பெருக்கியாக உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்ற இந்த துவர்ப்பு பயன்படுகிறது.

பித்த அதிகரிப்பு நீங்க:

பித்த அதிகரிப்பால் வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்றவை உண்டாகும். இந்த பித்த அதிகரிப்பை குறைக்கும் தன்மை துவர்ப்புச் சுவைக்கு உண்டு.

வாயுத் தொல்லை நீங்க:

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது ஏதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

நரம்புகள் பலப்பட:

அதிக மன அழுத்தம், வேலைப்பளு காரணமாக சிலருக்கு நரம்பு தளர்வு உண்டாகிறது. இதனால் இளம் வயதிலேயே சிலர் வயதான தோற்றத்திற்கு ஆளாகின்றனர். இந்த நரம்புத் தளர்வை நீக்கும் குணம் துவர்ப்பு சுவைக்கு உண்டு.

இரத்தக் கொதிப்பைக் குறைக்க:

இரத்தக் கொதிப்பால் ஏற்படும் இருதய நோய்களை குறைக்க துவர்ப்பு சுவை மிகவும் நல்லது. உடலுக்குத் தேவையான அளவு துவர்ப்புச் சுவை கிடைப்பதால் இரத்தக் கொதிப்பு குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

துவர்ப்பு சுவை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும். தினமும் நாம் சாப்பிடும் உணவில் துவர்ப்புச் சுவைகொண்ட பொருட்களை அதிகம் சேர்ப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இயற்கையாகவே மூலிகைகள், காய்கள், கனிகளில் உள்ள விதைகள், தோல் முதலியவை துவர்ப்பு சுவை கொண்டவை. எந்த ஒரு சுவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலும் அதற்கு மாற்று மருந்தாக துவர்ப்புச் சுவை உள்ள பொருட்களை சாப்பிடுவது நல்லது.

உதாரணமாக திராட்சையில் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை உண்டு. ஆனால் அதன் மேல் உள்ள தோலும், உள்ளே உள்ள விதைகளும் துவர்ப்புச் சுவை உடையவை.

துவர்ப்புச் சுவை மற்ற சுவைகளினால் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். எனவே தினமும் துவர்ப்புச் சுவையுள்ள உணவை சாப்பிட்டுவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

>>>நல்லவை கற்போம்! - வெ.இறையன்பு

நம்மைச் சுற்றி நடப்பவற்றில், உகந்தவற்றை நுகரவும், உபயோகமற்றவற்றை உதறவும் கற்றுக்கொள்வதுதான் மிகப் பெரிய கல்வி. உலகமே நம் முன் அகண்ட பள்ளிக்கூடமாக விரிகிறது. நம் முன் நிகழும் ஒவ்வொரு செயலிலும் நாம் நல்லவற்றை மாத்திரம் பாலை உறிஞ்சும் அன்னமாய் கிரகிக்க முனைந்தால், வாழ்க்கை நமக்கு வசந்த கம்பளத்தை மட்டுமே விரிக்கும்.

நகைச்சுவை என்பது எல்லாவற்றையும் விமர்சனத்துக்கு உள்ளாக்குவது, எல்லோரையும் கிண்டலுக்கு உட்படுத்துவது, எதையும் குதர்க்கமாக்குவது, எதிலும் விதண்டாவாதம் புரிவது என்கிற எண்ணம் இப்போது புரையோடிப் போய்விட்டது.

வெளியிலே இருப்பவர்கள் விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். நம் நாட்டுத் தலைவர்கள், அறிஞர்கள் அனைவருமே அவர்களிடமிருந்த ஏதோ ஓர் உயரிய பண்பின் காரணமாகத்தான் அந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இன்றுள்ள மாறுபட்ட சூழலில், அவர்களைக் கடுமையாக விமர்சிப்பது நியாயமற்ற செயல்.

யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்பதல்ல உண்மை. இறந்தவர், தன் அனைத்துக் கடன்களையும் அடைத்து விடுகிறார் என்பதுதான் வாதம்.

