கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியருக்கு பணி நீட்டிக்காதது பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்

"ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, கல்வியாண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்காதது சட்ட விரோதமானது" என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள, கேசரி மேல்நிலைப் பள்ளியில், 1982ல், ராமலிங்கம் என்பவர், ஆசிரியராக சேர்ந்தார். கடந்த ஜூலை மாதம், ஓய்வு பெறும் வயதை எட்டினார். கல்வியாண்டின் நடுவில், ஓய்வுபெறும் வயது வந்ததால், கல்வியாண்டு முடியும் வரை, பணியில் தொடர, அனுமதித்திருக்க வேண்டும்; ஆனால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:அரசாணையை மேற்கோள் காட்டி, கல்வியாண்டு இறுதி வரை, பணி நீட்டிப்பு வழங்கும்படி, மனுதாரர் கோரி உள்ளார். "அவரது நடத்தை திருப்திகரமாக இல்லை" எனக் கூறி, பணி நீட்டிப்பு வழங்க, நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது.
பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, புகார் கடிதங்களை ராமலிங்கம் அனுப்பியதால், அவருக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகார் மனு அனுப்பியதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேல், பணியாற்றிய ஆசிரியருக்கு, பணி நீட்டிப்பு பலனை மறுக்க முடியாது.மாணவர்களின் நலன்களுக்காக தான், கல்வியாண்டு இறுதி வரை, ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என, அரசாணை கூறுகிறது.
கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி, மனுதாரருக்கு பணி நீட்டிப்பு கோரி, பள்ளியிடம் இருந்து, எந்த தகவலும் வரவில்லை. பணியில் தொடர அவருக்கு உரிமை உள்ளது என, கோர்ட் முடிவெடுத்தால், பணி நீட்டிப்பு வழங்க, கல்வித் துறைக்கு ஆட்சேபனை இல்லை என, தெரிவித்துள்ளார்.மனுதாரருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதையும், பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்தது, சட்ட விரோதமானது. மனுதாரருக்கு, பணி வழங்கும் வரை, ஆக., முதல், சம்பளம் வழங்க வேண்டும். பணி வழங்கிய பின், 2013ம் ஆண்டு, மே மாதம் வரை, சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

>>>தனியார் பள்ளிகள் வசூல்வேட்டை - விதிமீறலை வேடிக்கை பார்க்கும் கல்வித்துறை....

"டாப்' வரிசையில் உள்ள, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே, மும்முரமாக நடந்து வருகிறது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, மே மாதம் தான், சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும்.இதை மீறி, லட்சக்கணக்கில் நன்கொடை தருபவர்களுக்கு, எந்த கேள்வியும் கேட்காமல், "சீட்' வழங்கப்படுகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், வேடிக்கை பார்த்து வருகிறது.

தமிழகத்தில், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், "டாப்' வரிசையில் உள்ள, 100க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013 - 14ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே, மும்முரமாக நடந்து வருகிறது.

அதிகாரிகள் "பில்டப்':
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், மே மாதம் தான், மாணவர் சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, மாநிலம் முழுவதும், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்."மே மாதம் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். முன்கூட்டி சேர்க்கை நடத்தினால், அந்த சேர்க்கை ரத்து செய்வதுடன், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர்.

காற்றில் பறந்தது:
ஆனால், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறியும், சட்டத்திற்கு எதிராகவும், முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதே மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் எல்.கே.ஜி., விண்ணப்பங்களை வாங்க, பெற்றோர், கால்கடுக்க, பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.பெற்றோர்களின் ஆர்வத்தைக் காசாக்கும் முயற்சியில், பள்ளி நிர்வாகங்கள் இறங்கியுள்ளன. நேரடி நன்கொடையாக பெறுவதற்கு பதில், பள்ளிகளுக்கு தேவையான, உள் கட்டமைப்பு வசதிகளை செ#து கொடுக்குமாறு, பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

கறக்கும் நிர்வாகம்:
சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., சீட் வாங்க, பல லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் கட்டித்தர, ஒரு பெற்றோர் முன்வந்த சம்பவமும், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.இதேபோல், பல பள்ளி நிர்வாகங்கள், பல லட்சம் ரூபாயை, நன்கொடையாக கறக்கவும் தவறுவதில்லை.குறிப்பிட்ட சில பள்ளிகளில்,தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என, பெற்றோர், ஒற்றைக் காலில் நிற்பதால், பள்ளி நிர்வாகம் கேட்கும் தொகையை, வாரி வழங்குகின்றனர்.

