கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.08.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்:13-08-2021 மற்றும் கூட்டப்பொருள்...



 பள்ளிக் கல்வித் துறை -  அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் 17.08.2021 அன்று சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக கூட்டரங்கில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்:13-08-2021 மற்றும் கூட்டப்பொருள்...


>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 2064/பிடி1/இ2/2021, நாள்:13-08-2021 மற்றும் கூட்டப்பொருள்...



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 13-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான சமூகஅறிவியல் பாடக் காணொளிகள்(Social Science Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 13-08-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான சமூகஅறிவியல் பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - பேசும் ஓவியம் – கதை - முயற்சி திருவினை ஆக்கும் - https://youtu.be/KW8kvaILcnk?t=2977



💥 இரண்டாம் வகுப்பு - பேசும் ஓவியம் – கதை - நேருஜி - https://youtu.be/_6VKaNf7WZY?t=5544



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 4 – பாதுகாப்பு - பகுதி 3 -  கூர்மையான ஆயுதம் மற்றும் கண்ணாடிப் பொருட்கள் பாதுகாப்பு - https://youtu.be/Pk9JuM9ubgM



💥 நான்காம் வகுப்பு - அலகு 1 – பல்லவ மன்னர்கள், குறுநில மன்னர்கள், சங்ககால அரசு நிர்வாகம், பெண்களின் மரியாதை, விருந்தோம்பல் - பகுதி 2 - https://youtu.be/r5eTidj6g_g



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 4 – வளிமண்டலம் - காலநிலை காரணிகள் - வெப்பநிலை, அழுத்தம், காற்று - https://youtu.be/3ReoPifLd2Q



கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 13-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) சமூக அறிவியல் பாடக் காணொளிகள்(Social Science Videos)...

 


கல்வித் தொலைக்காட்சியில் 13-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடக் காணொளிகள்...



💥 ஆறாம் வகுப்பு - அலகு 4 – தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் -  https://youtu.be/_6VKaNf7WZY?t=1943



💥 ஏழாம் வகுப்பு -  அலகு 2 – வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் - https://youtu.be/KW8kvaILcnk?t=8387



கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 13-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



 கல்வி தொலைக்காட்சியில்  13-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 3 - தமிழர் மருத்துவம் - https://youtu.be/A937Po9Xun0



 💥 ஆங்கிலம் - Unit 4 – Poem – A Thing of Beauty - https://youtu.be/KW8kvaILcnk?t=6577



 💥 கணக்கு - அலகு 1 - எண்கள் - விகிதமுறு எண்கள் பண்புகளை அறிதல் - பகுதி 4 -  https://youtu.be/L3GG9_XwTqs



💥 அறிவியல் - அலகு 17 - தாவரவியல் - தாவர உலகம் - வகைப்பாட்டியல் - https://youtu.be/OodyH7S697E



💥 சமூக அறிவியல் - அலகு 3 - குடிமையியல் - சமய சார்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் -  https://youtu.be/KeSMotXChqg



ஒன்பதாம் வகுப்பிற்கான(9th Standard), அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...


ஒன்பதாம் வகுப்பிற்கான, அனைத்து பாடங்களின் குறைக்கப்பட்ட பாடத்திட்ட(Reduced Syllabus) விவரம்...


>>> தமிழ் வழி - குறைக்கப்பட்ட பாடத்திட்ட விவரம்...


>>> English Medium - Reduced Syllabus...



இன்றைய (14-08-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 14, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். போட்டியில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : கலகலப்பான நாள்.


பரணி : பாராட்டுகளை பெறுவீர்கள்.


கிருத்திகை : பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 14, 2021



உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சோர்வாக காணப்படுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத சில உதவிகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உடல் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : மாற்றமான நாள்.


ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 14, 2021



எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதுவிதமான பயிற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும்.


புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 14, 2021



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : லாபம் அதிகரிக்கும்.


ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 14, 2021



மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : ஈடுபாடு உண்டாகும்.


பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.


