பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர்
குறித்த விவரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்வதற்கான காலக்கெடு, வரும்,
23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், அடுத்த ஆண்டு மார்ச்
மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளது. பொதுத் தேர்வு எழுதும்
மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டு, கல்வி
மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இம்முறை, "மாணவ, மாணவியர் விவரங்களை, இணையதளம் வழியாக, ஜன., 4ம் தேதிக்குள்
பதிவு செய்ய வேண்டும்' என, தேர்வுத் துறை உத்தரவிட்டது. "மின்வெட்டு
பிரச்னையால், இணையதளத்தில் மாணவ, மாணவியரின் பெயர்களைப் பதிவு செய்வதில்
சிக்கல் உள்ளது' என, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து,
இணையதளத்தில் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, ஜன., 23ம் தேதி வரை
நீட்டித்து, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
>>>டிசம்பர் 31ல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு
முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, நாளை நடக்கிறது.
மாவட்டத்துக்குள், பணி நியமனம் வேண்டுபவர்களுக்கு, காலையிலும், வேறு
மாவட்டங்களில், நியமனம் வேண்டுபவர்களுக்கு, பிற்பகலிலும் கலந்தாய்வு
நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், 2,895 பேரை
நியமனம் செய்வதற்கான போட்டி தேர்வு, சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
இதுதொடர்பான வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், 500 பணியிடங்கள்
மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 2,300 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான
கலந்தாய்வு, நாளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில்
நடக்கிறது. தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கு, அழைப்பாணை கடிதங்கள்
அனுப்பப்பட்டு உள்ளன. தேர்வுப் பட்டியலில் இருந்து தகுதியில்லாத, 50க்கும் மேற்பட்டோர்
நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகார பூர்வமான அறிவிப்பு
வெளியிடப்படவில்லை.
>>>ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த நாள் இன்று - டிச 30
'இறந்து போதல் என்றால் என்ன? அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று,
எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான்.
இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'
இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.
' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.
வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.
' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று .
இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.
அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது,
மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.
மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.
' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது.
இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.
மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது.
முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.
திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.
தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.
' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.
' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.
' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.
'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.
ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.
' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'
அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான்.
மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.
ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான்.
அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது.
அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.
வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள்.
வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது.
உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.
வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.
நன்றி....’பாலகுமாரனின் இறந்து போதல் என்றால் என்ன?’

>>>தையலை உயர்வு செய்! - சுகி.சிவம்
"பாபு ஏன் உம்முன்னு இருக்கே?" என்றார் தாத்தா.
"தாத்தா, பாய்ஸ்தானே ஒசத்தி. கேர்ள்ஸ் மட்டம்தானே! பாட்டியை விட நீங்கதானே
ஒசத்தி?" என்றான். "பாபு, என்னைவிட பாட்டிதான் ஒசத்தி. அதுமட்டுமில்லை...
பள்ளிக்கூடத்துல படிக்குறப்ப உன்னோட பாட்டி என்னைவிட அதிகமா மார்க்
வாங்குவாங்க. ரொம்ப நல்லா பாடுவாங்க. ஆமா, உனக்கு ஏன் இப்படியரு சந்தேகம்?"
என்றார் தாத்தா.
"நான்தான் எங்க
கிளாஸ் லீடரா வந்துருக்கணும். ஆனா, கீதாவை டீச்சர் லீடராக்கிட்டாங்க.
கேர்ள்ஸைவிட பாய்ஸ்தானே உசத்தி தாத்தா" என்று சோகமாக சொன்னான்.
சிரித்துக் கொண்டே பேசினார் தாத்தா. "வீர சிவாஜியை அவ்வளவு பெரிய ராஜாவா ஆக்கினவங்க யாரு தெரியுமா பாபு? அவங்க அம்மா ஜீஜாபாய்.
ஒருநாள் களைத்துப் போய் வந்த சிவாஜியை, சதுரங்கம் விளையாட கூப்பிட்டாங்க ஜீஜாபாய்.
"களைப்பா இருக்குதும்மா. நான் வரலே" என்றாராம் சிவாஜி.
"ஆட்சியில் இருப்பவனுக்கு ஏதுடா களைப்பு?" என அவரை சீண்டிவிட்டு விளையாட
வச்சாங்க. இந்த விளையாட்டில், ஜெயிச்சவங்க கேக்கறதை தோத்தவங்க தரணும்
அப்படீங்கிறதுதான் ஒப்பந்தம்! அவங்க அம்மா ஜெயிச்சுட்டாங்க. "உனக்கு
என்னம்மா வேணும்? எத்தனை சாதுக்களுக்கு சாப்பாடு போடணும். எந்த கோவிலுக்கு
என்ன செய்யணும்?"னு கேட்டார் சிவாஜி. அவரது கையை புடிச்சு
இழுத்துக்கிட்டுப் போய் கோட்டையின் மேல்தளத்தில் இருந்து வெகு தொலைவில்
தெரிந்த 'சிம்மகாட்' கோட்டையை காட்டினாங்க. அதில் பறந்து கொண்டிருந்த
சுல்தானின் கொடியை காட்டி "நீ என்மகன்கிறது நிஜம்னா, நாளைக்கு சூரியன்
மறையறதுக்குள்ளே அந்தக் கொடி இறங்கணும். உன் கொடி அதுல பறக்கணும்"னு
உற்சாகமா சொன்னாங்க. திகைத்துப் போன சிவாஜி,"அம்மா அவன்தான் மிகப்பெரிய
வீரனாச்சே..." என்றார்.
