பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், மாற்றுத் திறனாளி தேர்வாளர்களின்
சிரமத்தைக் குறைக்கும் வகையில், புதிய நடைமுறையை, தேர்வுத் துறை கொண்டு
வந்துள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் செயல் தன்மையை
பொறுத்து, தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்குதல், தேர்வர்கள் சொல்வதை
எழுதுபவர் நியமனம் உள்ளிட்டவை குறித்து பரிந்துரை செய்து, கல்வித் துறை
வாயிலாக, தேர்வுத் துறைக்கு, கருத்துரு அனுப்பப்படும். இதை உறுதி செய்த
பின், மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் சலுகை வழங்கப்படும். நடப்பாண்டில்,
இம்முறையை எளிமையாக்கி, தேர்வுத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு தேர்வுத் துறை அனுப்பியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் சொல்வதை, எழுதுபவர் நியமனம் குறித்த
கருத்துருக்கள், தேர்வுத் துறை அலுவலகத்துக்கு, தாமதமாகக் கிடைக்கிறது.
எனவே, மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து,
இம்மாணவர்கள் குறித்த குறிப்பிட்ட சான்றிதழ்களை பெற்று, உடனடியாக அனுப்ப
வேண்டும். பார்வையற்றோர் என்பதை நிரூபிக்கும் வகையில், அரசு கண்
மருத்துவரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்; உடல் ஊனமுற்றவராயின், தேர்வு
எழுத இயலாத அளவுக்கு உடல் ஊனமுற்றவர் என, வழங்கப்பட்ட சான்றிதழ்;
தேர்வரின் முழு அளவிலான போட்டோ, சொல்வதை எழுதுபவர் நியமனம் அல்லது கூடுதல்
நேரம் வழங்க வேண்டிய மாணவர்கள் விவரம் ஆகியவை குறித்து, தக்க ஆதாரங்களுடன்
கருத்துருக்கள் வழங்க வேண்டும். காது கேளாதோர், வாய் பேசாதோருக்கு, முதன்மை
மொழி அல்லது ஆங்கில மொழியிலிருந்து, தேர்வு விலக்கு அளிக்கப்படுகிறது.
இதற்கான கருத்துருவும் அனுப்ப வேண்டும். "டிஸ்லெக்சியா' குறைபாடுள்ள
மாணவர்களுக்கு, தேவைப்படும் சலுகைகள் வழங்கக் கோரும் விண்ணப்பங்களை, அரசு
மருத்துவர்கள் அல்லது மனோதத்துவ நிபுணர்கள் அடங்கிய அரசு மருத்துவக் குழு
வழங்கும் சான்றிதழ், பாட ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களின்
பரிந்துரை சான்றிதழ் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனமான, "மெட்ராஸ்
டிஸ்லெக்சியா அசோசியேஷன்' வழங்கும் சான்றிதழ்களுடன், விண்ணப்பிக்க
வேண்டும். செய்முறை தேர்வுக்கு விலக்கு கோரும் மாற்றுத் திறனாளி
தேர்வர்களின் விவரம், பள்ளிகளில் இருந்து, கல்வி மாவட்ட வாரியாக தொகுத்து
வழங்க வேண்டும். இவை, வரும், ஜன., 9ம் தேதிக்குள், அந்தந்த தேர்வுத் துறை
மண்டல துணை இயக்குனரகத்துக்கு, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.***
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>விலையில்லா மடிக்கணிணி விற்பனை தடுக்க கல்வி துறை புதிய அணுகுமுறை
கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணிகளை
மாணவர்கள் விற்று வருவதைத் தடுக்க, உயர்கல்வித் துறை, புது திட்டத்தை
அறிமுகம் செய்கிறது. இதையடுத்து, மடிக்கணினிகளை, அன்றாடம் பயன்படுத்தும்
திட்டம், கல்வித் துறையில் விரைவில் அமலாகும்.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒன்றாக, விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை, கடந்தாண்டு அரசு அறிமுகப்படுத்தியது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.கடந்தாண்டு, கல்லூரியில் படித்த மூன்றாமாண்டு மாணவர்கள், 1.42 லட்சம் பேருக்கு, மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தற்போது, முதலாமாண்டு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.மடிக்கணினி குறித்த போதிய அறிவு இல்லாத காரணத்தால், பாடல்களை கேட்கவும், சினிமா பார்க்கவும் மடிக்கணினிகளை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற புகார் உள்ளது. மேலும், சிலர் மடிக்கணினிகளை விற்று விடுகின்றனர்.
