கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வெங்காயங்களை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவம் உருவாக்கியுள்ளார் சுதர்ஷன் பட்நாயக்...

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, ஒடிசாவின் புரி கடற்கரையில் வெங்காயங்களை வைத்து கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவத்தை மணலில் செதுக்கியுள்ளார் பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்னாயக்...


இவரின் இந்த சிற்பம், இந்தியாவின் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்...

ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்...


குஜராத் மாநிலத்தில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.


மஹா ராஸ் திருவிழாவிற்காக அங்குள்ள துவாரகா நகரத்திற்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆகிர் இனப்பெண்கள் திரண்டனர். 


கலாச்சார முறைப்படி சிவப்பு நிறத்தில் உடையணிந்து, திருவிழாவில் பெண்கள் பங்கேற்றனர்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய பேடிஎம் முடிவு...



10 சதவீத ஊழியர்களுக்கு பேடிஎம் Paytm கொடுத்த அதிர்ச்சி...


பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும்  சுமார் 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 


நிதிச் சேவையை வழங்கும் நிறுவனமான பேடிஎம், நிதி ஆதாரங்கள் பெருகாததால், கடந்த ஒரு சில மாதங்களாக செலவினக் குறைப்பு நடவடிக்கையை திட்டமிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


அண்மையில், நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களுக்கான வழிமுறைகளை ஆர்பிஐ கடுமையாக்கியதைத் தொடர்ந்து, பொருளை வாங்கிக்கொண்டு பிறகு பணம் செலுத்துவது உள்ளிட்ட சிறிய கடன் சேவைகளை பேடிஎம் நிறுத்திக்கொண்ட நிலையில், ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில், புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களில் இந்த ஆண்டு நடக்கும் மிகப்பெரிய பணிநீக்கமாக இது பார்க்கப்படுகிறது..


கடந்த சில ஆண்டுகளாக, புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் நிதி ஆதாரம் குறைந்து போயிருக்கும் நிலையில், புதிதாகத் தொடங்கிய நிறுவனங்கள் சில ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடங்கியிருப்பது, புதிதாக தொழில் தொடங்கும் அளவை பாதிக்கும் என்ற சந்தேகமும் எழுகிறது.


புதிய நிறுவனங்கள் பல 2023ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் 28 ஆயிரம் ஊழியர்களை நீக்கியிருக்கிறது.  இதுவே கடந்த 2022ல் 20 ஆயிரமாகவும், 2021ல் 4,080 ஆகவும் இருந்துள்ளது.


விஜய் ஷேகர் ஷர்மாவால் நிறுவப்பட்ட பேடிஎம் போஸ்ட்பெய்ட், 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான கடன்களை வழங்கி வருகிறது.


 ஆனால், வழிகாட்டு நெறிமுறைகள் மாறியதால், அவை நிதி மேலாண்மை மற்றும் காப்பீட்டு தரகு துறைகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.


இது குறித்து நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்  பேசுகையில், நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் வகையிலும், செயல்திறனை அதிகரிக்கவும், தொடர்ச்சியாகச் செய்யப்படும் செயல்களை எல்லாம், செயற்கைப் நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தி ஆட்டோமேஷன் முறையில் மாற்றிவிட்டோம்.


 இதனால், பணி இல்லாத ஆபரேஷன், விற்பனை, பொறியியல் துறைகளில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். 


இதன் மூலம் செலவினம் 10 - 15 சதவீதம் குறையும் எனத் தெரிவித்துள்ளார்.


தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கவனத்திற்கு...

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கவனத்திற்கு...


தென்மாவட்ட பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க நடவடிக்கை...


தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்த மாவட்டங்களில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


அவரின் அறிவுரையின்படி இந்த 4  மாவட்டங்களிலும் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் இருக்க பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் மற்றும் கூடுதலாக 2 இணைச் சீருடைகள் ஆகியவை அருகாமையிலுள்ள மாவட்டங்களிலிருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது.


-குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை செயலர்



TNPSC குரூப் 2 மற்றும் 2A காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு...

 


TNPSC குரூப் 2 மற்றும் 2A காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு...


TNPSC GROUP 2/2A EXAM


நகராட்சி ஆணையர் பணியிடங்கள் 30 ஆக உயர்வு..


சார்பதிவாளர் பணியிடங்கள் 26 ஆக உயர்வு.



>>> TNPSC அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்...



தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்...


கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

        

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப்  பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது.


ரஷியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. 


உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உக்ரைன் மீது கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, இதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்புக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பொருள் உதவியும், ராணுவ உதவியும் செய்து வருகின்றன.


இதனிடையே இது குறித்து பல்வேறு தகவல்களும் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் ரஷ்யா குறித்து தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் இருந்ததாகவும், அதனை நீக்க கோரி ரஷ்யா கூகுள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.


ஆனால், இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால், ஆல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு உள்ளடக்கம், தணிக்கை, தரவுகள் உள்ளிட்டவை தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா தொடர்ந்து முரண்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என ரஷியா விமர்சித்துள்ளது. 


உக்ரைன் மீதான ரஷியாவின் போரை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷிய அரசு குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன்..

சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன்..


சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.


கடைசி சுற்று முடிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் ( 2 வெற்றி, 5 டிரா), அர்ஜூன் எரிகாசி (3 வெற்றி, 1 தோல்வி, 3 டிரா) ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.


வெற்றி, தோல்வி, டிரா கணக்கிட்டு புள்ளிகள் வழங்கியதில் முதலிடத்தை பிடித்த குகேஷ்க்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...