கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை

 


CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



CPS Account slip _ களஞ்சியம் செயலி வழியாக பதிவிறக்கம் செய்தால் தாங்கள் பதவி ஏற்ற வருடம் முதல் இந்த வருடம் (2025-2026 ) வரை உள்ள அனைத்து வருடம் வாரியாக அனைத்து பட்டியலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்


தரவிறக்கம் ஆகிறது. 



👉👉👉👉  CPS Account Slip 2025-2026 Download செய்யும் வழிமுறை


Login IFHRMS Kalanjiyam App 

⬇️

PF/CPS

⬇️

CPS BALANCE 

⬇️

DOWNLOAD AS A REPORT




CPS Account Slip 2025-2026 வெளியீடு



CPS Account Slip 01.07.2026 அன்று காலை 10.00 மணிக்கு வெளியீடு - செய்தி வெளியீடு எண் : 313, நாள் : 30-06-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



செய்தி வெளியீடு எண்: 313 , நாள் : 30.06.2026


செய்தி வெளியீடு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2026 அன்று காலை 10 மணிக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) வெளியிடப்படுகிறது. அத்துறையின் www.karuvoolam.tn.gov.in (களஞ்சியம்) பணியாளர் சுய சேவை (Employee Self Service) (IFHRMS Employee ID உள்ள பணியாளர்கள்) மற்றும் http://cps.tn.gov.in/public (IFHRMS Employee ID பெறாத பணியாளர்கள் /அயற்பணியில் உள்ள பணியாளர்கள்) ஆகிய இணையதள முகவரிகளில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9




Press Release No: 313 , Date: 30.06.2026

Press Release


The Contributory Pension Scheme (CPS) Account Slips for the financial year 2025-2026 pertaining to the Tamil Nadu Government Servants and Teachers have been generated and hosted through online by The Treasuries and Accounts Department (CPS Wing) on 01.07.2026 at 10.00 AM. The subscribers can view and download their CPS Account Slips from the website www.karuvoolam.tn.gov.in (Kalanjiam) Employee Self service (For Employees having IFHRMS Employee ID) and http://cps.tn.gov.in/public (For Employees not having IFHRMS Employee ID/Employee under Foreign Service)


Issued By:- DIPR, Secretariat, Chennal - 9


ஓய்வூதியத் திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக CPS ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு

 

ஓய்வூதிய திட்ட விவகாரம் : தமிழ்நாடு அரசு நம்ப வைத்து கழுத்தை அறுப்பதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் பகிரங்க குற்றச்சாட்டு (பத்திரிகை செய்தி)




>>> CPS ஒழிப்பு இயக்கத்தின் அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Bajaj Frore Neo Table Fan 400 MM | Table Fans For Home & Office | Aerodynamically Balanced Blades | 100% Copper Motor | High Air Delivery | 3-Speed Control | 2-Yrs Warranty 【White】


https://amzn.to/48LO6mT




தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும்

 

தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் CPS திட்டத்தை ரத்து செய்ய முடியும் - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி 




Pigeon by Stovekraft Amaze Plus Electric Kettle (14289) with Stainless Steel Body, 1.5 litre, used for boiling Water, making tea and coffee, instant noodles, soup etc. (Silver)




Actual Price: Rs. 1101

Offer Price : Rs. 579

Benefit : Rs. 522


Amazon வலைதள முகவரி இணைப்பு:

https://amzn.to/4nugs9F



Combo Offer 



https://amzn.to/4oJ9EpF


Actual Price: Rs. 1545

Offer Price : Rs. 689

Benefit : Rs. 856


விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்



CPS Pension Proposal / Final Settlement அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்



பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஓய்வூதிய முன்மொழிவு CPS Pension / Final Settlement Proposal அனுப்புதல் : அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக கருவூல இயக்குநரின் செயல்முறைகள்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஓய்வூதிய முன்மொழிவு அனுப்புதல் - அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக


CPS திட்டத்தில் ஓய்வு & மரணம் அடையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆவணங்கள் சரிபார்த்து அனுப்பாமல் தொடர்ந்து திருப்பப்படுகிறது. (அசல் பணிப்பதிவேடு தேவையில்லை) தொடர்ந்து தவறுகள் நடக்கும் பட்சத்தில் ஒப்பளிக்கப்பட்ட நாட்கள் முதல் வட்டித்தொகை கோரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர் பொறுப்பாக நேரிடும் என எச்சரிக்கை.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Old Pension Scheme Implementation : CPS / OPS / UPS குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, ஆசிரியர் அரசு அலுவலர் சங்கங்களுடன் கூட்டம் - நான்கு நாட்களில் கலந்து கொள்ள உள்ள சங்கங்களின் பட்டியல்

