கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி...
◼️ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
◼️பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி
◼️கொரோனா சூழலில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி
◼️ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும்
◼️எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி
◼️ஜல்லிக்கட்டு போட்டிகளை காண இடவசதிக்கு ஏற்ப பார்வையாளர்களை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
◼️மாடுபிடி வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழுடன் போட்டிகளில் பங்கேற்பது கட்டாயம்
◼️ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
◼️ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே போட்டிகளை காண அனுமதிக்கப்பட வேண்டும்
எஸ்பிஐ வங்கி - பி.இ. / எம்சிஏ / எம்.எஸ்.ஸி பட்டதாரிகள் - 236 ஐ.டி. பாதுகாப்பு நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-01-2020...
எஸ்பிஐ வங்கி - 236 பாதுகாப்பு நிபுணர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 11-01-2020...
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஆட்சேர்ப்பு செய்வதற்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு நிபுணர், மேலாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி விவரங்கள், தேவையான வயது வரம்பு, தேர்வு முறை, கட்டண விவரங்கள் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன…
நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ)
வேலைவாய்ப்பு : வங்கி வேலைகளின் வகை
மொத்த காலியிடங்கள் : 236
இடம் : மும்பை
பதவியின் பெயர் : பாதுகாப்பு நிபுணர், மேலாளர்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் : www.sbi.co.in
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைனில்
தொடக்க தேதி : 22.12.2020
கடைசி தேதி : 11.01.2021
காலியிடங்களின் விவரங்கள்:
ஐடி பாதுகாப்பு நிபுணர்
உதவி மேலாளர் (அமைப்புகள்)
துணை மேலாளர் (அமைப்புகள்)
திட்ட மேலாளர்
பயன்பாட்டு கட்டிடக் கலைஞர்
தொழில்நுட்ப தலைவர்
தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல் / ஐடி / இசிஇ / எம்சிஏ / எம்பிஏ / எம்எஸ்சியில் பொறியியல் பட்டதாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து சமமானவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது: 21 வயது
அதிகபட்ச வயது: 38 வயது
சம்பள தொகுப்பு:
உதவி மேலாளர் (அமைப்புகள்) - ரூ .23,700 / - முதல் ரூ .42,020 / -
துணை மேலாளர் (அமைப்புகள்) - ரூ .31,705 / - முதல் ரூ .45,950 / -
ஐடி பாதுகாப்பு நிபுணர் - ரூ .42,020 / - முதல் ரூ .51,490 / -
திட்ட மேலாளர் - ரூ .42,020 / - முதல் ரூ .51,490 / -
விண்ணப்பக் கட்டிடக் கலைஞர் - ரூ .42,020 / - முதல் ரூ .51,490 / -
தொழில்நுட்ப தலைவர் - ரூ .42,020 / - முதல் ரூ .51,490 / -
தேர்வு முறை:
ஆன்லைன் எழுதப்பட்ட சோதனை
நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்:
பொது / ஓபிசி வகை: ரூ. 750 / -
எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி / முன்னாள் சேவையாளர் வகை: இல்லை
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க படிகள்:
அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.sbi.co.in இல் உள்நுழைக
வேட்பாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வேட்பாளர்கள் தேவைகளுக்கு ஏற்ப தகுதிகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்க.
எதிர்கால பயன்பாட்டிற்கான பயன்பாட்டை அச்சிடுக
முக்கிய வழிமுறைகள்:
விண்ணப்பிப்பதற்கு முன், தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கவனிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்ப சமர்ப்பிக்கும் தேதிகள்: 22.12.2020 முதல் 11.01.2021 வரை
அதிகாரப்பூர்வ இணைப்புகள்:
அறிவிப்பு (Notification): இங்கே கிளிக் செய்க
வலைதள முகவரி (To Apply): இங்கே கிளிக் செய்க
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் -கர்நாடக கல்வி அமைச்சர் வேண்டுகோள்...
மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுமூக தீர்வு எட்டுவதற்கு பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகள் தொடங்குகின்றன. அத்துடன் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வித்யகாமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளில் கிருமிநாசினி உதவியால் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தனியார் பள்ளி நிர்வாகிகள் 15 அம்ச கோரிக்கையுடன் வருகிற 6ம்தேதி சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற எச்சரிக்கையுடன் அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
அத்துடன் ஆன்லைன், ஆப்லைன் வகுப்புகள் நடைபெறாது என்றும் அதிரடியாக அறிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகளின் திடீர் போராட்டம் அரசுக்கு நெருக்கடியை அளித்துள்ளது. இதற்கிடையே தனியார் பள்ளிக்கூட நிர்வாகம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் அரசு அதை தடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தனியார் பள்ளிக்கூட நிர்வாகிகள் போராட்டம் மற்றும் பெற்றோர்களின் போராட்டம் முதல்வர் எடியூரப்பாவுக்கு தலைவலியாக மாறியது. இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளின் போராட்டத்திற்கு தீர்வு காணவேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமாருக்கு உத்தரவிட்டார்.
