கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
CPS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தற்காலிக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய CPS திட்ட நிதியை வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


 தற்காலிக ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசு செலுத்திய நிதியை வட்டியுடன் 4 வாரத்தில் வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு...


Madurai Branch of Madras High Court Order to disburse contribution paid by Government in Contributory Pension Scheme of Temporary Employees with interest within 4 weeks...


தற்காலிக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்கு அரசு வழங்கிய நிதியை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


தேனி மாவட்டம் செட்டிபட்டியைச் சேர்ந்த பாபுஜி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கால்நடைத் துறையில் 2012-ல் தற்காலிகப் பணியாளராக நியமிக்கப்பட்டேன். 2004-ம் ஆண்டு அரசாணையின்படி புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனக்கும் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கு எண் வழங்கப்பட்டது. மாதந்தோறும் எனது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை, அரசின் பங்களிப்புத் தொகை செலுத்திய விவரம் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், தற்காலிக ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது. எனவே, தற்காலிக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய தொகையை திரும்பப் பெறுமாறு 2021-ம் ஆண்டில் நிதித் துறை சிறப்புச் செயலர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்து, எங்கள் கணக்கில் நாங்கள் செலுத்திய தொகையையும், அரசு செலுத்திய பங்களிப்புத் தொகையையும் உரிய வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இதே கோரிக்கை தொடர்பாக பலர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார். 


அரசுத் தரப்பில், "தற்காலிக ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வர மாட்டார்கள். மனுதாரர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டனர். இதை அறிந்தவுடன், தவறு சரிசெய்யப்பட்டுவிட்டது. மனுதாரர்கள் கணக்கில் அரசு செலுத்திய தொகையை கோர உரிமை கிடையாது" என்றனர்.


பின்னர் நீதிபதி, "மனுதாரர்கள் கணக்கில் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக செலுத்திய தொகையை அரசு திரும்பப் பெறுவது என்பதை ஏற்க முடியாது. மனுதாரர்கள் பங்களிப்பு ஓய்வூதியத்தை உரிமையாக கோர முடியாது. ஆனால், அரசு அதிகாரிகளின் திடீர் நடவடிக்கை, மனுதாரர்களை ஏமாற்றம் அடையச் செய்யும். இது தொடர்பான நிதித் துறை சிறப்புச்செயலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மனுதாரர்கள் செலுத்திய தொகை, அரசின் பங்களிப்புத் தொகையை, உரிய வட்டியுடன் அவர்களுக்கு 4 வாரத்தில் வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு முன் மொழிவுகளை IFHRMS Kalanjiyam வாயிலாக அனுப்புவதற்கான வழிமுறைகள் - கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம், நாள்: 15-05-2024...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ( CPS - Contributory Pension Scheme) சார்ந்த முன் மொழிவுகளை இனி IFHRMS வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் - கருவூல கணக்குத் துறை ஆணையர் உத்தரவு...



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பிடித்தம் செய்யப்பட்ட தொகை பெறுவதற்கு முன் மொழிவுகளை IFHRMS Kalanjiyam வாயிலாக அனுப்புவதற்கான வழிமுறைகள்  - கருவூல கணக்குத் துறை ஆணையரின் கடிதம், நாள்: 15-05-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2023-2024ஆம் நிதியாண்டுக்கான CPS Account Slip இன்று (01-07-2024) வெளியீடு...

 

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023–2024ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 01.07.2024 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது...


Contributory Pension Scheme Accounts Slip for the year 2023-2024 for Tamil Nadu Government employees and teachers working under Contributory Pension Scheme are being compiled and published by the Government Data Center on 01.07.2024 at 10 am...


வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php



>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...




பழைய & புதிய பங்களிப்பு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 அறிக்கை - நிதித்துறை மானியக் கோரிக்கை எண்: 50...



 பழைய & புதிய பங்களிப்பு ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக் கால நன்மைகளும் குறித்த முழுமையான தகவல்கள் - தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025 அறிக்கை - நிதித்துறை மானியக் கோரிக்கை எண்: 50...


