கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிளஸ்1 வகுப்புகள் அடுத்த வாரம் துவக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 



ஜூன் 3வது வாரத்தில் +1 வகுப்புகள் தொடக்கம்: மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


 


 11ஆம் வகுப்புகள் ஜூன் 3வது வாரத்தில் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் 10-15% கூடுதலாக மாணவர்களை சேர்க்கலாம். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே பிரிவுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், 50 கொள்குறிவகை வினாக்கள் தயாரித்து தேர்வு வைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 


10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்-பாஸ் என்று ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்க குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 15 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அதிகமான விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வுகள் வைத்து அனுமதிக்கலாம். ஜூன் 3வது வாரத்தில் வகுப்புகளை தொடங்க வேண்டும். +2 மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


>>> +1 மாணவர் சேர்க்கை - 2021-22 தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல்...



ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

 



>>> தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்துப்பள்ளிகளிலும் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு...


Proceedings of the Commissioner of School Education regarding School Opening and Class XI Admission - With the Endorsement of Karur CEO...



பள்ளிகள் திறப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர்க்கை தொடர்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - கரூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளுடன்...




மறைந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்தில் குடும்ப ஓய்வூதியம் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவு...

 


மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஒய்வூதியமானது, அவர்கள் விண்ணப்பித்த ஒரு மாதத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து துறைத்தலைவர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


இதுகுறித்து மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


கரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால், மத்திய அரசு ஊழியர்கள் பலர் உயிரிழந்தனர். பல நேரங்களில், உயிரிழந்த ஊழியரை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருந்து வந்துள்ளது. இந்த நேரத்தில் வாழ்வாதாரத்துக்காக அந்த குடும்பங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.


எனவே, உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியத்தையும் இதர சலுகைகளையும் விரைந்து வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், மத்திய அரசின் அனைத்து துறைகளும் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசு விண்ணப்பித்ததும், அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.


பின்னா் அங்கிருந்து, குடும்ப வாரிசுகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் வரவு வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாதத்தில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு உயிரிழந்த அரசு ஊழியர்களின் விவரம், அவர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்ட நாள்,தாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணம், தாமதத்தை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் போன்றவற்றை அரசின் அனைத்து துறைகளும் சமா்ப்பிக்க வேண்டும்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் ஆணை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...


>>> Payment of family pension, death gratuity and other dues to the family on death of a Government servant during service – Regarding (03/06/2021)...



தமிழ்நாட்டிற்கான கோவிஷீல்டு & கோவாக்சின் தடுப்பூசிகள் தேதி வாரியான ஒதுக்கீடு விவரம்...

 கோவிட் 19 - தமிழ்நாட்டிற்கான கோவிஷீல்டு & கோவாக்சின் தடுப்பூசிகள் தேதி வாரியான ஒதுக்கீடு விவரம்...



TNPSC - மே 2021 துறைத் தேர்வுகள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

 TNPSC - மே 2021 துறைத் தேர்வுகள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு...

The last date for applying for departmental examination may 2021 has been extended up to 31.7.2021

மே 2021 துறைத் தேர்வுகள் விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு - 31.07.2021 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்...






தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 ஜூன் 2021...

 


தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 15 June 2021


தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், சென்னை-600 106 (தொலைபேசி எண்: 044-26214718) அறிவிக்கை.


தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள குறிப்பிடப்பட்டுள்ள மருந்து வழங்குவர்/சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வ. எண், பதவியின் பெயர், காலிப் பணியிட எண்ணிக்கை விபரங்கள்:


1. மருந்து வழங்குபவர் – 420


2. சிகிச்சை உதவியாளர்(ஆண்) – 53


3. சிகிச்சை உதவியாளர்(பெண்) – 82


மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை: 555


விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி (தேவைப்படும் கல்வித்தகுதிகள்):


1. மருந்து வழங்குபவர்


தமிழ்நாடு அரசால் நடத்தபெற்ற மருந்தாளுநர் பட்டயப் படிப்பு (சித்தா / யுனானி / ஆயுர்வேதா /ஓமியோபதி) அல்லது ஒருங்கிணைந்த மருந்தாளுநர் பட்டயப் படிப்பு (Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu)


2. சிகிச்சை உதவியாளர்(ஆண்)


டிப்ளமோ-இன் நர்சிங் தெரபி (Diploma in Nursing Therapy) by Directorate of Indian Medicine and Homoeopathy, Government of Tamil Nadu


3. சிகிச்சை உதவியாளர்(பெண்)


டிப்ளமோ-இன் நர்சிங் தெரபி (Diploma in Nursing Therapy) by Directorate of Indian Medicine and Homoeopathy, Government of Tamil Nadu


உயர் வயது வரம்பு (01.07.2021 அன்று உள்ளபடி):


1. ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட வகுப்பினர் (அருந்ததியர்), பழங்குடியினர் வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், இசுலாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இசுலாமியர்கள்) அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பதாரரின் குறைந்த பட்ச வயது 18 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்). அதிகபட்ச வயது 57 வருடங்கள் (பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது).


தேர்வு (விண்ணப்ப) கட்டணம்:


அனைத்து தரப்பு விண்ணப்பதாரர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.


சம்பள விகிதம்: சம்பள ஏற்றமுறை (திருத்தியமைக்கப்பட்டது)


1. மருந்து வழங்குபவர்


நாளொன்றுக்கு ரூ.750/- (ரூபாய் எழுநூற்று ஐம்பது மட்டும்) வீதம் (Hiring charges) தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்)


2. சிகிச்சை உதவியாளர்(ஆண்)


3. சிகிச்சை உதவியாளர்(பெண்)


நாளொன்றுக்கு ரூ.375/- (ரூபாய் முந்நூற்று எழுபத்து ஐந்து மட்டும்) வீதம் (Hiring charges) தினமும் 6 மணி நேரம் வாரத்தில் 6 நாட்கள்)


தேர்வு செய்யப்படும் முறைகள்:


விண்ணப்பதாரர்கள் தங்கள் எஸ்.எஸ்.எல்.சி / 10 வது இல் 20%, HSC/PUC இல் 30%, டிப்ளோமா நர்சிங் தெரபியில் பெற்ற 50% மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் இந்த இணைய பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் முழுமையான வடிவத்தில் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், “சென்னை – 600106 அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசியர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்’ அவர்களுக்கு 15.06.2021 அன்று மாலை 5.00 மணிக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்கள் மற்றும் இதர நெறிமுறைகள் மற்றும் கல்வி தகுதி, வயது, இதர

பிறவற்றிற்கு http://www.tnhealth.gov.in சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:


GOVERNMENT OF TAMIL NADU

DIRECTORATE OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY

Arignar Anna Government Hospital of Indian Medicine Campus,

Arumbakkam (PO)., Chennai – 600 106.


Website: www.tnhealth.tn.gov.in

E.mail: dimh.tn@nic.in


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Income Tax Deduction - DEE Information

   வருமான வரி பிடித்தம் - தொடக்கக் கல்வி இயக்கக தகவல் Income Tax Deduction - DEE Information தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ...