கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்

தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில், நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவர்கள் சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனசோர்வு, மனக்குழப்பம், பாலியல் வன் கொடுமைகள், மதிப்பெண் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன், உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள், மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களை மையப்படுத்தி, அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் தொடர்ந்து பரிசோதிக்கப்படும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தொழில் மற்றும் வாழ்கை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளது.

>>>கிராமங்களில் தேர்வு மையம் இல்லை: அரசுப்பள்ளி மாணவர்கள் தவிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் இல்லாததால், கிராமப்புற மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், கிராமப்புற அரசுப்பள்ளிகள் அதிகளவில், தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கான அனுமதியை, தேர்வுத்துறை வழங்க வேண்டும். அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைத்தால், பணிச்சுமை அதிகரிக்கும். இதனால், பலர் தேர்வு மையங்களுக்கு அனுமதி கேட்பதில்லை.
தனியார் பள்ளிகள் துவங்கிய ஒரு ஆண்டில், தேர்வு மையங்களை பெற்று விடுகின்றன. அரசுப்பள்ளிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. கிராமப்புறத்தில் இருந்து தேர்வு எழுத, நகரங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில் இருந்து, சரக்கு வாகனங்கள், டூவீலர்களில் தேர்வு மையங்களுக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
அரசுப்பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இருந்தும், கிராமப்புற மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

>>>"ஆன்-லைன்' வழியாக சான்றிதழ் சரிபார்ப்பு திட்டம் : அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது

"ஆன்-லைன்' வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். மேலும், போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

உயர் கல்வி : பிளஸ் 2 தேர்வுக்குப் பின், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேர்கின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆண்டுதோறும் அரசு வேலைகளில் சேர்பவர்களின் சான்றிதழ்கள் என, ஆண்டுக்கு பல லட்சம் சான்றிதழ்களை, சரிபார்க்க வேண்டிய பெரும் பணியால், தேர்வுத்துறை திணறி வருகிறது.
தேர்வுத்துறை இயக்குனரகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவுகளில், போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால், லட்சக்கணக்கான சான்றிதழ்கள், சரிபார்ப்புக்காக, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, முந்தைய ஆட்சியில், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தேசிய தகவல் மையத்தின் (நிக்), தொழில்நுட்ப உதவியுடன், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ் சரிபார்க்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கு தேவையான மின்னணு சாதனங்கள் வாங்க, 8.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ஒரு வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்பட்டது.

குறியீட்டு எண் : திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, "நிக்' தேர்வுத்துறை அதிகாரிகள், "டேட்டா சென்டர்' அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர், பல்வேறு கட்டங்களில் கூடி, விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, தேவையான மின்னணு சாதனங்கள் வாங்கப்பட்டன. வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் நிரப்பப்பட்டது. ஒட்டுமொத்த பணிகளையும், தேர்வுத்துறை இயக்குனரகம் மேற்பார்வை செய்து வருகிறது.

திட்டத்தின்படி, கணிசமான எண்ணிக்கையில், மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும், தேர்வுத்துறையால், குறியீட்டு எண் ஒன்று வழங்கப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அறிய விரும்பும் கல்வி நிறுவனங்கள், சரிபார்ப்புக்கான கட்டணத்தை செலுத்தி, அதற்குரிய கருவூலச்சீட்டு ரசீது, சரிபார்க்க வேண்டிய மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த பட்டியலை, தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு துறை ஆய்வு : அப்படி அனுப்பினால், தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நிறுவப்படும் சாதனம் மூலம், சம்பந்தபட்ட கல்வி நிறுவனம், குறிப்பிட்ட சான்றிதழ்களை, தேர்வுத்துறை இணையதளம் வழியாக சரிபார்த்துக் கொள்ள, அனுமதி வழங்கப்படும். இதன்பின், சம்பந்தபட்ட உயர்கல்வி நிறுவனங்கள், சான்றிதழ்களை சரிபார்த்து, வேறுபாடுகள் நிறைந்த சான்றிதழ்கள் இருந்தால், அதை நகல் எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும். மாறுபட்ட விவரங்கள் கொண்ட சான்றிதழ்களை, சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற்று, தேர்வுத்துறை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.

குழப்பம் : இந்த முறையால், உயர்கல்வி நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், அரசுத் துறைகள், தங்களிடம் சேரும் பணியாளர்களின் சான்றிதழ்களையும், ஆன்-லைன் வழியாக, உடனுக்குடன், சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இதற்காக, ஆண்டுக்கணக்கில், காத்திருக்க தேவையில்லை. முக்கியமாக, போலி சான்றிதழ்கள் ஊடுருவலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் தேர்வுத்துறை நம்புகிறது. திட்டம் அமலுக்கு வந்தபின், அதை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் பணியை மேற்கொள்ளும் பொறுப்பை, யார் ஏற்பது என்பதில், மூன்று துறையினரிடையே, பிரச்னை நிலவி வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>ஜனவரி 13 நாட்கள் "லீவு'

வருடந்தோறும் ஜனவரி மாதம் என்றாலே, "ஜாலி' மாதம் தான். இம்மாதத்தில் விடுமுறை மட்டும், 13 நாட்கள் கிடைக்கிறது.

ஜன., 12 சனி, ஜன., 13 போகி, ஜன., 14 பொங்கல், ஜன., 15 திருவள்ளுவர் தினம், ஜன., 16 உழவர் தினம் ஆகிய ஐந்து நாட்கள், தொடர்ச்சியாக அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து, ஜன., 19, 20 சனி, ஞாயிறும் விடுமுறை.

