கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Smart Class லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Smart Class லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்

 

Hi Tech Lab, Smart Classrooms பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுறுத்தல்


 உயர் தொழில்நுட்ப ஆய்வகம், திறன் வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு


 Respected DEOs,


Kindly disseminate the following instructions to schools immediately.


தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 


 Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,


தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 


Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.


 கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 


வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும். 


 தொழில்நுட்ப குறைபாடுகள் ( server computer not working, smart board not working, UPS Problem, meraki problem) இருப்பின் 044 - 40116100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 


Network problem இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும். 


Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட  EB ( மின்சாரத்துறை) 


அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.


 விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.


Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.


Internet facility in Government Schools - Payment of bill through Local Bodies - G.O. (Ms) No.: 55, Date: 10-03-2025

 

அரசுப் பள்ளிகளில் இணைய வசதி ஏற்படுத்துதல் - உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டணம் செலுத்த அரசாணை (நிலை) எண்: 55, நாள் : 10-03-2025 வெளியீடு


Provision of Internet facility in Government Schools - Payment of bill through Local Government Bodies Government Order G.O. (Ms) No.: 55, Date: 10-03-2025 Released


பள்ளிக்கல்வி - தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்கங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளில் இணைய வழி சேவை ஏற்படுத்துதல் - கட்டணங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செலுத்துதல் அரசாணை வெளியிடப்படுகிறது.


 அரசு பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணத்தை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு - 37,553 அரசு பள்ளிகளுக்கான இணைய சேவை கட்டணங்களை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே செலுத்த வேண்டும்.



>>> அரசாணை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Smart Class Installation Guidelines for BRTEs


 Smart Class திறன்மிகு வகுப்பறை சார்ந்து  ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அறிவுறுத்தல்கள்


Smart Class Installation Guidelines for BRTEs


*அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு ...* 


 *SMART BOARD (திறன்மிகு வகுப்பறை).* 


மாநில திட்ட அலுவலகத்தில் இருந்து இன்று (20.12.24)  KELTRON மூலம் வழங்கப்பட்ட SMART BOARD முழுமையாக செயல்பாட்டில் உள்ள பள்ளிகளை காலை 9.30 மணி முதல்   12.30 மணி வரை LIVE ல்  இருப்பதை ஆய்வு செய்ய உள்ளனர். 


 *மதிப்புமிகு மாநில திட்ட இயக்குனர் அவர்கள்* CCC மூலம் ஆய்வு செய்ய இருப்பதால் Smart Board installation முழுமையாக பணிகள் முடிவடைந்த பள்ளிகளை

இன்று (20.12.24) அனைத்து ஆசிரிய பயிற்றுநர்கள் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்து மேலும் நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்ய வேண்டும்.


பள்ளி ஆய்வின் போது *Smartboard* , *Internet* மற்றும் *Personal computer* இவை மூன்றும் *Connected* மற்றும் *working condition* ல் உள்ளது என்பதை உறுதி செய்ய அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 


உதவி திட்ட அலுவலர், மதுரை மாவட்டம்.💐


அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்துதல் - தொடக்கப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்துதல் - தொடக்கப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...



Smart Classroom - PRIMARY SCHOOL...

   அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் கவனத்திற்கு...

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி EMISல்  Smart Class Room Site Preparation  பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.


1. Smart Classroom - க்கான வகுப்பறையை அடையாளம் காணும் போது, தேர்வுக்கு கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


2. HM/ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக அணுகும் வகையில் Smart Classroom  வகுப்பறையை கண்டறிவதில் கவனமாக திட்டமிட வேண்டும்.


3. அறையானது குப்பைகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.


4. அறையில் நீர் கசிவு மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் சரியான சுவர்கள் இருக்க வேண்டும்.

                            - முதன்மை கல்வி அலுவலர்...



தொடக்கப்பள்ளிகளுக்கும் திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) திட்டம்...

 


இணையவழியில் கற்பிப்பதற்கான தேவையை கருத்தில் கொண்டு, தொடக்கப்பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை விரிவுப் படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள், போதுமான தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் கொண்டிருப்பதால், அரையாண்டு தேர்வு நடத்த ஆயத்தமாகி விட்டன. அரசுப்பள்ளிகளில் ஹைடெக் லேப், ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருந்தும், இணையவழியில் கற்பிப்பதில், தன்னிறைவு ஏற்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.பொதுத்தேர்வு அல்லாத பிற வகுப்புகளுக்கு, முதல்பருவ பாடத்திட்டம் கூட முழுமையாக கையாள முடியாத நிலை நீடிக்கிறது.

மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லை என்பதால் தொடக்க, நடுநிலை வகுப்பு மாணவர்களை, மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதோடு, பாடத்திட்டங்களை புரிய வைப்பதில் பெரும் சவால் காத்திருக்கிறது. இத்தேக்க நிலையை மாற்ற, தொடக்க வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இயக்குனர், இணை இயக்குனர், சி.இ,ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், மாவட்ட வாரியாக தொடக்க வகுப்புகளில் உள்ள, தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.

பள்ளிகள் திறந்ததும், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, தேவையான வசதிகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கோவை மாவட்டத்தில், வட்டார வாரியாக, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்து, தகவல் திரட்டும் பணிகள் நடக்கின்றன

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...