>>> Click here to Download 10th Science (24-09-2020)Question Paper...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
>>>01.10.2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..G.O. 523, Dated;24.09.2020...
>>> Click here to Download G.O. 523, Dated;24.09.2020
*அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி*
**விருப்பத்தின் பேரில் மாணவர்கள் செல்லலாம்* - தமிழக அரசு அறிவிப்பு
*அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதி* - தலைமைச்செயலாளர்
* *10,11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.* - தலைமைச்செயலாளர்
ஆசிரியர்கள் , குழுக்களாக பிரிந்து, வெவ்வேறு நாட்களாக பள்ளிக்கு வரவழைக்க அறிவுறுத்தல்.
>>> இன்றைய செய்திகள் - 24.09.2020(வியாழக்கிழமை)
🌹புரிந்து கொள்ளவில்லை என்றால் பாசம் கூட வேஷமாக தெரியும்.
புரிந்து கொண்டால் கோபம் கூட பாசமாக தெரியும்.!
🌹🌹எல்லோரையும் எளிதாக நம்புவது
நம் தலையில் நாமே மண் அள்ளி போடுவதற்கு சமம்.!!
🌹🌹🌹ஓர் உறவு உங்களையே சுற்றி சுற்றி வருகிறது என்றால்
அது போவதற்கு வேறு இடமில்லாமல் இல்லை.
உங்களை இழக்க மனம் இல்லாமல் தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📘📕தமிழக அரசுப் பள்ளிகளில் இதுவரை 15 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
📘📕தொடக்கக் கல்வி - பெண்கள் நலம் - பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - (Prevention Protection and Redressal) Act 2013 - தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை தக்க தொடர் நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு
📘📕பள்ளிக் கல்வி - NMMS தேர்வு - 2009-10 முதல் 2017-18 வரை இணையவழி அல்லாமல் Offline ல் விண்ணப்பித்து இதுவரை உதவித்தொகை வழங்கப்படாமல் விடுபட்ட மாணவர்களின் நடைமுறையில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
📘📕நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறந்தாலும் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த வேண்டும், எந்த விடுமுறையும் கிடையாது என்று பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது
📘📕2006-07 ஆம் கல்வி ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்ற M.Phil., படிப்பானது UGC, AICTE & DEC ஆல் அங்கீகரிக்கப்பட்டது எனவும் உயர் கல்வி பயில மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானது எனவும் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு
📘📕ஆசிரியர்கள் மூலம் அவர்களது வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து DIKSHA APP மூலமாக QR Code Scan செய்து பாடக்கருத்துக்களை பெறச் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
📘📕அக்டோபர் 2-வது வாரத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
📘📕தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
📘📕மாணவர் சேர்க்கை விவரத்தை வரும் 7-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் : அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை
📘📕அனைத்து உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் 2020-2021 மாணவர் சேர்க்கை EMIS ல் விவரங்கள் பதிவு செய்தல் சார்ந்து; பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
📘📕ஜிப்மரில் பிஎஸ்சி, எம்எஸ்சி, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்: 29-ம் தேதிக்குள் வெளியீடு
📘📕நீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும்: கல்வியாளர்கள் கருத்து
📘📕தமிழகத்தில் அரசு சிறப்புப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
📘📕“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை"-சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்.
👉உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
👉9 பள்ளிகளும் அக்டோபர் 14ம் தேதி பதிலளிக்கவும் உத்தரவு. 👉“சிபிஎஸ்இ பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளிக்க மெயில் ஐடி உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும்"
👉111 புகார்களில் 97 நிரூபிக்கப்படவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிக்கை.
📘📕புது டெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்பை, தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்புக்கு இணையானதாக மதிப்பீடு செய்து பணி நியமனம், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக கருத தமிழக அரசின் அரசாணை நகல்
📘📕தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
📘📕புது டெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்பை, தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்புக்கு இணையானதாக மதிப்பீடு செய்து பணி நியமனம், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக கருத தமிழக அரசின் அரசாணை நகல் வெளியீடு
📘📕அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால் உலகளவில் அதற்குரிய பெயரும் தரமும் பறிபோய்விடும் : ஆளுநர் புரோஹித்துக்கு பேராசிரியர்கள் கடிதம்
📘📕பள்ளிகளை திறப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி ஆலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தலைமையில் காணொலி மூலம் வரும் 28-ம் தேதி ஆலோசனை
📘📕புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இன்று கருத்து கேட்பு
பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் , கல்லூரி நிர்வாகத்தினர் பங்கேற்கலாம்- உயர்கல்வித்துறை
ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது தமிழக உயர்கல்வித்துறை
📘📕அக்டோபர் 1 வரை நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
📘📕சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து மேற்கிந்திய தீவு ஜேசன் ஹோல்டர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
📘📕அரவக்குறிச்சி சட்ட மன்ற திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் வெண்டிலேட்டர் வாங்க மறுத்த கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு ரத்து
- தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
📘📕திமுக, காங்., மக்களவை உறுப்பினர்கள்
நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி
வேளாண் மசோதாக்களுக்கு
ஒப்புதல் வழங்க கூடாது என கோரிக்கை - குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு
📘📕கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறிய முடிவு
30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டம். அடுத்த வாரம் ஆய்வு தொடங்குகிறது
- சுகாதார துறை தகவல்
📘📕சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்
நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி
📘📕தமிழகத்துக்கு ரூ.3000 கோடி நிதி தேவை - பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது
நாள்தோறும் கொரோனா பரிசோதனைக்கு ரூ.6.8 கோடி செலவாகிறது
கொரோனா பரிசோதனை செலவில் பாதியை மத்திய அரசு ஏற்க வேண்டும் - முதலமைச்சர்
காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா மரணம் குறைவு
📘📕தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், பிரதமர் மோடி
தமிழகத்தில் நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது - முதல்வர் பதில்
தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர்
ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி, பொருளாதார மேம்பாடு நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும்
📘📕தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு:
கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாக தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
7 மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தின் போது தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
📘📕கொரோனா தொற்றால் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார்
📘📕கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி 📘📕தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்;மத்திய அரசுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை.
📘📕தமிழகத்திற்கு பாதகமான எந்தத் திட்டத்தையும் அனுமதியளிக்க மாட்டேன்; நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் பிரதமர் மோடி உறுதி.
📘📕தற்போது சோதனையில் உள்ள தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் என்பதற்கு, உத்தரவாதம் இல்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
📘📕ஐநா தன்னார்வலர்கள் ஊழியர்களுக்கு இலவசமாக எங்கள் தடுப்பூசியை வழங்க தயார் - விளாடிமிர் புதின்.
📘📕கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை:-
👉நேற்று கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில் - 5325
சென்னையில் - 980
👉நேற்று வரை கொரோனாவால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை:
தமிழகத்தில் - 557999
சென்னையில்-158594
👉நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:
தமிழகத்தில் - 5363
சென்னையில் -1118
👉நேற்று வரை கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை:
தமிழகத்தில் - 502740
சென்னையில்-145629
👉நேற்று கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:
தமிழகத்தில் - 63
சென்னையில் - 6
👉நேற்று வரை கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை:
தமிழகத்தில் - 9010
சென்னையில் - 3097
👉நேற்று வரை கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர்களின் மொத்த எண்ணிக்கை:
தமிழகத்தில் - 46249
சென்னையில் - 9868
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...