 

பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் : Old Pension Scheme Implementation : CPS / OPS / UPS குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, ஆசிரியர் அரசு அலுவலர் சங்கங்களுடன் கூட்டம் - நான்கு நாட்களில் கலந்து கொள்ள உள்ள சங்கங்களின் பட்டியல்


An Committee has formed by the Govt, which is presided by Shri. Gagan Deep Singh Bedi IAS, for the grievances / opinion about Old Pension Scheme Implementation. An time table is scheduled in this August month 2025 is below 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




CPS ஐ ரத்து செய்ய ஏன், எதற்கு போராட்டம் அவசியம் : கையேடு

 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ( CPS ) ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் செய்ய ஏன், எதற்கு தற்போது போராட்டம் அவசியம் என்பதற்கான முழு விளக்க கையேடு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து குழுக்களுக்கும் பகிரவும்..


80CCD (1B) ல் CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி

 

80CCD (1B) ல்  CPS தொகையை கழித்தவர்களுக்கு கூடுதல் வருமான வரி 


கடந்த பிப்ரவரி 2025-ல் 80CCD 1B -ல்  ரூ 50000 (CPS தொகையை) கழித்தவர்கள் தற்போது வருமான வரி தாக்கல் செய்யும் போது ரூ 50000 க்கான வரியும் சேர்த்து Income Tax செலுத்த வேண்டியுள்ளது. 80CCD 1B என்பது NPS -ல் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். CPS உள்ளவர்களுக்கு பொருந்தாது எனக் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் CPS உள்ள ஆசிரியர்கள் Old Regime -,ல் 80CCD 1B-ல் ரூ 50000 கழித்து காட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது



CPSல் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம்


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் - மறு நியமன காலத்திற்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் - தெளிவுரை வழங்குதல் - கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இணை இயக்குநரின் கடிதம், நாள் : 08-04-2025


Re-appointment Pay Fixation to CPS Scheme Teachers


Teachers retiring under the Contributory Pension Scheme - Fixation of pay for the period of reappointment - Clarification - Letter from the Joint Director, Treasury and Accounts Department, Date: 08-04-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Upload CPS missing credit in online portal - Treasury Officer's Memorandum


CPS missing credit - online portalல் பதிவேற்றம் செய்ய கருவூல அலுவலர் குறிப்பாணை


Treasury Officer's Memorandum to upload CPS missing credit in online portal


CPS missing credit - online portalல் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப் பட்டுள்ளது -  கருவூலம் மற்றும் கணக்குத் துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


HC Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in CPS


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர் பணிக்கொடை வழங்க கோரிய வழக்கில் மூன்று வாரங்களில் தமிழ்நாடு அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு


High Court Madurai Branch orders Tamil Nadu government to file reply within three weeks in case of gratuity claim by employee who completes service in Contributory Pension Scheme

 

தஞ்சாவூர் மாவட்டம் பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி  புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற எனக்கு  ஈட்டிய விடுப்பு,  சிபிஎஸ் வைப்பு நிதி தொகை மட்டுமே ஓய்வின் போது வழங்கினர். எனது பணி காலத்திற்கான பணிக்கொடை வழங்கவில்லை. அதனால் தமிழ்நாடு அரசு நிதித் துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர்களிடம் பணிக்கொடை கோரி விண்ணப்பம் செய்தும் பதில் ஏதும் இல்லாததால், பணிக்கொடை வழங்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அரசின் பதில் அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் வழங்க நீதியரசர் திரு. பட்டு தேவானந்த் அவர்கள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.


தற்காலிக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய CPS திட்ட நிதியை வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


 தற்காலிக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு செலுத்திய நிதியை வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு...


Madurai Branch of Madras High Court Order to disburse contribution paid by Government in Contributory Pension Scheme of Temporary Employees with interest within 4 weeks...