மண்புழுவிடமிருந்து கூட மக்கிய இலைகளை உரமாக்கும் ரசவாதத்தைக் கற்க வேண்டும். வருத்துகிற வறட்சியிலும் மனம் தளராப் பறவைகளைப் பற்றி பயில வேண்டியவை உண்டு.

எல்லாவற்றிலும் சிறந்த பக்கங்களையே பார்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், நம் உடல் கூட பஞ்சு போலக் காற்றில் மிதப்பதைக் கவனிக்க முடியும். வெறுப்பு, உடலில் அமிலத்தை உண்டாக்கும்; குடல்களை அரிக்கும்; வயிற்றைப் புண்ணாக்கும்.

திரைப்படங்களில் வரும் நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு பெரியவர்களை 'பெரிசு' என்றும், மூத்தவர்களை ஒருமையில் விமர்சிப்பதும் அதிகமாகி வருகின்றன. 'எனக்கு எல்லாம் தெரியும்' என்கிற இறுமாப்பு அதல பாதாளத்தில் நம்மை உருட்டிவிடும் இயல்பு கொண்டது.

இன்று நாம் சந்திக்கும் மனிதர்களிடம் ஒரு நல்ல குணத்தைக் காண்போம். அதை கடைபிடிக்க முயல்வோம் என்று சூளுரை எடுப்போம்.

நம் பொறுமை வளர, வெறுப்பு குறையும்.

பெருந்தன்மை உயர, பொறாமை குறையும்.

மகிழ்ச்சி பெருக, வருத்தம் மறையும்.

நல்லவை கற்போம் - அல்லவை மறப்போம்.

>>>நவம்பர் 26 [November 26]....

நிகழ்வுகள்

  • 1778 - ஹவாயன் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
  • 1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
  • 1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
  • 1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
  • 1949 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
  • 1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
  • 1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
  • 1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது.
  • 1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
  • 2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
  • 2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.

பிறப்புக்கள்

  • 1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
  • 1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
  • 1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
  • 1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
  • 1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்
  • 1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன் ரோல் இசைக்கலைஞர்.

>>>சரித்திரம் பயில்வோம்! - வெ.இறையன்பு

இப்போதெல்லாம் பள்ளிகளில் அறிவியலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் சரித்திரத்துக்குக் கொடுப்பதில்லை. இலக்கியத்துக்கு இடமே இல்லை. வரலாறும் இலக்கியமும் படித்தால் வேண்டிய படிப்புக்கு விண்ணப்பம் போட முடியுமா என்று மாணவர்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

வரலாறு, இலக்கியம் பண்டங்களல்ல, பாத்திரங்கள். உணவை உண்ணுகிற பாத்திரம் நிறைவு செய்வது போல, அவை முழுமையான வாழ்க்கை நெறியை வழங்குகின்றன.

வரலாறு நூல்களைத் தேர்வு செய்து படிக்கும் போது, கதைப்புத்தகத்தைப் போல கலகலப்பூட்டு கிறது. பாடப்புத்தகங்களில் மதிப்பெண்களுக்காகப் படிக்கிற போது கவிதைகள் கூட கந்தகமாகிவிடுகின்றன. விருப்பத்துடன் வாசிக்கின்றபோது கந்தகம் பற்றிய குறிப்பு கூட சந்தனமாகிவிடுகிறது.

சுவாரசியமான பல சரித்திர நூல்கள் எழுதப் பட்டிருக்கின்றன. சரித்திரத்தை இலக்கியங்கள் மூலமும் வாசிக்கமுடியும். ஷேக்ஸ்பியர், மார்லோ, பெர்னாட்ஷா ஆகியோருடைய பல நாடகங்கள் சரித்திரத்தின் பதிவுகள், வரலாற்றின் பிழிவுகள்.

