கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 07.11.2020 (சனி)...

🌹எந்த சூழ்நிலையிலும் உடைந்து போக கூடாதுன்னு நாம் ஊருக்கே உபதேசம் செய்தாலும்.

ஏதோ ஒரு சூழ்நிலையில் நாமும் உடைந்து தான் போகிறோம் மனதளவில்.!

🌹🌹ஏமாற்றங்கள் நமக்கு புதிதல்ல.

ஏமாறும் விதம் தான் புதிது.

சில நேரங்களில் அன்பால்,

சில நேரங்களில்  நம்பிக்கையால்.!!! 

🌹🌹🌹நம் வாழ்க்கை 

எப்பொழுதுமே அடுத்தவர் திரும்பிப்  பார்க்கும் அளவுக்கு இருக்க வேண்டுமே தவிர

நம்மை அடுத்தவர் திருத்தி பார்க்கும் 

அளவுக்கு இருக்கக் கூடாது.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.                                                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு முன்னேறியது.

🍒🍒தீபாவளிக்கு முந்தைய நாள் உள்ளூர் விடுமுறை - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை

🍒🍒CTET 2021ல் தேர்வு எழுதும் மையங்கள் மாற்றம் வேண்டுமெனில் வாய்ப்பு வழங்குகிறது CBSE.                                                   🍒🍒தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து ஜனவரி முதல் வாரத்தில் செயற்குழு கூட்டத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் - பிரேமலதா விஜயகாந்த்

🍒🍒பெற்றோரின் கருத்துகளுக்கு ஏற்ப பள்ளிகள் திறப்பு

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 

🍒🍒மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றாலும் அவை தனியார் பள்ளிகள் தான். 

- முதல்வர் பழனிசாமி

🍒🍒10% போனஸ் என அரசு அறிவித்த நிலையில், 30% போனஸ் தொகை உடனடியாக வழங்கப்படாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

🍒🍒என் கணவர் கட்சி தொடங்குவதற்கு 2 முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை

பொருளாளர் பொறுப்பில் இருந்து நான் விலகிவிட்டேன்

-நடிகர் விஜயின் தாயார் ஷோபா விளக்கம்

🍒🍒அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் வலுவானது, ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்பை உள்ளடக்கியது.

- இந்திய வெளியுறவு துறை.

🍒🍒கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் 50 சதவீத வருகைப்பதிவுடன் வகுப்புகளை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி.

🍒🍒இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பருவநிலை லட்சிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு  பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

🍒🍒தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

🍒🍒எதிர்வரும் குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தையொட்டி உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என சீனா கருதுகிறது. எனவே வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் நுழைவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

🍒🍒அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பாரிஸ் ஒப்பந்தத்தில் 77 நாட்களில் அமெரிக்காவை இணைப்பதாக ஜோர்டன் தெரிவித்துள்ளார்.

🍒🍒கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தோனேசியாவில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார வீழ்ச்சி அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🍒🍒மெசேஜ் மட்டுமில்லை                          பணமும் பகிரலாம்...!                                வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்.

🍒🍒பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையில் க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - II ஆக பணிபுரிந்து வரும் க‌ணி‌னி பயிற்றுநர்களை 8 ஆண்டுகள் பணி முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையின்றி க‌ணி‌னி பயிற்றுநர் நிலை - I ஆக தரமுயர்த்துதல் - அரசாணை வெளியீடு

🍒🍒தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் - அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2020

🍒🍒DIPLOMA IN CIVIL ENGINEERING படித்தவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணி - நேரடி நியமனம் மூலம் 777 பணியிடங்கள் நிரப்ப இயக்குனர் கடிதம் வெளியீடு.

🍒🍒கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிதாக அமைச்சகத்தை உருவாக்க கோரி பிரதமருக்கு கலாநிதிவீராசாமி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

தங்களது கோரிக்கைகள் குறித்து கலாநிதிவீராசாமியை சந்தித்து கட்டுமான தொழிலாளர்கள் மனு அளித்திருந்தனர். கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து பிரதமருக்கு கலாநிதிவீராசாமி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

🍒🍒இன்னும் சில மாதங்களில் இருட்டைக் கிழித்தெறியும் உதயசூரியன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களின் மனங்களை ஆழ்வது திமுக தான் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதிமுக அரசின் தற்காலிக நிவாரணங்கள் எதுவும் தமிழக மக்களுக்கு நிரந்தர தீர்வு அளிக்கப்போவதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

🍒🍒கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடைவிதித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

🍒🍒டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.

ஏற்கனவே பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் சந்தித்திருந்தார்.

🍒🍒நீர்நிலைகளை காக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் வருங்கால தலைமுறையினர் அல்லல்படுவர் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனி துறையை ஏற்படுத்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன

🍒🍒அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடுக்கான சட்டம் அரசிதழில் வெளியீடு.

உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டம் அரசிதழில் வெளியீடு.

