கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பள்ளிகளில் தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடும்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்...

 பள்ளிகளில் தேர்வு மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கிடும் பொழுது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள் :

1. மதிப்பெண் சான்றிதழ்களை பெற நீண்ட வரிசையில் மாணவர்கள் பெற்றோர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு , மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டிய நேரம் குறித்து முன்னரே மாணவர்களுக்கு தெரிவித்திட வேண்டும் . ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிக்கு வருகை புரியுமாறு திட்டமிடுதல் வேண்டும்.

2 . மாணவர்கள் வரிசையில் நிற்கும்பொழுது சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக தரையில் போதிய இடைவெளி விட்டு குறியீடுகள் உருவாக்கிட வேண்டும்.

3 . மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

4 . மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் வழங்கும் நாளன்று பள்ளி நுழைவு வாயிலில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு சமூகஇடைவெளிக்கான விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும் . 

5. மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் / ஆசிரியர்கள் கட்டாயம் கையுறை அணிந்திருத்தல் வேண்டும் . 

6. சான்றிதழ்களை தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் பெற்றுக் கொள்ள ஏதுவாக பள்ளித் தலைமை ஆசிரியர் இரண்டு வகுப்பறைகளை காத்திருப்பு அறைகளாக ( Waiting rooms ) அமைத்தல் வேண்டும்.தேர்வர்கள் பெற்றோர்கள் காத்திருக்கும் அறைக்கு வெளியே கூட்டம் கூடுவதற்கு அனுமதித்தல் கூடாது.

7. பள்ளி வளாகத்தில் கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்தல் வேண்டும் . அதற்கேற்ப பள்ளியின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி ஆகியவற்றில் சோப்பு மற்றும் கை கழுவுவதற்கு தகுந்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.

8. மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்களுக்கு வழங்கிடுவதற்கு முன்னரே பள்ளிகளில் உள்ள காத்திருப்பு அறைகள் ( Waiting rooms ) மற்றும் சான்றிதடிந விநியோகிக்கும் அறைகளில் உள்ளமேசை , நாற்காலி , கதவு , ஜன்னல் ஆகியவற்றில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9 . சான்றிதழ்கள் விநியோகப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் , பணியாளர்கள் , அனைவரையும் அவர்களது கைகளை சோப்பு / Hand Sanitizers கொண்டு சுத்தம் செய்த பின்னரே பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

10. ஆசிரியர்கள் / பணியாளர்கள் / மாணவர்கள் / தேர்வர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை பள்ளித் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல்வேண்டும்.

11. ஆசிரியர்கள் / பணியாளர்கள் / மாணவர்கள் அனைவரும் தேவையின்றிபள்ளி வளாகத்திற்குள் கூட்டம் கூடுதல் கூடாது என அறிவுறுத்துதல் வேண்டும்.

12 . மேலும் , அரசாணை ( நிலை ) எண்.379 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் ( DM.II ) துறை , நாள்.22.07.2020 ல் தெரிவிக்கப்பட்டுள்ளநிலையான வழிகாட்டு நடைமுறைகள் அனைத்தும் பள்ளிவளாகத்தில்கண்டிப்பாக பின்பற்றப்படுதல் வேண்டும் . மேற்குறிப்பிட்ட அறிவுரைகளைப் பின்பற்றி பத்தாம் வகுப்பு பள்ளி மாணாக்கர் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்கள் வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

🍁🍁🍁 பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய மாணவர்கள் செய்ய வேண்டியது...

 பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தி.மலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் எடுத்து வர வேண்டும். வரும் 28-ம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவு பணி நடைபெற உள்ளது. மேலும். www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணையதள வழியாக பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை...

 


பள்ளி மதிய உணவில் காளான், தேன் ஆகிய உணவுப் பொருட்களை இணைக்க மாநில அரசுகளுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை செய்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் கல்வித் துறை இணைச்செயலர் மீனா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதில் ''தேன், காளான் ஆகியவை முக்கிய உணவுகள். இவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி, மருத்துவ குணங்கள் உள்ளன. மதிய உணவில் குழந்தைகளுக்கு இவற்றை வழங்கப் பரிந்துரைக்கிறோம். காளானில் ஃபோலிக் ஆசிட் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவும். தாவர உணவான காளானில் வைட்டமின் பி12, பொட்டாசியம், காப்பர், ஜிங்க், வைட்டமின் டி ஆகியவை அதிக அளவில் அடங்கியுள்ளன. இதில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துகளை அடிப்படையாகக் கொண்டு, காளான் மற்றும் தேனை மதிய உணவில் இணைக்கத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப் பரிசீலிக்கலாம். இதனால் தேன், காளான் உற்பத்தியும் அதிகரிக்கும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாகத் தேசிய விருது பெற்ற புதுச்சேரி காளான் உற்பத்தியாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், "ஆசிரியர் பணியில் விருப்ப ஓய்வு பெற்று காளான் உற்பத்தியாளருக்காகத் தேசிய விருது பெற்றேன். கொழுப்பு இல்லாத உயர்தர புரதச்சத்து காளானில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியும், பல மருத்துவ குணங்களும் அடங்கியது காளான்.

 இதைத் தேசிய காளான் ஆராய்ச்சி இயக்குனரகம் உறுதி செய்துள்ளது. குழந்தைகளுக்கு அவசியமாகத் தரவேண்டிய உணவு இது. நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவோடு காளானைத் தருவதால் விவசாயிகளும் பயன்பெறுவார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றி" என்று குறிப்பிட்டார்.

🍁🍁🍁 10-03-2020க்கு முன்னர் உயர்கல்வித்தகுதி பெற்றோர் ஊக்க ஊதிய உயர்வு பெற நிதித்துறை ஒப்புதலுக்கான விண்ணப்பம் மாதிரி...

 


🍁🍁🍁 இடைநிலை ஆசிரியர் பட்டயப் பயிற்சி தொடர்பான கேள்விகளுக்கு தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற பதில்கள்...

 


🍁🍁🍁 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் சார்பில் இணையவழி வினாடி-வினா போட்டி வரும் 25 ஆம் தேதி நடக்கிறது...

 


🍁🍁🍁 ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு குறைப்பு குறித்து - இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி...

 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work

அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...