கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் நிரந்தரப் பணியிடங்கள்...
அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் நிரந்தரப் பணியிடங்கள்...
கற்போம் எழுதுவோம் - புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்துதல் - 30-11-2020 அன்று பிற்பகல் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்துதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் கடிதம்...
கற்போம் எழுதுவோம் - புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் செயல்படுத்துதல் - 30-11-2020 அன்று பிற்பகல் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்துதல் சார்ந்து பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்ட இயக்குநரின் கடிதம்...
>>> இயக்குனரின் செயல்முறைகள்...
டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறப்பு - உயர்கல்வி அமைச்சர் உறுதி...
இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும், 2ம் தேதி திட்டமிட்டபடி கல்லுாரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் மூடப்பட்ட கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மற்றும் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி, இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், டிசம்பர், 2ல் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டு ஏற்பாடுகளை, உயர் கல்வித்துறை செய்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், வரும், 2ம் தேதி கல்லுாரிகளை திறந்து, பாடங்களை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக, வரும், 2ம் தேதி கல்லுாரிகள் திறக்கப்படுமா; தள்ளி வைக்கப்படுமா என, மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இந்நிலையில், திட்டமிட்டபடி இறுதியாண்டு மாணவர்களுக்கு, கல்லுாரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். புயல், கனமழை போன்றவை வந்தால், கல்லுாரிகளை வேறு தேதியில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள் : 30-11-2020...
சங்கர் மேல்நிலைப்பள்ளி,
சங்ககிரி மேற்கு - 637 303
கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை .
1. M.Sc. Biology / Botany , B.Ed. , (SC - ( அருந்ததியர் )
2. ஆங்கிலம் எண்ணிக்கை -1 , M.A. , English . B.Ed. , பொதுப்பிரிவினர்
30.11.2020 க்குள் கல்வி , அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .
சங்கர் மேல்நிலைப்பள்ளி , சங்ககிரி மேற்கு - 637 303 .
email id : shsskd5@gmail.com
கற்பித்தல் பணியில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.
இந்திய விமானப்படை பணி - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/டிப்ளமோ முடித்தவர்கள்/கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்...
வேலைவாய்ப்பு பிரிவு - இந்திய விமானப்படை ஆள் சேர்ப்பு முகாம் தேர்வு -Rally டிசம்பர் 10.12.2020 முதல் 19.12.2020 வரை
நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் விளம்பரப்படுத்துதல் -தொடர்பாக
இந்திய விமானப்படைப் பிரிவில் (Airman)-பணிக்கு நேரடி ஆள்சேர்ப்பு, மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். Recruitment Rally நிகழ்ச்சி டிசம்பர் 10.12.2020 முதல் 19.12.2020 வரை புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இப்பேரணியில் பங்கேற்க 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/டிப்ளமோ முடித்தவர்கள்/கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) www.airmenselection.cdac.in என்ற இணையதளத்தில் நவம்பர் 27.11.2020 முதல் 30.11.2020- ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதார்கள் 17 வயது முதல் 21 வயது வரை (ஆண்கள் மட்டும்) கலந்து கொள்ள வேண்டும்.
கல்வித் தகுதி
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்/டிப்ளமோ முடித்தவர்கள்/கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் மட்டும்.
மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released
மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...