முதல்வர் எடியூரப்பாவின் உத்தரவை தொடர்ந்து கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு தரப்பினரும் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறிய நிலையில் மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் சமூக வலைதளமான பேஸ்புக் மூலமாக கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களுக்கு அமைச்சர் சுரேஷ்குமார் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது:
கல்வி மிகவும் அவசியமாகும். மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்றால் அதற்கு கல்வியே அடிப்படை ஆகும். கொரோனா வைரசின் காரணமாக பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. ஆனாலும் மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை முன்னிட்டு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக பெற்றோர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது.
சாப்பாட்டு பிரச்னையே மிகப்பெரிய சவாலாக மாறிய நிலையில் பள்ளிக்கூட கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தங்களின் மகள், மகன் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக வரிசையில் நின்றும், எம்எல்ஏ, எம்பி. உள்ளிட்டோரின் சிபாரிசு கடிதம் பெற்று பிரபல பள்ளிக்கூடத்தில் விண்ணப்பம் செய்யப்படுகிறது.
அதே நேரம் கொரோனா பாதிப்பின் காரணமாக இப்போது கட்டணம் செலுத்த முடியாத நிலையில் பெற்றோர்கள் சிக்கியுள்ளனர்.
அதே நேரம் தனியார் பள்ளிக்கூட ஆசிரியர், ஆசிரியைகளின் நிலைமையும் பரிதாபமாக மாறிவிட்டது. ஆசிரியர், ஆசிரியைகள் வருமானத்திற்கு வழி இல்லை என்பதால் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெற்றோர்கள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் தங்களின் போராட்டத்தினால் மாணவ மாணவிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடக்கூடாது. எனவே, இரண்டு தரப்பினரும் இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
விபத்தில் சிக்கியவருக்கு உதவினால் ரூ.5 லட்சம் பரிசு - மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பு...
சாலை விபத்துகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட, ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்காக வரும் ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வாரவிழா கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த 17ம் தேதி அனைத்து மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து சாலை போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் ெவறும் சடங்குக்காக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வாரவிழாவானது இந்தாண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒரு மாதத்திற்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17ம் ேததி வரை, பல்வேறு துறைகளின் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள்.
இந்தாண்டு ஜனவரி 20 மற்றும் 25ம் தேதிகளில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எம்பி - எம்எல்ஏக்கள் தலைமையில் சாலை விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும். இந்நிகழ்வில் பங்கேற்கும் மக்கள் பிரதிநிதிகள் குறித்த விபரங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பொருள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். இந்த நடைப்பயணத்தில் மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள் கலந்து கொள்வார்கள்.
முன்னதாக, ஜனவரி 18 - 19ம் தேதிகளில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி விழிப்புணர்வு பிரசாரத்தைத் தொடங்குவார்.
அப்போது சாலை பாதுகாப்பில் சிறந்த பணிகளைச் செய்த மூன்று சிறந்த நபர்களுக்கு (முதல் இடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்) ரொக்கப் பரிசை வழங்குவார். அதாவது, விபத்தில் சிக்கியவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கும் போது, அவர்களை மீட்டு மருத்துவமனைக்குச் கொண்டு செல்ல உதவுபவர்ளுக்கு இந்த பரிசுத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு உதவுகின்ற சிறந்த உள்ளம் கொண்ட நபர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் நபர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கான விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இவ்விவகாரத்தில் போலீஸ் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் நபர்களின் பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற சொந்த விபரங்களை கொடுக்குமாறு அவருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. பரிசுத் தொகையை பொருத்தமட்டில், முதல் பரிசு ஐந்து லட்சம், இரண்டாவது பரிசு இரண்டு லட்சம், மூன்றாவது பரிசு ஒரு லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.
வட்டாரக் கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்...
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வட்டாரக் கல்வி அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி உயர்வு - மாவட்ட கருவூல அலுவலர் கடிதம்...
>>> மாவட்ட கருவூல அலுவலர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அதிசயத்தின் விலை - இன்றைய சிறுகதை
அதிசயத்தின் விலை - இன்று ஒரு சிறு கதை The Price of Miracle - Today's short story அதிசயங்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் நடக்கலாம் 🍁🍁...