கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 வட்டாரக் கல்வி அலுவலரின் (முன்பு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்) பணிகள், பொறுப்புகள், கடமைகள்... தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 19601/ஐ4/2010, நாள்: 28.06.2010

 தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6

ந.க.எண். 19601 /ஐ4/2010 நாள் 28.06.2010

பொருள் - தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கவேண்டிய அறிவுரைகள் - சம்பந்தமாக

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் அரசு நகராட்சி மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியத்தை மாதந்தோறும் பெற்று வழங்கக்கூடிய அலுவலர் ஆவார். பஞ்சாயத்து யூனியன் / அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நியமன அலுவலர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆவார். உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிப்பது, ஆசிரியர் பணி நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் ஆசிரியர் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற அதிகாரங்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களைச் சார்ந்ததாகும். அதேபோல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் கீழ்கண்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன..


🍁🍁🍁 தண்டனையாக ஊதிய உயர்வைத் தள்ளிப் போடுதல் குறித்த விதிகள் மற்றும் நடைமுறைகள்...


💥ஊதிய உயர்வை தண்டனையாக கருதி குறிப்பிட்ட காலத்திற்கு தள்ளிப்போடலாம். 

இதில்

👉Without Cumulative effect

and

👉With Cumulative effect  

 என இரு வகைகள் உள்ளன.

💥 Without cumulative effect-ல் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டு தண்டனைக்காலம் முடிவுற்றதும் நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வு வழங்கப்படும்.

💥 With Cumulative effect-ல் தண்டனையாக நிறுத்தப்பட்ட ஊதிய உயர்வின் இழப்பு பணிக்காலம் முழுவதும் இருக்கும். தண்டனையாக நிறுத்தப்பட்டது மீண்டும் கிடைக்காது.

💥இதுவன்றி ஊதிய உயர்வு தள்ளிப் போகும் காலத்தில் விடுப்பு அனுபவித்தால், அதற்கு இணையான காலத்திற்கு ஊதிய உயர்வு தள்ளிப் போகும்.

💥ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையிலிருப்பினும், ஊதிய உயர்வு வழங்கலாம். (Rule.6 under FR)

💥 ஆணை வழங்குதலை எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்கக் கூடாது. 

💥ஆண்டு ஊதிய உயர்வு தள்ளிப் போகும் ஆணை வழங்கப்பட்டால், ஆணைக்குப் பின்னர் எதிர்வருகின்ற முதல் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். 

💥ஆணை வழங்கப்பட இருக்கின்றது என எதிர்பார்த்து ஊதிய உயர்வே தராமல் இருக்க முடியாது. (அடிப்படை விதி 24)

🍁🍁🍁 அரசு உதவி பெறும் பள்ளி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க கோரிய வழக்கு - பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு...

 


🍁🍁🍁 மாற்றுத்திறனாளி சேவர்கள் விருது - அக்டோபர் 20 க்குள் விண்ணப்பிக்கலாம்...

 


🍁🍁🍁 கரோனா - கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு...

 


🍁🍁🍁 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி - விண்ணப்பிக்க அக்டோபர் 9 கடைசி நாள்...

 


🍁🍁🍁 வன உயிரின வார விழா போட்டிகள் - இணையவழியில் பங்கேற்கலாம்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...