தற்காலிக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு வழங்கிய நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தேனி மாவட்டம் செட்டிபட்டியைச் சேர்ந்த பாபுஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கால்நடைத் துறையில் 2012-ல் தற்காலிகப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். 2004-ம் ஆண்டு அரசாணையின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனக்கும் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கு எண் வழங்கப்பட்டது. மாதந்தோறும் எனது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை செலுத்திய விவரம் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. எனவே, தற்காலிக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய தொகையை திரும்பப் பெறுமாறு 2021-ம் ஆண்டில் நிதித் துறை சிறப்புச் செயலர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, எங்கள் கணக்கில் நாங்கள் செலுத்திய தொகையையும், அரசு செலுத்திய பங்களிப்புத் தொகையையும் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இதே கோரிக்கை தொடர்பாக பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். 


அரசுத் தரப்பில், "தற்காலிக ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். மனுதாரர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டனர். இதை அறிந்தவுடன், தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மனுதாரர்கள் கணக்கில் அரசு செலுத்திய தொகையை கோர உரிமை கிடையாது" என்றனர்.


பின்னர் நீதிபதி, "மனுதாரர்கள் கணக்கில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக செலுத்திய தொகையை அரசு திரும்பப் பெறுவது என்பதை ஏற்க முடியாது. மனுதாரர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்தை உரிமையாக கோர முடியாது. ஆனால், அரசு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை, மனுதாரர்களை ஏமாற்றம் அடையச் செய்யும். இது தொடர்பான நிதித் துறை சிறப்புச்செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர்கள் செலுத்திய தொகை, அரசின் பங்களிப்புத் தொகையை, உரிய வட்டியுடன் அவர்களுக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு முன் மொழிவுகளை IFHRMS Kalanjiyam வாயிலாக அனுப்புவதற்கான வழிமுறைகள் - கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம், நாள்: 15-05-2024...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( CPS - Contributory Pension Scheme) சார்ந்த முன் மொழிவுகளை இனி IFHRMS வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் - கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவு...



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு முன் மொழிவுகளை IFHRMS Kalanjiyam வாயிலாக அனுப்புவதற்கான வழிமுறைகள்  - கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம், நாள்: 15-05-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் நிதியாண்டுக்கான CPS Account Slip இன்று (01-07-2024) வெளியீடு...

 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023–2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது...


Contributory Pension Scheme Accounts Slip for the year 2023-2024 for Tamil Nadu Government employees and teachers working under Contributory Pension Scheme are being compiled and published by the Government Data Center on 01.07.2024 at 10 am...


வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php



>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...




பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...


இந்திய ஒன்றிய அளவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் (Contributed Pension System or New Pension System) எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணி, அரசு கல்வி மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் உள்ளோர் மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பயன்படும் வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.


தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்திய இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு ஜனவரி 1, 2004 முதல் ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 01.01.2004-க்கு முன்பு ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவம், துணை இராணுவப் படைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. இந்திய ஒன்றிய அரசைப் பின்பற்றி அதன்பின் பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியில் சேரும் தமது ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்தி வருவது எண்ணத்தக்கது.


அதன்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி மட்டும் உள்ளடக்கிய மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத ஓய்வூதிய வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் மேற்குறித்த வைப்பு நிதிக் கணக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் தம் பங்காகச் செலுத்தி அவற்றிற்குரிய அவ்வக்கால வட்டியும் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் கணக்குச்சீட்டு வழங்கி வருகின்றன. புதிய ஓய்வூதிய திட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை நிர்வகித்து வருகிறது. 


தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நிதியை மாநில கணக்காயர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிலையாக்கப்படாத பணியாளர்கள் அனைவருக்கும் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் புதிய கணக்கு எண் மற்றும் கணக்குச்சீட்டு வழங்குதல், கணக்குகள் பராமரிக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேமிக்கும் மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோருக்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் இதற்கான வட்டித் தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. 


தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டித் தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது இதன் சிறப்பாகும். இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தம் பணிக்காலத்தில் சேமித்த தொகையுடன் அதற்கு ஈடாக அரசின் பங்களிப்புத் தொகை, அவற்றிற்குரிய வட்டி ஆகியவை முறையே கணக்கிடப்பட்டு முழுவதும் ஒரே தவணையில் வழங்கப்பட்டு விடுகிறது.‌ இதுதவிர, ஒன்றிய அரசு வழங்குவது போல் பணிக்கொடை இவர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. 