மாபெரும் மன்னர்களின் வீழ்ச்சிக்கு ஒரே ஒரு தவறால் நிகழந்ததை நமக்கு அவை உணர்த்துகின்றன. அதீத நம்பிக்கையால் ஜூலியஸ் சீசர் கத்திகளின் உத்திகளுக்குப் பலியானார். ஹேம்லெட் முடிவெடுக்காமல் தடுமாறியதால் தள்ளாடினார். மேக்பெத் அதிக அவாவால் அழிந்தான். நெப்போலியன் சரியாகத் திட்டம் இடாததால் தொய்வுற்றார். ஹிட்லர் அகங்காரத்தால் அழிந்தார்.

சரித்திரத்தை எவ்வளவு நாம் புறக்கணித்தாலும் அவை திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன், நம் வாழ்வில் கூட மீண்டும் பழைய தவறுகளையே நாம் செய்து கொண்டே இருக்கிறோம். விழுந்த இடத்திலேயே விழுகிறோம்.

தலைமைப் பண்பை உறிஞ்சிக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு, சரித்திரம் அகராதி. மேன்மையான உயர்ந்த குணங்கள் சிலரை உச்சாணிக் கொம்பிலே அமர்த்தியதை வரலாற்றை வாசிப்பதிலிருந்து கிரகித்துக் கொண்டு நாமும் அவற்றை நோக்கி பயணிப்பதற்கு நம்மை அவை உசுப்பி விடுகின்றன.

மகாத்மா காந்தி எத்தனைப் போராட்டங்களைச் சந்தித்தார் என்பதைத் தெரிந்து கொள்கிறபோதுதான், மாதப் பரீட்சைக்கே மனமொடியும் நாம் நம்மைத் திருத்திக்கொள்ள முடியும். வைராக்கியம் வளர்க்கவும், இடறாமல் இருக்கவும் சாதனை செய்தவர்களின் சரித்திரச் சான்றுகள் நமக்கு என்றும் உறுதுணை புரியும்.

>>>மருத்துவ மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

"இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, மருத்துவ மாணவர்களின் தேர்வு முடிவுகளை, மீண்டும் வெளியிட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என, சுகாதார துறை அமைச்சர் விஜய், கூறியதை அடுத்து, உள்ளிருப்பு போராட்டத்தை, மருத்துவ மாணவர்கள் வாபஸ் பெற்றனர். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான ஆண்டு தேர்வு, மதிப்பீட்டு முறையில் கொண்டு வரப்பட்டுள்ள, புதிய நடைமுறைகளை வாபஸ் பெற வேண்டும்; தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களில், தேர்ச்சி பெற்ற பின்தான் மாணவர்கள், அடுத்த ஆண்டு படிப்பை தொடர வேண்டும் (பிரேக் சிஸ்டம்) என்ற நிபந்தனையை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின், மாணவ, மாணவியர், 500க்கும் மேற்பட்டோர், சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, பல்கலைக்கு வந்த அமைச்சர் விஜய், மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளுடன், 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைப்படி, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மாணவர்களின், தேர்வு தாள்களை, மீண்டும் மதிப்பீடு செய்து, முடிவுகளை வெளியிட, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். "பிரேக் சிஸ்டத்தை" திரும்ப பெறவும், பல்கலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என, அமைச்சர் விஜய், உறுதி அளித்தார். இதையடுத்து, தாங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் தெரிவித்தார்.
அமைச்சரை சாதுர்யமாக மடக்கிய மாணவர்கள்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, மருத்துவ மாணவர்கள் அறிவித்திருந்தனர். அதேசமயம், அமைச்சரின் வருகையை அறிந்த அவர்கள், சேப்பாக்கத்தில் பெயரளவிற்கு ஆர்ப்பாட்டத்தை நடத்திவிட்டு, மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சமீபத்தில், தங்கள் கோரிக்கைகளை எடுத்துக் கூற, தலைமைச் செயலகத்திற்கு வந்த மருத்துவ மாணவர்களை, சந்திக்க மறுத்த அமைச்சர் விஜய், நேற்று, வேறு வழியின்றி, மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதாயிற்று.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் பொருட்பால் அதிகாரம்: த...