கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு - 18.10.2020 (ஞாயிற்றுக்கிழமை)...

🎀🎀மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் வரும் நவம்பர் மாதம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்ப்பு !

பிரான்ஸில் இருந்து கொண்டு வர மத்திய அரசு விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளது.

🎀🎀5 ஆண்டு கால ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு,

ஆன்லைனில் நடைபெறும் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு. 

வரும் 19-ம் தேதி கலந்தாய்வை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தொடக்கி வைக்கிறார்.

🎀🎀நியூசிலாந்து தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் வரலாற்று வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகிறார் ஜெசிந்தா

🎀🎀ஐபிஎல் 2020: டி20 போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.        

🎀🎀தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் 57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி - அரசுப்

பள்ளி மாணவர்களில் பெரியகுளம் ஜீவித்குமார் முதலிடம்.

🎀🎀அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டம் குறித்து

ஆளுநர் முடிவெடுக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு இல்லை - உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு திட்டவட்டம்.

🎀🎀தேசிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க இம்மாத இறுதி வரை அவகாசம் - பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றது பல்கலைக்கழக மானியக்குழு.

🎀🎀கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர், லோபினாவிர், ரிட்டோனாவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகள் பலன் தரவில்லை - உலக சுகாதார அமைப்பின் கீழ் இணைந்து நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல்.

🎀🎀இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 1990ல் 59.6 ஆக இருந்த நிலையில், தற்போது 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆயுட்காலம் அதிகரித்தாலும் கூட, ஆரோக்கியமான வாழ்க்கை அமையாமல் பலரும் கடைசி கட்டங்களை நோயுடனும், அவதியுடனுமே கழிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. 

🎀🎀சபரிமலை அய்யப்பன் கோவிலில் மலையேறும்போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால் முகக்கவசம் கட்டாயமில்லை- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்.

🎀🎀வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.                                                                                              

🎀🎀பாகிஸ்தான் நாட்டின் எதிர்கட்சிகள் அந்நாட்டு அரசிற்கும் ராணுவத்திற்கும் எதிராக பெரிய அளவில் போராட்டம்.

🎀🎀🎀இலங்கையில் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது                           

🎀🎀பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

🎀🎀தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை 30-10-2020 அன்று கொண்டாடப்படும் - தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு.

🎀🎀அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - பவானி சாகர் - கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றி பயிற்சி அளித்தல்.. 27-10-2020 முதல் 14-12-2020 வரை 41நாட்கள் பயிற்சிக்கான கால அட்டவணை & அறிவுரைகள்வெளியீடு.

🎀🎀அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன்...

🎀🎀பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பு - தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்.

🎀🎀 சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிகலாம்

🎀🎀 மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் 25 வரை நீட்டிப்பு - இக்னோ(IGNOU) அறிவிப்பு.

🎀🎀அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா, விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது.

🎀🎀நீட் தேர்வு என்பது ஒரு நவீன மனு தர்மம் என்பது மக்களுக்கு புரிந்து வருகிறது

கிராமப்புற மாணவர்களுக்கான வாய்ப்பு கதவை மூடுவதற்கு திட்டமிட்டு ஏற்பாடு

திக தலைவர் கி.வீரமணி

🎀🎀*தேர்தலின் போது வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் வழிகாட்டுதல் குழுவிற்கு இல்லை என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

கடந்த 7ம் தேதி 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டுதல் குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்திருoந்தார்.

