கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>அறிவியல் மாநாடு: மலைவாழ் மாணவர்களின் கட்டுரை தேர்வு

மலைவாழ் பள்ளி மாணவர்கள் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால வரலாற்றில், மலை கிராம பழங்குடியின மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை அறிவியல் மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை உதவியுடன், 1973 முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு வாரணாசியில் டிசம்பர், 24ல் துவங்கி, 2013 ஜனவரி, 3 வரை நடக்கவுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 20வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு, நவம்பர் 30, டிசம்பர் 1, 2ல் கோவை மாவட்டம், காரமடையில் நடந்தது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
"ஆற்றல்" எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை கோரப்பட்டது. மாணவர்கள் குழுவினர், 180 ஆய்வுக்கட்டுரைகள் சமர்பித்தனர். 30 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய மாநாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் மலைக்கிராமம், தாமரைக்கரை, சுடர் உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கின்ற, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் அனுப்பிய ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டது.
30 ஆண்டு கால வரலாற்றில், மலை கிராம பழங்குடியின மாணவர்கள் கட்டுரை தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை. மாவட்ட கலெக்டர் சண்முகம், மாணவ, மாணவியர் கணேஷ், வேலன், சின்னத்தம்பி, குமார், கலைச்செல்வி ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார்.

>>>டிசம்பர் 08 [December 08]....

நிகழ்வுகள்

  • 1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்.
  • 1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.
  • 1881 - ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.
  • 1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.
  • 1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.
  • 1941 - பசிபிக் போர்: சீனாவில் அமைக்கப்பட்டிருந்த கொரிய அரசு ஜப்பான் மற்றும் ஜெர்மனி மீது 1910 இல் இருந்து ஜப்பான் வசமிருந்த கொரிய மக்கள் சார்பாக போரை அறிவித்தது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: வேக் தீவு மீது ஜப்பான் முதற்தடவையாக போர் தொடுத்தது.
  • 1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.
  • 1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.
  • 1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.
  • 1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.
  • 1963 - மேரிலாதில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1966 - கிரேக்கக் கப்பல் ஒன்று மத்திய தரைக் கடலில் உள்ள ஆயிஜியன் கடலில் மூழ்கியதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1969 - கிரேக்கத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1972 - சிக்காகோவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1980 - பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1982 - சூரினாமில் இராணுவ ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட பலர் கொல்லப்பட்டனர்.
  • 1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.
  • 1987 - பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.
  • 1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.
  • 1998 - அல்ஜீரியாவில் 81 பேர் ஆயுதக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • கிமு 65 - ஹோராஸ், அகஸ்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் (கிமு 8]]
  • 1935 - தர்மேந்திரா, இந்திய நடிகர்
  • 1946 - சர்மிளா தாகூர், இந்திய நடிகை
  • 1947 - தாமஸ் சிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
  • 1976 - நிருபமா வைத்தியநாதன், இந்திய டென்னிஸ் வீராங்கனை
  • 1985 - டுவைட் ஹவர்ட், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

  • 1980 - ஜான் லெனன், ஆங்கிலப் பாடலாசிரியர், இசையமைப்பாளர் (பி. 1940

சிறப்பு நாள்

  • ருமேனியா - அரசியல் சாசன நாள்
  • பல்கேரியா - மாணவர் நாள்
  • ஆஸ்திரியா - பொது விடுமுறை
  • மோல்டா - பொது விடுமுறை
  • பனாமா - தாயார் தினம்

>>>கொடி நாள்...

நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் கண்ணாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .  இதையடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைச்சகத்தின் சார்பில் 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது . அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது . அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன. ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது. தாய் திருநாட்டை காக்கும் தியாகச் சுடர்களாம் முப்படை வீரர்களின் நலன் காக்க, படை வீரர் கொடி நாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள்.. 
இன்று - டிச.7: நம் இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் 'கொடி நாள்'.
கொடி நாள் :

நமது நாட்டை பாதுகாப்பதில் ராணுவத்தினருக்கு அதி முக்கிய பங்கு உண்டு . எனவே , நாட்டின் க்ண்னாக போற்றப்படும் ராணுவத்தினரை பாதுகாப்பது அவசியம் என்று பல தரப்பினர் வலியுறுத்தினர் .

இதயடுத்து ராணுவத்தினர் நலன் காப்பது குறித்து முடிவு செய்ய ராணுவ அமைக்க்சகத்தின் சார்பில் 1949 ம் ஆண்டு ஆகஸ்ட் 28 ம் தேதி ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டி பல மட்டங்களில் ஆலோசனையில் ஈடுபட்டது .

அண்டை நாட்டுடன் போரில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவுதல் , போரில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுதல் , ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு உதவுதல் ஆகிய 3 நோக்கங்களை கொண்டு கொடி நாள் ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது .

அதன்படி 1949 ம் ஆண்டு இதே நாள் முதல் கொடி நாள் அறிவிக்கப்பட்டது .நிதி வசூலில் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுகின்றன .ராணுவத்தின் ஒரு அங்கமான கேந்தர்ய சைனிக் போர்டு என்ற அமைப்பின் மூலம் இந்த நிதி வசூல் பராமரிக்கப்படுகிறது.

தாய் திருநாட்டை காக்கும் தியாகச் சுடர்களாம் முப்படை வீரர்களின் நலன் காக்க, படை வீரர் கொடி நாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள்.. Jai hind

>>>ரூசோ

 


உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் ‘பிரெஞ்சு புரட்சி’யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

>>>அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் !! ஒரு சுவாரசியமான தகவல் !!

 


அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த விஷயம், வாட்டர் கேட் ஊழல். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாகஇருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972ல்நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி)தலைமையகம் இயங்கும் 'வாட்டர் கேட்' மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்தகட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார்என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

>>>பள்ளி விளையாட்டு போட்டி: அரசாணைக்கு தடை நீக்கம்

"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை அனுமதித்தால், பள்ளி கல்வித்துறை நடத்தும் போட்டிகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களும் பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என்கிற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
கடந்த, பிப்ரவரி மாதம், பள்ளி கல்வித்துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும் விளையாட்டில் பங்கு கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அரசு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் போட்டிகளில், பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என, கூறப்பட்டு உள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சிலர், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது. தடையை நீக்கக்கோரி, பள்ளி கல்வித்துறை சார்பில், ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதாடினார்.

நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும் போட்டிகளில், ஜிம்னாஸ்டிக்ஸ் இடம் பெறவில்லை; எனவே, மாநில அரசு நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார். இந்த வாதத்தை, ஏற்க முடியவில்லை.
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி இடம் பெறவில்லை என்றால், அதை சேர்க்கும்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பில், மனுதாரர்கள் முறையிடலாம். எனவே, தடை நீக்கப்படுகிறது. தடை கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இருதரப்பினர் ஒப்புதலுடன், இறுதி விசாரணைக்கு, இவ்வழக்கை பட்டியலிடலாம். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

>>>டி.இ.டி.,யில் வெற்றி பெற்றும் சோதனை: மாணவிகள் கண்ணீர்

மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி வழங்கிய பட்டப்படிப்பு சான்றிதழ் ஏற்கப்படாததால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், வேலை கிடைக்காமல் 20 மாணவியர் போராடுகின்றனர்.
இங்கு பி.ஏ., ஆங்கில இலக்கியம், 1999ல் "தொடர்பியல் ஆங்கிலம்" என பெயர் மாற்றப்பட்டது. இதில் பட்டம் பெற்ற மாணவிகள், 2012ல், டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றனர். அப்போது, "தொடர்பியல் ஆங்கிலத்துக்கு" அரசு அங்கீகாரம் பெறாமல் இருந்தது. இந்த பட்டப்படிப்பை டி.ஆர்.பி., நிராகரித்தது.
மாணவியர் பல போராட்டங்களுக்கு பின், நவம்பர் 27ல், அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனாலும்,பட்டப்படிப்பு சான்றிதழ்களை டி.ஆர்.பி., ஏற்காததால், 20 மாணவிகள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட திவ்யபிரியா, புனிதா (மதுரை), லட்சுமி (தேனி), திவ்யா (ராமேஸ்வரம்), முத்துப்பிரியா (சிவகாசி) கூறுகையில், "பி.ஏ., சேரும் போது "ஆங்கில இலக்கியம்" என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. பட்டம் பெற்ற போது தான் "தொடர்பியல் ஆங்கிலம்" என தெரிந்தது. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது "பட்டபடிப்பு பெயர் தான் மாறியுள்ளதால் ஒன்றுமில்லை," என கூறிவிட்டது. கருணை அடிப்படையில் எங்களுக்கு அரசு பணி வழங்கவேண்டும்," என்றனர்.

"அரசு கல்லூரியில் "பட்டப்படிப்பின்" பெயர் மாற்றப்பட்டு, 11 ஆண்டுகள் அங்கீகாரம் பெறவில்லை. அங்கு படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. "இணையான சான்றிதழ் பெற்றால் பரிசீலிக்கப்படும்" என்று, தெரிவித்த டி.ஆர்.பி.,யும், அந்த படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகும், "பட்டப்படிப்பு" சான்றிதழை நிராகரித்தது யார் குற்றம்," என பெற்றோர் குமுறினர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...