கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இரண்டாவதாக வருவோரை உலகம் கண்டுகொள்ளாதா?

 
பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin) எனும் சாகசக் காதலர் பிறந்த தினம் இன்று (ஜன.20). நிலவில் முதன்முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும். அவருடன் நிலவுக்கு பயணம்போன இரண்டாவதாக இறங்கி நடந்த ஜீவன் இவர்தான்.

அமெரிக்காவில் பிறந்த இவர் படிப்பில் செம சுட்டியாக இளம் வயதிலேயே இருந்தார். ராணுவத்துக்கு போய் சாகசம் செய்யவேண்டும் என அவர் எண்ணியபொழுது அப்பா தடுத்து பொறியியல் பக்கம் அனுப்புகிறார். படித்து முடித்துவிட்டு விமானப்படையில் சேர்கிறார் இவர். மாபெரும் சாகசங்கள் புரிகிறார். கொரியாவின் போர்களத்தில் எண்ணற்ற சேதத்தை எதிரி படைகளுக்கு உண்டு செய்கிறார். இவரே இரண்டு மிக் விமானங்களை வீழ்த்துகிறார்.

பிறகு, நாசாவில் இணைந்தார். அப்பொழுது விண்வெளிக்கு பயணம் போன குழுவில் பல்வேறு சோதனைகளுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். விண்வெளியில் ஆறு மணிநேரம் நடந்தார் - அதுவே அந்த காலத்தில் விண்வெளியில் நடக்கப்பட்ட அதிகபட்ச கால அளவு. பின் அப்போல்லோ விண்கலத்தில் நிலவுக்கு போவதற்கு இவரும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் தெரிவு செய்யபட்டார்கள். அங்கே போய் இறங்கினார்கள். முடிந்து திரும்பியதும் இருவருக்கும் விருது தரப்பட்டது.

ஆனால்,வெளிச்சம் எல்லாம் ஆர்ம்ஸ்ட்ராங் மீதே விழுந்தது. இவரை யாரும் சீண்டவில்லை. நிலவில் இரண்டாவதாக கால் வைத்தவர் என காரில் எழுதிக்கொண்டு திரிந்தார். குடித்து சீரழிந்தார். மனப்பிறழ்வுக்கு உள்ளானார். மணவாழ்க்கையும் முறிந்தது. பின் மீண்டு வந்தார். அவரின் பெயரை சின்ன வயதில் ப்ரதர் ஆல்ட்ரின் என கூப்பிடாமல் சகோதரி பஸ்ஸர் ஆல்ட்ரின் என கூப்பிட அதையே சுருக்கி பஸ் ஆல்ட்ரின் என வைத்துக்கொண்டார்.

குழந்தை போன்ற உற்சாகம் பீறிடுவதாக சொன்னார். அற்புதமான முன்னேற்ற நூல்களை எழுதினார். ஓய்ந்து போனதாக கருதப்பட்ட காலத்தில் டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்வில் பிரமாதமாக ஆடினார். அப்பொழுது வயது 58. தொண்டு நிறுவனம் தொடங்கி மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியை இன்று வரை செய்து வருகிறார்.

இரண்டாவதாக வருகிறவர்களை உலகம் கண்டு கொள்ளாது என்கிற எண்ணத்தை தகர்த்தெறிந்து மீண்டு வந்து நாட்டில் பல்வேறு இளைஞர்களை ஊக்குவிக்கும் மனிதராக உருவெடுத்த அவருக்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே!

>>>மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மல்டிமீடியா பயிற்சி

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு: சென்னை, பாந்தியன் சாலை, கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் உள்ள மீடியா பயிற்சி மையத்தில், கை, கால் பாதிக்கப்பட்ட, 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு மாத இலவச மல்டிமீடியா சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 16 முதல், 40 வயதுடையோர், இதில் பயன் பெறலாம்.
உணவு, தங்கும் இடம் ஆகியவற்றுக்கு, மாற்றுத் திறனாளிகளே பொறுப்பு. விருப்பமுள்ளவர்கள், கல்வித்தகுதி சான்றிதழ் நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன், அந்தந்த மாவட்ட நல அலுவலர் முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ இம்மாதம், 23ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