🎀🎀நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில் 1,615 மாணவர்கள் தேர்ச்சி

4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்                                                                     

🎀🎀"தியாகிகள் ஓய்வூதியம் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக வெட்கப்பட வேண்டும்"*

அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

தனது இறுதி மூச்சுக்கு முன் சுதந்திரப் போராட்ட வீரர் என அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்

தியாகிகள் ஓய்வூதியம் வழங்க கோரி சுதந்திர போராட்ட தியாகி தாக்கல் செய்த மனுவுக்கு  பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு  சென்னை   

உயர்நீதிமன்றம் உத்தரவு

🎀🎀மாணவர்கள் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக எண்ணி சடுகுடு விளையாடுகிறது தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பின்னணியில் யார் உள்ளனர்? அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும். மு.க.ஸ்டாலின்

👉NEET தேர்ச்சி பெற்ற 1,615 பேரில் எத்தனை மாணவர்கள் மருத்துவக்கல்வி பயில்வார்கள் என தெரியவில்லை கே.எஸ்.அழகிரி.                                                                                   

🎀🎀அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.*

 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மானவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவானது சட்டமன்றத்தில் அனைத்து அமைச்சர்களின் ஒப்புதலையும் பெற்று தற்போது தமிழக ஆளுநரிடம் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத வரை, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் கால தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. 

 இதற்கிடையில் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை என்று தெரிவித்தார். அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டமன்றத்தில் இந்த இட ஒதுக்கீடு பரிந்துரையை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார். 

 தற்போது இந்த மசோதா ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதால், இது குறித்து எந்த குழப்பமும் அடையத் தேவையில்லை என்றும், விரைவில் ஆளுநர் நல்ல முடிவை தெரிவிப்பார் என்றும் அவர் கூறினார்.                                                  

🎀🎀அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.*

கொரோனா பேரிடரால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில் தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்புகிறது. இந்த நிலையில், அரையாண்டு சொத்துவரி செலுத்துவோருக்கு கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

🎀🎀பல்வேறு குளறுபடி இருந்ததால் மீண்டும் வெளியிடப்பட்டது நீட் தேர்வு முடிவுகள்

🎀🎀நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதியவர்க்ள் 6,692. 

🎀🎀கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி - நாளிதழ் செய்தி

🎀🎀நீட் தேர்வில் தான் பயன்படுத்திய ஓஎம்ஆர் சீட் மாற்றப்பட்டுள்ளதாக அரியலூர் மாணவி குற்றம் சாடியுள்ளார். தேர்வில் 680 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்த நிலையில் 37 மதிப்பெண் மட்டுமே கிடைத்ததால் மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

🎀🎀மத்தியப் பல்கலைக்கழகங்களில், புதிய மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வின் முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

🎀🎀9,000 தனியார் பள்ளி மாணவர்கள் சென்னை  மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தனர் - நாளிதழ் செய்தி        

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 RTE - 2013-14 முதல் 2017-18ஆம் ஆண்டு வரை தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அக்குழந்தைகளின் எண்ணிக்கை குறைவதன் காரணம் குறித்தும் பதிலளிக்க இயக்குனர் கடிதம்...

 



🍁🍁🍁 தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் கணிதம் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன் தொடர்பான இயக்குநரின் செயல்முறை ஆணைகள்...

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன் முறை செய்ய வேண்டிய அவசியமில்லை - இயக்குநரின் செயல்முறைகள்...

>>> Click here to Download Regularisation Order DEE - English& Maths BTs

🍁🍁🍁 ஜீவித்குமார் - வாய்ப்பும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதற்கு உதாரணம்...

 உரிய  பயிற்சி அளிக்க உதவுகிறேன்; என்ன உறுதி தருவாய்? ஆசிரியை சபரிமாலா உதவியால் நீட் தேர்வில் சாதித்த ஜீவித்குமார்...

உரிய பாடத்திட்டத்தைக் கொடுத்தால் எங்கள் பிள்ளைகள் சாதிப்பார்கள் என சபதமேற்று அரசுப் பள்ளி மாணவரைத் தேர்வு செய்து அவருக்கு ஓராண்டு பயிற்சி அளித்து அவரை இந்திய அளவில் முதல் மாணவனாக வர உதவி செய்துள்ளார் ஆசிரியை சபரிமாலா. இனி நீட் தேர்வால் ஒரு குழந்தையும் உயிரிழக்கக்கூடாது என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

அனிதா மரணத்தில் உறுதியேற்ற ஆசிரியை சபரிமாலா கால்நடை மேய்க்கும் தொழிலாளியின் மகனான அரசுப் பள்ளி மாணவர் ஒருவரைத் தேர்வு செய்து பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். இதில் பயிற்சி பெற்ற மாணவர் அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வு முறை மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் மாநிலக் கல்வி முறையில் பயின்ற மாணவர்கள் பெரிய அளவில் தோல்வி அடைந்தனர். மாநிலத்தில் பெரிய அளவில் மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றிபெற முடியாத சோர்வில் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் பெரிய அளவில் சோகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியது.

