கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜூலை 12 - மலாலா தினம். (July 12 - Malala Day)...

  ஜூலை 12 - மலாலா தினம். அனைத்து குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்றும் பெண் கல்விக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்த போராளி. இள வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர்.



தாலிபான் பயங்கரவாதிகளின் தோட்டாக்களை மண்டியிடச் செய்து, மீண்டு எழுந்துள்ள பாகிஸ்தான் போராளிச் சிறுமி மலாலாவைக் கௌரவிக்கும் வகையிலும், உலக அளவில் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான விழிப்பு உணர்வை வலுப்படுத்தும் வகையிலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


உலக அளவில் 'மலாலா தினம்' கொண்டாடப்படும் என்பதே அந்த அறிவிப்பு. சர்வதேச அளவில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி, அடிப்படை உரிமை என்பதற்கான அடையாளமாகவே மலாலா திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்,  ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன்.


தற்போது, உலக அளவில் 6 கோடியே 10 லட்சம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத அவல நிலையில் வாடுகிறார்கள். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் விழிப்பு உணர்வை வலுப்படுத்துவதே மலாலா தினத்தின் நோக்கம்.


நாடு, மொழி, மதங்கள் கடந்து தனக்குக் கிடைத்துள்ள ஆதரவில் நெகிழ்ந்து உலகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார், 

இனி மலாலாவின் சரித்திரத்தை நினைவுகூர்வோம்...


தைரிய தேவதை!


வீதிக்கு வருவதே வீரதீரச் செயல், எந்த நேரமும் தாக்கப்படக்கூடிய அச்சம், 'நாமும் நாளை இப்படித்தான் தெருவில் பிணமாகக் கிடப்போமா?' என்கிற பீதி... 2003 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் தாலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள் சந்தித்த அவலநிலையே இவை.


எல்லாவற்றுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள் குண்டுவைத்து தகர்க்கப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, பெண்களுக்குக் கல்வி கிடைக்காமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்தனர்.


இக்கொடுமைகளை எதிர்த்து நின்றாள். 2009-ல் தன் எழுத்தின் மூலம் தாலிபான்களில் அட்டகாசங்களை உலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டினாள். ஸ்வாட் பகுதி முழுவதுமே தாலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்து மீள்வதற்கு வித்திட்டாள்.


அவள் மலாலா யூசஃப்சாய். அப்போது அவளுக்கு வயது 11. ஆம்,  தாலிபான்களின் துப்பாக்கித் தோட்டாக்கள் தீண்டிய 14 வயது போராளிச் சிறுமியைப் பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.


சக தைரியச் சிறுமிகளைப் போலவே யூனிஃபார்ம் அல்லாத சாதாரண உடை அணிந்து, புத்தகங்களை மார்பில் மறைந்து பள்ளிக்குச் சென்று வந்த மலாலாவிடம் டைரி எழுதும் பழக்கம் இருந்தது. டைரிக் குறிப்பின் ஒவ்வொரு வாக்கியமும் தாலிபான்கள் இழைத்துக்கொண்டிருக்கும் கொடுமைகளின் பதிவாகவே இருந்தது. அதை அப்படியே பி.பி.சி. உருது மொழிப் பிரிவுக்கு புனைப்பெயரில் அனுப்பிவைத்தாள் மலாலா. எழுத்தின் வீரியம் உணரப்பட்டதால், உடனடியாக வலைப்பதிவு தொடராக வெளியிடப்பட்டது. அதுவே, ஸ்வாட் பகுதியில் இருந்து தாலிபான்கள் விரட்டி அடிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.


அதன்பின், நியூயார்க் டைம்ஸ் ஆவணப் படம் மூலம்தான் தெரியவந்தது, பிபிசி-யில் தன் டைரிக் குறிப்புகளை வழங்கியது 11 வயதுச் சிறுமி மலாலா என்று. முதன்முறையாக மலாலாவின் முகத்தைப் பார்த்த உலகம் வியப்பில் ஆழ்ந்தது. ஹிட்லரின் வெறிச் செயல்களைத் தனது டைரிக் குறிப்புகள் மூலம் வரலாற்றுப் பதிவாக்கிய ஆன்னி ஃபிராங்க்கை நினைவூட்டினாள்.


