கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை நிரந்தரமாக தடை (Permanently Debarred) செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல் TRB வெளியீடு...

 List of candidates who have been permanently debarred for the reason of tampering of confidential official records (i.e., OMR Answer Sheets), relating to the written Examination held on 16.09.2017 for the Recruitment to the Posts of Direct Recruitment of Lecturers (Engineering / Non- Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-2018 (Notification No. 04/ 2017 Dated: 16.06.2017)...

>>> Click here to Download List of candidates - Permanently Debarred...

🍁🍁🍁 IFHRMS உடன் இணைக்கப்படுவதால் CPS "Missing Credits" விபரங்களை 10.11.2020க்குள் சரிசெய்ய அரசுத் தகவல் மைய (Govt. Data Centre) ஆணையர் கடிதம்...



 

🍁🍁🍁 G.O.(Ms).No.: 438, Dated: 29.10.20- மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...

 





>>> Click here to Download G.O.438, Dated: 29-10-2020


🍁🍁🍁 கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து - உயர்நீதிமன்றம் உத்தரவு...

கல்லூரி கல்வி இயக்குனர் நியமனம் ரத்து

கல்லூரி கல்வி இயக்குனராக பூரணச்சந்திரனை நியமித்த அரசின் உத்தரவு ரத்து. பணி மூப்பு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என திருவாரூர் திரு.வி.க கல்லூரி முதல்வர்  கீதா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு...



🍁🍁🍁 தமிழகத்திலேயே முதல் முறை - காலையில் நுழைவுத்தேர்வு, மாலையில் முடிவுகள் - பாரதியார் பல்கலைக்கழகம் அசத்தல்...

 


தமிழகத்திலேயே முதல் முறையாகக் காலையில் நுழைவுத் தேர்வை நடத்தி மாலையில் அதன் முடிவுகளை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளில் சேர விரும்பும் முதுநிலைப் பட்டதாரிகள், நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். பாரதியார் பல்கலைக்கழகம் இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்திய இத்தேர்வை, நேற்று முன்தினம் (அக். 27) முதல் முறையாக இணையவழியில் நடத்தியதோடு மட்டுமல்லாமல் முடிவையும் அன்றே வெளியிட்டு சாதனை படித்துள்ளது.

இதுகுறித்து எம்.ஃபில்., பிஎச்.டி. நுழைவுத் தேர்வு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ம.இளஞ்செழியன் கூறியதாவது:

''2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான எம்.பில்., பிஎச்.டி. நுழைவுத்தேர்வு http://bucetonlineexam2020.b-u.ac.in என்ற இணையதளம் வழியாக நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 2,778 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இணையதளத்தில் முதல் முறையாக நுழைவுத்தேர்வு நடத்துவதால், தேர்வு நடைமுறைகள் குறித்த அனைத்து விவரங்களுக்கும் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து அக். 23-ம் தேதி இணைய வழியில் மாதிரி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

அப்போது கணினி வசதி, இணையதள வசதி இல்லாமை, மலைப்பகுதிகளில் நெட்வொர்க் பிரச்சினை ஆகியவை குறித்து மாணவர்கள் முறையிட்டனர். இது உடனடியாகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் உள்ள இணையதள மையம், மற்றும் ஜவுளித்துறை அறைகளில் 200 கணினிகள் பொருத்தப்பட்டன.

மாணவர்களை நேரடியாக வரவழைத்துப் பல்கலைக்கழகத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்ததில், 94 பேர் கலந்து கொண்டனர். மீதமுள்ள 2,563 பேர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, இணையதளம் வழியாகத் தேர்வெழுதினர். 215 பேர் மட்டுமே தேர்வெழுதவில்லை.

ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் வகையில், கணினியில் புரோக்ராமிங் செய்து வைத்திருந்தோம். வினாக்களுக்கு ஏற்ற விடைக்குறிப்புகளைத் தனியாகப் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தோம்.

காலை 11 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. 35 மதிப்பெண்களுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் இ-வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. தேர்வு முடிந்ததும், துறைவாரியாக வினாக்களும், விடைகளும் கணினி மூலமாகப் பொருத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டன. பின்னர் துறைவாரியாகப் பொருத்தப்பட்டவை சரிதானா? என்று ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஒரே நாளில் நுழைவுத்தேர்வு நடத்தி முடிவுகளை அன்றே வெளியிடுவது தமிழகத்தில் இதுவே முதல் முறை''.

இவ்வாறு ம.இளஞ்செழியன் கூறினார்.

🍁🍁🍁 Provisional Certificate இருந்தாலே 2 ஆண்டுக்குள் பட்டச் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என நிபந்தனைக்கு உட்பட்டு ஊக்க ஊதியம் வழங்க அனுமதிக்கலாம்...

 


🍁🍁🍁 சட்ட படிப்பிற்கான கட் -ஆப் (CUT OFF ) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது...

 சட்ட படிப்பிற்கான கட் -ஆப் (cut off ) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் பல்கலைகழகம் அதிகாரபூர்வமான http://tndalu.ac.in  என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...