மாநிலக் கல்வி வழியில் பயின்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உரிய கல்வி வாய்ப்பு வழங்காமல், நீட் தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிட வைப்பதால் சரிசமமான போட்டியில்லாத நிலை ஏற்படுவதால் தகுதியிருந்தும் மாணவர்கள் தேர்ச்சியடையாத நிலை உள்ளது என்பது பெரும்பான்மையான குற்றச்சாட்டு.

வடமாநில மாணவர்களைவிட அறிவு அதிகம் பெற்ற தமிழக மாணவர்களுக்கு உரிய வாய்ப்பைத் தாருங்கள் அப்புறம் பாருங்கள் என ஒரு சாரரும், இந்தியாவிலேயே சிறந்த முறையிலான மருத்துவத் தேர்வை நாம் அமல்படுத்தும்போது நீட் தேர்வு எதற்கு எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அரசும் பாடத்திட்டத்தில் மாற்றம், பயிற்சி மையம் என ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால், அது எல்லோருக்கும் போய்ச் சேரவில்லை என்று கூறப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் சாதிப்பார்கள் என்பதற்கு ஜீவித் குமார் சாதனை ஓர் உதாரணம். இது சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. அனிதாவின் மரணத்தால் எழுந்த ஆசிரியை சபரிமாலாவின் வைராக்கியமும், ஜீவித் குமாரின் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

சோதனையை எதிர்கொண்டு சாதிப்பது மிகச் சிறந்தது என்பதை இந்த உதாரணம் காட்டுகிறது. அதே நேரம் எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதும் இதன் பின்னுள்ள சோகம் ஆகும்.

அனிதாவின் மரணத்திற்குப் பின் நீட் தேர்வைக் கண்டித்து ஆசிரியப் பணியைத் துறந்த சபரிமாலா அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிப்பார்கள். அவர்களுக்குச் சம வாய்ப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பினார். இதற்காக தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வு பயிற்சி இல்லாததால் தோல்வி அடைந்த மாணவர் ஜீவித் குமாரைத் தேர்ந்தெடுத்தார்.

ஜீவித் குமார் அரசுப் பள்ளி மாணவர், அவரை அணுகிய சபரிமாலா, ''ஓராண்டு உன்னைப் படிக்கவைக்கத் தயார். நீ என்ன உறுதி தருவாய்?'' எனக் கேட்டார். ''நான் நிச்சயம் 650 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன்'' என்று ஜீவித் குமார் உறுதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் 664 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்து ஜீவித் குமார் சாதனை படைத்தார். இவரது தந்தை கால்நடை மேய்க்கும் தொழிலாளி. இதுகுறித்து மாணவர் ஜீவித் குமாருடன் சேர்ந்து ஆசிரியை சபரிமாலா காணொலி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல், உரிய பாடத்தைக் கொடுத்தால் தமிழகத்தின் கடைக்கோடி மாணவனும் சாதிப்பான் என்பதே.