மலாலாவின் தைரியத்தைக் கொண்டாடியது பாகிஸ்தான். அந்நாட்டின் இளம் அமைதியாளருக்கான முதல் விருதை வழங்கி கௌரவித்தது பாகிஸ்தான் அரசு. பெண் கல்விக்காகப் போராடும் அவளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன.


இவற்றைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்ட தாலிபான்கள், மலாலாவை தங்கள் 'ஹிட்' லிஸ்டில் வைத்து, அவளைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினர். மின்கோராவில் உள்ள பள்ளி வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தவளைச் சுட்டனர். கழுத்திலும் தலையிலும் தோட்டாக்கள் துளைக்க, படுகாயத்துடன் விழுந்தாள். அந்தத் தோட்டாக்களுக்கே மலாலாவின் மகத்துவம் தெரிந்திருக்கிறது. ஆம், தோட்டக்கள் அவள் உயிரைப் பறிக்கவில்லை.


உடனடியாக, பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பாகிஸ்தான் மக்களுக்கு மலாலா குறித்த வருத்தமும், தாலிபான்கள் மீதான கோபமும் மிகுதியானது. உலக நாடுகள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பினர். அதேவேளையில், மலாலா உயிர்பிழைக்கப் பிரார்த்தனைகளும் தொடர்ச்சியாக நடந்தன.


இதனிடையே, மலாலா தாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியால், பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆயுதக் கலாசாரத்துக்கு எதிராக மக்களிடையே உணர்வலைகள் எழுந்தன. பெண்கல்விக்காகக் குரல் கொடுத்ததற்காகவும், மதசார்பற்றவளாக செயல்பட்டு வருவதற்காகவுமே மலாலாவைத் தாக்கினோம் என்ற தாலிபான்களின் விளக்கமும் மக்களின் கொதிப்பைக் கூட்டியது.


பாகிஸ்தான் அரசின் முயற்சியால் மலாலாவுக்கு இங்கிலாந்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நினைவு இழந்தவளை மீட்க, மருத்துவர்கள் கடுமையாகப் போராடினர். லட்சக்கணக்கான உள்ளங்களின் வேண்டுதல்களுக்குப் பலன் கிடைத்தது. 


கல்வியில் பின்தங்கி இருக்கும் பாகிஸ்தானில் 'நானும் மலாலா' என்ற முழக்கம், மாணவர்களின் மந்திரச் சொல் ஆனது.


2013 ஆம் ஆண்டு ஜூலை 12இல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர். இதுவே தாம் தாக்குதலுக்கு உள்ளான பிறகு அவர் அளித்த முதல் பேட்டி ஆகும்.


2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.


இன்றைய (11-07-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 11, 2021




உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பரணி : புத்துணர்ச்சி உண்டாகும். 


கிருத்திகை : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------




ரிஷபம்

ஜூலை 11, 2021



காது தொடர்பான உபாதைகள் அகலும். வித்தியாசமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



கிருத்திகை : உபாதைகள் அகலும். 


ரோகிணி : மேன்மை உண்டாகும். 


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜூலை 11, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மிருகசீரிஷம் : புரிதல் ஏற்படும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------




கடகம்

ஜூலை 11, 2021



வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



புனர்பூசம் : லாபம் மேம்படும்.


பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.


ஆயில்யம் : ஆதரவான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஜூலை 11, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தை வழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : திறமைகள் வெளிப்படும்.


பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திரம் : நன்மையான நாள்.

---------------------------------------




கன்னி

ஜூலை 11, 2021



உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கவிதை மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அஸ்தம் : ஈடுபாடு உண்டாகும்.