Complete Information on Old Pension & New Contributory Pensions and Other Retirement Benefits - Government of Tamil Nadu Policy Note 2024-2025 Report - Finance Department Grant Request No: 50...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பா? சீரமைப்பா? இதுவே தக்க தருணம்...


இந்திய ஒன்றிய அளவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் (Contributed Pension System or New Pension System) எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. அதாவது தமிழ்நாடு அரசுப் பணி, அரசு கல்வி மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் உள்ளோர் மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பயன்படும் வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.


தமிழ்நாடு அரசு முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்திய இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு ஜனவரி 1, 2004 முதல் ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 01.01.2004-க்கு முன்பு ஒன்றிய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவம், துணை இராணுவப் படைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. இந்திய ஒன்றிய அரசைப் பின்பற்றி அதன்பின் பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியில் சேரும் தமது ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்தி வருவது எண்ணத்தக்கது.


அதன்படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி மட்டும் உள்ளடக்கிய மாத ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத ஓய்வூதிய வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் மேற்குறித்த வைப்பு நிதிக் கணக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் தம் பங்காகச் செலுத்தி அவற்றிற்குரிய அவ்வக்கால வட்டியும் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் கணக்குச்சீட்டு வழங்கி வருகின்றன. புதிய ஓய்வூதிய திட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) இதை நிர்வகித்து வருகிறது. 


தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த நிதியை மாநில கணக்காயர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிலையாக்கப்படாத பணியாளர்கள் அனைவருக்கும் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தில் புதிய கணக்கு எண் மற்றும் கணக்குச்சீட்டு வழங்குதல், கணக்குகள் பராமரிக்கும் பணிகள் போன்றவை நடைபெற்று வருகின்றன. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேமிக்கும் மாதாந்திர கூட்டுத்தொகைக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோருக்கான பொது வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தில் இதற்கான வட்டித் தொகை கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது. 


தற்போது ஆண்டு வட்டி வீதம் 7.1 சதவீதமாகும். இவ்வட்டித் தொகை இத்திட்டத்திலுள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது இதன் சிறப்பாகும். இத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்கள் தம் பணிக்காலத்தில் சேமித்த தொகையுடன் அதற்கு ஈடாக அரசின் பங்களிப்புத் தொகை, அவற்றிற்குரிய வட்டி ஆகியவை முறையே கணக்கிடப்பட்டு முழுவதும் ஒரே தவணையில் வழங்கப்பட்டு விடுகிறது.‌ இதுதவிர, ஒன்றிய அரசு வழங்குவது போல் பணிக்கொடை இவர்களுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. 


ஓராண்டு பணிக்கு 15 நாட்கள் சம்பளம் பணிக்கொடையென்று கணக்கிட்டு ஒருவர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்துள்ளாரோ அதற்குரிய தொகையை பணிக்கொடையாக வழங்கவேண்டும் என்பது விதியாகும். இதன் உச்சவரம்பு 20 இலட்சமாக தற்போது வரை இருக்கின்றது. இந்த பணிக்கொடை தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் அவரவர் பணிபுரிந்த பணிக்காலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு அளிக்கப்படுகிறது. 


இத்தகைய சூழலில், அண்மையில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு 50 விழுக்காட்டைக் கடந்ததையொட்டி ஒன்றிய அரசு தம் பணிக்கொடை உச்சவரம்பை 20 இலிருந்து 25 இலட்சமாக உயர்த்தி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 


ஒன்றிய அரசுக்கு இணையாக ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு சலுகைகளை மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கும் நடைமுறையைக் கடைபிடித்து வரும் திராவிட மாடல் அரசு பணிக்கொடை உயர்வையும் கவனத்தில் கொள்வது நல்லது.


மேலும், ஒன்றிய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் அத்திட்டத்தின் முழு பலனையும் சலுகைகளையும் அனுபவித்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பிடித்தம் செய்துள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட நிதி இன்னமும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. 