காணொலியில் சபரிமாலா பேசியுள்ளதாவது:

இப்போது நம்முடன் இருக்கும் சாதனையாளர் ஜீவித் குமார். நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களால் சாதிக்க முடியாது, கடந்த 3 ஆண்டுகளில் ஒரு அரசுப் பள்ளி மாணவர்கூட நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் பயில போக முடியவில்லை என்கிற அவல நிலையில், அன்பு மகள் அனிதாவிற்கு வாக்கு கொடுத்த அடிப்படையில் 3 ஆண்டுகாலமாக களத்தில் நிற்கிறேன். கட்டாயம் இந்த இடத்தில் ஒரு அரசுப் பள்ளிப் பிள்ளையை, கிராமத்துப் பிள்ளையை நான் படிக்க வைப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டுதான் அரசு ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தேன். கடந்த ஆண்டு இதே பள்ளியில், இதே நுழைவாயிலில் இதே இடத்தில் மாணவர் ஜீவித் குமாரிடம் கேட்டேன். ஓராண்டு உன்னைப் படிக்க வைக்க நான் தயார்... நீ என்ன வாக்குறுதி கொடுப்பாய்? என்று கேட்டேன். 650 மதிப்பெண்களுக்கு மேல் வாங்குவேன் என்று வாக்குறுதியை இந்த இடத்தில்தான் ஜீவித் குமார் கொடுத்தார். ஓராண்டு நாமக்கல்லில் தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துப் படிக்க வைத்தோம், அமெரிக்காவில் காட்வின் என்கிற நல்லவர் உதவி செய்தார். அருள் முருகன் என்கிற ஆசிரியர் உதவியால் ஜீவித் குமார் அடையாளம் காணப்பட்டார்.

பாடத்திட்டத்தைக் கொடுத்தால் ஜெயித்துக் காட்டுவேன் என்று சொன்னார் ஜீவித் குமார். இன்று சாதித்துக் காட்டியிருக்கிறார். 664 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் சாதித்துள்ளார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் சாதாரண ஆடுமேய்க்கும் தொழிலாளி குடும்பத்திலிருந்து வந்து ஒரு அரசுப் பள்ளி மாணவர், நீட் தேர்வு மிகப்பெரிய கனவு என்று சொல்லி வைத்துள்ளார்கள் அல்லவா? பல களேபரங்களைச் செய்து வருகிறார்கள் அல்லவா? மிகச் சாதாரணமாக 664 மதிப்பெண்களைப் பெற்று ஜீவித் குமார் இந்திய அளவில் சாதனை செய்துள்ளார் என்றால் என்ன காரணம்?

எங்கள் பிள்ளைகளால், அரசுப் பள்ளி பிள்ளைகளால், கிராமப்புற பிள்ளைகளால் கட்டாயம் முடியும். உரிய பாடத்திட்டங்களைக் கொடுத்துவிட்டு நீங்கள் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் காரணம். பாடத்திட்டங்களைக் கொடுத்துப் பாருங்கள்.

நான் இதே இடத்தில் இருந்து ஜீவித்குமாருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கான மிகப்பெரிய நம்பிக்கையாக வந்துள்ளாய். அனிதாவுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளாய். ஒரு ஆண் அனிதாவாக வந்துள்ளாய். 18 பிள்ளைகள் உயிர் நீத்துள்ளார்கள் நம்பிக்கையில்லாமல்.

ஆனால் ஜீவித் குமாரை உலகத்துக்கு அறிமுகம் செய்கிறேன். இனி ஒரு பிள்ளை கூட உயிரிழக்கக்கூடாது. உங்களைப்போல ஒரு பிள்ளை சாதித்துள்ளான். இனிமேல் எந்தப் பிள்ளையும் நீட் என்கிற பேரில் தற்கொலை செய்யக்கூடாது. பாடத்திட்டங்களைக் கொடுத்தால் சாதிக்க முடியும் என்பதுதான் இங்குள்ள கருத்து. ஆகவே எந்த வகையான பாடத்திட்டங்களைக் கொடுக்கவேண்டும் என்பதை அரசுக்கும் வலியுறுத்த உள்ளோம்.

இதற்கு உதவி புரிந்த ஆசிரியர் அருள்முருகன், தலைமை ஆசிரியர் மோகன், உதவி செய்த நண்பர்கள், ஊடகத்தினருக்கு நன்றி. நிச்சயம் நமது பிள்ளைகள் வெல்வார்கள்”.

இவ்வாறு சபரிமாலா தெரிவித்துள்ளார்.

