கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>டோபல் தேர்வு என்றால் என்ன?

ஏறக்குறைய 50 வருடங்களாக, ஒரு மாணவரின் ஆங்கில மொழித்திறனை சிறப்பாக அளவிட விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு, டோபல் தேர்வு என்பது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஒரு மாணவரின், ஆங்கில மொழித் திறமையினை, படித்தல், பேசுதல், எழுதுதல் மற்றும் கவனித்தல் ஆகிய அம்சங்களில் இத்தேர்வு அளவிடுகிறது.
மேற்கூறிய திறன்கள்தான், ஒரு மாணவர், வகுப்பறையில் சிறந்து விளங்க தேவையானவை.
ஒரு மாணவர், ஏதேனும் ஒரு பத்தியை படித்துக் காட்டுமாறு கேட்கப்படலாம் மற்றும் அதே தலைப்பில், ஒரு விரிவுரையை கேட்குமாறு சொல்லப்படலாம் மற்றும் இரண்டையும் இணைத்து, பேசுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்கப்படலாம். டோபல் தேர்வு என்பது, நடைமுறை வாழ்வுக்குத் தேவையான ஆங்கிலத் திறன்களை மதிப்பிடுகிறது. எனவே, வகுப்பறை செயல்பாட்டில் தேவைப்படும் திறன்களை எவை என்பதைப் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

>>>மைக்கேல் ஃபாரடே (மின்சக்தியை கட்டுப்படுத்திய விஞ்ஞானியின் கதை)

இருபதாம் நூற்றாண்டுக்கு அடிப்படையாகவும், ஆணிவேறாகவும் இருந்தது அறிவியல் வளர்ச்சிதான். அந்த அறிவியல் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய ஒரு சக்தி மின்சாரம். ஆரம்பகாலத்தில் மின்சாரம் என்பது கட்டுப்பாடு இல்லாத காட்டாற்று வெள்ளம்போல் பாயக்கூடியக்கூடியதாக இருந்தது. அதனால் மின்சார சக்தியை சரிவர பயன்படுத்த முடியாமல்போனது. இப்போது நாம் பயன்படுத்தும் பல கருவிகள் மின்சாரத்தால் இயங்குகின்றன. நாம் விரும்பும்படி நம் கட்டளைப்படி அந்த கருவிகள் செயல்படுவதற்கு காரணம் மின்சாரத்தைக் கட்டுபடுத்த உதவும் மின் இயக்கி (Dynamo) மற்றும் மின்மாற்றி (Transformer) என்ற கருவிகள்தான். அந்தக் கருவிகளைக் கண்டுபிடித்ததன் மூலம் மின்சாரம் என்ற கட்டுக்கடங்காத குதிரைக்கு கடிவாளம் போட்டுத்தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியைத்தான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். படிப்பறிவே இல்லாத ஒருவர் பார்போற்றும் விஞ்ஞானியான கதைதான் அவரது கதை. ஆம் அவர்தான் மைக்கேல் ஃபாரடே என்ற அறிவியல் மேதை.