இதுகுறித்து பலகட்டமாக தனித்தும் கூட்டமைப்பாக ஒருங்கிணைந்தும் இயக்கங்கள் பழைய ஓய்வூதியம் மீட்புப் போராட்டங்கள் அவ்வப்போது நடைபெறாமல் இல்லை. அப்போதெல்லாம் ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகள் சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒழிப்பு உறுதிமொழி அளிக்கப்படும் நிகழ்வுகளும் இங்கு நடந்தேறி வருவதும் அறியத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை ஒரு விடிவும் கிடைத்தபாடில்லை. நெருக்கடி சூழ்நிலையைச் சமாளித்து இயல்பு நிலை திரும்ப ஒப்புக்கு குழு அமைப்பதும் பின்னர் அதைக் கிடப்பில் போடுவதும் தொடர்ந்து நடந்து வருவது வேதனைக்குரியது. 


மீண்டும் பழைய ஓய்வூதியம் நிறைவேற இதுவே நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும் அரசாக தற்போதைய விடியல் அரசு உள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வதை எளிதாகப் புறம்தள்ளிவிட முடியாது. ஏனெனில், அவர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து பழைய ஓய்வூதியம் மீண்டும் நிறைவேற்றித் தரப்படும் என்று போராட்ட காலகட்டத்தில் நேரிலும் அதன் நீட்சியாக தேர்தல் அறிக்கையிலும் நம்பிக்கையுடன் வாக்குறுதி அளித்துள்ளார்கள். 


இனியும் காலம் கடத்துதல் சரியாகாது. ஏனென்றால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தள்ளப்பட்ட பலபேர் தம் பணி நிறைவு காலத்தை எட்டவிருக்கின்றனர். இவர்களுள் பலர் 40 வயதிற்கு மேல் பணிக்கு வந்தவர்கள். பணி ஓய்வின்போது இவர்கள் பெறப்போகும் பணப்பலன்கள் பெரிய அளவில் இருக்கப் போவதில்லை. அதில் வீட்டுக்கடனை அடைப்பதா? பிள்ளைகளை உயர்கல்வி படிக்க அனுப்புவதா? பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்து வைப்பதா? பணிக் காலத்தில் சீதனமாகப் பெற்ற உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவச் செலவுகள் பார்ப்பதா? என்று கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று திசை தெரியாமல் விழிபிதுங்கிக் கிடப்பதை அறியமுடிகிறது. 


இத்தகைய நிலையில் ஒன்றிய அரசு முன்மொழிந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தாம் சேர்க்கப்பட்டிருந்தால்கூட பங்களிப்பு ஓய்வூதியத் தொகையுடன் பணிக்கொடையும் கிடைத்திருக்குமே என்று அங்கலாய்ப்பதையும் ஆதங்கத்தில் முணுமுணுப்பதையும் ஊன்றிக் கேட்க முடிகிறது. கந்தலான வாழ்க்கையில் பட்டு வேட்டி கனவாக இருந்தாலும் நான்கு முழ கதர் வேட்டி கிடைப்பதை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?


அதுபோல், இந்த பழைய ஓய்வூதிய மீட்பு சிக்கலை அரசுடன் சுமுகமாகப் பேசித் தீர்க்க புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பங்கு பெற பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருப்போர் எத்தகைய முக்கிய பதவி வகித்தாலும் சற்று விலகிக்கோண்டு வழிவிடுதல் காலத்தின் கட்டாயமாகும். நல்லதோ, கெட்டதோ எந்த முடிவாக இருப்பினும் அஃது பாதிக்கப்பட்டோர் கூடி முடிவெடுப்பது தான் சாலச்சிறந்ததாக அமைய முடியும். மூன்றாம் நபர் தலையீடு என்பதும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் பேசுவதென்பதும் பிற்காலத்தில் பல்வேறு விரும்பத்தகாத பின்விளைவுகளையே தரும். இஃது அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஆசிரியர் சங்கங்களுக்குள் உள் முரண் மற்றும் உட்பகைக்குக் காரணமாக அமையக்கூடும்.