உத்திரம் : சாதகமான நாள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 14, 2021



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகள் திருப்திகரமாக அமையும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த மறைமுகமான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் சந்திப்பின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


அஸ்தம் : பிரச்சனைகள் குறையும். 


சித்திரை : அனுகூலமான நாள்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 14, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை நம்பியிருக்காமல் தாமே செயல்களை முடிப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான வெளியூர் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : திருப்திகரமான நாள்.


சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 14, 2021



கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நண்பர்களுடனான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் புதுவிதமான மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தொழிலில் முதலீடுகள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 14, 2021



கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.


பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 14, 2021



மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : குழப்பங்கள் நீங்கும்.


திருவோணம் : நுட்பங்களை அறிவீர்கள்.


அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 14, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனநிறைவை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


சதயம் : விரயங்கள் உண்டாகும்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 14, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்தவொரு செயலிலும் கோபமின்றி நிதானத்துடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் (Tamilnadu Budget) சிறப்பம்சங்கள்...



>>> தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் (Tamilnadu Budget) சிறப்பம்சங்கள் (PDF)...

* மலைப் பகுதியில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்.22 பள்ளிகள் தரம் உயார்த்தப்படும்

* தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும்

* அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படும்

* உயர்கல்வி துறைக்கு 5,369.09 கோடி ஒதுக்கீடு

* புதிதாக 10 கலை,  அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும்

* கல்வித்துறைக்கு ரூ,32,599.54/- கோடி நிதி ஒதுக்கீடு.

* 865 உயர்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை 

* மாணவர்களுக்கு டேப் ( தொடுதிரை கணினி)  வழங்கப்படும்.

* தமிழக காவல் துறையில் 14,317 பணியிடங்கள் நிரப்பப்படும்.

* திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும். 


தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது.


புதிதாக 1000 பேருந்துகள்

 தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு டீசல் மானியமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


மெட்ரோ ரயில் போக்குவரத்தின் 2ஆம் கட்டப் பணிகள் 2026க்குள் நிறைவு பெறும்.


தமிழகத்தில்தான் அதிக அளவிலான தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தற்போது புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.


17,899.17  கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.


பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு

 பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும். 

2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக ஐஇருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது. 

கற்றல் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழகத்தை கொண்டுவர நடவடிக்கை 

ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சி மேம்படுத்துதல், பெற்றோர்களின் பங்கு ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தரவுகளை கண்காணிக்க, 433 கல்வி ஒன்றியங்களுக்கு ஆசிரியர்களுக்கு 40 டேப்லட் வழங்கப்படும்.  

8 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை பெற உறுதி செய்யும்பொருட்டு 'எண்ணும் எழுத்தும் இயக்கம்' கொண்டு வரப்படும். 

ரூ. 20 கோடி ரூபாயில் 865 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்றார். 


தமிழகம் மின் மிகை மாநிலம் அல்ல: பழனிவேல் தியாகராஜன்

 கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று  தவறானது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்று அறிவித்தார்.


நகர்ப்புற மேம்பாடு தொடர்பான முக்கிய அறிவிப்புகள்

 

புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கலைஞர் நகரப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு 17,899.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு

சென்னை குமரி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டத்திற்கு 2,056 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

குடிசை மாற்று திட்டத்திற்கு 3954 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வீட்டு வசதித்துறையில் உலக வங்கி திட்டத்திற்கு 320.40 கோடி.

வீட்டு வசதித்துறையில் ஆசிய வங்கி திட்டத்திற்கு 171 கோடி.

புதிய பேருந்துகள் வாங்க 623.59 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் 2026ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியில் மின் கம்பங்கள் அமைக்கப்படும்.

நகராட்சிகளின் மண் சாலைகளின் தரம் உயர்த்தப்படும்.


சென்னைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் முக்கிய திட்டங்கள்

  •  சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும். அதன்படி, சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.
  • சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
  • சென்னையுடன் இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு ரூ.2,056 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சுவரொட்டிகள் இல்லாத சென்னை
  • சென்னை மாநகரத்தில், பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.
  • சென்னையில் 3 புதிய மேம்பாலங்கள்
  •  சட்டமன்ற உறுப்பினர் தொகுதிநிதி ரூ.3 கோடியாக மீண்டும் அளிக்கப்படும்.
  •  ரூ.100 கோடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்திய நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும்.
  •  சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலை என மூன்று இடங்களில் ரூ.335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும்.