ஓராண்டு பணிக்கு 15 நாட்கள் சம்பளம் பணிக்கொடையென்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்துள்ளாரோ அதற்குரிய தொகையை பணிக்கொடையாக வழங்கவேண்டும் என்பது விதியாகும். இதன் உச்சவரம்பு 20 இலட்சமாக தற்போது வரை இருக்கின்றது. இந்த பணிக்கொடை தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவரவர் பணிபுரிந்த பணிக்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகிறது. 


இத்தகைய சூழலில், அண்மையில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 50 விழுக்காட்டைக் கடந்ததையொட்டி ஒன்றிய அரசு தம் பணிக்கொடை உச்சவரம்பை 20 இலிருந்து 25 இலட்சமாக உயர்த்தி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 


ஒன்றிய அரசுக்கு இணையாக ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு சலுகைகளை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் நடைமுறையைக் கடைபிடித்து வரும் திராவிட மாடல் அரசு பணிக்கொடை உயர்வையும் கவனத்தில் கொள்வது நல்லது.


மேலும், ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அத்திட்டத்தின் முழு பலனையும் சலுகைகளையும் அனுபவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பிடித்தம் செய்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி இன்னமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. 


இதுகுறித்து பலகட்டமாக தனித்தும் கூட்டமைப்பாக ஒருங்கிணைந்தும் இயக்கங்கள் பழைய ஓய்வூதியம் மீட்புப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறாமல் இல்லை. அப்போதெல்லாம் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகள் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு உறுதிமொழி அளிக்கப்படும் நிகழ்வுகளும் இங்கு நடந்தேறி வருவதும் அறியத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை ஒரு விடிவும் கிடைத்தபாடில்லை. நெருக்கடி சூழ்நிலையைச் சமாளித்து இயல்பு நிலை திரும்ப ஒப்புக்கு குழு அமைப்பதும் பின்னர் அதைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது. 


மீண்டும் பழைய ஓய்வூதியம் நிறைவேற இதுவே நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும் அரசாக தற்போதைய விடியல் அரசு உள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதை எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், அவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியம் மீண்டும் நிறைவேற்றித் தரப்படும் என்று போராட்ட காலகட்டத்தில் நேரிலும் அதன் நீட்சியாக தேர்தல் அறிக்கையிலும் நம்பிக்கையுடன் வாக்குறுதி அளித்துள்ளார்கள். 


இனியும் காலம் கடத்துதல் சரியாகாது. ஏனென்றால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தள்ளப்பட்ட பலபேர் தம் பணி நிறைவு காலத்தை எட்டவிருக்கின்றனர். இவர்களுள் பலர் 40 வயதிற்கு மேல் பணிக்கு வந்தவர்கள். பணி ஓய்வின்போது இவர்கள் பெறப்போகும் பணப்பலன்கள் பெரிய அளவில் இருக்கப் போவதில்லை. அதில் வீட்டுக்கடனை அடைப்பதா? பிள்ளைகளை உயர்கல்வி படிக்க அனுப்புவதா? பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைப்பதா? பணிக் காலத்தில் சீதனமாகப் பெற்ற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவச் செலவுகள் பார்ப்பதா? என்று கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று திசை தெரியாமல் விழிபிதுங்கிக் கிடப்பதை அறியமுடிகிறது. 


இத்தகைய நிலையில் ஒன்றிய அரசு முன்மொழிந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தாம் சேர்க்கப்பட்டிருந்தால்கூட பங்களிப்பு ஓய்வூதியத் தொகையுடன் பணிக்கொடையும் கிடைத்திருக்குமே என்று அங்கலாய்ப்பதையும் ஆதங்கத்தில் முணுமுணுப்பதையும் ஊன்றிக் கேட்க முடிகிறது. கந்தலான வாழ்க்கையில் பட்டு வேட்டி கனவாக இருந்தாலும் நான்கு முழ கதர் வேட்டி கிடைப்பதை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?


அதுபோல், இந்த பழைய ஓய்வூதிய மீட்பு சிக்கலை அரசுடன் சுமுகமாகப் பேசித் தீர்க்க புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பங்கு பெற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்போர் எத்தகைய முக்கிய பதவி வகித்தாலும் சற்று விலகிக்கோண்டு வழிவிடுதல் காலத்தின் கட்டாயமாகும். நல்லதோ, கெட்டதோ எந்த முடிவாக இருப்பினும் அஃது பாதிக்கப்பட்டோர் கூடி முடிவெடுப்பது தான் சாலச்சிறந்ததாக அமைய முடியும். மூன்றாம் நபர் தலையீடு என்பதும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதென்பதும் பிற்காலத்தில் பல்வேறு விரும்பத்தகாத பின்விளைவுகளையே தரும். இஃது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்களுக்குள் உள் முரண் மற்றும் உட்பகைக்குக் காரணமாக அமையக்கூடும்.