"அவனை ஜெயிச்சாதான் நீ மாவீரன்! என்
பிள்ளை" என்றார் ஜீஜாபாய். இரவோடு இரவாக உடும்புகளின் வாலில் கயிற்றைக்
கட்டி கோட்டை சுவர் மீது வீரர்களை ஏற வைத்து காலையில் போரை தொடங்கி
மாலையில் ஜெயித்தார் சிவாஜி. அம்மாவின் ஆசைப்படியே அவரது கொடியை
'சிம்மகாட்' கோட்டையில் பறக்கவிட்டார். வெறும் சிவாஜியை வீர சிவாஜி
ஆக்கியது ஒரு பெண். மகாகவி பாரதிக்கு ஞானம் ஊட்டிய நிவேதிதா தேவி ஒரு பெண்.
அதனால்தான் பாரதி எழுதிய புதிய ஆத்திச்சூடியில் 'தையலை உயர்வு செய்' என்று
முழங்கினார்" என வரலாற்று நிகழ்வுகளை சொல்லி முடித்தார் தாத்தா.
"கரெக்ட் தாத்தா. கீதா எப்பவுமே பர்ஸ்ட் ரேங்க் எடுக்குறா. அதனாலதான் அவளை
டீச்சர் லீடர் ஆக்கியிருப்பாங்க" என்று சிரித்தபடியே ஓடினான் பாபு.
>>>டிசம்பர் 30 [December 30]....
நிகழ்வுகள்
- 1853 - ஐக்கிய அமெரிக்கா தொடருந்து போக்குவரத்துப் பாதை அமைப்பதற்காக மெக்சிக்கோவிடம் இருந்து 76,770 கிமீ² பரப்பளவு கொண்ட காட்சென் என்ற இடத்தை 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
- 1862 - வட கரொலைனாவில் ஐக்கிய அமெரிக்காவின் மொனிட்டர் என்ற கப்பல் மூழ்கியது.
- 1870 - ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1880 - டிரான்ஸ்வால் குடியரசு ஆகியது.
- 1896 - பிலிப்பீன்சின் தேசியவாதி ஜோசே ரிசால் மணிலாவில் ஸ்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நாள் பிலிப்பீன்சில் ரிசால் நாள் என்ற பெயரில் விடுமுறை நாளாகும்.
- 1903 - சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் 600 பேர் இறந்தனர்.
- 1906 - அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1922 - சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
- 1924 - யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
- 1924 - பல நாள்மீன்பேரடைகளின் இருப்பு பற்றி எட்வின் ஹபிள் அறிவித்தார்.
- 1941 - மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
- 1943 - சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
- 1947 - ருமேனியாவின் மன்னர் மைக்கல் சோவியத் ஆதரவு கம்யூனிச அரசால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1949 - இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
- 1953 - உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
- 1965 - பேர்டினண்ட் மார்க்கொஸ் பிலிப்பீன்ஸ் அதிபரானார்.
- 1972 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீதான குண்டுத் தாக்குதல்களை இடைநிறுத்தியது.
- 1993 - இஸ்ரேலும் வத்திக்கானும் தூதரக உறவுகளை ஏற்படுத்தின.
- 1996 - அஸ்ஸாம் மாநிலத்தில் பயணிகள் தொடருந்து ஒன்றில் போடோ தீவிரவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - அல்ஜீரியாவில் நான்கு ஊர்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 400 பேர் கொல்லப்பட்டனர்.
- 2000 - பிலிப்பீன்சின் தலைநகர் மணிலாவில் இடம்பெற்ற பல தொடர் குண்டுவெடிப்புகளில் 22 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
- 2004 - ஆர்ஜெண்டீனாவின் புவனஸ் அயரெஸ் நகரில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 194 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஸ்பெயினின் தலைநகர் மாட்ரிட் நகரில் அனைத்துலக விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
- 2006 - நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.
- 2006 - முல்லைத்தீவு மாவட்ட கத்தோலிக்க ஆலயத்தால், கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் ஆண், பெண் விடுதிகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் விமானத் தாக்குதல் நடைபெற்றதில் ஐந்து சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1865 - றூடியார்ட் கிப்லிங், இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், கவிஞர், நோபல் விருதாளர் (இ. 1936)
- 1879 - இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)
- 1975 - டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்
- 1984 - லெப்ரான் ஜேம்ஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1691 - ராபர்ட் பொயில், அறிவியலாளர் (பி. 1627)
- 1789 - இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)
- 1944 - ரொமாயின் ரோலாண்ட், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1866)
- 1947 - ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட், பிரித்தானியக் கணிதவியலர் (பி. 1861)
- 1968 - ட்றிகுவே லீ, நோர்வேயின் அரசியல்வாதி (பி. 1896)
- 1988 - இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
- 2006 - சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937
சிறப்பு நாள்
- பிலிப்பீன்ஸ் - ரிசால் நாள் (1896)
>>>கடவுள் பற்றி பெருந்தலைவர் காமராசர்
தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில்
சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப்
பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து
கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது.
அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம்
மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து
பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே
போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள்
நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும்.
தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளை யெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரிவட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார். விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக் கூடாதில்லியா…. அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே…!” என்பார்.
தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு…?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர். “ஏன்ய்யா… குருக்கள்…. நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயிலுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க…. இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா…? எந்த வருஷத்து வண்டி? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப்போனார்கள்.
தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண்ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழமாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு… அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர்.தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும். இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு…!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டு கிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங் களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க…!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன்.
“கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்… பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தியங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான வாய்ப்பு என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன். “கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா…?” “இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா…?” என்றார். நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே…” என்று ஆரம்பிக்கவும். அவரே, “ஆதிஸ்டு(Athiest)ன்னு” சொல்றீயா…? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா… மனிதனை முன்னேற்றணும். சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச் சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிற தத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்… ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்… இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா…?” என்று கேட்டார்.
நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக் கிறீங்களா…?இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே…! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட்டாரே…?” என்றேன். “மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்…? ரொம்ப அயோக்கியத்தனம்…!” என்றார் காமராசர். எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா…..? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.
“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழு நாத்திகராய் அறிவித்துக் கொள்ள வில்லை…?” என்று கேட்டேன். “நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி – ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்” னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே…. அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக்கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்ன்(Govern)” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே…! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்…” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.
“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனை யெல்லாம் பண்றதில்லையா…?” எனக் கேட்டேன். “அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்… எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்….?’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்…. அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா…?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க…? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம். பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேடஸ்(Social Status)’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக் கலாமில்லியா….” ஊருக்கு நூறு சாமி… வேளைக்கு நூறு பூஜைன்னா…. மனுஷன் என்னிக்கு உருப்படறது…? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்….. வறுமை – சுகா தாரக்கேடு…. ஏற்றத் தாழ்வு இத்த னையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு…. பூஜைன் னேன்…..? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்…?” தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர்சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.
“அப்படியானா…. நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா…. இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா….?” என்று கேட்டேன். அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்… “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அநத வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட் டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா…? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதிலேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினே ஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பக வான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவ ராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்….? அவனவனும் அவனவன் இஷ்டத் துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்… காங்கிரஸ் – கம்யூ னிஸ்ட் – தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்… மதம் மனிதனுக்குச் சோறு போடுமா…? அவன் கஷ்டங்களப் போக்குமா…? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு…? உல கத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா… நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே…! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே….! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்…?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார்.
ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன். “நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே… அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே…?” என்று வினாத் தொடுத்தேன். தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்… கிறுக்கா… நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்….? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்….! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா… அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள எடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.”….காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக் கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க…. புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல… எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல… புதுசு கட்டுனதுமில்ல… பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்…” என்று விளக்கினார்.
“மதம் என்பதே மனிதனுக்கு அபின்…!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே…?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல… பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா…? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலா மில்லையா? அதையெல்லாம் செய்யமாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்….” என்றார்.
“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா…? அதிலேருந்து எப்போ விலகுனீங்க…?” இது நான். “சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு… எல்லாம் ‘பார்பர் ஷாப்(Barber Shop)’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப்பானா…?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.
“அப்படியானா… மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே… அதப்பத்தி….?” என்று கேட்டேன். “அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா… தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்…!” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லாமல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா…?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

-நன்றி: திரு. சீர்காழி பெ. எத்திராஜ் (முன்னாள் மேலவை உறுப்பினர்)
>>>நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை...
நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை
* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.
* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.
* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில்,
உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம்
முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.
அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.
*
கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம்
இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக
அமைந்தது.
* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக
அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார்
செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான,
"போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.
* ஆயுர்வேதம் தான்
மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர்
என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும்
ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.
* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.
* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும்
கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள்
இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்'
என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்'
என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.
* சூரியனை பூமி சுற்றி
வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி
ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது,
கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து
விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர்
கண்டுபிடித்தார்.
* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக்
கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ்
தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது
நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா,
டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம்
நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
* கம்பியில்லா தகவல் தொடர்பை,
இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி
(ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ.,
அடித்துக் கூறுகிறது.
* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே
முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என,
இரு பெயரில் அழைக்கப்பட்டது.
* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக்
கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை
சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன்
என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து
சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு
கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில்
நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம்
முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர்.
உதாரணத்திற்கு: அமெரிக்காவில்
உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம்
இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்;
பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்;
கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல,
"இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்'
நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம்
இந்தியர்கள் வசிக்கின்றனர்...
இவை சிறு எடுத்துக்காட்டு தான்;
அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை
சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை
தானே!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release
பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...