 நீர்நிலை புனரமைப்புக்கு ரூ.610 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதில் ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும். 

மொத்தமாக பாசனத் திட்டத்திற்காக  ரூ. 6,607 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நில விவகாரங்கள், கொள்முதல் பிரச்னைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண்காணிக்கப்படும். 

நீர் நிலைகளைக் கண்டறியவும் அதைப் பாதுகாக்கவும் ஜிபிஎஸ் முறைகளும், ட்ரோன்களும் உபயோகித்து நெறிமுறைப்படுத்தப்படும். 

மேட்டூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை பழையநிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள்

 தமிழக அரசு ரூ.8,017.41 கோடி செலவில் வீடு இல்லாதவர்களுக்கு 2,49,877 வீடுகள் கட்டித் தரப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

 79,395 மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். 1.27 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வகை செய்யப்படும்.

 தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும்.

 தமிழகத்தில் புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும்.

 200 குளங்களின் தரம் உயர்த்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 111.24 கோடி.

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

தமிழக காவல்துறையில் 14,317 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

 

தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

 

200 குளங்களின் தரம் உயர்த்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 111.24 கோடி.

 

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகள் அமைக்கப்படும்.

 

சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

 தமிழ்நாட்டின் நிதிநிலை மூன்றாண்டுகளில் சரி செய்யப்படும். 

புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும். 


1921ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்றம் நிகழ்வுகள் கணினிமயமாக்கப்படும். 

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகம்

 பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 தலைமைச்செயலகம் முதல் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்.

 

தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு

 

தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டில், ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 

மேலும், கீழடி, கொற்கை உள்ளிட்ட  தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட  தொல்லியல் தளங்களாக அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

கருணாநிதி செம்மொழி விருது

பொது நிலங்களை முறையாகப் பயன்படுத்த அரசு நில மேலாண்மை அமைப்பு அமைக்கப்படும்.

 

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்.

 

ஆண்டுதோறும் ஜூன் 3ல் கருணாநிதி செம்மொழித்தமிழ் விருதும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

 

 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் மொத்தம் பெறப்பட்ட மனுக்களில், இதுவரை 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

 

இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜட் உரையை தொடங்கினார் பழனிவேல் தியாகராஜன்.

 

தொடர்ந்து அவர் பேசுகையில், நிதியாண்டின் எஞ்சிய 6 மாத காலத்துக்கு மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை பொருந்தும்.

 

எந்தவொரு சிக்கல்களையும் சரி செய்யும் முதல் படி அதனை அடையாளம் கண்டு அதன் ஆழத்தை புரிந்து கொள்வதுதான் .

 

முதல்வர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து அதனை படிப்படியாக நிறைவேற்றுவோம்.


தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் துறை ரீதியாக நிதி ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் வெளியிட்டார். துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களையும் வெளியிட்டார்.


➤ தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.


➤ தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.


➤ காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.


➤ தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.


➤  நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.


➤ மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.


➤ குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.


➤ நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.


➤ மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.


➤ பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.


➤ உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.


➤ மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.


➤ சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.


➤ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.


➤ விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.

 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பதவியேற்றதுமே 5 வாக்குறுதிகளை நிறைவேற்றம் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.


கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.


 தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினரின் இருக்கைக்கு முன்பாகவும் கணினி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கையடக்கக் கணினியும் வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சா் நிதிநிலை அறிக்கையை வாசிக்க, வாசிக்க அதிலுள்ள வரிகள் அனைத்தும் கணினியில் தெரியும். மேலும், நிதிநிலை அறிக்கையை புத்தக வடிவில் கையடக்கக் கணினியில் பாா்க்க முடியும். இதற்காக சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...