கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்...



 ♥பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்...


♥நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். 


♥அம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம். 


♥1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும். 


♥2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா? 


♥3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள். 


♥4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்! 


♥5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள். 


♥6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள். 


♥7. நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும். 


♥8. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னோர்களின் சிறப்புகளையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள். 


♥9. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே உங்கள் மகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள். 


♥10. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். வெளியுலகில் எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். மேலும் தற்காப்பு கலைகளையும் சொல்லிக் கொடுங்கள். 


♥11. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை எதிர் பார்க்க முடியாது. அனைத்து வேலைகளை பற்றியும் சொல்லி கொடுங்க. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக் கொடுங்கள். 


♥12. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்!


கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்?

 கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்?



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...

 

வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டாரக்கல்வி அலுவலர் பதவிக்கு, 01.01.2024-ன்படி தகுதி வாய்ந்தவர்களின் முன்னுரிமை பட்டியல்...



MSHM TO BEO Panel 2024 - Final List Published...


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் பதவி உயர்வு மூலம் நியமனம் 01.01.2024 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது திருத்தம் , சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இறுதி தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4797/ ஐ1/ 2024, நாள்: 23-05-2024...


Priority List of Eligible Candidates for the Post of Block Education Officer from Middle School Head Master as on 01.01.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வேளாண் உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முக தேர்வு ரத்து - உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக TNPSC நடவடிக்கை...

வேளாண் உதவி இயக்குநர் பதவிக்கான நேர்முக தேர்வு ரத்து - உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு காரணமாக டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை...



மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...


மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சாதாரண குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை - மாவட்ட வருவாய் அலுவலர்...



 சாதாரண குடிமகன் பச்சை மையினால் கையொப்பமிடக் கூடாது என்பதற்கான அரசாணைகள் எதுவும் இல்லை - மாவட்ட வருவாய் அலுவலர்...



There are no ordinances that prevent ordinary citizens from signing in green ink - District Revenue Officer...





அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வகுப்பு மற்றும் பிரிவுகளை EMIS வலைத்தளத்தில் மாற்றம் செய்யும் வழிமுறை...


 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வகுப்பு மற்றும் பிரிவுகளை EMIS வலைத்தளத்தில் மாற்றம் செய்யும் வழிமுறை - Class Change Request...


Dear Team,

Class change option module has been released for Government , Government Aided and Private schools.

Please find the attached documents for the steps...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...