கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை

வீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

>>>டிசம்பர் 06 [December 06]....

நிகழ்வுகள்

  • 1060 - முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான்.
  • 1240 - உக்ரைனின் கீவ் நகரம் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
  • 1768 - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
  • 1790 - ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
  • 1865 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது.
  • 1877 - வாஷிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகை முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
  • 1884 - வாஷிங்டன் டிசியில் வாஷிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
  • 1897 - வாடகை வாகனம் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டது.
  • 1907 - மேற்கு வேர்ஜீனியாவில் மொனொங்கா என்ர இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1917 - பின்லாந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • 1917 - கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஹலிஃபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வேறொரு கப்பலுடன் மோதி வெடித்ததில் 1900 பேர் கொல்லப்பட்டு நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
  • 1921 - இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
  • 1922 - ஐரிய சுதந்திர நாடு உருவானது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் பின்லாந்து மீது போரை அறிவித்தது.
  • 1957 - வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது செய்மதி அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை. 
  • 1971 - இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டித்தது.
  • 1977 - தென்னாபிரிக்கா பொப்புதட்ஸ்வானாவுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
  • 1992 - அயோத்தியாவில் 16ம் நூற்றாண்டு பழமைவாய்ந்த பாபர் மசூதி இந்துத் தீவிரவாதிகளால் இடித்து அழிக்கப்பட்டது. இந்தியாவின் கறுப்பு நாள் (பாபர் மசூதி இடித்தநாள்)
  • 1997 - சைபீரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 - சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
  • 2006 - செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.

பிறப்புக்கள்

  • 1823 - மாக்ஸ் முல்லர், ஜேர்மனிய மொழியியலாளர் (இ. 1900)

இறப்புகள்

  • 1956 - பி. ஆர். அம்பேத்கார், தலித் தலைவர் (பி. 1891)
  • 1982 - க. கைலாசபதி, தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் (பி. 1933)
  • 2005 - தேவன் நாயர், சிங்கப்பூரின் மூன்றாவது அதிபர் (பி. 1923)

சிறப்பு நாள்

  • புனித நிக்கலஸ் நாள்
  • பெல்ஜியம், நெதர்லாந்து - சின்டர்க்ளாஸ் கொண்டாட்டம்
  • பின்லாந்து - விடுதலை நாள் (1917)
  • ஸ்பெயின் - அரசியல் சாசன நாள்

>>>Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Results

>>>IGNOU - B.Ed., 2013 Admission Counselling Schedule for the Selected Candidates... (Chennai & Madurai Regional Centres)...

>>>பிடித்ததைச் செய்யுங்கள்!

மிக்கி மவுஸ், டொனால்ட் டக் ஆகிய கார்ட்டூன்கள் உருவாக்கிய வால்ட் டிஸ்னி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும், மதிக்கும் மனிதர். கார்ட்டூன் படங்கள், சினிமா கம்பெனிகள், ஸ்டுடியோக்கள், டிஸ்னி லேண்ட் விளையாட்டுப் பூங்காக்கள் எனப் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டினார்; கோடிக் கோடியாகப் பணம் கொட்ட வைத்தார்.

டிஸ்னியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'இதுவரை நீங்கள் சாதித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?''

பளிச் என்று உடனேயே வால்ட் டிஸ்னியின் பதில் வந்தது, 'நான் செய்த எல்லாமே எனக்குப் பிடித்தவை. பிடிக்காத விஷயங்களில் நான் இறங்கவேமாட்டேன். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் உங்களால் அந்தச் செயலில் முழுமூச்சாக இறங்க முடியும், சாதிக்க முடியும். வேண்டா வெறுப்பாகச் செய்யும் காரியங்களில் வெற்றி காண முடியாது!''
(இன்று - டிசம்பர் 5: வால்ட் டிஸ்னி பிறந்த நாள்.)
பிடித்ததைச் செய்யுங்கள்!

மிக்கி மவுஸ், டொனால்ட் டக் ஆகிய கார்ட்டூன்கள் உருவாக்கிய வால்ட் டிஸ்னி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும், மதிக்கும் மனிதர். கார்ட்டூன் படங்கள், சினிமா கம்பெனிகள், ஸ்டுடியோக்கள், டிஸ்னி லேண்ட் விளையாட்டுப் பூங்காக்கள் எனப் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டினார்; கோடிக் கோடியாகப் பணம் கொட்ட வைத்தார்.  

டிஸ்னியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'இதுவரை நீங்கள் சாதித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?''  

