கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>> 2020-2021 மாணவர் சேர்க்கை அறிக்கை படிவம்...

 

>>> Click here to Download 2020-2021 Students Admission Report in PDF Format....

>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலிக் காட்சி (VIDEO CONFERENCE) ஆய்வுக் கூட்டம் 01-10-2020-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு 09-10-2020 தேதி பிற்பகல் 2மணிக்கு நடைபெறுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....

 


>>> தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது....

 





>>> பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பவும், சரியான வங்கிக் கணக்கு எண் விவரங்கள் குறிப்பிடவும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் கடிதம்... (இணைப்பு: அனைத்து வங்கிகளின் வங்கிக் கணக்கு எண் இலக்கங்கள்...)

 >>> Click here to Download DSE Proceedings and Annexure

>>> அசத்தும் அரசுப் பள்ளிகள் - மாணவர் சேர்க்கை குறித்து நக்கீரன் இதழ் செய்தி...


நன்றி : நக்கீரன் 2020 செப் 23-25

 

>>> பதவி உயர்வு கலந்தாய்வு - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு... ஆதிதிராவிடர் நலத்துறை...

 


>>> அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களுக்கான சேர்க்கையை 30-ம் தேதி வரை நீட்டித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது...

 தமிழ்நாடு முழுவதும் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 87,000 இடங்களில் சுமார் 72,000 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கையை தொடர்ச்சியாக கல்லூரிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.வரும் 30-ம் தேதி வரை புதிய மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) இளங்கலை (UG ) படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இளங்கலை(UG) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை செப். 30-ம் தேதியுடன் முடித்து விட்டு, அக்டோபர் முதல் முதுகலை ( PG ) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...