கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஈட்டிய விடுப்பு சரண் செய்வதை நிறுத்தி வைத்த அரசாணை 48ஐ ரத்து செய்வது மற்றும் அரசாணைகள் 232, 231 &51 குறித்து - CM Cell reply (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை கூடுதல் செயலாளரின் கடிதம்)...

 


🍁🍁🍁 ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பிலிருந்தால் ஊதிய உயர்வு வழங்குவது குறித்த நடைமுறை மற்றும் அரசாணை...

 ஊதிய உயர்வு திரள்கின்ற நாளன்று விடுப்பில் இருந்தால் (LLP Without M.C. தவிர) ஊதிய உயர்வின் நிதிப்பயன் விடுப்பு முடிந்து பணியேற்ற உடன் வழக்கமான ஊதிய நாள் முதல் கிடைக்கும். நிதிப்பயன் தள்ளிப் போகாது. விடுப்பு என்பது எல்லா விடுப்பும் சேரும், LLP Without MC-ல் இருந்தால் விடுப்பு முடிந்து சேர்ந்த பிறகுதான் அனுமதிக்க முடியும். (Govt Letter No.48747/FRDOI/93-9, dated 30.5.1994),  (G.O.Ms.No 90 P&AR, Dated 28.3.95)

🍁🍁🍁 திருச்சி, புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் அரசு உதவிபெறும் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் சுயநிதி பிரிவில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 12-10-2020...

 


🍁🍁🍁 அக்.15 முதல் பள்ளிகள் திறக்கலாம்; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்...

 கரோனா காரணமாகக் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் மூடப்பட்ட பள்ளிகளைத் திறப்பது குறித்த முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வைக் கடந்த செப்.30-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதில் அக்.15 முதல் பள்ளிகள், பயிற்சி மையங்களைத் திறப்பது குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்தியப் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை வெளியிட்டுள்ளது. இதை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவர்கள் வரமுடியும்.

* மாணவர் வருகைப் பதிவேட்டில் நெகிழ்வுத் தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* பாடம் கற்க ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

* பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், கழிப்பறைகள், பிற அறைகள், வளாகம் மற்றும் உபகரணங்களை முறையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

* எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

* என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.

* அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உள்ளிட்ட செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.

* வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டு வருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.

* அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

* பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.

* பள்ளியில் கரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








🍁🍁🍁 NEET- தேசிய தேர்வு முகமையின் விடைகளை முறையீடு செய்ய வாய்ப்பு... CHALLENGE AND VERIFICATION OF SCANNED IMAGES OF OMR ANSWER SHEET & RECORDED RESPONSES...

 




🍁🍁🍁 2020ஆம் ஆண்டு - மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு...

 


ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு.

ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.

🍁🍁🍁 இரண்டு மாதம் தள்ளிப்போகிறதா? 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்..?

 10ம் வகுப்பு மற்றும் 12  ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 2 மாதங்கள் தள்ளிவைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனாத் தொற்றால் 2019 – 20ஆம் கல்வி ஆண்டு பிற்பகுதியில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் பள்ளிகள், கல்லுாரிகளை திறந்து வகுப்புகளை நடத்த முடியாத சூழலால் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான வகுப்புகள் தாமதமாகி வருகின்றன.. மேலும் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை எல்லாம் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.  இந்நிலையில் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த முடியாத நிலையுள்ளது. மேலும் உயர்நிலை படிப்புகளான இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை போன்ற அனைத்து துறைகளுக்கும் +2 பாடங்களே அடிப்படையாக இருந்து வருகிறது என்பதால் அந்த பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவும் மாணவர்களுக்கு பல்வேறு திருப்புதல் தேர்வுகள் நடத்தவும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் இதன் காரணமாக 10 மற்றும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை மார்ச் மாதத்திற்கு பதில் மே மாத கடைசி அல்லது ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கலாமா?? என்று பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்து நிபுணர் குழு அமைத்து விரிவாக ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்கு “நீட், ஜே.இ.இ., நாட்டா, கியூசெட்” என்று பல நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளை மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. நேரடியாக நடத்துகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு நுழைவு தேர்வுகளை எப்போது நடத்துவது என என்.டி.ஏ. இன்னும் முடிவு செய்யாத நிலையில் நுழைவு தேர்வுகளின் தேதிகள் தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிளஸ் 2 தேர்வுகளையும் தள்ளி வைக்க முடியும். இது குறித்து தமிழக கல்வி அதிகாரிகள் என்.டி.ஏ.விடம் ஆலோசனை பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...