கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் எழுதவேண்டிய துறைத் தேர்வுகள் (Departmental Tests) விவரங்கள்...

 


TNPSC: துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்கப்பட்டுள்ளன.

விளம்பர எண்: 508

துறை தேர்வில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

BEO/ D. I. /இடைநிலை ஆசிரியர்கள்

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper – I –

 Higher Secondary / Secondary / Teacher Training and Special School


2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper – II –  Elementary / Middle and Special Schools


3.  124 – Account Test for Subordinate Officers – Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers


5.172 – The Tamil Nadu Government Office Manual Test


பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்


*1 . 124 – Account Test for Subordinate Officers – Part I

(or)

*152.The Account Test for Executive Officers


*2 . 172 – The Tamil Nadu Government Office Manual


துறை தேர்வில் மற்ற அலுவலர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்


*1 . 124 – Account Test for Subordinate Officers – Part I


*2 . 172 – The Tamil Nadu Government Office Manual

11 அரசு ஓட்டுநர் பணிகளுக்கான விளம்பர அறிவிக்கை -விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-01-2020...

 


11 அரசு ஓட்டுநர் பணிகளுக்கான விளம்பர அறிவிக்கை -விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-01-2020...

>>> ஓட்டுநர் பணிகளுக்கான விளம்பர அறிவிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



IFHRMS - ESR பரிமாற்றத்தை நிறைவு செய்தல் மற்றும் செயல்பாட்டில் கொண்டு வருதல் - NEW CIRCULAR - அனைத்து DDOவிற்கும் கொடுக்கப்பட்ட வழிமுறைகள்...

>>> IFHRMS - ESR பரிமாற்றத்தை நிறைவு செய்தல் மற்றும் செயல்பாட்டில் கொண்டு வருதல் - NEW CIRCULAR - அனைத்து DDOவிற்கும் கொடுக்கப்பட்ட வழிமுறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம், பொம்மை தயாரிக்க வல்லுநர்கள், மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு: ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு...

 


இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம்கள், பொம்மைகள் தயாரிக்க மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவை பெரும்பாலும் இறக்குமதி சந்தையின் ஆதிக்கத்திலேயே உள்ளது. இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை இந்திய பாரம்பரியம், நாகரிகம் மற்றும் மதிப்பு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.


​‘டாய் கேத்தான்-2021’

எனவே, பொம்மை இறக்குமதியை குறைக்கவும், இந்திய நாட்டின் நாகரிகம், வரலாறு, கலாச்சாரம், புராணங்கள் அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் ‘ஆத்மநிர்பர்பாரத் அபியான்’ என்ற திட்டம்அண்மையில் தொடங்கப்பட்டது. அதன்படி, நாட்டின் கலாச்சாரங்களை கருத்தில்கொண்டு விளையாட்டு பொம்மைகள், வீடியோ கேம்கள், விளையாட்டு கருத்துகளை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் ‘டாய் கேத்தான்-2021’ என்ற போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.


அதன்படி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சிறு, குறு தொழில்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்கள் இணைந்து ‘டாய் கேத்தான்’ நிகழ்ச்சியை வரும் பிப். 27-ம் தேதி முதல் நடத்த உள்ளன. இதற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட்-அப்கள், பொம்மை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள்  உள்ளிட்டோர் தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகளை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஜன.20-க்குள் விண்ணப்பம்

அதன்படி, விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஜன. 20-ம் தேதிக்குள் https://toycathon.mic.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, சிறந்த பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகள் ‘டாய் கேத்தா’னின் தேசிய பொம்மை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.

எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ‘டாய் கேத்தான்’ போட்டி குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் பள்ளிகள் திறப்பு?- அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரம்...

 தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்தலாமா என்று அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கடந்த நவ.16-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், நவ.14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்குப் பின்னர் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி பொங்கல் விடுமுறைக்குப் பின்னர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தலாமா? என்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி மற்றும் பள்ளி தூய்மைப் பணியாளர்கள் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன் குப்பைகள் அகற்றப்பட்டன. தனிமனித இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டன. கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சுகாதாரப் பணிகள் நடைபெற்றன.

சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு மாறுபாட்டால் வேலை மறுக்கப்பட்டவருக்கு பணி வழங்க உயர்நீதிமன்றம் ஆணை...

 சான்றிதழ்களில் பிறந்த ஆண்டு மாறுபட்டதால் 13 ஆண்டுகளுக்கு முன் வேலை மறுக்கப்பட்டவருக்கு நடத்துநர் பணி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த பிறகு வயதை திருத்தம் செய்துள்ளார்; 13 ஆண்டுகளாக வழக்கிலும் தீர்வு காணப்படவில்லை. சில தவறுகள் வாழ்க்கையின் பாதையையே மாற்றி விடுகிறது என நீதிபதி சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் மேல் முறையீடு அலுவலரை நியமித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - ஆண்டு: 2009...

 


அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியர் பொது தகவல் அதிகாரியாகவும், பள்ளி செயலர் மேல்முறையீட்டு அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - ஆண்டு: 2009 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...