அரசின் மடிக்கணினிகள், தற்போது சந்தையில் அடிமாட்டு விலைக்கு அமோகமாகக் கிடைக்கின்றன. கேரள வியாபாரிகள் இவற்றை, 5,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி, கூடுதல் விலைக்கு கேரளாவில் விற்கின்றனர் என்ற புகார், பரவலாக எழுந்திருக்கிறது; அரசுக்கும் பல புகார்கள் சென்றுள்ளன.மடிக்கணினி விற்பதை தடுக்க, நடவடிக்கைகள் எடுக்க, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அனைத்து கல்லூரிகளுக்கும், கல்லூரி கல்வி இயக்குனரகம், சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில், மடிக்கணினியை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், தினமும் கல்லூரிகளுக்கு மடிக்கணினியை கொண்டு வர வேண்டும்; இதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.தொலை தூரங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் மடிக்கணினிகளை கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறியதாவது:ஏழை மாணவனும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை, விற்பனை செய்வது வேதனைக்குரியது. கல்லூரியில் உள்ள வரை, மாணவர்கள் மடிக்கணினி பயன்பாடு குறித்து கண்காணிக்கப்படும். மடிக்கணினிகளை தினமும் கல்லூரிகளில் பயன்படுத்தும் வகையில், கணினி வழியாக பாடத்திட்டங்கள் கற்கும் முறை, விரைவில் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

>>>இன்று - டிச.25: ஐசக் நியூட்டன் பிறந்த நாள்!
இன்று - டிச.25: கணிதவியலாளரும், அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆன ஐசக் நியூட்டன் பிறந்த நாள்!
>>>டிசம்பர் 25 [December 25]....
நிகழ்வுகள்
- 800 - சார்லமேன் புனித ரோமப் பேரரசனாக முடிசூடினான்.
- 1000 - ஹங்கேரிப் பேரரசு முதலாம் ஸ்டீபனின் கீழ் கிறிஸ்தவ நாடாக உருவாக்கப்பட்டது.
- 1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1643 - கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரிகப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
- 1741 - ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
- 1758 - ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் ஜெர்மனியரால் அவதானிக்கப்பட்டது.
- 1868 - அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1926 - ஜப்பானின் டாயீஷோ மன்னன் இறந்தான். அவனின் மகன் ஹிரோஹிட்டோ அரசனானான்.
- 1932 - சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் ~70,000 பேர் இறந்தனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
- 1947 - சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
- 1968 - கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 42 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழ்வெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
- 1977 - இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
- 1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
- 1989 - ருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1990 - உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- 1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
- 1991 - உக்ரேன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
- 2003 - மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் தரையில் இறங்வதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
- 2004 - காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் சந்திரனான டைட்டானில் இறக்குவதற்காக ஹியுஜென்ஸ் என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது ஜனவரி 14, 2005 இல் டைட்டானில் இறங்கியது.
பிறப்புகள்
- 1642 - ஐசக் நியூட்டன், ஆங்கில இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் (இ. 1727)
- 1876 - முகமது அலி ஜின்னா, பாகிஸ்தானைத் தோற்றுவித்தவர் (இ. 1948)
- 1906 - ஏர்ணஸ்ட் ருஸ்கா ஜெர்மானிய இயற்பியலாளர், நோபல் விருதாளர் (இ. 1988)
- 1918 - அன்வர் சதாத், எகிப்திய தலைவர், நோபல் விருதாளர் (இ. 1981)
- 1919 - நௌஷாத் அலி, இந்திய இசைக்கலைஞர் (இ. 2006)
- 1924 - அடல் பிஹாரி வாஜ்பாய், முன்னாள் இந்தியப் பிரதமர்
- 1927 - ராம் நாராயண், இந்துஸ்தானி இசைக்கலைஞர்
- 1949 - நவாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்
இறப்புகள்
- 1796 - வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
- 1931 - பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
- 1977 - சார்லி சாப்ளின், ஹாலிவுட் நடிகர் (பி. 1889)
- 1994 - ஜெயில் சிங், முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர். (பி. 1916)
- 2006 - தமிழோவியன், இலங்கையின் மலையகத்தின் மூத்த இலக்கியவாதியும் கவிஞரும்
- 2006 - ஜேம்ஸ் ப்ரௌன், இசையறிஞர் (பி. 1933)
சிறப்பு நாள்
- கிறிஸ்துமஸ் - கிறிஸ்து இயேசுவின் பிறப்பை குறிக்கும் முக்கிய பண்டிகை.
