கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:155 மாவட்டங்களில் துவக்கம்

"கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், பள்ளிகள் துவக்கப்படும். இந்த பள்ளிகள், தனியார் பங்களிப்புடன் துவக்கப்படாது,'' என, மத்திய, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பல்லம் ராஜு தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில், கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜு, நேற்று கூறியதாவது:நடப்பு, 12வது, ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012 - 17), நாடு முழுவதும், 500, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் துவக்கப்படும். கே.வி., பள்ளிகள் இல்லாத, 155 மாவட்டங்களில், இந்த பள்ளிகள் துவக்கப்படும்; 60 இடங்களில், பள்ளிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.கே.வி., பள்ளிகள் கட்டுவதில், தனியாருடன் இணைந்து செயல்படலாம் என, இப்பள்ளி கவர்னர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. எனினும், அந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தனியாருடன் இணைந்து, கே.வி., பள்ளிகள் துவக்கப்பட மாட்டாது.பொதுத் துறை நிறுவனங்களும், உயர் கல்வி நிறுவனங்களும், கே.வி., பள்ளிகளுக்கு, இலவசமாக நிலம் கொடுத்து உதவலாம்.இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

>>>மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு : வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நிரூபணம்

நவீன தகவல் தொழில் நுட்ப பயிற்சி பெற்று வரும் மாநகராட்சிப் பள்ளி மாணவியர், தாங்கள் தயாரித்த புராஜெக்ட் ஒன்றை, பள்ளியில் இருந்தபடியே மாநகராட்சி கமிஷனருக்கு "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் விளக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 பள்ளிகள் உள்ளன. ஒரு காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகள் என்றாலே தரமில்லாத பள்ளிகள் என்றிருந்த நிலை மாறி, இப்பள்ளிகளில் இடம் கிடைக்க அமைச்சர் சிபாரிசு தேடும் அளவுக்கு இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்புமே இதற்குக் காரணம். இந்த வரிசையில், புதிதாக தகவல் தொழில் நுட்ப வசதிகளும் இணைந்திருப்பதால், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் குறைந்தது 20 கம்ப்யூட்டர்கள் கொண்ட "லேப்' இருப்பது, வேறு எந்த மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பாகக் கருதப்படுகிறது.அழகுக்காக கம்ப்யூட்டர்களை அடுக்கி வைக்காமல், அவற்றை முறைப்படி பயன்படுத்தி, மாணவ, மாணவியரை மேம்படுத்தவும் முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த கம்ப்யூட்டர்களை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தி வருகிறது அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பு.பவுண்டேஷனின் வெளிநாடு வாழ் இந்தியர் நிதியுதவியுடன், இந்தியாவில் ஆறு மாநிலங்களில் "டிஜிட்டல் ஈக்குவலைசர்' எனும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் தொடர்பான "புராஜெக்ட்' தயாரிப்பது, பாடத்துக்குத் தேவையான படங்கள், தகவல்களை இன்டர்நெட்டில் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை, பவுண்டேஷனின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
தொடர் மதிப்பீட்டு முறை, இன்டர்நெட்டை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி தருகின்றனர். கடந்த ஐந்து மாத பயிற்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமியின் தலைமையில் நேற்று நடந்தது.கம்ப்யூட்டரை பயன்படுத்தி கணித பாடத்தில் தயாரித்த புரொஜெக்ட் குறித்து, கே.கே.புதூர் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியர் அம்ரின் தாஜ், கோகிலவாணி ஆகிய மாணவியர், "பவர் பாயின்ட்' உதவியுடன் அற்புதமாக விளக்கினர். அதைப் பார்த்து, தலைமை ஆசிரியர்கள், துணை கமிஷனர் சிவராசு, கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.ஒப்பணக்கார வீதி மாநகராட்சிப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவியர் திவ்யா, ரோஷ்மா, காவ்யஸ்ரீ ஆகியோர், தாங்கள் தயாரித்த அறிவியல் புராஜெக்ட் குறித்து, பள்ளியில் இருந்தபடியே "வீடியோ கான்பிரன்ஸ்' வசதியுடன் கமிஷனருக்கு விளக்கினர். பாடம் குறித்து கமிஷனருடன் கலந்துரையாடி, அவரிடம் பாராட்டும் பெற்றனர்.

பவுண்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசுகையில், ""ஐந்து மாதங்களில் 5,383 மாணவர்களுக்கும், 189 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். சிறப்பு பயிற்சி பெற்ற 295 மாணவர்கள் "மாஸ்டர் பயிற்சியாளர்களாக' அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் 1956 பாட புராஜெக்ட்களை தயாரித்துள்ளனர்,'' என்றார். மின்வெட்டால் பயிற்சி தடைபடுவதால், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கமிஷனர் பொன்னுசாமி, ""மாணவியரின் திறமை, ஆச்சரியப்பட வைத்தது. மூன்றாண்டுக்குப் பின் அனைத்து வகுப்பிலும் கம்ப்யூட்டர் உதவியுடன்தான் பாடம் நடத்த வேண்டும். கூடுதல் கம்ப்யூட்டர்கள், ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

>>>இன்று உலக எய்ட்ஸ் தினம்

 
எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2011 - 2015 வரை "கெட்டிங் டூ ஜூரோ' (எய்ட்ஸ் இல்லாத) என்பது மையக்கருத்து. எச்.ஐ.வி., வைரசால் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனித செல்களில் பரவி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, உடலை போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
எப்படி பரவுகிறது:
பாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி., உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எச்.ஐ.வி., தாக்குகிறது. இதைத்தவிர அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது, அவர்களை தொடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றால் எச்.ஐ.வி., பரவாது.