மழுப்பல் பதில்:
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தினர் கூறியதாவது:பள்ளி நிர்வாகங்கள், நன்கொடை கேட்பதாக, பெற்றோர் தரப்பில் இருந்து, எழுத்துப்பூர்வமாக, எவ்வித புகாரும் வரவில்லை.அதேபோல், பள்ளிகளுக்கு தேவையான, கட்டட வசதிகளை செய்துகொடுப்பதாக கூறி, "சீட்' வாங்குவது குறித்தும், எங்களது கவனத்திற்கு வரவில்லை. புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்போம். பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தக்கூடாது. மே மாதம் தான் நடத்த வேண்டும். சில பள்ளிகள்மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக, செய்திகள் வருகின்றன. விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, துறை வட்டாரத்தினர் கூறினர்.

அதிகாரிகள் தயக்கம் :
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது:
பெரிய பள்ளிகள், அரசையும் மதிப்பதில்லை; சட்டத்தையும், அதிகாரிகளையும் மதிப்பதில்லை. அவர்கள், தங்களுக்கு என, தனி சட்டம் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இதுபோன்ற, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். சாதாரண பள்ளிகளில் தான், அவர்களது வேகத்தை காட்டுகின்றனர்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், முன்கூட்டி சேர்க்கை நடக்கிறது. இந்த பள்ளிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசிடம் தான் உள்ளது. இந்தப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

தயக்கத்திற்கு காரணம் என்ன?
அதிகாரிகளின் தயக்கத்திற்கான காரணம் குறித்து, தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது
:உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, முன்னணி தனியார் பள்ளிகளில், "சீட்' வாங்க வேண்டிய பொறுப்பு, கல்வித்துறை அதிகாரிகளிடம் தரப்படுகிறது.இதனால், பள்ளி நிர்வாகங்களிடம் படாதபாடு பட்டு, சீட் வாங்கி தருகின்றனர். இப்படி நடந்தால், வரம்பு மீறும் பள்ளிகள் மீது, அதிகாரிகளால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அதிகாரிகளுக்கு நெருக்கடி வராமல் இருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் தீரும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

>>>கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

>>>இன்று - டிச.4: இந்திய கடற்படை தினம்!

இந்தியா, மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நாடு. இந்திய எல்லையின் பெரும்பகுதி கடற்கரையாக உள்ளது. இதனால், நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், இந்திய கடற்படையின் பங்கும் முக்கியம். இந்திய கடற்படை, உலகின் ஐந்தாவது பெரியது.
1971ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே "ஆபரேஷன் டிரிடென்ட்' என்ற பெயரில் டிச., 4ல் போர் நடந்தது. இதில் இந்திய கடற்படை, பாகிஸ்தானின் துறைமுக நகரான, கராச்சி மீது தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதை நினைவுபடுத்தும் விதமாக, கடற்படை சார்பில், டிச.,4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அழைக்கிறது கடற்படை :
இத்தினத்தில் கடற்படை சார்பில், பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, இன்னுயிரை தியாகம் செய்யும் வீரர்களுக்கு, "பரம் வீர் சக்ரா' , "மகா வீர் சக்ரா' மற்றும் "வீர் சக்ரா' ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன. கடற்படையில் உள்ள வாய்ப்பை, இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடலோர பாதுகாப்பை, இன்னும் பலப்படுத்த வேண்டும்.
Photo: இன்று - டிச.4: இந்திய கடற்படை தினம்!

>>>டிசம்பர் 04 [December 04]....

நிகழ்வுகள்

  • 1259 - பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நோர்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
  • 1639 - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
  • 1791 - உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
  • 1829 - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் சதி முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  • 1918 - முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் மார்ஷல் டீட்டோ "ஜனநாயக யூகொஸ்லாவிய அரசாங்கம்" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
  • 1945 - ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
  • 1952 - லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1957 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1958 - பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
  • 1959 - ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
  • 1967 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர்.
  • 1971 - இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
  • 1971 - பாகிஸ்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
  • 1976 - ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
  • 1977 - மலேசியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1984 - குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
  • 1991 - டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
  • 1991 - ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
  • 1992 - ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
  • 2005 - ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் ஜனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 2006 - பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தின் பதினேழு தமிழ் ஊழியர்கள் இலங்கை, கிழக்கு மாகாணத்தின் மூதூரில் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1919 - ஐ. கே. குஜரால், 15வது இந்தியப் பிரதமர்
  • 1969 - ஜெய்-சி, அமெரிக்காவின் ராப் இசைக் கலைஞர்
  • 1977 - அஜித் அகர்கர், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

  • 1122 - ஓமர் கய்யாம், பாரசீகக் கவிஞர் (பி. 1048)
  • 1976 - ந. பிச்சமூர்த்தி, தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவர் (பி. 1900)

சிறப்பு நாள்

  • இந்தியா - கடற்படையினர் தினம்

>>>ஐகோர்ட் உத்தரவை பின்பற்றாத பள்ளி வாகன உரிமம் ரத்தாகும்?