1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி இங்கிலாந்தில் ஒரு கருங்கொல்லருக்கும், இல்லப் பணிபெண்ணுக்கும் மகனாக பிறந்தார் மைக்கேல் ஃபாரடே. நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர். அவரது குடும்பம் மிகுந்த ஏழ்மையில் வாடியது. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்கூட சிரமம். ஒவ்வொரு திங்கட் கிழமையன்றும் மைக்கேலின் தாய் அவருக்கு ஒரு ரொட்டியைத் தருவார். அந்த ரொட்டிதான் மைக்கேலின் ஒருவார உணவு அந்த ரொட்டியை பதினான்கு துண்டுகளாக பிரித்து ஒரு நாளைக்கு இரண்டு துண்டுகள் சாப்பிடுவார் மைக்கேல். அப்படிப்பட்ட ஏழ்மையில் வாழ்ந்தாலும் பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் புத்தகங்கள் வாசிப்பதில் மைக்கேலுக்கு அளவுகடந்த பிரியம் இருந்தது. லண்டனில் புகழ்பெற்ற ச்சேரிங் க்ராஸ் என்ற பகுதியில் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருக்கும். அங்கெல்லாம் சென்று அவசர அவசரமாக அவற்றை புரட்டிப்பார்த்து படிப்பார் மைக்கேல். ஆனால் காசு கொடுத்து வாங்க முடியாததால் அவரைக் கண்டவுடனேயே எல்லாக் கடைக்காரர்களும் விரட்ட ஆரம்பித்தனர். ஜார்ஜ் ரீபார்க் என்ற ஒரு கடைக்காரர் மட்டும் மைக்கேல் இரக்கப்பட்டு தன் கடையில் இருந்த புத்தகங்களைப் படிக்க அனுமதி தந்தார். மணிக்கணக்கில் மைக்கேல் புத்தகங்களை படிப்பதைப் பார்த்து வியந்த அவர் மைக்கேலின் குடும்ப நிலையை தெரிந்துகொண்டு ஒரு வேலையையும் தந்தார். வாரம் மூன்று சிலிங்குகள் சம்பளம். மைக்கேலுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

லண்டன் முழுவதும் புத்தகங்களை கொண்டு சென்று கொடுப்பதும், அவற்றை வாங்கி வருவதும்தான் மைக்கேலின் முதல் வேலை.  அதில் மைக்கேல் சிறப்பாகச் செய்யவே புத்தகங்களுக்கு பைண்டிங்க் செய்யும் வேலையைத் தந்தார் அந்த முதலாளி. பைண்டிங்க் பணிக்காக வரும் புத்தகங்களில் விஞ்ஞானம் சம்பந்தபட்டவையும் நிறைய இருக்கும். அவற்றை பைண்ட் செய்யும் அதேவேளையில் அவற்றையெல்லாம் ஆர்வத்துடன் படிப்பார் மைக்கேல் அவற்றில் உள்ள பல விசயங்கள் அவருக்கு புரியாது. நம்மில் பலருக்கு புரியாத விசயங்கள் என்று வந்தால் அப்படியே விட்டுவிடுவோம். மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? அந்த புத்தகங்களை பைண்ட் செய்த பிறகு அவற்றை உரியவர்களிடம் கொடுக்கும்போது தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றுக்கொள்வார். அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் புரியாதவற்றுக்கு விளக்கம் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அந்த முனைப்புதான் பிற்காலத்தில் அவரை பார்போற்றும் விஞ்ஞானியாக உயர்த்தியது.

லண்டனில் அந்தக்கால கட்டத்தில் விஞ்ஞான விரிவுரைகள் நடைபெறும் அதற்கு கட்டணம் உண்டு. அந்த விரிவுரைகளை கேட்க வேண்டுமென்று மைக்கேலுக்கு ஆசை. அவரது ஆசையை உணர்ந்த அந்த முதலாளி ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியின் விரிவுரைக்கு நுழைவுச்சீட்டு கொடுத்து மைக்கேலை அனுப்பி வைத்தார். அந்த விரிவுரைதான் மைக்கேலின் வாழ்க்கையை திசை திருப்பியது. அந்த விரிவுரையை நிகழ்த்தியவர் புகழ்பெற்ற விஞ்ஞானி சர் ஹம்ப்ரி டேவி. மின்சாரம் பற்றியும், வேதியியல் பற்றியும் அவர் பேசியதை மற்றவர்கள் கேட்டுக்கொண்டிருக்க மைக்கேல் என்ன செய்தார் தெரியுமா? சர் ஹம்ப்ரி டேவி கூறியதை ஒன்றுவிடாமல் அப்படியே முழுமையாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். விரிவுரை முடிந்ததும் வீட்டிற்கு வந்து குறிப்புகளை மீண்டும் அழகாக எழுதி சில வரைபடங்களை வரைந்து அதனை பைண்ட் செய்து ஹம்ப்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார். இரண்டுநாள் கழித்து அதனைப் பெற்ற ஹம்ப்ரி டேவி மலைத்துப்போனார். தனது விரிவுரை அப்படியே அழகாக எழுதப்பட்டிருந்ததைக் கண்ட அவர் மைக்கேலிடம் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்து அவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டார். அகமகிழ்ந்துபோன மைக்கேல் சர் ஹம்ப்ரி டேவியுடன் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு அவரது விரிவுரைகளில் கலந்து கொண்டார். அவரது ஆராய்ட்ச்சிகளிலெல்லாம் உதவி புரிந்தார்.