என்ன சிகிச்சை:
எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தீவிரமாக உள்ளனர். தற்போது, வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்சை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ சிகிச்சை முறைகள் உள்ளன.

எத்தனை பேர் :
உலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. "இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது.

எப்படி தடுப்பது:
எய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

>>>டிசம்பர் 01 [December 01]....

நிகழ்வுகள்

  • 1420 - இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான்.
  • 1640 - போர்த்துக்கல் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. நான்காம் ஜொவாவோ மன்னனானான்.
  • 1768 - அடிமைகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது.
  • 1822 - முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசன் ஆனான்.
  • 1875 - வேல்ஸ் இளவரசர் (இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார்.
  • 1918 - ஐஸ்லாந்து டென்மார்க் முடியாட்சியின் கீழ் சுயாட்சி உரிமை பெற்றது.
  • 1918 - சேர்பிய, குரொவேசிய, சிலவேனிய இராச்சியம் (பின்னர் யூகொஸ்லாவிய இராச்சியம்) அமைக்கப்பட்டது.
  • 1924 - எஸ்தோனியாவில் கம்யூனிசப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
  • 1934 - சோவியத் ஒன்றியத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் செர்கே கீரொவ் கட்சித் தலைமையகத்தில் வைத்து லியொனீட் நிக்கொலாயெவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1958 - பிரான்சிடம் இருந்து மத்திய ஆபிரிக்கக் குடியரசு விடுதலை பெற்றது.
  • 1958 - சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1959 - பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
  • 1960 - கொங்கோ அதிபர் பத்திரிசு லுமும்பா இராணுவத் தளபதி மொபுட்டுவினால் கைது செய்யப்பட்டார்.
  • 1961 - இந்தோனீசியாவின் மேற்கு நியூ கினியில் மேற்கு பப்புவா குடியரசு அறிவிக்கப்பட்டது.
  • 1963 - நாகாலாந்து இந்தியாவின் 16வது மாநிலமானது.
  • 1965 - இந்தியாவில் எல்லைக் காவற்படை அமைக்கப்பட்டது.
  • 1971 - இந்திய இராணுவம் காஷ்மீரின் ஒரு பகுதியைப் பிடித்தது.
  • 1973 - பப்புவா நியூ கினி ஆஸ்திரேலியாவிடம் இருந்து சுயாட்சி பெற்றது.
  • 1981 - யூகொஸ்லாவியாவின் விமானம் ஒன்று கோர்சிக்காவில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 1981 - எயிட்ஸ் நோக்கொல்லி அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டது.
  • 1982 - முதலாவது செயற்கை இருதயம் யூட்டா பல்கலைக்கழகத்தில் பார்னி கிளார்க் என்பவருக்குப் பொருத்தப்பட்டட்து.
  • 1989 - பனிப்போர்: கம்யூனிஸ்ட் கட்சியின் ஏகபோக அதிகாரத்தை அகற்ற கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பைத் திருத்தியது.
  • 1989 - பிலிப்பீன்ஸ் அதிபர் கொரசோன் அக்கீனோவை பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
  • 1991 - பனிப்போர்: உக்ரேன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரேன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.
  • 2006 - இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் அவர் காயமெதுவுமின்றி தப்பினார்.

பிறப்புக்கள்

  • 1935 - வூடி அலன், அமெரிக்க திரைப்படம்|திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்.
  • 1954 - மேதா பட்கர், இந்திய சமூக ஆர்வலர்.
  • 1960 - உதித் நாராயண், இந்திய திரைப்படம்|திரைப்படப் பின்னனிப் பாடகர்.
  • 1963 - அர்ஜூன றணதுங்க, இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்.

இறப்புகள்

  • 1825 - முதலாம் அலெக்சாண்டர், ரஷ்ய சார் மன்னன் (பி. 1777)
  • 1973 - டேவிட் பென்-குரியன், இஸ்ரேலின் முதல் பிரதமர் (பி. 1886)
  • 1990 - விஜயலட்சுமி பண்டிட் (பி. 1900)

சிறப்பு நாள்

  • உலக எய்ட்ஸ் நாள்
  • போர்த்துக்கல் - விடுதலை நாள்
  • மத்திய ஆபிரிக்கக் குடியரசு - விடுதலை நாள் (1958)

>>>நவம்பர் 30 : கணினி பாதுகாப்பு தினம்!

உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகள்!

இன்று - நவம்பர் 30 : கணினி பாதுகாப்பு தினம்!
உங்கள் கணினி பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகள்!

இன்று - நவம்பர் 30 : கணினி பாதுகாப்பு தினம்!

>>>ஓ பக்கங்கள் - இரு மாணவர்கள் தற்கொலை - ஓ பக்கங்கள், ஞாநி

காதல் வந்தால் சொல்லியனுப்பு.... உயிரோடிருந்தால் வருகிறேன்’, - இது ஒரு பிரபலமான சினிமாப் பாடல். காதலுக்கும் உயிருக்கும் இருக்கும் தொடர்புதான் இந்த வாரம் என் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திலும் அடுத்து ஐ.ஐ.டி.யிலும் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்களில் காதல் பிரச்னையும் ஒன்று என்று செய்திகள் சொல்கின்றன. காதல் ஏன் எப்படிப் பிரச்னையாகிறது?

>>>ஓ பக்கங்கள் - இரண்டு கடிதங்கள்! ஞாநி

கடிதம் 1:
அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் வணக்கம்.
இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.
தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...