- பாகிஸ்தான் - தேசிய விடுமுறை (முகமது அலி ஜின்னா பிறந்த நாளை முன்னிட்டு)
>>>74 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற கல்வி கட்டணம் உயர்த்த உத்தரவு
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின
மாணவர்களுக்கு, பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், கல்வி கட்டணங்களை
உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தால், 74
ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் எனத தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்திக்குறிப்பு: பள்ளி மேற்படிப்பு உதவி திட்டத்தின் கீழ், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், தேர்வு செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு, நிர்ணயம் செய்யப்படும் கட்டணம், முழுமையாக வழங்கப்படும்.
அரசின் பல துறைகள், தங்கள் துறை சார்ந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணங்களை உயர்த்தும் போது, தனியாக எவ்வித அரசு உத்தரவையும் எதிர் நோக்காமல், கல்வி தொகை அறிவிக்கையில் மாற்றம் செய்து, அரசு துறைகளால் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணங்களை உடனே வழங்கலாம். இத்திட்டத்தால், 74 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர்.
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இயங்கும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படுகின்றன.
பெரம்பலூர், சிவகங்கை, திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மிகவும் பின் தங்கிய எட்டு மாவட்டங்களில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். இதற்காக, 2.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
>>>ஆசிரியர்கள் சம்பள பட்டியல் "சாப்ட்வேரில்' குளறுபடி
தமிழகத்தில்,
மூன்று மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட சம்பள கணக்கு "சாப்ட்வேரில்'
உள்ள குளறுபடியால், மூன்று மாதங்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்
மற்றும் பலர் நிலுவை தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். திருச்சி,
தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அனைத்து துறைகளிலும், சம்பள பட்டியல்
தாக்கல் செய்ய, 8.2.1 "வெர்சன்' என்ற புதிய "சாப்ட்வேர்' 3 மாதங்களுக்கு
முன்பு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஓய்வூதியதாரர்கள் ஈட்டிய, ஈட்டா
விடுப்பு பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய
திட்டத்தில், சி.பி.எஸ்., சில் பொது, எய்டட், ஊராட்சி, நகராட்சி என, நான்கு
வகை இருக்கும்.
தற்போது, ஊராட்சி, நகராட்சி என்ற தலைப்புகள் எய்டட் தலைப்பில் வருவதால், எதிர்காலத்தில் இவைகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய சாப்ட்வேரில் அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி தொகை ஐந்து "டிஜிட்டிற்கு' மேல் சென்றால், சாப்ட்வேர் ஏற்றுகொள்வதில்லை. தற்போது ஆசிரியர்கள் பெரும்பாலும், அடிப்படை சம்பளம் 25 ஆயிரத்திற்கு மேல் பெறுவதால், அகவிலை மற்றும் வீட்டுவாடகைப்படி ஐந்து டிஜிட்டிற்கு மேல் வருகிறது. இதனால், பில் தயார் செய்ய முடியவில்லை. கடந்த 31.10.2012 முதல் ஓய்வு பெற்ற பல ஆசிரியர்கள் ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பு பணம் பெறமுடியாமல் உள்ளனர். மேலும் ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதியம் உரிய கணக்கில் செல்லாமல், வேறு கணக்கில் செல்வதால் பெரும் பிரச்னை ஏற்படவாய்ப்புள்ளது. இந்தநிலை, மாவட்டத்தில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ளது. இதை சென்னை கணக்கு துறையிலிருந்து தான் சரி செய்ய முடியும், என்றார்.

>>>முட்டைகோஸ் - மருத்துவ குணம் பற்றிய தகவல்
இயற்கையின்
அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது.
உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.
மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.
இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.
இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.
முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.
இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.
முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.
முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்
கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.
சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.
எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.
உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.
முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...