கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவாக்சின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவாக்சின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசியின் செயல் திறன் எப்படி?- ஆய்வு செய்ய ஐசிஎம்ஆர் முடிவு

 


கரோனா வைரஸுக்கு எதிராக தற்போது நாட்டில் புழக்கத்தில் இருந்து வரும் அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து அடுத்த வாரத்திலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வு செய்ய உள்ளது.


இந்த இரு தடுப்பூசிகளின் செயல்திறன், கரோனாவுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறது, எந்த அளவுக்கு உடலில் பாதிப்பைத் தடுக்கிறது ஆகியவை குறித்து முதல்முறையாக ஐசிஎம்ஆர் அமைப்பு ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சென்னையில் உள்ள ஐசிஎம்ஆர் அமைப்பின் தேசிய தொற்றுநோய்வியல் அமைப்பின் மூத்த விஞ்ஞானி மருத்துவர் தருண் பட்நாகர் கூறுகையில் “ 45 வயதுக்கு மேற்பட்ட 4ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஐசிஎம்ஆர் அமைப்பு தடுப்பூசி குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என இருதரப்பினரிடம் பிரித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.


இந்த ஆய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெறுவோர், அவரின் தடுப்பூசி நிலவரம் ஆகியவையும் கணக்கிடப்படும். இந்த ஆய்வின் நோக்கம் என்பது, கரோனா வைரஸை தீவிரம் அடையவிடாமல் தடுப்பூசி எந்த அளவு தடுக்கிறது, எந்த அளவுக்கு வீரியமாக தடுப்பூசி செயல்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளத்தான்.


நாட்டில் இரு தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் முதல்முறையாக இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு அடுத்த வாரத்திலிருந்து தொடங்கலாம்.


கரோனா வைரஸுக்கு எதிராக கோவிஷீல்ட் எவ்வாறு செயல்படுகிறது, கோவாக்சின் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஒப்பீடும் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.


இதுவரை நாட்டில் 20 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும் தீவிரமாக தொற்று ஏற்படாமல், தடுக்கலாம், உயிரிழப்பைத் தடுக்கலாம் என்று கூறியுள்ளது. அதேசமயம் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.


2 - 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி...

 இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி.  



மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல்.  


தடுப்பூசியின் 2 மற்றும் 3 ஆம் கட்ட பரிசோதனை 525 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட உள்ளது.

கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கிடையேயான இடைவெளி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...

 கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவு அறிக்கை -

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,

பொது நல மருத்துவர், 

சிவகங்கை.



ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டறிந்துள்ள AZD1222 தடுப்பூசியின் இந்திய வடிவமே  கோவிஷீல்டு  என்பதை அனைவரும் அறிவோம்.


ஆஸ்ட்ரா செனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கூட்டாக இந்த தடுப்பூசி குறித்த மூன்றாம் கட்ட ஆய்வுகளை 

 பிரேசில்,

அமெரிக்கா,

பிரிட்டன் போன்ற நாடுகளில் நடத்தி வருகின்றன.


ஆய்வின் இடைக்கால முடிவுகளை அவ்வப்போது நவீன மருத்துவ உலகின் பெயர்பெற்ற "லான்சட்" மருத்துவ இதழில்  அப்டேட் செய்கிறார்கள். 


இந்த மூன்றாம் கட்ட ஆய்வின் லேட்டஸ்ட் அப்டேட் 6.3.2021 அன்று வெளியிடப்பட்டது. 


 அந்த ஆய்வு முடிவில் முதல் டோஸ் கோவிஷீல்டுக்கும், இரண்டாவது டோஸ் கோவிஷீல்டுக்கும் இடையே 12 வாரங்கள் இடைவெளி விடும் பொழுது  தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 81.3% என்றும், 


அதே இடைவெளியை 6 வாரங்களுக்குள் சுருக்கினால் தடுப்பூசியின் நோய் தடுக்கும் திறன் 55.1%  என்ற அளவில் குறைகிறது என்றும் இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 


இந்த ஆய்வு முடிவுதனை பறைசாற்றுமாறு பிரிட்டன் அரசாங்கமும் கனடா அரசாங்கமும் அவர்களது நாட்டில் இரு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை 90 நாட்கள் என்று நிர்ணயம் செய்துள்ளனர். 


இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகள் குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கும் குழு, இது குறித்து பிப்ரவரி மாத மத்தியில் கலந்தாலோசனை செய்தது.


ஆலோசனையின் முடிவில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி பழைய முறைப்படியே 28 நாட்கள் இடைவெளியில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


அதிகபட்சம் கூடுதலாக இரண்டு வாரங்கள் , அதாவது 42நாட்களுக்குள்  தடுப்பூசி பெற வலியுறுத்துகிறது. 


