கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>உங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?

 
சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால் அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது.
மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

>>>டிசம்பர் 10 [December 10]....

நிகழ்வுகள்

  • 1684 - ஐசக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ராயல் சபையில் படிக்கப்பட்டது.
  • 1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.
  • 1817 - மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
  • 1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிறுவப்பட்டது.
  • 1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.
  • 1902 - அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
  • 1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
  • 1906 - அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
  • 1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பிலிப்பீன்சை அடைந்தனர்.
  • 1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
  • 1975 - ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • 1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.
  • 1984 - தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
  • 1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
  • 2006 - ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1750 - திப்பு சுல்தான், மைசூர் இராச்சியத்தின் மன்னன் (இ. 1799)
  • 1804 - ஜேகோபி, ஜெர்மானிய கணிதமேதை. (இ. 1851)
  • 1851 - மெல்வில் டியூவி - அமெரிக்கா. நூலக அறிவியலை வளர்த்தவர். (இ. 1931)
  • 1878 - ராஜாஜி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சுதந்திர இந்தியாவின் முதலாவது ஆளுநர் (இ. 1972)
  • 1891 - நெல்லி சாக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (இ. 1970)
  • 1934 - ஹவர்டு மார்டின் டெமின் - அமெரிக்கா. வைரசுகளைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 1975இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். (இ. 1931)

இறப்புகள்

  • 1896 - அல்பிரட் நோபல், சுவீடனைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் (பி. 1833)

சிறப்பு நாள்

  • மனித உரிமைகள் நாள்
  • நோபல் பரிசு அளிக்கும் வைபவம்
  • தாய்லாந்து - அரசியலமைப்பு நாள் (1932)

>>>மைக்ரோவேவ் அடுப்பு நல்லதா? கெட்டதா ?

 


'மைக்ரோவேவ் அடுப்பு’ (நுண்ணலை அடுப்பு) மூலம் சமைத்தால் உணவில் இருக்கும் சத்துக்கள் போய்விடுமா?’ - இந்தச் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இன்னொருபுறம் மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் இருக்கிறது. இதில் எது உண்மை? எது புனைவு? சுகாதார மேம்பாட்டு அலுவலர் பூர்ணிமா, உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் கோ.ராஜா விளக்கம் கூறியுள்ளனர்

மைக்ரோவேவ் அடுப்பு எப்படிச் செயல்படுகிறது?
'மைக்ரோவேவ் அடுப்பில் உணவைச் சமைக்கும் போது, முதலில் அடுப்பினுள் மின்சார அலை உண்டாகும். அந்த அதிர்வினால் நீர், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றின் மூலக்கூறுகள் அதிர்வடைந்து ஒன்றுடன் ஒன்று உராய்ந்து வெப்பம் உண்டாகும். கண்ணாடி மற்றும் பீங்கான் பாத்திரங்களை இந்த அலை பாதிக்காது. மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்க அதற்குரிய பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று பூர்ணிமா கூறினார்.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் சத்து இழப்பு ஏற்படுமா?’

இந்தக் கேள்விக்கு பதில் அளித்த டாக்டர் கோ.ராஜா, ''மைக்ரோவேவ் அடுப்புக்குள் இருக்கும் மேக்னெட்ரான் என்னும் கருவி அடுப்புக்குள் வைத்த உணவுப் பொருளைச் சூடேற்ற உதவுகின்றது. இதில் சமைக்கும் நேரமும் குறைவு, காய்கறிகளில் உள்ள சத்துக்கள் மறைந்து போகாது'' என்றார்.

இந்த சந்தேகம் குறித்து உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

''காய்கறிகளையும் ஒயிட் மீட் என்று சொல்லப்படும் மீன், கோழி ஆகியவற்றையும் மைக்ரோவேவ் அடுப்பில் சமைப்பதால் சத்துக்களில் பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ரெட் மீட் எனப்படும் ஆட்டு இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி போன்றவற்றில் நிறைய எண்ணெய் விட்டு மசாலாக்கள் சேர்த்துச் சமைத்தால் சாப்பிட ருசியாக இருக்குமே தவிர ஆரோக்கியமானதாக இருக்காது.'' என்றார். மற்ற சமையலுக்கும் மைக்ரோவேவ் சமையலுக்குமான வித்தியாசத்தையும் அவர் விளக்கினார்.

''மைக்ரோவேவ் அடுப்பில் பாலைச் சுடவைத்தால் அதிலுள்ள லைசோஸைம் சிதையும். சாதாரண அடுப்புச் சமையலின்போது பாத்திரத்தில் காய்கறிகளை அதிக நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் அது கருகியும் தீய்ந்தும் போய்விடும். அவற்றையே குக்கரில் வேக வைக்கும்போது காய்கறிகளின் ருசி குறைந்துவிடும் சாத்தியம் அதிகம். ஆனால் மைக்ரோவேவ் அடுப்பில் சரியான சூட்டில் முறையாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளின் சத்துக்கள் அப்படியே இருக்கும். காய்கறிகளின் நிறமும் மாறாது'' என்றார்.