பளிச் என்று உடனேயே வால்ட் டிஸ்னியின் பதில் வந்தது, 'நான் செய்த எல்லாமே எனக்குப் பிடித்தவை. பிடிக்காத விஷயங்களில் நான் இறங்கவேமாட்டேன். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் உங்களால் அந்தச் செயலில் முழுமூச்சாக இறங்க முடியும், சாதிக்க முடியும். வேண்டா வெறுப்பாகச் செய்யும் காரியங்களில் வெற்றி காண முடியாது!''

- அத்வைத்

(இன்று - டிசம்பர் 5: வால்ட் டிஸ்னி பிறந்த நாள்.)

>>>ஓ பக்கங்கள் - அஞ்ச வேண்டிய அஞ்சு மேட்டர்! - ஞாநி

மும்பை தாக்குதலில் பிடிபட்ட ஒரே தீவிரவாதி கசாபுக்கு அவசர அவசரமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றியதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. கசாபுக்கு முன்பே மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை, காங்கிரஸ் அரசு இன்னும் தூக்கிலிடவில்லை. அதற்கும் முன்பே தண்டனை விதிக்கப்பட்ட ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளையும் தூக்கிலிடவில்லை. கசாபை மட்டும் அவசரமாகத் தூக்கிலிட பல காரணங்கள் உள்ளன. மும்பை தாக்குதலின் நினைவு நாளையொட்டி கசாப் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியில் பலவீன நிலையில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி தன்னைப் போலவே பலவீனமாக இருக்கும் பி.ஜே.பி.யை வரும் தேர்தலுக்கு முன் மேலும் பலவீனப் படுத்தினால்தான் தனக்கு லாபம் என்று கருதுகிறது. கசாபைத் தூக்கில் போடுவதன் மூலம் பி.ஜே.பி.யை ஆதரிக்கக் கூடிய இந்துத்துவ வாக்குகளைக் கொஞ்சம் தன் பக்கம் திருப்பலாம் என்பதும் ஒரு கணக்கு. தவிர கசாபைத் தூக்கிலிடுவதால் முஸ்லிம்களின் அதிருப்தி ஏற்படும் என்ற அச்சத்துக்கும் இடமில்லை. பொதுப்புத்தியில் அனைவர் மத்தியிலுமே கசாபைத் தூக்கிலிடுவதற்கான ஆதரவு மனநிலைதான் இருக்கிறது. ஆனால் அப்சல் குருவைத் தூக்கிலிட்டால், கொஞ்சம் இந்துத்துவ வோட்டு வரும், ஆனால் முஸ்லிம் வோட்டு எதிராகத் திரும்பிவிடும். அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்ற கருத்து முஸ்லிம்கள் உட்பட பலரிடமும் இருக்கிறது. அதேபோல ராஜீவ் கொலைக் கைதிகள் விஷயத்திலும். அவர்களை இப்போது தூக்கிலிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலை தமிழ்நாட்டில் அதோகதி. அவர்களைத் தூக்கிலிட்டால், காங்கிரசை அதன் பின்னர் தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள தமிழகத்தில் யாரும் முன்வரமாட்டார்கள். இந்தக் கணக்கெல்லாம் போட்டுத்தான் கசாபின் தண்டனையை காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றியிருக்கிறது என்று கருதலாம். 
 

>>>பொது வினாக்களாக மாறும் கட்டாய வினாக்கள்? : அரையாண்டு தேர்வில் நடைமுறை

கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கட்டாயமாக்கப்பட்ட இரு வினாக்கள், பொது வினாக்களாக மாற்ற உள்ளதாகவும், வரும் அரையாண்டு தேர்விலேயே நடைமுறைப் படுத்தப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட, பாடப் புத்தகத்தில் இல்லாத, கட்டாயமாக்கப்பட்ட வினாக்களால், சதம் பெற்றவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது; மாணவ, மாணவியர் பலர், கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
தற்போது, மாணவர்களின் நலன் கருதி, கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட உள்ளது. வாய்மொழி உத்தரவு, எழுத்துப் பூர்வமாக வரும் வரை, ஏதுவும் சொல்ல இயலாது' என்றார்.

கோவை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணிதப் பாடத்தில், ஐந்து மதிப்பெண் ஒன்றும், இரண்டு மதிப்பெண் ஒன்றும், கட்டாய வினாக்களாக கேட்கப்பட்டன. இதனால், சதம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

வரும், 19ம் தேதி முதல், ஜன., 7ம் தேதி வரை, அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. கட்டாய வினாக்கள், பொது வினாக்களாக மாற்றப்பட்டது குறித்து, தகவல் சார்ந்த அறிக்கை ஏதும், இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...