முதலில் உதவியாளராக மைக்கேலைப் பார்த்த ஹம்ப்ரி டேவி பிறகு அவரை சக விஞ்ஞானி அளவுக்குப் பார்க்கத் தொடங்கினார். 30 ஆவது வயதில் செரா பர்னாட் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் மைக்கேல். எந்த நேரமும் எதாவது ஆராய்ட்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார் மைக்கேல் அதற்கு சராவும் உதவி புரிந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது ஆராய்ட்ச்சிகளை இங்கிலாந்து மெச்சத் தொடங்கியது. மைக்கேலுக்கு 40 வயதானபோது காந்தத்தினால் மின்சார சக்தியை உருவாக்க முடியும் என்பதை விளக்கிக் காட்டினார். 25 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததன் பலன் மின்சக்தியின் வேகத்தை மாற்ற உதவும் ட்ரான்ஸ்பார்மர், மின்சக்தியை உற்பத்தி செய்யும் டைனமோ ஆகிய கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்த இரண்டு கண்டுபிடிப்புகள் நிகழாதிருந்திருந்தால் நவீன கருவிகளை உலகம் சந்தித்திருக்க முடியாது. இன்று நாம் பயன்படுத்தும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கணினி, குளிர்சாதனப்பெட்டி, சமையல் கருவிகள் என எல்லா மின்கருவிகளுக்கும் அடிப்படையாக விளங்குவது மைக்கேல் கண்டுபிடித்த டைனமோதான். இப்போது புரிகிறதா அந்தக் கண்டுபிடிப்பின் மகிமை.

பணம் சேர்த்து வைப்பதை பாவமாக கருதிய 'சேண்டிமேனியன்' என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் மைக்கேல் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமம் பெறவோ அவற்றால் பணம் சம்பாதிக்கவோ முயலவில்லை. தனது கண்டுபிடிப்புகள் மனுக்குலச் சேவைக்காகவே அன்றி தான் செல்வந்தன் ஆவதற்கு அல்ல என்ற மனப்பான்மை அவருடையது. தன் சிரமமான பிள்ளைப்பருவத்தை மறக்காத மைக்கேல் தன்னைப்போன்ற ஏழைச்சிறுவர்களும் அறிவியலின் அற்புதங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக லண்டன் ராயல் கழகத்தில் 'கிறிஸ்துமஸ் விரிவுரைகள்' என்ற தொடரை ஆரம்பித்து வைத்து விரிவுரை வழங்கத் தொடங்கினார். அன்று அவர் தொடங்கியது ஃபாரடே விரிவுரைகள் என்று இன்றும் ஆண்டுதோறும் தொடர்கிறது. பல்லாயிரம் மாணவர்கள் அந்த விரிவுரையால் பலன் அடைகிறார்கள். மின்சாரப் பயன்பாட்டில் புரட்சியைக்கொண்டு வந்த அந்த மகத்தான விஞ்ஞானியைத் தேடி சர் பட்டமும், ராயல் கழகத்தின் தலைவர் பதவியும் வந்தன. நான் மைக்கேல் ஃபாரடேவாகவே இருக்க விரும்புகிறேன் என்றுகூறி இரண்டையுமே மறுத்துவிட்டார் அந்த அதிசய விஞ்ஞானி.

