கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 10 ஆம் வகுப்பில் தோல்வி - ஆனால் 21 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியர் - கிருஷ்ணகிரியில் பரபரப்பு...

கிருஷ்ணகிரி: பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர், போலி சான்றிதழ் கொடுத்து, 21 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தது குறித்து, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52. இவர், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சிஅடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றளித்து, 1999ல் ஆசிரியர் பணி பெற்றார்.

தற்போது, காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டல்லிபுதுார் அரசு துவக்கப் பள்ளியில் பணியில் உள்ளார். இவர், போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019ல் குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார். இதன்படி, கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., முருகன் மற்றும் காவேரிப்பட்டணம், வட்டார கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதில், ராஜேந்திரன், 10ம் வகுப்பே தேர்ச்சி பெறவில்லை என தெரிந்தது.மேலும், பணம் கொடுத்து போலியாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி சான்றிதழ்களை பெற்று, பணியில் சேர்ந்து, 21 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்ததும் தெரிந்தது. இது குறித்து, டி.இ.ஓ., கலாவதி, எஸ்.பி., பண்டிகங்காதரிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

🍁🍁🍁 BE முடித்த மாணவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அரசால் வழங்கப்பட்டு அதற்க்கான apprentice certificate வழங்கப்படும்...

 


🍁🍁🍁 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் திட்ட உதவியாளர்(கணினி), திட்ட உதவியாளர்(தொழில் நுட்பம்), பண்ணை மேலாளர்/ இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்/ ஓட்டுநர் தேவை.. விண்ணப்பிக்க கடைசி நாள் - 09.11.20

 


🍁🍁🍁 பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தகுதிகளை அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடு... நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கடிதம்...

28-10-2020 வரை பதிவு செய்யும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 14.10.2020 பதிவு முன்னுரிமை தேதியாக நிர்ணயம்...



>>> Click here to Download Namakkal Dist Employment Officer Letter...


🍁🍁🍁 மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - அமைச்சர் செங்கோட்டையன்...

 


🍁🍁🍁 மீண்டும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை...

 


🍁🍁🍁 பழைய பென்ஷன் அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEO Promotion to 34 Govt High/ Hr.Sec School HMs - DSE Proceedings

    34 அரசு உயர்நிலை / மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக்கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...