எனினும் ஒரு சில முன்மொழிவுகளை முன்வைப்பது தவறில்லை என்று படுகிறது. முதலாவதாக இருபதாண்டு கால நெடுங்கனவையும் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் பொருட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து மார்ச் 31, 2023 இல் நடைமுறையில் இருந்து வந்த பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வதாகவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரால் சேமிக்கப்பட்ட தொகைக்கு மட்டும் வட்டி கணக்கிடப்பட்டு அது முறையே வருங்கால வைப்பு நிதியாகப் பேணப்படும் என்றும், பணிநியமன நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருப்புத் தொகையில் 75 விழுக்காட்டைத் தற்காலிக முன்பணக் கடன் பெற இயலும் என்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருதரப்பு சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு கொள்வது நலம் பயக்கும்.


இரண்டாவதாக, மாநிலத்தில் காணப்படும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி வேறுவழியின்றிக் கை விரிக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு வலியுறுத்துவது போல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி முழுவதையும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்து ஜனவரி 1, 2004 முதல் பணப்பலன் சலுகைகள் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒன்றிய அரசு தம் பணியாளர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் பெறத் தகுதி வாய்ந்தவர்களாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மேம்படுத்துதல் இன்றியமையாதது. 


மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 25,000 தொகைக்குக் குறையாமல் வாழ்வாதார ஓய்வூதியம் இவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்தல் இன்றியமையாதது. இந்த முடிவுகள் அனைத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அரசும் கூட்டாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். சம்பந்தப்படாதவர்கள் தேவையின்றி இப்பிரச்சினையில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்த்து மறைமுகமாக உதவிகரமாக இருப்பதே உத்தமம்.


தற்போது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பயனாளிகள் தம் வருமானவரி சேமிப்பு சலுகையில் கழித்து வந்த கூடுதல் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை ரூ 50000 ஐயும் கடந்த ஆண்டு முதல் கழிக்க முடியா அவலநிலை உள்ளது வருந்தத்தக்கது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். ஏனெனில், இது வருமான வரி கழிவிற்கு உகந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராது என்று கூறப்படுகிறது.


அரசுக்குத் தம் தரப்பு நியாயங்களைக் கோரிக்கையை முன்வைத்து உரிமையுடன் கேட்பவர்கள் முன் எடுத்துரைக்க எப்படி எல்லா உரிமையும் இருக்கின்றதோ அதுபோல் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலைச் செவிமடுத்துக் கேட்கும் கடமையும் பொறுப்பும் இருப்பதை ஒருக்காலும் தட்டிக் கழிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளத்தக்கது. இஃது ஆகவே ஆகாது என்று எடுத்த எடுப்பிலேயே ஆயிரமாயிரம் காரணங்களை முடியாததற்கு அடுக்குவதில் காட்டும் அக்கறையில் ஏற்கத்தக்கதே என்று முடிவெடுக்க நல்லதொரு காரணத்தைப் பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கிய வல்லுநர் குழு மூலம் ஆராய்தல் கோடி புண்ணியம். 


அரசியல் கிணற்றுக்குள் பல்லாண்டுகள் மூழ்கிக் கிடக்கும் இறுகிய பாறாங்கல்லைப் போன்ற பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீள எடுத்து வந்து பாவ விமோசனம் அளித்து சுமார் ஆறு இலட்சம் குடும்பங்களின் கண்ணீர் துடைக்கவும் கௌரவமான முறையில் வாழ்க்கை வாழவும் மனிதாபிமானத்துடன் அரசு முன்வரவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும். தற்போது பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளதாக அறியப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடும் இடம்பெற வேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, வேண்டுதலும் கூட.


எழுத்தாளர் மணி கணேசன்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O.Ms.No.53 , Dated 25-08-2026 - 3rd Maternity Leave

 மூன்றாவது மகப்பேறு விடுப்பு அரசாணை (நிலை) எண். 53 , நாள் 25-08-2026 - Third Maternity Leave வெளியீடு  அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது க...