.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 தனது பள்ளி கணித ஆசிரியருக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள பங்குகளை பரிசளித்த ஐடிஎப்சி வங்கி தலைவர்...
ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான வி.வைத்தியநாதன் ஒரு லட்சம் பங்குகளை தனது பள்ளி கணித ஆசிரியருக்கு பரிசாக அளித்துள்ளார். இவற்றின் மதிப்பு ரூ.30 லட்சமாகும்.
பள்ளி நாட்களில் கணித ஆசிரியரான குர்தயாள் சரூப் சைனி அளித்த உதவிக்கு பிரதி உபகாரமாக இந்த பங்குகளை பரிசளிப்பதாக பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
நிறுவன சட்டத்தின்படி, இந்தப் பங்குகளைப் பரிசாக பெறுபவர் அதற்குரிய வருமான வரியை சட்டத்தின்படி செலுத்துவார் என்று வைத்தியநாதன் செபி-க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு ரயிலில் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது என்று தனது நண்பரிடம் குறிப்பிடுகிறார் வைத்தியநாதன்.
உயர் படிப்புக்கு ஜார்க்கண்ட் மாநிலம் மெஸ்ராவில் அமைந்துள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் அனுமதி கிடைத்த போது தனக்கு ரயில் டிக்கெட் வாங்க கணித ஆசிரியரான குர்தயாள் சரூப் சைனி ரூ.500 அளித்து உதவியுள்ளார்.
இங்கு படித்ததுதான் தனது வாழ்க்கையை மாற்றியதாகக் குறிப்பிடும் வைத்தியநாதன், பல ஆண்டுகளாக தனது ஆசிரியரை தேடி அலைந்துள்ளார்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் இவரது முந்தைய நிறுவன பணியாளர் ஆக்ராவில் ஆசிரியரைக் கண்டுபிடித்து இவரிடம் தெரிவித்துள்ளார். அவரை சந்தித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார் வைத்தியநாதன்.
கடந்த திங்கட்கிழமை பங்குகளை ஆசிரியருக்கு பரிசாக பரிமாற்றம் செய்துள்ளார்.
கேபிடல் பர்ஸ்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கியவர் வைத்தியநாதன். தனது வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு வைத்தியநாதன் நிறுவன பங்குகளை பரிசளிப்பது இது முதல் முறையல்ல.
இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத் தலைவராக இருந்த போது 4.30 லட்சம் பங்குகளை (மதிப்பு ரூ.20 கோடி) தனது 2 டிரைவர்கள், 3 பணியாளர்கள் மற்றும் சில நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு பரிசாக அளித்துள்ளார்.
🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 2.10.2020(வெள்ளிக்கிழமை)...
🌹நாம் சென்ற இடத்தில் நமக்கு மரியாதை தரவில்லை என்பது தவறு.
ஏனெனில் மரியாதை கிடைக்காத இடத்திற்கு நாம் சென்று இருக்கிறோம் என்பதே சரி.!
🌹🌹மறக்காத முடியாத
சில நாட்களும் உண்டு.
மறந்து விடாதா என சில
நாட்களும் உண்டு.!!
🌹🌹🌹தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்,
வார்த்தையும்,வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹👉இன்று தேசப்பிதா
காந்திஜி பிறந்ததினம்.
🌹👉இன்று பெருந்தலைவர் காமராஜர் நினைவுதினம்.
🌹👉இன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்ததினம்.
🍒🍒அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
👉அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.டி.ஐ.-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🍒🍒ஆசிரியர்கள் NISTHA Online Course -ல் எவ்வாறு இணைய வேண்டும் ? பயிற்சிக்கான வழிமுறைகள் வெளியீடு.
🍒🍒தமிழக நூலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
🍒🍒வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21,22,28,29 டிசம்பர் 5,6,12,13 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு
🍒🍒2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
🍒🍒பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியது. முதலில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கிறது.
🍒🍒10, 11, 12-ஆம் வகுப்பு வரை முதற்கட்டமாக பள்ளிகளை திறக்கலாம் என மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
🍒🍒தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது.
🍒🍒புதுச்சேரியில் அக். 5-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தனியார் பள்ளிகளில் பெற்றோர்களின் அனுமதிக் கடிதம் இல்லாமல் மாணவர்களை அனுமதித்தால் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.
🍒🍒பத்து மாத ஊதியம், ஓய்வூதியம் தராததால் அரசு ஆணை பிறப்பிக்கும் வரை கல்வித்துறை வளாகத்திலேயே தங்கியிருக்கும் போராட்டத்தை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் புதுச்சேரியில் நடத்தி வருகின்றனர்.
🍒🍒தீயணைப்பாளர் பதிவுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பும் வகையில் மொத்த காலிப் பணியிடங்களில் கூடுதலாக 835 புதிய பணியிடங்கள் அனுமதித்து உத்தரவு.