மைக்ரோவேவ் அடுப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

சாதாரணமாக மைக்ரோவேவ் அடுப்பில் காய்கறிகளைச் சமைத்து முடித்ததும் ஸ்விட்சை அணைத்துவிட, அதன் இயக்கம் முழுவதும் நின்றுவிடும். ஸ்விட்ச் அணைக்கப்பட்ட நொடியில் மின் அலைகள் மறைந்து போவதால் அடுப்புக்குள் கதிர்வீச்சு எதுவும் இருக்காது. சமைத்த உணவிலும் எவ்விதக் கதிர்வீச்சின் தாக்கமும் இருக்காது. ஆனால், இதுவே அடுப்பில் கசிவு இருந்து அது தெரியாமல் சமைத்தால் நிச்சயம் பிரச்னை ஏற்படும். எனவே தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் அடுப்புகளையே பயன்படுத்தவேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பில் சமைக்கும் போது அதன் கதவை நன்றாக மூடி லாக்கான பிறகே சமைக்க வேண்டும். சரியாக மூடாவிட்டால் கசிவு ஏற்பட்டுத் தீக்காயம் ஏற்படும். அடுப்பில் எதாவது பிரச்னை என்றால், உடனடியாகப் சர்வீஸுக்கு கொடுக்க வேண்டும்.

மைக்ரோவேவ் அடுப்பை வாங்கும்போது தரப்பட்ட கையேட்டை நன்றாகப் படித்த பின்னரே அதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். மைக்ரோவேவ் அடுப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை நாமே பழுது பார்க்க முயற்சி செய்யக் கூடாது.

'மைக்ரோவேவ் அடுப்பில் சமைத்தால் புற்றுநோய் ஏற்படும்’ என்று ஒரு பிரிவினருக்கு அச்சம் இருந்தாலும் இது குறித்து எந்த ஆராய்ச்சி முடிவும் இதுவரை வெளிவரவில்லை.

மைக்ரோவேவ் அடுப்பில் செய்யக் கூடாதவை:

மைக்ரோவேவ் அடுப்பில் உணவு சமைக்கும் போது அடிக்கடி திறந்து மூடக்கூடாது.குறுகிய வாயுள்ள பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது
முட்டையை ஓட்டுடன் வைக்கக்கூடாது.
வறுவல் செய்யும்போது உப்பு போடக்கூடாது, ஏனெனில் அப்படிச் சமைத்தால் உப்பு தீய்ந்து அதிலிருக்கும் ஐயோடின் சிதைந்து போய்விடும். எனவே, வறுத்த பின்பு உப்பு சேர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் மற்றும் காகிதப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தினால் அவை உருகி, எரிந்து போய்விடும்

தண்ணீரைச் சுட வைக்க மைக்ரோவேவ் அடுப்பைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இதன் நுண் கதிர்களால் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டுத்தான் தண்ணீர் சூடாகும். அதனால் நீராவி வெளியேறாது. தண்ணீர் அதன் கொதி நிலையான 100 டிகிரி செல்ஸியஸ் அளவையும் தாண்டி சூடாகும். ஆனால், தண்ணீர் கொதிப்பில் சலனம் எதுவும் இருக்காது. இது தெரியாமல் அடுப்பை அணைத்ததும் உள்ளிருந்து நீரை அஜாக்கிரதையாக எடுத்தால் தப்பித் தவறி தண்ணீர் உடம்பில் பட்டுத் தீக்காயம் ஏற்படும்.

>>>இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்

மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடக்கும் இடங்கள்:

சென்னை - எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
கோவை - பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
கடலூர் - சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
தர்மபுரி - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
திண்டுக்கல் - அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
ஈரோடு - வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
காஞ்சிபுரம் - பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
கன்னியாகுமரி - எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
கரூர் - பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
கிருஷ்ணகிரி - அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
மதுரை - இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
நாகை - கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
நாமக்கல் - நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
புதுக்கோட்டை - பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
ராமநாதபுரம் - சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
சேலம் - சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
சிவகங்கை - சி.இ.ஓ., அலுவலகம்
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
நீலகிரி - சி.இ.ஓ., அலுவலகம்
தேனி - சி.இ.ஓ., அலுவலகம்
திருவண்ணாமலை - சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
திருவாரூர் - கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
திருப்பூர் - ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
திருச்சி - அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
நெல்லை - சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
தூத்துக்குடி - சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
வேலூர் - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
விழுப்புரம் - சி.இ.ஓ., அலுவலகம்
விருதுநகர் - கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
அரியலூர் - அரசு மே.நி.பள்ளி, அரியலூர்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:
இன்று: மாவட்டத்திற்குள்
நாளை: வெளி மாவட்டங்கள்
இடைநிலை ஆசிரியர்-11ம் தேதி
காலை: மாவட்டத்திற்குள்
பிற்பகல்: வெளி மாவட்டங்கள்

>>>டிசம்பர் 09 [December 09]....