இறுதிவரை எளிமையையே விரும்பி எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்த மைக்கேல் ஃபாரடே 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது 76 ஆவது வயதில் காலமானார். பல புகழ்பெற்ற அறிஞர்களைப்போலவே அவரது நல்லுடலும் 'Westminster Abbey' யில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவர் விரும்பியபடியே ஒரு சாதரண இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. "ஒருமுறை சர் ஹம்ப்ரி டேவிடம் உங்கள் கண்டுபிடிப்புகளிலேயே மகத்தானது எது? என்று கேட்கப்பட்டது" அதற்கு அவர் சட்டென்று சொன்ன பதில் மைக்கேல் ஃபாரடே. ஒரு மேதையின் வாயாலேயே மேதை என்று புகழப்பட்ட மைக்கேல் ஃபாரடேயின் வாழ்க்கை நமக்குக்கூறும் உண்மை மிக மிக எளிதானது. உலகைக்கூர்ந்து கவனிக்க வேண்டும். சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள நிறைய கேள்வி கேட்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு ஒரு ரொட்டித்துண்டுதான் என்றாலும் நம்பிக்கையோடு போராட வேண்டும். மைக்கேலைப் போலவே வாழ்வில் தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் போராடும் எவருக்கும் மைக்கேல் ஃபாரடேவுக்கு வசப்பட்ட அதே வானம் வசப்பட்டே ஆக வேண்டும்.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
 
கொசுறு:
 'புத்தகங்கள் நம்மை முன்னேற்றும் செல்வம்’ என்பதற்கு, மைக்கேல் ஃபாரடே ஓர் உதாரணம். தன் 14-வது வயதில் புத்தக விற்பனை மற்றும் பைண்டிங் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார் ஃபாரடே. விஞ்ஞானம் சம்பந்தமான புத்தகங்களை ஓய்வு நேரத்தில் எடுத்துப் படித்தார். விஞ்ஞானி, ஹம்ப்ரி டேவியின் விரிவுரைகளை நேரில் கேட்க ஆரம்பித்தார். ஒரு முறை டேவியின் விரிவுரையைக் குறிப்பு எடுத்து அவருக்கு அனுப்பினார். அதைப் படித்த டேவி, மைக்கேல் ஃபாரடேயைத் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார்.

>>>மாணவர்களுக்கு வினாடி-வினா கேள்வித்தாள்: போக்குவரத்து கழகம் விழிப்புணர்வு

சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்படுத்த, போக்குவரத்து கழகம் சார்பில், "வினாடி- வினா" கேள்வித்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகள் தோறும் வழங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளன. இதில், சாலை பாதுகாப்பு குறித்து வினாடி - வினா தாள் அச்சடிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சாலை விதிகள், மோட்டார் வாகன சட்டம் தொடர்புடைய 50 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்குரிய விடைகள், "ஆப்ஜெக்டிவ்" முறையில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வினாக்களுக்குரிய விடைகளை தெரிந்து கொண்டாலே, சாலை விதி குறித்து பல விபரங்களை தெரிந்து கொள்ள முடியும். வெறுமனே வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்தி பேரணி, ஊர்வலம் செல்வது, கோஷம் எழுப்புவது போன்ற நடவடிக்கைகளை காட்டிலும், இத்தகைய வினாடி- வினாவில், அதிகளவு மாணவ, மாணவியரை பங்கேற்க செய்ய, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
இதற்கு, கல்வி துறை உயரதிகாரிகள் உற்சாகம் வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால், சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கம் மாணவ, மாணவியரை முழு அளவில் போய் சேரும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

>>>கணிதத்திற்கு கடிதம்...!.?

>>>ஜனவரி 05 [January 05]....

