கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை - 52 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-02-2021...
BEL - ITI & Diploma Recruitment- Notification - Last Date- 03-02-2021...
>>> பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு...
2020-21ம் கல்வி ஆண்டிற்கு 9ம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (TM & EM) வெளியீடு...
இன்றைய செய்திகள் தொகுப்பு... 25.01.2021(திங்கள்)...
🌹அடுத்தவர் விரும்பியபடிதான் பேச வேண்டுமானால் பொய்தான் பேச வேண்டும்.
அடுத்தவரின் விருப்பத்திற்கே நடக்க வேண்டுமானால் நடிக்கத்தான் வேண்டும்.!
🌹🌹உண்மையாக பழகுறவங்க நிறைய பேர் இருப்பாங்க ஆனா அவங்க எப்பவுமே தனியாகத் தான் இருப்பாங்க.
ஏன்னா பொய்யா பழகுறவங்கள சுத்தித் தான் கூட்டமும் ஆட்டமும் இருக்கும்.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு
📕📘விடைத்தாளை திருத்த மறுத்தால் ஆசிரியர் என்ற தகுதி தானாக இழப்பு ஏற்படும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
📕📘CPS திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் தொடர் மறியல் போராட்டம் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்
📕📘மொபைல் செயலி அல்லது இணையதள முகவரி வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொல்ள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
📕📘பணி நியமனம் கிடைக்காமல் ஏமாற்றம்; அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை கோபியில் டெட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்கள் முற்றுகை
📕📘டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டிலும் குடியரசு தினத்தன்று திமுகவினர் டிராக்டர், இருசக்கர வாகனப் பேரணி
📕📘புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார் நமச்சிவாயம்
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 27ஆம் தேதி டெல்லி சென்று ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்.
📕📘கொரனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் பழனிசாமி ஆலோசனை.
📕📘அண்டார்டிக் தளத்திற்கு அருகில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிலி சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது
📕📘9,11ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை.
📕📘திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்காரம் செய்வதற்காகத்தான்.
-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
📕📘திமுக தலைவர் ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதற்கு நாம் கட்டுப்படுவோம்.கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்துக் கொள்வோம்
- புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி
📕📘ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் பெரியார் , கலைஞர், அண்ணா சிலைகளுக்கு மரியாதை செலுத்தியதுடன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செய்த ராகுல்காந்தி
📕📘நான் என்ன நடிகரா?
பிரபல திரைப்பட நடிகருக்கு கூடும் கூட்டத்தை விட அதிகமான கூட்டம் சாதாரணமான எனக்கு கூடுகிறது என்றால், அதற்கு காரணம் அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தான் - தமிழக முதல்வர் பழனிச்சாமி
கோவை- பெரியநாயக்கன்பாளையம்
📕📘தமிழ் கலாச்சாரம் மேலோங்கியுள்ளது
ஏன் தமிழர்களும், பெங்காலிகளும் ஒருதாய் மக்களாக இருக்க முடியாது?
இந்தியர்களின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது
- ராகுல்காந்தி
📕📘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளார்.
📕📘வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இலங்கை முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார்.
📕📘அதிமுகவிற்கு தான் கடவுள் வரம் கொடுக்கப்போகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
📕📘விவசாயிகளுக்கு எதிரான வேளாண்
சட்டங்களை ஆதரிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறுவது கேவலமானது -திமுக எம்.பி கனிமொழி
📕📘தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை; தமிழக மக்களை விலைக்கு வாங்க முடியாது எனவும் ராகுல் காந்தி பேச்சு.
📕📘மத்தியிலும் மாநிலத்திலும் விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி; மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
📕📘சசிகலாவால் ஆதாயம் அடைந்த அதிமுகவினரே தற்போது அவரை வேண்டாம் என கூறுவது சரியல்ல - பிரேமலதா விஜயகாந்த்.