🍒🍒கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப்-1 தேர்வு, அடுத்தாண்டு 2021 ஜனவரி 3ஆம் தேதி தேர்வு நடைபெறும்.- டிஎன்பிஎஸ்சி
🍒🍒ஓர் அகில இந்தியத் தலைவரை பிடித்துத் தள்ளியது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
👉ராகுல்காந்தி கைது சம்பவத்துக்கு உ.பி. முதலமைச்சர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்
உ.பி.யில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உள்ளதையே காட்டுகிறது
ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண சமானியர்களின் நிலைமை என்ன?
மு.க.ஸ்டாலின்
🍒🍒திமுக கொள்கை பரப்பு செயலாளராக. 👉சபாபதி மோகன், 👉திண்டுக்கல் லியோனி நியமனம்
👉தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்;
👉தேனி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் நியமனம்
-திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்
🍒🍒குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 19-ந்தேதி நேர்காணல்
👉கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19-ந்தேதி நேர்காணல் நடக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே 11ல் நடந்த தமிழ்நாடு கைத்தறி-ஜவுளிகள் சார்நிலைப்பணி, முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 16-ந்தேதியும், கடந்த ஆண்டு ஜூலை 27 முதல் 29-ந்தேதி வரை நடந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகிற 19-ந் தேதியும் நேர்காணல் தேர்வு நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு நடந்த தேர்வுகளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப் பட்டவர்கள் வருகிற 7 முதல் 14-ந்தேதி வரை தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக பதிவேற்றம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
🍒🍒கொரோனா தொற்று காரணமாக இதுவரை 58 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
🍒🍒கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடலில், 90 நாட்கள் வரை நோய்க்கிருமி இருக்கும் என தெரியவந்துள்ளது. அவர்கள் மூலமாகவே நோய்த்தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
🍒🍒மாலத்தீவின் கடினமான பொருளாதார நிலைமையை சமாளிக்க, அந்நாட்டுக்கு இந்தியா ரூ.1,841 கோடி (250 மில்லியன் டாலர்) நிதியுதவி அளித்துள்ளது. இதற்காக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா சாஹித் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
🍒🍒ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகை, தென்காசி, தேனி, நீலகிரி, கரூர், திருப்பூர், வேலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல், திருவாரூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கோவை, சிவகங்கை, கடலூர், திண்டுக்கல் ஆகிய 32 மாவட்டங்களில் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. அதேநேரத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், விருதுநகர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அக்.16ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
🍒🍒நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் நேற்று முதல் அமல்
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள
ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரகளில் மட்டுமே
உபயோகிக்க முடியும்.
வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியில் அனுமதி பெற வேண்டும்.
பணம்பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதிய சேவைகளை தேர்வு செய்வது, அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றிற்கும்
வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
🍒🍒சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான தடையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை 1 வாரத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு.
🍒🍒'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தின்படி, பிறமாநில தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.3 க்கும், கோதுமை ரூ.2 க்கும் விநியோகிக்க உத்தரவு
பொருட்கள் போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நியாயவிலைக்கடைகளுக்கு அரசு சுற்றறிக்கை
🍒🍒தமிழ் திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29ம் தேதி வரை நீட்டிப்பு
🍒🍒தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் உள்ள 1.16 லட்சம் இடங்கள்.
86,326 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், குலுக்கல் முறையில் நேற்று இடங்கள் ஒதுக்கீடு.
வரும் 3 முதல் 7 வரையிலான நாட்களில் சேர்க்கையை உறுதி செய்து கொள்ள கல்வித்துறை அறிவுறுத்தல்.
🍒🍒தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு
🍒🍒கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அக்.3 முதல் அமலுக்கு வருகிறது.பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக் கூடாது.
🍒🍒ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது உ.பி. போலீஸ்
கீழ்ப்படியாமை, தொற்றுநோயை பரப்புதல், அலட்சியம், மற்றும் தொற்று நோய்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் உ.பி. போலீசார் நடவடிக்கை
🍒🍒ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
உடல் நலம் இயலாமை காரணமாக அரசு பணியிலிருந்து மருத்துவ சான்றின் அடிப்படையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்... [அரசாணை (நிலை) எண்:10 , நாள் : 13.02.2009] (G.O.Ms.No:10, Dated:13-02-2009 - Grant of appointment on compassionate basis to successors of Government servants who retire from Government service on medical grounds due to physical disability)...
இன்று ஒரு அரசாணை...
(கல்வி அஞ்சல் Exclusive...)
💥மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலான பணி நியமன சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
💥மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50-லிருந்து 53 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
💥இந்நிலையில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடையாணையானது அரசாணை(நிலை) எண்:6, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை , நாள்:21.02.2006ல் விலக்கி கொள்ளப்பட்டு, அரசாணை(நிலை) எண்:61, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை, நாள்:19.06.2006ல் இது குறித்து வழிமுறைகள் தனியாக வெளியிடப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது .
💥உச்சநீதிமன்றத்தீர்ப்பு மற்றும் பணியாளர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி , அரசாணை(நிலை) எண்:42 , தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை , நாள்:12.03.2007 - ல் கருணை அடிப்படையிலான பணிநியமனம் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
>>> Click here to Download G.O.Ms.No:10, Dated:13-02-2009...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...