சம வாய்ப்பு, சம போட்டி என்பதே அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்கள் சரியான பாடத்திட்டம், பயிற்சி மையம் இல்லாமல் தடுமாறும் நிலை காரணமாகவே ஆண்டுதோறும் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. அரசு உரிய பாடதிட்டங்களுடன் அதிக அளவில் பயிற்சி மையங்களை அமைத்து தனியார் பயிற்சி மையங்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

சோதனையை எதிர்கொண்டு சாதிக்கும் மன தைரியம் கொண்ட மாணவர்கள் சாதிக்க உரிய பாடத்திட்டம் மூலம் அவர்களைத் தயார் செய்வதே சரியான ஒன்று என்பது ஜீவித் குமார் விஷயத்தில் வெளிப்பட்டுள்ளது.

>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

🍁🍁🍁 NEET 2020 - "அரசுப்பள்ளி மாணவனின் சாதனை..." "#சொன்னதும் - சொல்லாததும்"

 #சொன்னதும் - சொல்லாததும்:


01) #சொன்னது:

இந்திய அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஒடிஸாவைச் சேர்ந்த ஷோயிப்.

#சொல்லாதது:

இந்த மாணவர் 12 ஆம் வகுப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இராஜஸ்தானில் உள்ள கோட்டாவுக்கு தாயுடன் சென்று அங்கேயே வீடெடுத்து தங்கி  அங்குள்ள ஆலன் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று இந்த சிறப்பினை அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.


02) #சொன்னது: 

தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர் தனியார் பள்ளியில் படித்த Srijan.

#சொல்லாதது: 

இந்த மாணவர் ஓராண்டுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.


03) #சொன்னது: 

அரசுப் பள்ளி மாணவரின் சாதனையைப் பாருங்கள்... 

ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகனான... 

தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவர் ஜீவித்குமார்  720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று மாபெரும் சாதனை. ஏழைகளுக்கு நீட் தேர்வு தான் வரபிரசாதம்...

#சொல்லாதது:

இந்த மாணவர் பத்தாம் வகுப்பில் 500க்கு 493 பெற்றவர்.

சென்ற ஆண்டு 12 ஆம் வகுப்பில் 600க்கு 548 பெற்றவர்.

ஆனால் கடந்த ஆண்டு நீட் தேர்வில் 193 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் தேர்வாகவில்லை.

அதன் பிறகு பல்வேறு தனிநபர்களின் பொருதாளர உதவியாலும் , ஏனைய ஒத்துழைப்புகளாலும் கடந்த ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மூவருக்குமே வாழ்த்துகள்.

**************

இப்போது வேறு சிலவற்றைக் குறித்து சிந்திப்போம்.

இந்திய அளவிலோ -  மாநில அளவிலோ  முதலிடம் பெற்றவராயினும் சரி...

அரசுப் பள்ளியோ தனியார் பள்ளியோ எதிலே பயின்றவராயினும் சரி...

01) அவர்களால் 12 ஆம் வகுப்பினைப் படித்து முடித்த அந்த ஆண்டிலேயே தேர்ச்சி பெற முடியவில்லை.

02) தனியார் பயிற்சி மையங்களில் ஓராண்டோ ஈராண்டோ இலட்சக்கணக்கில் பணம் செலுத்தி படித்த பிறகு தான் தேர்வாக முடிகிறது.

03) ஒரு மாணவர் PreKGயில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் செலவு செய்து தனியார் பள்ளியில் படித்திருந்தாலும் கூட NEETக்காக தனிப்பட்ட முறையில் தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று மீண்டும் இலட்சக்கணக்கில் செலவு செய்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடிகிறது. அவ்வாறாயின் முதல் 15 ஆண்டுகள் செய்த செலவு தேவை தானா என்று பெற்றோர்கள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

04) அரசுப் பள்ளியில் படித்து முடித்தவுடன் தேர்வெழுதி 193 மதிப்பெண் மட்டுமே எடுத்து தேர்ச்சி பெறாமல் ஓராண்டு தனியார் பயிற்சி மையத்தில் பயின்று 668 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை "அரசுப்பள்ளி மாணவனின் சாதனை" என்று விளம்பரம் செய்வது முறைமையா? 

