உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 271, நாள் : 04-02-2025
A committee consisting of officials to make recommendations to the government regarding the appropriate pension scheme - Tamil Nadu Government Press Release No: 271, Dated: 04-02-2025
மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது
DIPR-P.R No.-271- TN Govt Press Release - Pension Scheme, Date - 04.02.2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.
ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு தொடா்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.
மாநில அரசுப் பணியாளா்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்த தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனிடையே மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
குழு அமைப்பு: இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.