எனினும் ஒரு சில முன்மொழிவுகளை முன்வைப்பது தவறில்லை என்று படுகிறது. முதலாவதாக இருபதாண்டு கால நெடுங்கனவையும் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் பொருட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்து மார்ச் 31, 2023 இல் நடைமுறையில் இருந்து வந்த பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்வதாகவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியரால் சேமிக்கப்பட்ட தொகைக்கு மட்டும் வட்டி கணக்கிடப்பட்டு அது முறையே வருங்கால வைப்பு நிதியாகப் பேணப்படும் என்றும், பணிநியமன நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மூன்று இலட்சத்திற்கு மிகாமல் இருப்புத் தொகையில் 75 விழுக்காட்டைத் தற்காலிக முன்பணக் கடன் பெற இயலும் என்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இருதரப்பு சுமுக பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு கொள்வது நலம் பயக்கும்.


இரண்டாவதாக, மாநிலத்தில் காணப்படும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி வேறுவழியின்றிக் கை விரிக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு வலியுறுத்துவது போல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிதி முழுவதையும் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் அளித்து ஜனவரி 1, 2004 முதல் பணப்பலன் சலுகைகள் கிடைக்கத் தக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் ஒன்றிய அரசு தம் பணியாளர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் பெறத் தகுதி வாய்ந்தவர்களாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை மேம்படுத்துதல் இன்றியமையாதது. 


மேலும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ 25,000 தொகைக்குக் குறையாமல் வாழ்வாதார ஓய்வூதியம் இவர்களுக்கு வழங்குவதை உறுதி செய்தல் இன்றியமையாதது. இந்த முடிவுகள் அனைத்தும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் அரசும் கூட்டாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். சம்பந்தப்படாதவர்கள் தேவையின்றி இப்பிரச்சினையில் நேரடியாகப் பங்கேற்பதைத் தவிர்த்து மறைமுகமாக உதவிகரமாக இருப்பதே உத்தமம்.


தற்போது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பயனாளிகள் தம் வருமானவரி சேமிப்பு சலுகையில் கழித்து வந்த கூடுதல் பங்களிப்பு ஓய்வூதியத் தொகை ரூ 50000 ஐயும் கடந்த ஆண்டு முதல் கழிக்க முடியா அவலநிலை உள்ளது வருந்தத்தக்கது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். ஏனெனில், இது வருமான வரி கழிவிற்கு உகந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேராது என்று கூறப்படுகிறது.


அரசுக்குத் தம் தரப்பு நியாயங்களைக் கோரிக்கையை முன்வைத்து உரிமையுடன் கேட்பவர்கள் முன் எடுத்துரைக்க எப்படி எல்லா உரிமையும் இருக்கின்றதோ அதுபோல் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலைச் செவிமடுத்துக் கேட்கும் கடமையும் பொறுப்பும் இருப்பதை ஒருக்காலும் தட்டிக் கழிக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளத்தக்கது. இஃது ஆகவே ஆகாது என்று எடுத்த எடுப்பிலேயே ஆயிரமாயிரம் காரணங்களை முடியாததற்கு அடுக்குவதில் காட்டும் அக்கறையில் ஏற்கத்தக்கதே என்று முடிவெடுக்க நல்லதொரு காரணத்தைப் பாதிக்கப்பட்டவர்களையும் உள்ளடக்கிய வல்லுநர் குழு மூலம் ஆராய்தல் கோடி புண்ணியம். 


அரசியல் கிணற்றுக்குள் பல்லாண்டுகள் மூழ்கிக் கிடக்கும் இறுகிய பாறாங்கல்லைப் போன்ற பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீள எடுத்து வந்து பாவ விமோசனம் அளித்து சுமார் ஆறு இலட்சம் குடும்பங்களின் கண்ணீர் துடைக்கவும் கௌரவமான முறையில் வாழ்க்கை வாழவும் மனிதாபிமானத்துடன் அரசு முன்வரவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகும். தற்போது பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தி உள்ளதாக அறியப்படுகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடும் இடம்பெற வேண்டும் என்பது வேண்டுகோள் மட்டுமல்ல, வேண்டுதலும் கூட.


எழுத்தாளர் மணி கணேசன்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்கத்தினரின் முழக்கங்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி நடைபெற்ற முதலமைச்சர் இல்ல முற்றுகை போராட்டம் - CPS ஒழிப்பு இயக்க பெண் நிர்வாகியின் எழுச்சியுரை...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...


 பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? - பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி...



பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி கிடைக்கும் - சொல்கிறார் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகி...

 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி கிடைக்கும் - சொல்கிறார் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிர்வாகி...



பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...

 


பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார் - சபாநாயகர் அப்பாவு பேச்சு...


நாகர்கோவில் கோட்டாறு நாராயண குரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: 


முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மிகப்பெரிய நிதி நெருக்கடி அரசுக்கு உள்ளது.


இந்த சுமையை தாண்டி மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசு நிதியாக நாம் செலுத்துகின்ற வரிக்கு அவர்கள் திருப்பித் தருவது ஒரு ரூபாய்க்கு 29 காசு தான். நமக்கு சரியான நிதி பகிர்வு இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்து விடுவார். 


முதல்வர் நிச்சயமாக சொன்னதை செய்து விடுவார். ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் முதல்வர் சந்தித்து அவர்களை அழைத்துப் பேசி ஒரு ஒரு உறுதியை கொடுத்துள்ளார். எனவே அளித்த வாக்குறுதியை இந்த அரசு நிச்சயம் நிறைவேற்றும். இவ்வாறு அவர் பேசினார்.




பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - வினாக்களும் விடைகளும் - CPS ஒழிப்பு இயக்கம்...


🙏🙏🙏🙏🙏🙏

*CPS ஒழிப்பு இயக்கம்*

*மாநில மையம்*


*CPS யை  இரத்து செய்யக் கோரி 26.02.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*சிபிஎஸ் இரத்து செய்ய முடியுமா ?*


*பதில் :*


*முடியும்..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*இந்தியாவில் சிபிஎஸ் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் உண்டா ?*


*பதில் :*


*உண்டு..!*


*மேற்கு வங்காளத்தில் இன்றுவரை CPS திட்டம் அமல்படுத்தப்பட வில்லை..!*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*Contributory Pension Scheme திட்டத்தை அமுல்படுத்தாமல் இருக்க மாநிலங்களுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டா ?*


*பதில் :* 


*சட்டபூர்வ உரிமை உண்டு..!*


*மத்திய அரசு அமல்படுத்திய சிபிஎஸ் சட்டத்தில்.....*


*புதிய ஓய்வூதியத் திட்டத்தை.... அமல்படுத்துவதும் அமல்படுத்தாமல் இருப்பதும் ஒரு மாநிலத்தின் உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது.*


*மாநில உரிமை என்ற அடிப்படையில் மேற்கு வங்க மாநில அரசு சிபிஎஸ் திட்டத்தை அம்மாநில அரசு ஊழியருக்கு அமல்படுத்தவில்லை..!*


*ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், சிக்கிம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*தமிழ்நாட்டில் அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள CPS திட்டத்திற்கும் வித்தியாசம் உண்டா ?*


*பதில் :*


*வித்தியாசம் உண்டு.* 


*மத்திய அரசு கொண்டுவந்துள்ள சிபிஎஸ் திட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும், மத்திய அரசு அமைத்துள்ள ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன்  (PFRDA ) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சிபிஎஸ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.* 


*தமிழ்நாடு அரசு 2003 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.*


*சிபிஎஸ் திட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக் கொடை வழங்கப்படுகிறது.*


*மத்திய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் தொகையில் கடன் வாங்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.*


*தமிழ்நாடு அரசு பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை.*


*CPS.. ஐ அமல்படுத்திய மாநிலங்களில்...*


*PFRDA வுடன் கையெழுத்து இடாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.*


 *தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் பணிக்கொடை கிடையாது*


*செலுத்திய தொகையில் முன்பணம் கோர முடியாது என்ற நிலைமை உள்ளது.*


*தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால்  சிபிஎஸ் இரத்து செய்வதற்கு மத்திய அரசு மற்றும் PFRDA விடம் அனுமதி பெற வேண்டிய அவசியமும் இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*முன் தேதியிட்டு PFRDAவுடன் தமிழ்நாடு அரசு கையெழுத்து இட முடியுமா?*