அது மட்டுமா? ஜன., 1 புத்தாண்டு, ஜன., 5 சனி, ஜன., 6 ஞாயிறு, ஜன., 25 மிலாடி நபி, ஜன., 26 குடியரசு தினம், ஜன., 27 ஞாயிறு ஆகிய நாட்களும் விடுமுறை. 31 நாட்கள் உள்ள இம்மாதத்தில், விடுமுறை மட்டுமே, 13 நாட்கள்.

>>>முன்னதாகவே பி.எட்., தேர்வு: டி.இ.டி.,யில் பங்கேற்க வாய்ப்பு

இந்தாண்டு பி.எட்., படிப்புகளுக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜூனில் நடக்கும் டி.இ.டி., தகுதித்தேர்வில், வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
கட்டாய கல்விச் சட்டப்படி, ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட இத்தேர்வில், பி.எட்., தேர்வு முடிவிற்காக காத்திருப்போரும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது.
டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்ற போதும், பி.எட்., படிப்பிற்கான சான்றுகளைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பிரச்னை உருவானது. இதை போக்குவதற்கு, அரசு எடுத்த முயற்சியின் முதற்கட்டமாக, இந்தாண்டு பி.எட்., படிப்போருக்கான தேர்வுகளை, முன்னதாகவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "வரும் ஏப்ரலில் தேர்வுகளை நடத்தி, ஜூன் முதல் வாரத்திற்குள் சான்றுகளை வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. செய்முறைத் தேர்வுகளை, பிப்ரவரி 18ல் துவக்கும் வகையில் ஆயத்தப்படுத்த அறிவுறுத்தல் வந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைவிட, இரு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன' என்றார்.

>>>டிசம்பர் 27 [December 27]....

நிகழ்வுகள்

  • 1703 - இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கு ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
  • 1831 - சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
  • 1836 - இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1845 - பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
  • 1864 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1918 - ஜேர்மனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
  • 1922 - ஜப்பானின் ஹோஷோ உலகின் முதலாவது விமானம் தாங்கிக் கப்பலாக பாவிக்கப்பட்டது.
  • 1923 - ஜப்பானிய மாணவன் ஒருவன் இளவரசர் ஹிரோஹிட்டோவைக் கொல்ல முயற்சித்தான்.
  • 1934 - பேர்சியா ஈரான் என்ற பெயரைப் பெற்றது.
  • 1939 - துருக்கியில் ஏர்சின்கன் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1945 - 28 நாடுகளின் ஒப்புதலுடன் உலக வங்கி உருவாக்கப்பட்டது.
  • 1949 - இந்தோனீசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
  • 1956 - தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
  • 1968 - சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
  • 1978 - ஸ்பெயின் 40வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் ஜனநாயக நாடானது.
  • 1979 - சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
  • 1985 - ரோம் மற்றிம் வியன்னா விமானநிலையங்களில் பாலஸ்தீன தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1996 - தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
  • 1997 - வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 2000 - யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 2002 - செச்சினியாவில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
  • 2007 - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

  • 1571 - ஜொஹான்னெஸ் கெப்லர், ஜேர்மானிய அறிவியலாளர் (இ. 1630)
  • 1654 - ஜேக்கப் பெர்னோலி, சுவிஸ் கணிதவியலாளர் (இ. 1705)
  • 1796 - மிர்சா காலிப், உருதுக் கவிஞர் (இ. 1869)
  • 1822 - லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (இ. 1895)

இறப்புகள்

  • 1922 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (பி. 1843)
  • 1923 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரெஞ்சுப் பொறியியலாளர் (பி. 1832)
  • 1979 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் (பி. 1929)
  • 2007 - பெனசீர் பூட்டோ, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் (பி. 1953)

>>>ஞாபகசக்தியை அதிகரிக்க ஆனந்த் தரும் டிப்ஸ்:

 
* மனதில் எந்த விஷயம் தோன்றுகிறதோ, அதை உடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

* போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பும், பரிட்சை எழுதப் போவதற்கு முன்பும் எழுதி வைத்த விஷயங்களை திரும்பத் திரும்பப் படித்து பாருங்கள்.


* ஒரு பேப்பரைப் படிக்கிறோம். அதில் உள்ள செய்திகள் நம் மனதில் பதிந்துவிடுகிறது. திரும்ப அதை நினைத்துப் பார்க்கும்போது பேப்பரின் இடப்பக்கம் வலப்பக்கம், பக்க எண் உட்பட நம்மால் சொல்ல முடிகிறது. அதுபோல்தான் ஆர்வத்துடன் படித்து, உடனே குறித்து வைத்துக் கொள்வதுகூட ஆழமாய் மனதில் பதிந்துவிடும்.

* கம்ப்யூட்டர் போன் மெமரியில் பதிந்து, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் அலர்ட் சவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.


* செஸ் விளையாடுவது குழந்தைகளுக்குப் பொழுது போக்கு மட்டுமல்ல. அவர்களது மூளையில் யோசிக்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் நிச்சயம் அதிகரிக்கும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Things to keep in mind before registering FA(a) Marks in TNSED Schools app

    இன்று (18-11-2024) முதல் வளரறி மதிப்பீடு-அ விற்கான மதிப்பெண்களை TNSED Schools செயலியில் பதிவு செய்யலாம்.  வளரறி மதிப்பீடு-அ FA(a) மதிப்ப...