சித்திரை : முன்னேற்றம் ஏற்படும். 

---------------------------------------




துலாம்

ஜூலை 11, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : புரிதல் மேம்படும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




விருச்சிகம்

ஜூலை 11, 2021



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : மேன்மையான நாள். 


கேட்டை : லாபம் மேம்படும்.

---------------------------------------




தனுசு

ஜூலை 11, 2021



சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை குறைத்துக்கொள்ளவும். புதிய நபர்களின் அறிமுகத்தின்போது சூழ்நிலைகளின் தன்மையை அறிந்து செயல்படவும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : கவனம் வேண்டும்.


பூராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.


உத்திராடம் : புரிதல் வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஜூலை 11, 2021



வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் புதுவிதமான யுக்திகளின் மூலம் லாபங்களை பெறுவீர்கள். வாக்கு சாதுர்யத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தானியம் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.


அவிட்டம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




கும்பம்

ஜூலை 11, 2021



பங்காளி தொடர்பான உறவுகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு நேரிடும். சமூகப்பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : பொறுமை வேண்டும்.


சதயம் : உடல் சோர்வு நேரிடும்.


பூரட்டாதி : நன்மையான நாள்.

---------------------------------------




மீனம்

ஜூலை 11, 2021



நீண்ட நாட்களாக இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி : தாமதங்கள் நீங்கும்.


உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.


ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------


மாவட்ட வருவாய் அலுவலர்கள் 30 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

 


மாவட்ட வருவாய் அலுவலர்கள் 30 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை(வாலாயம்) எண்: 2857, நாள்: 10-07-2021 வெளியீடு...


>>> அரசாணை(வாலாயம்) எண்: 2857, நாள்: 10-07-2021...


அரசாணை(வாலாயம்) எண்: 47, நாள்: 07-07-2021 - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்...

அரசாணை(வாலாயம்) எண்: 47, நாள்: 07-07-2021 - CEO's Transfer...



SBI BANK - 6100 காலிப்பணியிடங்கள் -விண்ணப்பிக்க கடைசி தேதி: 26/07/2021 - NOTIFICATION PDF...

 


ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961

ADVERTISEMENT NO: CRPD/APPR/2021-22/10

 (ONLINE REGISTRATION OF APPLICATION: FROM 06.07.2021 TO 26.07.2021)

ONLINE EXAMINATION: TENTATIVELY IN THE MONTH OF AUGUST 2021

பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலிப்பணியிடங்கள்...

ENGAGEMENT OF APPRENTICES UNDER THE APPRENTICES ACT, 1961


இவ்வங்கியில் காலியான உள்ள 6100 பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் SBI


பணி Apprentices


காலிப்பணியிடங்கள் 6100+


தேர்வு செய்யப்படும் முறை Online Written test, Test of Local language & Medical Examination


வயது 20-28


விண்ணப்பிக்க கடைசி தேதி 26/07/2021


விண்ணப்ப கட்டணம் Others - ரூ.300/-


SC/ST/PWD/Women - No Fee


சம்பள விவரம் ரூ.15,000/-


கல்வி தகுதி அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate அல்லது அதற்கு இணையான தேர்ச்சி..


அதிகாரபூர்வ வலைத்தளம் https://bank.sbi/web/careers/current-openings


>>>  CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION-PDF





தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பணிபுரிய ஒரு வாய்ப்பு - கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கொண்ட PDF File...



>>> தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பணிபுரிய ஒரு வாய்ப்பு - கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்கள் கொண்ட PDF File...


Fit India Movement - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 048001/ எம்/ இ4/ 2019, நாள்: 02-07-2021...

 


Fit India Movement - இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 048001/ எம்/ இ4/ 2019, நாள்: 02-07-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

November 14 - Jawaharlal Nehru's birthday

  நவம்பர் 14 - ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்  November 14 - Jawaharlal Nehru's birthday சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1...