05) பல்வேறு தனிநபர்களும், அமைப்புகளும் இலட்சக்கணக்கில் உதவி செய்து அதன் மூலம் பெற்ற ஒரு வெற்றியை "ஏழை மாணவனின் சாதனை" என்று கூறுவது நியாயமா? 

அவன் ஏழைதான்... ஆனால் அவனுக்கு கிடைத்தது சும்மாவா கிடைத்தது? அந்தப் பணக்காரப் பயிற்சி வேறொருவர் பணம் செலுத்தியதால் அல்லவா கிடைத்தது...

06) 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு ஓராண்டோ ஈராண்டோ பயிற்சிக்காக படிப்பதும்... அதற்காக பெருந்தொகையைச் செலவழிப்பதும் எத்தனைப் பேருக்கு இயலுஞ் செயலாகும்?

~ தகடூர் ப.அறிவொளி.

🍁🍁🍁 இன்று வரை ஊக்க ஊதிய உயர்வு பெற இயலாமல் இருப்பவர்கள் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

 1)  Degree certificate. Genuineness.. எல்லாம் சரியாக வைத்திருந்து....

தங்களின் தலைமை ஆசிரியர்/ வட்டாரக் கல்வி அலுவலர் 10.03.2020 க்கு முன் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு  செயல்முறைகள் / ஆணைகள் அளித்திருந்தால்

அதை கொண்டு...

நிலுவை தொகை பட்டியலை உடனடியாக கரூவூலத்தில் சமர்ப்பித்து காசாக்கலாம்...

(Ref GO 116 point 9 (a))

செயல்முறைகள்/ஆணைகள் "நாள் 10.03.2020 "க்கு பிறகு இருப்பின் நேரடியாக கரூவூலத்தில் உடனடியாக சமர்ப்பிக்க இயலாது...


2) 10.03.2020 க்கு முன் உயர்கல்வி பெற்று...

தற்போது வரை ஊக்க ஊதிய உயர்வு செயல்முறைகள் / ஆணைகள் பெறாதவர்கள்..

(அல்லது 10.03.2020 க்கு பிறகு செயல்முறைகள் / ஆணைகள் பெற்றவர்கள்)...

நிதித்துறை ஒப்புதல் உடன் தான் ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும்...

(Ref GO 116 Point 9(b))...


3) நாம் தனிப்பட்ட முறையில் நேரடியாக நிதித்துறை ஒப்புதல் பெற இயலாது..


4) பள்ளிக் கல்வி இயக்குனர் மூலம்..

தகுதியான நபர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு...

பள்ளிக் கல்வி செயலர் வழியாக, நிதித்துறைக்கு அனுப்பிதான் நிதித்துறை ஒப்புதல் பெற இயலும்..


5) தகுதியான நபர்களின் விபரங்களை...

ஏற்கனவே வேளாண் துறை, இராமநாதபுரம் ஆட்சியர், தொழில் பயிற்சி துறை தொகுக்கும் பணியை ஆரம்பித்து விட்டார்கள்...

விரைவில் பள்ளிக் கல்வி துறையின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்...


6) உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு எதிர்பார்த்து காத்திருப்பவர் நீங்கள் எனில்....

 அ) course details

ஆ) Degree certificate

இ ) Genuineness

 தயார் நிலையில் வைத்திருங்கள்...

(பெறவில்லை எனில் பெறுவதற்கு இன்றே முயற்சி செய்யுங்கள்)

தலைமை ஆசிரியர்/ வட்டாரக் கல்வி அலுவலர்  வழியாக மு.க.அ,

பள்ளி கல்வி இயக்குனர் மூலம் நிதித்துறை ஒப்புதல் உடன் ...

நீங்கள் பெற்ற உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற இயலும்...

அதுவும் 31.03.2021 க்கு முன்👍🏼...

வாழ்த்துகள்💐💐💐

🍁🍁🍁 தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை 30-10-2020 அன்று கொண்டாடப்படும் - தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...