தடுப்பூசியை கண்டறிந்து ஆய்வு நடத்தி  வரும் நிறுவனம் 12 வாரம் வரை இரண்டாவது டோஸ் ஊசியை தள்ளி வைத்தால் நோய் தடுக்கும் திறன் 81.3% என்று கூறியுள்ள போதிலும்,

இந்த இடைவெளியை ஆறு வாரங்களுக்குள் சுருக்கினால் நோய் தடுக்கும் திறன் 55.1%ஆக குறைகிறது என்று தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் போதிலும், 


இந்தியாவின் கோவிட் தடுப்பூசி பரிந்துரைக் குழு தொடர்ந்து 28 நாட்கள் இடைவெளியை பரிந்துரை செய்து வருகின்றது. 


இதற்கான காரணமாக குழு கூறுவது யாதெனில் "இந்தியாவில் தடுப்பூசிக்கு எந்த பஞ்சமுமோ தட்டுப்பாடோ வராது. இங்கு தான் பெரும்பான்மை தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே 28 நாட்களுக்குள் தடுப்பூசி போடுவது சிறந்தது." 


மேலும் கூறுவதாவது 

"ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டால் குறைவான எதிர்ப்பு சக்தியே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் இரண்டாவது ஊசியை உடனே அதாவது நான்கு வாரத்துக்குள் செலுத்திக்கொள்வது தான் சரி" என்கிறது. ( அறிவியல் ஆய்வோ ஒரு டோஸ் போட்டு 22வது நாளில் இருந்து 90 வது நாள் வரை சிறந்த எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்று கூறுகிறது) 


இருப்பினும், 

உலக சுகாதார நிறுவனம் கோவிஷீல்டு குறித்த இடைக்கால வழிமுறைகளை 10.2.2021 அன்று வழங்கியது. 


அதில் கோவிஷீல்டின்  இரு டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை 8 முதல் 12  வாரங்களுக்குத் தள்ளிப்போடுவது நல்ல வழிமுறை என்று கூறியுள்ளது. 


உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி குறித்து வழிமுறைகளைக் கூறும் வல்லுனர் குழுவில் இந்திய வல்லுனர்கள் பலர் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இந்தியாவில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற முன்கள மருத்துவ ஊழியர்களில் பெரும்பான்மையினர்  தங்களது இரண்டாவது டோஸ் ஊசியை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி தள்ளிப்போட்டு வருகின்றனர் என்று செய்திகளும் கள நிலவரமும் கூறுகின்றது. 


பொதுமக்களாகிய  அனைவரும் இந்திய கோவிட் தடுப்பூசி நெறிமுறைக் குழுவின் பரிந்துரையை ஏற்று இரண்டாவது டோஸ் 28 நாட்களில் போடுவது சிறந்தது என்று கருதினால் அப்போது போட்டுக்கொள்ளுங்கள். 


நிகழ்கால அறிவியலின்படி, 42 நாட்களுக்குள் இடைவெளியை சுருக்கினால் Efficacy 55.1% என்றும் 


இடைவெளியை 84 நாட்கள் வரை நீட்டினால், 81.3% efficacy என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 


இத்தகையதோர் ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது எனத் தெரிவிப்பது மட்டுமே எனது பணி. 


எனக்கான இரண்டாவது தடுப்பூசியை இந்த ஆய்வு வருவதற்கு முன்னமே எடுத்து விட்டேன். ஆயினும் இரண்டாவது டோஸ் இனிமேல் எடுக்க இருக்கும் மக்களுக்கு இந்த ஆய்வு குறித்தும்,


இந்திய அரசின் தடுப்பூசி வழிமுறை குழுவின் வழிகாட்டுதல்களையும் கூறிய திருப்தியில்  இந்தக் கட்டுரையை முடிக்கிறேன். 


இரண்டாவது டோஸ் தள்ளிப்போடுவது குறித்த வழக்கில்,

கற்றறிந்த சான்றோர் இடம்பெற்றுள்ள இந்திய கோவிட் தடுப்பூசி வழிமுறைக் குழுவின் தீர்ப்பே இங்கு  இறுதியானது.


அவர்கள் 28 நாட்கள் என்று தொடர்ந்து கூறிவருவதால் (அறிவியல் ஆய்வு முடிவுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் இக்குழுவினரின் இந்த தீர்ப்புக்கு நேரெதிராக இருந்தாலும்)

மக்கள் அனைவரும் அதை கடைபிடித்தாக வேண்டியதுதான் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.  


ஆயினும் பல மருத்துவ முன் கள ஊழியர்கள் நிகழ்கால அறிவியலை மதித்து தங்களுக்கான இரண்டாவது டோஸை தள்ளிப்போட்டுவருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.


சிந்தியுங்கள் 

சிந்திப்போரே சிறந்தவர்கள்


நன்றி...


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஆதாரங்கள் 

1. Phase III இடைக்கால முடிவு லான்சட் 

https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00528-6/fulltext


2. https://apnews.com/article/uk-study-2nd-virus-vaccine-shot-delay-53c40e579c3209a77ffc6ca798aff1a7


3. https://beta.ctvnews.ca/local/london/2021/3/9/1_5340124.html


4. https://beta.ctvnews.ca/national/coronavirus/2021/3/3/1_5331577.html


5. https://www.tribuneindia.com/news/chandigarh/beneficiaries-delaying-second-dose-on-purpose-says-expert-216160

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...