நிகழ்வுகள்

  • 1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.
  • 1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
  • 1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
  • 1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
  • 1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
  • 1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.
  • 1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.
  • 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்ஸ் ஆகியன ஜெர்மனி மற்றும் ஜப்பான் மீது போரை அறிவித்தன.
  • 1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.
  • 1953 - ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
  • 1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
  • 1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
  • 1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
  • 1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.
  • 1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
  • 1995 - உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, "கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்" என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப் பட்டது.
  • 2003 - மாஸ்கோ நகர மத்தியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புக்கள்

  • 1946 - சோனியா காந்தி, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்

இறப்புகள்

  • 2006 - சு. வில்வரத்தினம் (சு.வி.) ஈழத்துக் கவிஞர் (பி. 1950)

சிறப்பு நாள்

  • தான்சானியா - விடுதலை நாள் (1961)
  • ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள் 2003

>>>தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .

மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர்.

படத்தில் : மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்...

தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிர்வோம்...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை காப்பாற்றிய தமிழ் மீனவர்களின் செயற்கரிய செயல்.

வியாழன் அன்று சென்னை மெரீனா கடற்கரையில் அரிய வகை டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது. மிகமும் ஆழமில்லாத கடற்பகுதியில் இந்த பாலூட்டி வகையை சேர்ந்த மீன் சிக்கிக் கொண்டதால், அதனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இந்த மீனை முதலில் குப்பன் என்ற மீனவர் தான் அடையாளம் கண்டார். கடல் சீற்றம் அதிமாக இருந்ததால் இந்த மீனால் கடலின் ஆழமான பகுதிக்கு செல்ல முடியவில்லை. இந்த மீனின் வாயில் ரத்தம் கசிந்து வந்ததாக குப்பன் சொல்கிறார்.

இந்த மீனை காப்பாற்ற வழக்கம் போல் தமிழக அரசின் வனத்துறை அதிகாரிகளோ , அல்லது மீன் வளத் துறை அதிகாரிகளோ வரவில்லை. மாறாக அயோத்தி குப்பத்தில் உள்ள ஐந்து மீனவர்கள் இதை காப்பாற்ற முடிவெடுத்தனர். ஐந்து முறை இம்மீனை கடலில் ஆழப் பகுதியில் விட்டுவிட முயற்சித்தும் இம்மீன் மீண்டும் கரை ஒதுங்கியது. அதனால் வேறு வழி இன்றி ஒரு அபாயகரமான முடிவை எடுத்தனர் இந்த ஐந்து மீனவர்கள். கடல் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களுடைய படகில் இம்மீனை ஏற்றிக் கொண்டு கடலின் ஆழப் பகுதிக்கு துணிந்து சென்று இம்மீனை விட்டு விட்டு வந்தனர் . ஆழமான பகுதியை கண்டதும் இந்த டால்பின் மீன் கடலுக்குள் துள்ளிக் குதித்து சென்று மறைந்தது .

மீன்களை உணவிற்காக, வாழ்வாதாரத்திற்கு பிடிக்கும் மீனவர்கள் கூட இந்த அறிய வகை பாலூட்டிகளை கொல்லக் கூடாது என்று தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த மீனை காப்பாற்றி உள்ளனர். இது மிகவும் பாராட்டுக் குரிய செயல். டென்மார்க் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட இந்த பாலூட்டி மீன்களுக்கு இறக்கம் காட்டுவதில்லை . மிகவும் அறிவு கூர்மையான இந்த மீனை அதிக அளவில் வேட்டை ஆடி வருகின்றனர் . ஆனால் தமிழக மீனவர்களோ இந்த மீனின் தன்மை அறிந்து அதனை காப்பற்றி உள்ளனர். 

படத்தில் : மீனவர் மணிகண்டன் மீனை தூக்கிச் செல்கிறார்...

தமிழ் மீனவர்களுக்கு நம் வாழ்த்துகளை பகிருவோம்...!

>>>சுயநிதி பள்ளி கட்டண நிர்ணய குழு தலைவர் பதவியை நீட்டிக்க முடிவு?

சுயநிதி பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுத் தலைவர் சிங்காரவேலுவிற்கு, பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டண நிர்ணய குழுவின் தலைவராக பதவி ஏற்பவர், மூன்று ஆண்டுகள் அப்பதவியை வகிக்கலாம் என்றாலும், ஒட்டுமொத்த குழுவின் பதவி காலம், 6ம் தேதியுடன் முடிவடைந்ததால், தலைவர் உள்ளிட்ட அனைவரது பதவிகளும், முடிவுக்கு வந்தன. இந்நிலையில், குழுவின் பதவி காலத்தை, மேலும், மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்தும், தற்போதைய தலைவரான சிங்காரவேலு, மூன்று ஆண்டுகள் நிறைவுபெறும் வரை, அப்பதவியில் தொடரலாம் எனவும், தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதாக, நேற்று மாலை, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், குழுவின் சிறப்பு அலுவலராக இருந்த மனோகரன், அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஓய்வுபெற்ற, சி.இ.ஓ., முத்துக்கிருஷ்ணன், அப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...