நிகழ்வுகள்

  • 1477 - பேர்கண்டி இளவரசன் சார்ல்ஸ் கொல்லப்பட்டான். பேர்கண்டி பிரான்சின் பகுதியானது.
  • 1554 - நெதர்லாந்தில் ஐன்ட்ஹோவென் என்ற இடத்தில் பரவிய தீயினால் 75 விழுக்காடு வீடுகள் சேதமாயின.
  • 1655 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.
  • 1757 - பிரான்சின் பதினைந்தாம் லூயி கொலை முயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
  • 1781 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வேர்ஜீனியாவில் ரிச்மண்ட் நகரம் பிரித்தானியக் கடற்படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது.
  • 1854 - சான் பிரான்சிஸ்கோவில் நீராவிக் கப்பல் ஒன்று மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1896 - வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
  • 1900 - ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
  • 1905 - யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
  • 1918 - ஜெர்மன் தொழிலாளர்களின் அமைதிக்கான சுதந்திரக் குழு (நாசிக் கட்சி) அமைக்கப்பட்டது.
  • 1933 - கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
  • 1940 - பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
  • 1945 - போலந்தின் புதிய சோவியத் சார்பு அரசை சோவியத் ஒன்றியம் அங்கீகரித்தது.
  • 1967 - இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1971 - உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
  • 1972 - விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
  • 1974 - பெருவின் தலைநகரான லிமாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 6 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1975 - தாஸ்மானியாவில் டாஸ்மான் பாலத்தில் சரக்குக் கப்பல் ஒன்று மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1976 - கம்போடியா சனநாயகக் கம்பூச்சியா என கெமர் ரூச் அரசினால் பெயர் மாற்றம் பெற்றது.
  • 1984 - ரிச்சர்ட் ஸ்டோல்மன் குனூ இயங்குதளத்தைஉருவாக்கத் தொடங்கினார்.
  • 1997 - ரஷ்யப் படைகள் செச்சினியாவில் இருந்து வெளியேறின.
  • 2000 - இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
  • 2005 - ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.
  • 2007 - கொழும்பிலிருந்து 36 கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.

பிறப்புகள்

  • 1592 - ஷாஜஹான், மொகாலயப் பேரரசர் (இ. 1666)
  • 1846 - ருடோல்ஃப் இயூக்கென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (இ. 1926)
  • 1874 - ஜோசப் ஏர்லாங்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1965)
  • 1928 - சுல்பிக்கார் அலி பூட்டோ, பாகிஸ்தானின் அதிபர் (இ. 1979)
  • 1938 - நுகுகி வா தியங்கோ, கென்ய எழுத்தாளர்

இறப்புகள்

  • 1933 - கால்வின் கூலிட்ஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ( பி. 1872)
  • 1970 - மாக்ஸ் போர்ன், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (பி. 1882)
  • 1981 - ஹரோல்ட் உரே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1893)

>>>ஜனவரி 04 [January 04]....

நிகழ்வுகள்

  • கிமு 46 - டைட்டஸ் லபீனஸ் ருஸ்பீனா என்ற நகரில் இடம்பெற்ற சமரில் ஜூலியஸ் சீசரைத் தோற்கடித்தான்.
  • 1493 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
  • 1642 - இங்கிலாந்து மன்னன் முதலாம் சார்ல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்ய தனது படைவீரர்களை அனுப்பினான்.
  • 1698 - லண்டனில் அரச மாளிகையான வைட்ஹோல் தீயினால் சேதமுற்றது.
  • 1717 - நெதர்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன கூட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தின.
  • 1762 - ஸ்பெயின் மற்றும் நேப்பில்ஸ் மீது இங்கிலாந்து போரை அறிவித்தது.
  • 1847 - சாமுவேல் கோல்ட் தனது முதலாவது சுழல் துப்பாக்கியை அமெரிக்கஅரசுக்கு விலைக்கு விற்றார்.
  • 1854 - கப்டன் வில்லியம் மக்டொனால்ட் என்பவர் மக்டொனால்ட் தீவுகளைக் கண்டுபிடித்தார்.
  • 1878 - சோஃபியா நகரம் ஒட்டோமான் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.
  • 1884 - ஃபாபியன் அமைப்பு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1889 - இலங்கையில் சபரகமுவா மாகாணம் என்ற புதிய மாகாணம் சேர் ஈ. என். வோக்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
  • 1896 - யூட்டா 45வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
  • 1912 - பிரித்தானியக் காலனித்துவ நாடுகளில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
  • 1948 - பர்மா ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
  • 1951 - சீனா மற்றும் வட கொரியப் படைகள் சியோல் நகரைக் கைப்பற்றின.
  • 1958 - 14 வயது பொபி ஃபிஷர் ஐக்கிய அமெரிக்காவின் சதுரங்க சம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார்.
  • 1958 - முதலாவது செயற்கைக் கோள் ஸ்புட்னிக் 1 தனது சுழற்சிப் பாதையை விட்டு விலகி பூமியில் வீழ்ந்தது.
  • 1959 - லூனா 1 சந்திரனுக்கு மிக அண்மையில் சென்ற விண்கலம் ஆனது.
  • 1990 - பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் பயணிகள் தொடருந்து ஒன்று சரக்கு தொடருந்துடன் மோதியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1998 - அல்ஜீரியாவில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளில் 170 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2004 - ஸ்பிரிட் என்ற நாசாவின் தரையுளவி செவ்வாயில் தரையிறங்கியது.