📕📘இந்தியாவிற்கு சுழற்சி முறையில் செயல்படும் வகையில், மொத்தம் 4 தலைநகரங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எழுப்பியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
📕📘பாஜக தனித்து போட்டியிட்டால் நட்டா வந்தாலும் நோட்டாவுக்கு கீழ் தான் - சீமான்.
📕📘வெளிநாட்டு கப்பல்கள் அத்துமீறி எல்லைக்குள் நுழைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த வகை செய்யும் சட்டத்தை (Coast guard law)சீன அரசு நிறைவேற்றியுள்ளது.
📕📘ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி கண்ட இந்திய அணியை வரும் 26ம் தேதி எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரபல WWE வீரர் டிரிபிள் எச் தெரிவித்துள்ளார்.
📕📘வேட்பாளர்கள் அறிவிப்பிற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தால் கவுண்டமணி செந்தில் திரைப்பட காமெடியில் கவுண்டமணி கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல மிதித்து விடுவேன் - சீமான்
📕📘நான் உருவாக்கும் புதிய அரசியல் கட்சியில், சில ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் சேரலாம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
📕📘சென்னையில் இயக்கப்படும் 650 மாநகர ஒப்பந்தம் தண்ணீர் லாரிகள் ஜன.25 முதல் இயக்கப்படாது என மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம் அறிவிப்பு; கடுமையான டீசல் விலையேற்றத்துடன் நஷ்டத்தில் எங்களால் லாரிகளை இயக்க முடியாது - தண்ணீர் லாரி ஒப்பந்ததாரர் சங்கம்
📕📘வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மகனுக்கு உத்தரவிடுங்கள்"-மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்.
📕📘நெசவாளர்கள் பிரச்சனைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - ராகுல் காந்தி
📕📘"இந்தியாவுடன் செய்துகொள்ளும் துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டம் முதலீடாகும்; இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத்திட்டத்திற்கும் நானே பொறுப்பாவேன்!"
- இலங்கை அதிபர் கோட்டாபாய ராஜபக்ச பேச்சு
📕📘பரபரப்பான சூழலில் பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுருக்கு அவரது வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், எனது வாடிக்கையாளர் (பேரறிவாளன்) 29 ஆண்டுகள் உண்மையான சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். எந்தவொரு மனிதனுக்கும் அவரது குடும்பத்திற்கும் இந்த துன்பம் போதுமானது. பேரறிவாளர் குற்றமற்றவர் மற்றும் எந்தவொரு சட்ட உதவியும் இல்லாததால் அவர் இன்னும் சிறையில் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
சென்னை உயர்நீதிமன்றத்தில் Personal Assistant & Clerk வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-02-2021...
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம்
பணியின் பெயர் : Personal Assistant & Clerk
மொத்த காலியிடங்கள் : 77
கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கடைசி நாள் : 03.02.2021
ஊதியம்: அடிப்படை ஊதியம் ரூ.56,100 + இதர படிகள்...
>>> அறிவிப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி மாணவர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலை கண்காணிப்பு – தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...
தமிழகத்தில் பள்ளிகளுக்கு நேரில் வருகை புரியும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலையை கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக CEO கூறுகையில், தேனி மாவட்டத்தில் உள்ள 218 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 95% மாணவர்கள் நேரில் வர தொடங்கி உள்ளனர். அவர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் அனைத்து மாணவர்களுக்கும் தினசரி தெர்மல் ஸ்கேனர் வாயிலாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் மாறுபாடு கண்டறியப்பட்டால், ஆக்சிஜன் சோதனை நடத்தப்படுகிறது. இரண்டு சோதனைகளிலும் சராசரியை விட வித்தியாசம் காணப்பட்டால் மருத்துவமனைக்கு நேரில் அழைத்து சென்று மாணவர்களை பரிசோதிக்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது வரை மாணவர்களுக்கு பாதிப்போ, அறிகுறியோ கண்டறியப்படவில்லை. தினமும் பள்ளிகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் பள்ளியில் நடந்து கொள்வது குறித்து தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...