*பதில் :* 


*வாய்ப்பே இல்லை.*


*முன்தேதியிட்டு கையெழுத்திட விரும்பினால்...*


*1.4.2003 முதல் ஊழியர்கள் செலுத்திய பங்கீடு  10 % அரசு செலுத்த வேண்டிய 10%  என்று 20%*


*அதாவது Rs.42 ஆயிரம் கோடி தொகையை., தமிழ்நாடு அரசு PFRDA வில் செலுத்த வேண்டும்.*


*Rs 70,000 கோடியை PFRDA வில் செலுத்த இன்றும் சரி.. எதிர்காலத்திலும் சரி.. தமிழ்நாடு அரசுக்கு வாய்ப்பில்லை.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*ஒரு வேளை தமிழக அரசு, அவ்வளவு தொகையை செலுத்த விரும்பினால்...*


*PFRDA... அந்தத் தொகையை...ஏற்றுக் கொள்ளுமா..?*


*பதில் :*


*PFRDA.. தமிழ்நாடு அரசு எவ்வளவு செலுத்தினாலும், அந்தத் தொகையை ஏற்றுக் கொள்ளும்.*


*ஆனால்.. தமிழ்நாடு அரசு எந்தத் தேதியில் தொகையினை செலுத்துகிறதோ..*


*அந்தத் தேதியிலிருந்து தான்.. CPS.. ஐ அமுல்படுத்த முடியும்.*


*ஏனெனில், PFRDA அத்தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து..*


*அதில் கிடைக்கும் லாபத்தின் அடிப்படையில் தான் ஓய்வூதியம் வழங்கும்.*


*முன் தேதியிட்டு தொகை செலுத்தப்பட்டாலும்..*


*முன்தேதியிட்டு முதலீடு செய்ய வாய்ப்பில்லை அல்லவா..?*


*எனவே, முன் தேதியிட்டு ஓய்வூதியம் வழங்க வாய்ப்பே இல்லை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி:*


*PFRDA வுடன் கையெழுத்து போட இயலாத சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன ?*


*பதில் :*


*1). இதே நிலையில் தொடர்வது.*


*2). CPS திட்டத்தை இரத்து செய்வது.*


*இந்த இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.*


*இதே நிலையில் தொடர்வதற்கு சட்ட ரீதியான உரிமை.. அதிகாரம் அரசுக்கு இல்லை.*


*தமிழ்நாடு அரசு அமுல்படுத்தி வரும் இத்திட்டமானது... "அரசியலமைப்புச் சட்டத்திற்கு " எதிரானதாகும்.*


*எனவே, CPS திட்டத்தை ரத்து செய்து விட்டு, இதுவரை அரசு ஊழியர்களிடமிருந்து இதற்கென பிடித்தம் செய்த பங்குத் தொகையினை GPF.. ல் போடுவதைத் தவிர தமிழ்நாடு அரசுக்கு வேறு வழியில்லை என்பதே யதார்த்தமான நிலை.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*CPS.. ஐ ஆட்சியாளர்கள் தானாக இரத்து செய்வார்களா ?*


*பதில் :*


*தானாக இரத்து செய்ய மாட்டார்கள்.*


*இரத்து செய்வதற்கான நிர்பந்தத்தை நாம் தான் உருவாக்க வேண்டும்.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


*கேள்வி :*


*நிர்பந்தம் கொடுத்தால் CPS இரத்து செய்ய முடியுமா?*


*பதில் :*


*நிச்சயம் முடியும்..!*


*CPS.ஐ தமிழகத்தில் 2003ல் அமுல்படுத்திய பின்பு 2006 மற்றும் 2011  ல் இரண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது.