பிறப்புகள்

  • 1643 - சேர் ஐசக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (இ. 1727)
  • 1809 - லூயி பிறெயில், (இ. 1852)
  • 1940 - பிறையன் டேவிட் ஜோசெப்சன், நோபல் பரிசு பெற்றவர்
  • 1940 - காவோ சிங்ஜியான், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
  • 1945 - ரிச்சார்ட் ஷ்ரொக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
  • 1985 - ஏல் ஜெஃபர்சன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்

இறப்புகள்

  • 1960 - அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1913)
  • 1961 - எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் (பி. 1887)
  • 1965 - டி. எஸ். எலியட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் (பி. 1888)

சிறப்பு நாட்கள்

  • பர்மா - விடுதலை நாள் (1948)

>>>ஜனவரி 03 [January 03]....

நிகழ்வுகள்

  • 1431 - பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் கைது செய்யப்பட்டு பியேர் கவுச்சோன் ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
  • 1496 - லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.
  • 1754 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
  • 1815 - ஆஸ்திரியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியன இணைந்து புரூசியா, மற்றும் ரஷ்யாவை எதிர்த்து இரகசிய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தின.
  • 1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா கைப்பற்றியது.
  • 1859 - தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதில்லை என டெலவெயர் வாக்களித்தது.
  • 1870 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
  • 1888 - 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்.
  • 1921 - துருக்கி ஆர்மேனியாவுடன் அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டது.
  • 1924 - பண்டைய எகிப்தின் துட்டன்காமன் மன்னன் அடக்கம் செய்யப்பட்ட பெட்டியை பிரித்தானியாவின் தொல்லியலாளர் ஹவார்ட் கார்ட்டர் கண்டுபிடித்தார்.
  • 1925 - இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தன்னிடம் உள்ளதாக முசோலினி அறிவித்தார்.
  • 1932 - பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.
  • 1947 - அமெரிக்கக் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.
  • 1956 - ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.
  • 1957 - முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.
  • 1958 - மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது.
  • 1959 - அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவின் 49வது மாநிலமானது.
  • 1961 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.
  • 1961 - இடாகோவில் அணுக்கரு உலை ஒன்றில் ஏற்பட்ட கசிவின் காரணமாக மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
  • 1966 - இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கும் பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் டாஷ்கெண்டில் ஆரம்பமாயின.
  • 1974 - யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.
  • 1977 - ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.
  • 1990 - பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
  • 1994 - ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1995 - விடுதலைப் புலிகள் - இலங்கை அரசு பேச்சுக்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது.
  • 2004 - எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1740 - கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)
  • 1969 - மைக்கேல் சூமாக்கர், ஜெர்மனியைச் சேர்ந்த பார்முலா 1 ஓட்டுனர்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...