ஐகோர்ட்டு உத்தரவுப்படி, பள்ளி வாகனங்களை முறையாக இயக்க, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் அமைத்து, மாதம் ஒரு முறை, ஆலோசனை கூட்டம் நடத்தாத, பள்ளி வாகன உரிமங்கள் ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
சென்னை சேலையூர், சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்த, 6 வயது மாணவி ஸ்ருதி, ஜூலை, 25ம் தேதி, பள்ளி பஸ்சில் இருந்த, ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்தாள். மாணவியின் இந்த பரிதாப மரணம், பெற்றோர் மத்தியில் பெரும் கலக்கத்தை உருவாக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட் தானாக முன்வந்து, விசாரணை நடத்தியது. அதில், "தனியார் பள்ளி வாகனங்களை முறைப்படுத்த, புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும்&' என, உத்தரவிட்டது. தமிழக அரசு, 21 புதிய விதிமுறைகளை வகுத்து, அக்., 1ம் தேதி முதல், அமலுக்கு கொண்டு வந்தது. பள்ளி வாகனங்களை முறையாக இயக்க, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் அமைத்து, மாதம் ஒரு முறை, ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை, பள்ளி அளவிலான போக்குவரத்து குழு, அமல்படுத்த வேண்டும்.

புதிய விதிகள் நடைமுறைக்கு வந்து, இரு மாதங்களாகியும், பெரும்பாலான பள்ளிகள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை அமைத்து ஆலோசிக்கவில்லை. இதனால், பள்ளி அளவிலான, போக்குவரத்து குழுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. பள்ளிகளின் இந்த செயல்பாடு, போக்குவரத்து துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய விதிப்படி, பள்ளி வாகனங்களுக்கான, தனி பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை, அனைத்து பள்ளிகளும் ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த சங்கம், மாதம் ஒரு முறை கூடி, அதில் கூறப்படும் ஆலோசனைகளை, பதிவு செய்து, பள்ளி அளவிலான போக்குவரத்து குழுவுக்கு அனுப்ப வேண்டும்.

ஆனால், இதுவரை பெரும்பாலான தனியார் பள்ளிகள், வாகனங்களுக்கான பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தை அமைக்கவில்லை. தனி சங்கம் அமைத்து, கூட்டத்தை நடத்தாத, பள்ளிகளை கண்டறிந்துள்ளோம். அந்த பள்ளிகள் கூட்டம் நடத்தி, அதில் எடுக்கப்படும் முடிவுகளை, போக்குவரத்து குழுவுக்கு உடனே அனுப்ப உத்தரவிட்டுள்ளோம்.

அரசின் உத்தரவை மீறும், பள்ளிகள் குறித்த தகவலை, பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் வாகன உரிமத்தை, ரத்து செய்ய தேவையான, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்

>>>ஓ பக்கங்கள் - சில நேரங்களில் சில உறுத்தல்கள்!! - ஞாநி

ஒவ்வொரு வாரமும் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி முதன்மையாக எழுத வேண்டிய அவசியம் இருந்தாலும், அதே வாரத்தில் பல விஷயங்கள் மனத்தில் உறுத்தலை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. இந்த வாரம் ஒரு சில உறுத்தல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

உறுத்தல் 1:

கீழ்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்கள்.

1. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக:
அ.முருங்கைத்தழை ஆ. முருங்கைக் கீரை இ. முருங்கை இலை ஈ. முருங்கை மடல்.

2. இடன் என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
அ. இடைப் போலி. ஆ. ஈற்றுப் போலி. இ. முதற்போலி. ஈ. வினைச்சோல்.

3. நெஞ்சாற்றுப் படை என்னும் பெருமைக்குரிய நூல் எது ?
அ. சிந்தாமணி. ஆ.சிலப்பதிகாரம். இ. குறிஞ்சிப்பாட்டு. ஈ.முல்லைப்பாட்டு.

4. செய்வினைத்தொடரைக் கண்டறிக:
அ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர். ஆ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செயப்பட்டது. இ. மாணவர்களால் வகுப்பு தூய்மை செய்யப்படும். ஈ. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்வர்.

5. ‘அவன் அவன் மொழியை உயர்த்தினால்தான் அவன் நாடு உயரும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார்’ - இது எவ்வகை வாக்கியம் என்று சுட்டுக.
அ. எதிர்மறை வாக்கியம். ஆ. அயற்கூற்று வாக்கியம். இ.கலவை வாக்கியம். ஈ.வினா வாக்கியம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...