*2006 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் CPS.ஐ இரத்து செய்வோம் என திமுக மற்றும் அதிமுக  வாக்குறுதி அளிக்கவில்லை.*


*2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 10 நாள் வேலை நிறுத்தத்தின் விளைவால்...*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக...*


*CPS.. ஐ இரத்து செய்வோம் என்று திமுக மற்றும் அதிமுக வாக்குறுதி அளித்தன.*


*2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாம் போராடியதால்..*


*CPSஐ இரத்து செய்திட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.*


*"ஒன்றுபட்ட தொடர் போராட்டம் செய்தால் CPS.. ஐ நிச்சயம் இரத்து செய்ய முடியும்..!*


*CPS இரத்து செய்திட பங்கேற்பீர்.....*


*26.02.2024 மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்..*


🙏🙏🙏🙏🙏🙏


*CPS ஒழிப்பு இயக்கம்*


🙏🙏🙏🙏🙏🙏


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கவனத்திற்கு, NHIS 2022 திட்டம் குறித்த அறிவிப்பு (Notice of NHIS 2022 scheme for the attention of Contributory Pension Scheme retirees)...



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கவனத்திற்கு, NHIS 2022 திட்டம் குறித்த அறிவிப்பு (Notice of NHIS 2022 scheme for the attention of Contributory Pension Scheme retirees)...


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் கவனத்திற்கு - ஓய்வூதியம் பெறுவோருக்கான புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) 2022 இன் பலன்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் ஓய்வுபெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்பெறலாம் (For the attention of the Contributory Pension Scheme Retirees - The benefits of the Pensioners New Health Insurance Scheme 2022 can be availed by the contributory Pension Scheme Retirees by opting for the scheme before at least one month of their retirement)...




பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (An interview to the news media regarding the protest announcement by the state coordinators of the Contributory Pension Scheme (CPS) Abolition movement demanding the re-implementation of the old pension scheme)...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட (CPS) ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டி (An interview to the news media regarding the protest announcement by the state coordinators of the Contributory Pension Scheme (CPS) Abolition movement demanding the re-implementation of the old pension scheme)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



PENSION கோரி ஒரு இலட்சம்பேர் தமிழ்நாடு முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட CPS ஒழிப்பு இயக்கம் அறைகூவல் - தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி, CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று (28.10.2023) திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில் 4 கட்டப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.


18.11.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் குடும்பத்தோடு பட்டினிப் போராட்டம்.


27.12.2023 :

மாவட்டத் தலைநகரங்களில் மறியல்.


23 & 24.01.2024 :

2 நாள்கள் தற்செயல் விடுப்புப் போராட்டம்.


08.02.2024 :

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிடுவது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பங்களிப்பு ஓய்வூதிய நிதியிலிருந்து 25% தொகையை திரும்ப பெறலாம் - தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் - நாளிதழ் செய்தி (25% withdrawal from Contributory Pension Fund - 2 lakh govt employees to benefit in Tamil Nadu - Daily News)...

 பங்களிப்பு ஓய்வூதிய நிதியிலிருந்து 25% தொகையை திரும்ப பெறலாம் - தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் - நாளிதழ் செய்தி (25% withdrawal from Contributory Pension Fund - 2 lakh govt employees to benefit in Tamil Nadu - Daily News)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2022-23 has been hosted in the CPS portal. We can download)...

 


பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - 2022-2023ஆம் ஆண்டிற்கான கணக்கீட்டுத்தாள் வலைதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்து கொள்ளலாம் (CPS Account Slips for the year 2022-23 has been published in the CPS portal. We can download)...


வழக்கமாக PDF வடிவில் தரவிறக்கம் செய்யும் வகையில்  கணக்கீட்டுத் தாள் கொடுக்கப்படும். ஆனால் இம்முறை 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்கீட்டுத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சரி என ஒப்புக் கொள்கிறேன் / ஒப்புக்கொள்ளவில்லை என உறுதிப்படுத்திட கேட்கப்பட்டுள்ளது.




வலைதள முகவரி:

http://cps.tn.gov.in/public/index.php



>>> 2022-2023ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தரவிறக்கம் செய்யும் வழிமுறை...



தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை (CPS Account Slip) 26.05.2023 அன்று காலை 10 மணிக்குப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1011, நாள் 26/05/2023 (Tamil Nadu Government Employees and Teachers Contributory Pension Scheme Account Sheets for the year 2022-2023 can be downloaded on 26.05.2023 at 10 AM" - Tamil Nadu Government Press Release No : 1011, Dated 26/05/2023)...


