தமிழகத்தில் 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் 7.5 % இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 313 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். யாருமே கோரிக்கை வைக்காத நிலையில் 7.5 % இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
2020-21-ம் கல்வியாண்டு மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கின.
அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவப்படிப்பில் சேர இருக்கும் அனைத்து பிரிவு 951 மாணவ- மாணவிகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று காலை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு தொடங்கியது.
7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் பயன்பெற இருக்கும் மாணவர்களின் தரவரிசை பட்டியலின்படி காலை 9 மணி முதல் 11 மணி வரை, 1 முதல் 151 தரவரிசையில் (நீட் தேர்வில் 664 மதிப்பெண் முதல் 249 மதிப்பெண் வரை) இருக்கும் மாணவர்களுக்கும், 11 மணியில் இருந்து, 152 முதல் 267 தரவரிசையில் (நீட் தேர்வில் 248 முதல் 190 மதிப்பெண் வரை) உள்ள மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக்கு 270 மாணவ- மாணவிகள் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 262 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இவர்களில் 235 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. 27 பேர் காத்திருக்கும் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பும், பிற வகுப்புகளை அரசுப் பள்ளியிலும் பயின்ற மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சலுகையை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.
தஞ்சை நாவக்கொல்லையைச் சேர்ந்த அறிவழகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
”என் மகள் அரிவிக்கா, நாவக்கொல்லை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்தார். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக என் மனைவியின் ஊரான புன்னவாசலில் குடியேறினோம். அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அரிவிக்கா 6-ம் வகுப்பு படித்தார். பின்னர் மீண்டும் நாவக்கொல்லையில் குடியேறினோம். 7 முதல் 12-ம் வகுப்பு வரை அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்றார்.
பத்தாம் வகுப்பில் 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், 12-ம் வகுப்பில் 453 மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதலிடத்தையும் பிடித்தார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை எழுதி 270 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுச் சலுகையை என் மகளுக்கு வழங்கினால் மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே, என் மகள் அரசுப் பள்ளியில் பயின்றவர் எனக் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு சலுகைப் பட்டியலில் என் மகள் பெயரைச் சேர்க்கவும், அதுவரை ஒரு மருத்துவ இடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும்”.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், ”மனுதாரரின் மகள் 6-ம் வகுப்பு தவிர பிற வகுப்புகளை அரசுப் பள்ளியில் பயின்றுள்ளார். இருப்பினும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுச் சலுகைக்கான தகுதியை அவர் பூர்த்தி செய்யவில்லை. இதனால் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
கணினி பயிற்றுநர் நிலை 2லிருந்து கணினி பயிற்றுநர் நிலை 1ஆக தரம் உயர்த்திட ஆணை வழங்குதல்...
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 8095/ வி1/ இ2/ 2019, 18-11-2020,
அரசாணை எண்: 103, நாள்: 05-11-2020,
அரசாணை எண்: 107, நாள்: 17-11-2020,
தரம் உயர்வு தகுதி வாய்ந்தோர் பட்டியல் (PROMOTION LIST)...
>>> அரசாணை எண்: 103, நாள்: 05-11-2020, தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> அரசாணை எண்: 107, நாள்: 17-11-2020, தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> தரம் உயர்வு தகுதி வாய்ந்தோர் பட்டியல் (PROMOTION LIST) தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...