சித்த மருத்துவக் கல்லூரிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங்
தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி
நடக்கிறது. இதில் பங்கேற்க, அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, அரும்பாக்கம், அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க, அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...
கல்வி அஞ்சல்
>>>சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளநிலை தேர்வுகள் 13ல் துவக்கம்
சென்னை பல்கலைக்கழக, இளங்கலை தொலைதூர படிப்பிற்கான தேர்வுகள், வரும் 13ம்
தேதி துவங்குகிறது. சென்னை பல்கலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள் மூலம்
வழங்கப்படும், பி.ஏ., - பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., உள்ளிட இளங்கலை
படிப்புகளுக்கான தேர்வுகள், வரும் 13ம் தேதி துவங்கி, ஜனவரி 5ம் தேதி வரை
நடக்கிறது. வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இளங்கலை
தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தேர்வு
அட்டணையும், தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த முழு தகவல்களும், தபால்
மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை,
தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாள்களுக்கு முன், தேர்வு மையத்தில் பெற்று
கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன இணையதள முகவரியிலிருந்தும், ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
>>>தட்டச்சர் பணிக்கு நாளை கலந்தாய்வு
தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நாளை நடக்கிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பணிகளுக்கான குரூப் - 4 தேர்வு முடிவு, அக்., 8 ல் வெளியிடப்பட்டது.
இதில், தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, நாளை காலை, 8:30 மணி முதல், பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. தட்டச்சர் பணிக்கு தேர்வானவர்கள், அரசு தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர் விவரம், ஒவ்வொரு துறையிலும் உள்ள இனவாரியான காலிப்பணியிடம், சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் பட்டியல் ஆகியவை, தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும், 17ம் தேதி முதல் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>>“இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்”
இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான்.
சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில், உணவின்றித் தவித்த இருகுழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர்.
பொட்டலங்களைக் கொடுத்தான்
. முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.
சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில், உணவின்றித் தவித்த இருகுழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர்.
பொட்டலங்களைக் கொடுத்தான்
. முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.
அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது.
இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின.
கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது...!
>>>TET மூலம் 18ஆயிரம் புதிய ஆசிரியர்கள் தேர்வு... வரும் 13ம் தேதிக்குள் பணிநியமனம் வழங்க அரசு தீவிரம்....
கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின்,
இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி,
இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18
ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது. பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதனால், இறுதிப் பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது. அமைச்சர் தலைமையிலான குழு, புதிய விதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்து வந்தது. பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18 ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும், குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது. பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதனால், இறுதிப் பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது. அமைச்சர் தலைமையிலான குழு, புதிய விதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்து வந்தது. பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18 ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும், குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டியல் இன்று வெளியீடு :
இறுதி
தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள்,
டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், இன்று
மாலைக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு பெற்றவர்கள், பாடப்பிரிவை தேர்வு செய்து, பதிவு
எண்களை பதிவு செய்தால், இறுதி தேர்வுப் பட்டியலில், இடம் பெற்றுள்ளோமா
என்பதை அறியலாம்.
அதிக
எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்
வழங்கும் விழாவை, விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
13ம் தேதி, விழா நடக்கும் எனவும், அதில், முதல்வர்
ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை
வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதிப் பட்டியல் வெளியான
உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்'
வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு
வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக்
கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில்,
விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள்
மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர்.
10 ஆயிரம் இடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை :
இடைநிலை
ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்;
ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து
432 பேர் தேவை. ஆனால், 8,718 பேர் மட்டுமே, இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர்.
இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை. பல
லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும், டி.இ.டி., தேர்வில், 60 சதவீத
மதிப்பெண்கள் எடுக்காததால், இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக, துறை
வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.ஆர்.பி., சாதனை:
வெறும்,
15 ஊழியர்களுடன் இயங்கி வரும், டி.ஆர்.பி., ஜூலை மற்றும் அக்டோபரில், 15
லட்சம் பேருக்கு, தேர்வை நடத்தி, பல்வேறு பணிகளுக்குப் பின், இறுதி
தேர்வுப் பட்டியலை, எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட்டு, சாதனை படைத்தது.
இதற்காக, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரி முதல், கடைநிலை ஊழியர் வரை,
அனைவரும், அரசு விடுமுறை நாட்களிலும், இரவு, 12:00 மணி வரையிலும் வேலை
பார்த்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
>>>டிசம்பர் 05 [December 05]....
நிகழ்வுகள்
- 1082 - பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான்.
- 1360 - பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1492 - கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
- 1497 - போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
- 1746 - ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1848 - கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
- 1893 - மின்சாரத்தில் இயங்கும் தானுந்து அறிமுகமானது.
- 1896 - சென்னை கன்னிமாரா பொது நூலகம் ஆளுநர் சர் ஆர்தர் ஹாவ்லக் என்பவரால் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
- 1933 - யூட்டா 36வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
- 1934 - இத்தாலியப் படைகள் அபிசீனியாவின் வால் வால் நகரத்தைத் தாக்கினர்.
- 1936 - சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: கியோர்கி சூக்கொவ் தலைமையில் சோவியத் படைகள் ஜெர்மனிய ஆக்கிரமிப்புக்க்கு எதிராக மாஸ்கோவில் பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1957 - இந்தோனீசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
- 1958 - STD தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1969 - அமெரிக்க படைத்துறை உயர் ஆய்வு நிறுவனத்தால் இணையம் நிறைவேறியது.
- 1969 - மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
- 1978 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
- 1983 - ஆர்ஜெண்டீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
- 1995 - இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
- 2003 - தெற்கு ரஷ்யாவில் தொடருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
- 2006 - பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி வொரெக் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
- 2006 - இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
பிறப்புக்கள்
- 1782 - மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
- 1901 - வால்ட் டிஸ்னி, உலகப் புகழ் பெற்ற ஓவியர் (இ. 1966)
- 1901 - வேர்னர் ஐசன்பேர்க், ஜெர்மனிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் (இ. 1976)
- 1966 - தயாநிதி மாறன், இந்தியாவின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சர்
- 1985 - ஜாஷ் ஸ்மித், அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள்
- 1791 - மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (பி. 1756)
- 1879 - ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி, தமிழ் உரைநடையின் தந்தை, (பி. 1822)
- 1926 - குளோட் மொனே, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)
- 1950 - ஸ்ரீ அரவிந்தர், இந்திய ஆன்மீகவாதி, (பி. 1872)
- 1954 - கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர் (பி. 1899)
சிறப்பு நாள்
- தாய்லாந்து - தேசிய நாள், தந்தையர் நாள்.
- பெல்ஜியம், செக் குடியரசு, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் - புனித நிக்கலஸ் மாலை.
>>>Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary Examination - Oct 2012 - Results - Candidates Individual Query
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Tamil Nadu Teacher
Eligibility Supplementary Test – 2012
02.11.2012
|
|
Dated:
02-11-2012
|
Chairman
|
>>>Tamil Nadu Teachers Eligiblity Test Supplementary Examination - Oct 2012 - Results - Candidates Individual Query
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...