>>> தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை (CPS Account Slip) 26.05.2023 அன்று காலை 10 மணிக்குப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1011, நாள் 26/05/2023 (Tamil Nadu Government Employees and Teachers Contributory Pension Scheme Account Sheets for the year 2022-2023 can be downloaded on 26.05.2023 at 10 AM" - Tamil Nadu Government Press Release No : 1011, Dated 26/05/2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 26.05.2023 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1011, நாள் 26/05/2023...


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் (CPS) தொகை ரூ.61,251 கோடி எல்.ஐ.சி.யில் (LIC) முதலீடு - நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் (Contributory Pension Scheme amount to Rs.61,251 crore invested in LIC - Finance Department's Policy Note informs)...


புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் (CPS) தொகை ரூ.61,251 கோடி எல்.ஐ.சி.யில் (LIC) முதலீடு - நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் (Contributory Pension Scheme amount to Rs.61,251 crore invested in LIC - Finance Department's Policy Note informs)...



📚புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



📚சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்த, 2023-2024-ம் ஆண்டுக்கான நிதித் துறை கொள்கை விளக்கக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



📚தமிழகத்தில் 1.4.2003 மற்றும் அதற்குப் பின்பு அரசுப் பணியில் சேருவோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதற்கு இணையான தொகையை அரசு தன் பங்களிப்பாக செலுத்துகிறது.



📚கடந்த 31.3.2022 நிலவரப்படி, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புப் பணியாளர்கள் உள்பட 61.28 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்களின் பங்களிப்பு, அரசு பங்களிப்புத் தொகை மற்றும் வட்டி உட்பட மொத்தம் ரூ.61,251.16 கோடி எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.



📚பழைய ஓய்வூதிய திட்டம் பரிசீலனை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய கடந்த 2016-ம்ஆண்டு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை 27.11.2018-ல் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஊழியர்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுதல் - மாண்புமிகு நிதி மற்றும் மனித வளம் மேலாண்மை துறை அமைச்சரின் அலுவலகத்தால் கோரப்பட்ட விரிவான அறிக்கை - CPS இலிருந்து OPS ஆக மாற்றக் கோரும் ஊழியர்களின் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியல் - நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் கடிதம் (CPS - Conversion of Employees from Contributory Pension Scheme to Old Pension Scheme - Detailed report sought for by the Office of the Hon'ble Minister for Finance and HRM- List of pending cases of employees seeking conversion from CPS to OPS- Particulars called for-Regarding - Finance Department Additional Chief Secretary Letter No: 6127/ Fin(PGC)Dept/ 2023, Dated.19-02-2023)...



>>> ஊழியர்களை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுதல் - மாண்புமிகு நிதி மற்றும் மனித வளம் மேலாண்மை துறை அமைச்சரின் அலுவலகத்தால் கோரப்பட்ட விரிவான அறிக்கை - CPS இலிருந்து OPS ஆக மாற்றக் கோரும் ஊழியர்களின் நிலுவையில் உள்ள வழக்குகளின் பட்டியல் - நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளரின் கடிதம் (CPS - Conversion of Employees from Contributory Pension Scheme to Old Pension Scheme - Detailed report sought for by the Office of the Hon'ble Minister for Finance and HRM- List of pending cases of employees seeking conversion from CPS to OPS- Particulars called for-Regarding - Finance Department Additional Chief Secretary Letter No: 6127/ Fin(PGC)Dept/ 2023, Dated.19-02-2023)...



>>> Public Works Department Joint Secretary Letter...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


 










தமிழ்நாடு அரசு பணியில் 2003ஆம் ஆண்டு ஆணை பெற்று 2004இல் சேர்ந்தவர்கள் - பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெறவே சுற்றறிக்கை - பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Tamil Nadu State PTA - Question Bank Outlets for 10th and 12th standard - District Wise Release

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் - 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வினா வங்கி விற்பனை  இடங்கள் - மாவட்ட வாரியாக வெளியீடு - செய்தி வ...