🍒🍒புதுச்சேரி: கொரோனா குறைந்துவிட்டதாக நினைத்து மக்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி காலத்தில் மக்கள், வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை. திருமண விழாக்களில் விதிகளை மீறி அதிகளவில் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

🍒🍒சென்னையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் முகக்கவசம் அணிவதில்லை: ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் தகவல்.

🍒🍒தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட வளர்ச்சிப் பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி உதகையில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில்முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார். அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் குறைவு என கூறினார்கள்; ஆனால் அங்கு தற்போது அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

🍒🍒மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு : மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு.

🍒🍒மருத்துவப் படிப்புகளுக்கான பூா்விகச் சான்றில் துணை வட்டாட்சியா் ஒப்பம் போதுமானது.

🍒🍒இந்த வருடம் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை. பள்ளிகள் திறப்பதில் ஆந்திராவையும், கேரளாவையும் நமது மாநிலத்துடன் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

🍒🍒மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அத்தாட்சி சான்றிதழ்களை வழங்க முதன்மை கல்விஅலுவலகங்களில் சிறப்பு குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  

🍒🍒தமிழகத்தில் பள்ளி திறப்பது தொடர்பான கருத்துகேட்பு  கூட்டத்திற்கு அதிக அளவிலான பெற்றோர் வந்தால் சுழற்சி முறையில் கருத்துக் கேட்பு: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு 

🍒🍒இளநிலை முதுநிலை பட்டப்படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவிக்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது 

🍒🍒ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதியம் நிர்ணயம் சார்ந்த வழக்கில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு 

🍒🍒மகாராஷ்டிரத்தில் அடுத்தாண்டு மே மாதம் வரை 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட்  தெரிவித்துள்ளார்.

🍒🍒பெற்றோா், ஆசிரியா்களின் கருத்தைக் கேட்ட பிறகு அதன் அடிப்படையில் தமிழகத்தில்  பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வா் இறுதி முடிவை அறிவிப்பாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்  தெரிவித்துள்ளார். 

🍒🍒டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2021 ஜூலையில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நவ.,30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                             

   என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

🍁🍁🍁 பணியில் சேர்வதற்கு முன் உயர்கல்வி பயின்று தேர்வில் தோல்வியுற்ற நிலையில், பணியில் சேர்ந்த பின் அத்தேர்வை எழுத என்ன செய்ய வேண்டும்? - பள்ளிக் கல்வி துணை இயக்குநர் பதில்...

  •  பணியில் சேர்வதற்கு முன் உயர்கல்வி பயின்று தேர்வில் தோல்வியுற்ற நிலையில், பணியில் சேர்ந்த பின் அத்தேர்வை எழுத தடையின்மை சான்று தேவையில்லை. 
  • தற்செயல் விடுப்பில் தேர்வுகள் எழுதலாம். 


பள்ளிக் கல்வி துணை இயக்குநர் பதில்...



🍁🍁🍁 பள்ளி திறப்பது பற்றிய கருத்து கேட்பு படிவம் - நவம்பர் 2020...

 >>> பள்ளி திறப்பது பற்றிய கருத்து கேட்பு படிவம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 மெசேஜ் மட்டுமில்லை... பணமும் பகிரலாம்...! வாட்ஸ்அப் வெளியிட்ட அசத்தல் அப்டேட்...

வாட்ஸ்அப்பில் பணம் அனுப்பும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாகும். செய்திகளைப்  பரிமாறுவதில் உள்ள வேகமும், அதன் துல்லியத்தன்மையும் இதன் பயன்பாட்டை அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றியிருக்கிறது. பயனாளர்களின் பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு வகையிலான அப்டேட்ஸை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 13-10-2016...

 அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 13-10-2016...

பள்ளிக்கல்வி- பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 2 ஆகியோருக்கு அவர்கள் பெற்றுள்ள உடற்கல்வி தொடர்பான உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதற்கான உயர் கல்வி தகுதிகளை நிர்ணயம் செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது...

>>> அரசாணை (நிலை) எண்: 177, நாள்: 13-10-2016 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசாணை (நிலை) எண்: 324, நாள்: 25-04-1995...

 அரசாணை (நிலை) எண்: 324, நாள்: 25-04-1995...

G.O.Ms.No.324, Dated: 25-04-1995...

School Education Increment clarification relating to subjects for which incentive increments be sanction- Orders issued...

>>> Click here to Download G.O.Ms.No.324, Dated: 25-04-1995...


🍁🍁🍁 அரசாணை (நிலை) எண்: 95, நாள்: 21-01-1980...

 அரசாணை (நிலை) எண்: 95, நாள்: 21-01-1980...

G.O.Ms.No.95, Dated: 21-01-1980...

Education - Physical Director- Physical Education Teachers Grade 1 and 2 to sanction of incentive increments for processing high qualifications revised orders issued...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...