>>>ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகாதோர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில், தகுதியில்லாத ஆசிரியர்களை நீக்கி, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்காக, தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில், இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி என, 18 ஆயிரம் பேர் தேர்வு பெற்றனர். பணி நியமனத்திற்கான சான்று சரிபார்ப்பு பணியின் போது, தகுதி இல்லாத பலர், தேர்வு செய்யப்பட்டனர்; இது குறித்து அரசுக்கு, புகார் சென்றது. இவர்களை தகுதி பட்டியலில் இருந்து நீக்க, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படாதோர் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அவசர கோலத்தில் சான்றுகள் சரிபார்க்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், உரிய சான்றுகள் இன்றி பங்கேற்றுள்ளனர். இது போன்றவர்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

>>>வளர் இளம்பருவ மாணவர்களுக்கு ஆலோசனை மையங்கள்: முதல்வர்

வளர் இளம்பருவ மாணவர்கள், பல்வேறு காரணங்களால் மன பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் மொத்தம் 34 ஆலோசனை மையங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக 2 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் வளர் இளம் பருவத்தினர், வறுமை, குடும்ப பிரச்சினை மற்றும் சுற்றியுள்ள சமூக சூழல்களால் பல்வேறான உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால், படிப்பில் கவனம் சிதறுதல், தவறான வழிக்கு செல்லுதல் மற்றும் தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அவர்களின் வாழ்வில் நடக்கின்றன.
எனவே, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் கலந்துபேசி, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்டத்திற்கு ஒரு மனவள ஆலோசனை மையம்(counselling centre) என்று 31 மையங்களும், சென்னையில் 3 மையங்களுமாக சேர்த்து, மொத்தம் 34 மையங்கள் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கென 2 கோடியே 51 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவைத்தவிர, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறான கல்லூரிகளின் மேம்பாட்டிற்கு பல திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, சென்னையிலுள்ள பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான இருக்கைகளை 35லிருந்து 58ஆக உயர்த்தவும், 27 பல் மருத்துவ ஆசிரியர்கள், 6 மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் 3 மருத்துவம் சாராத பணியிடங்களைத் தோற்றுவிக்க அனுமதியளித்து, இதற்காக 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவக் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அக்கல்லூரி வளாகத்தில், 5 கோடி செலவில், 3 நிலைகள் கொண்ட, அடுக்குமாடி கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு 1 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

>>>தவறவிடாதீர்... இன்று போலியோ சொட்டு மருந்து!

தமிழகம் முழுவதும் இன்று ஜனவரி 20 (ஞாயிற்றுக்கிழமை) 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக, 40 லட்சம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பெற்றோர்கள் மறக்காமல் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள சிறப்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று போலியோ சொட்டு மருந்தை வழங்குங்கள்.

>>>ஜனவரி 20 [January 20]....

நிகழ்வுகள்

  • 1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.
  • 1523 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.
  • 1649 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
  • 1783 - பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.
  • 1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.
  • 1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
  • 1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
  • 1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
  • 1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
  • 1892 - முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.
  • 1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
  • 1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
  • 1929 - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
  • 1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
  • 1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.
  • 1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
  • 1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
  • 1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
  • 1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.

பிறப்புகள்

  • 1873 - ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
  • 1920 - பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலியத் திரைப்பட இயக்குனர் (இ. 1993)
  • 1930 - எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்
  • 1931 - டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
  • 1956 - பில் மேகர், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்

இறப்புகள்

  • 1936 - ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)

சிறப்பு தினம்

  • அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் (1937 இலிருந்து)

>>>தாமஸ் ஆல்வா எடிசன்

  
அமெரிக்கா பாடசாலை ஒன்றில் எட்டு வயது சிறுவனை "இவன் அடிமுட்டாள் பாடசாலையில் இருந்தால் மற்ற மாணவர்களையும் கெடுத்து விடுவான்". இனி இவனுக்கு பாட சாலையின் அனுமதி இல்லை என்று ஒரு கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டவன்.

தாயார் கவலை கொண்டாலும், தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாயின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்....பின்னாளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். இன்றும் அக்.,21ம் தேதி இரவு 9.59க்கு வீதி பயண விளக்குகளை தவிர, இதர மின்சார விளக்குகள் அனைத்தையும் அணைத்தும் ஒரு நிமிடம் அமெரிக்காவை இருளாக்கி விட்டு, பின்னர் மீண்டும் ஒளிர விட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும் என்று...!

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாளில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். ஆகவே யாரும் முட்டாள் இல்லை. நீங்களும் அடுத்தவர் சொல்வதை கேட்டு வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயப்படுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு வைரம் இருக்கிறது. அதை பட்டைதீட்டுங்கள்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...