கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இன்று கார்த்திகைதீபம்...

விளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே "பெரிய கார்த்திகை' எனப் போற்றப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய சிவன், தனிப்பெருங்கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் திருக்கார்த்திகை.
இறைவனுக்கு நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. கார்த்திகைக்குரிய பிரசாதமாக கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பம், பாயாசம், பிடிகொழுக்கட்டை ஆகியவையும் நைவேத்யத்தில் இடம்பெறும். திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளை அவசியம் ஏற்றவேண்டும். வீட்டு வாசலிலும், வீட்டுக்குள்ளும் முக்கிய இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது, கைக்குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சாம்பிராணி, பத்தி போன்ற தூபதீபங்களை முதலில் விநாயகருக்கும், பின் திருவிளக்கு ஜோதிக்கும் காட்டி, பின் மற்ற தெய்வப்படங்களுக்கு காட்ட வேண்டும். இன்று மாலை வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன், விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்துக் கொள்ள வேண்டும். இதனால், வீட்டில் செல்வம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன. கார்த்திகை காலம் மட்டுமின்றி, விளக்கேற்றுவது எப்போதுமே நன்மை தரும். தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்தவை. கல்வியில் உயர்வு, திருமணத்தடை நீங்க இந்த வேளையில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தரே பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், அவள் மீண்டும் உயிர் பெறுவதற்காகப் பதிகம் பாடினார். அதில்,"விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்' என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.இன்று நம் வீடுகளில் ஏற்றும் கார்த்திகை தீபம், இனி நடக்கப் போகும் நாட்களில் எல்லாம் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கட்டும்.

>>>நவம்பர் 27 [November 27]....

நிகழ்வுகள்

  • 1703 - இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது.
  • 1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
  • 1895 - பாரிசில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
  • 1935 - இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.
  • 1940 - ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைதுசெய்து தூக்கிலிட்டான்.
  • 1944 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டஃபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணுவாயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.
  • 1971 - சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
  • 1975 - கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர் ஐரிஷ் குடியரசு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  • 1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொருங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.
  • 1999 - நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தெரிவு செய்யப்பட்டார்.
  • 2001 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
  • 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
  • 2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.
  • 2007 - ஈழப்போர்: இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1934 - யோசப் பரராஜசிங்கம், இலங்கை, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர், (இ. 2005)
  • 1940 - புரூஸ் லீ, தற்காப்புக்கலை நிபுணர், நடிகர் (இ. 1973)
  • 1942 - ஜிமி ஹென்றிக்ஸ், அமெரிக்க கிட்டார் கலைஞர் (இ. 1970)
  • 1963 - திலீபன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி, உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ. 1987)
  • 1965 - பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதுநிலைத் தளபதி (இ. 2008)

இறப்புகள்

  • கிமு 8 - ஹோராஸ், இத்தாலியக் கவிஞர் (பி. கிமு 65)
  • 1982 - லெப்டினன்ட் சங்கர், ஈழப்போராட்டத்தில் இறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளி (பி. 1960)
  • 2008 - வி. பி. சிங், முன்னாள் இந்தியப் பிரதமர் (பி. 1931)

சிறப்பு நாள்

  • தமிழ் ஈழம் - மாவீரர் நாள்

>>>பிரமோஸ் ஏவுகணை திட்டவிஞ்ஞானியாக மாணவி தேர்வு

 
நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி, பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ், ராஜேஸ்வரி தம்பதியின் மகள் தேன்மொழி, 21; இவர், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மின்னியல் துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இந்த பல்கலைக் கழகத்தில் கடந்த வாரம் கடல்வழி மற்றும் வான்வழித் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானிகளை தேர்வு செய்வதற்கான கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.இதில் மாணவி தேன்மொழியை, பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானியாக, திட்ட அதிகாரி அனில்மிஸ்ரா தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.இதையடுத்து, பிரமோஸ் ஏவுகணை திட்ட விஞ்ஞானி தேன்மொழிக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு செயல்முறை பயிற்சியும், அதனைத் தொடர்ந்து விஞ்ஞானி பணியும் வழங்கப்படும்.இந்தியா, ரஷ்யா மின்னணு தொலைத் தொடர்புத் துறை இணைந்து இந்த பிரமோஸ் ஏவுகணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். சாதனை மாணவி தேன்மொழியை வடக்குத்து ஊராட்சி தலைவர் ஜெகன் மற்றும் அப்பகுதி மக்கள் வாழ்த்தினர்.

>>>தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...

>>>அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

 
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.
பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில் ஒருமுறையேனும் என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று!
நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

>>>ரத்த வங்கி மேலாண்மையை மேம்படுத்த கம்ப்யூட்டர்கள்!

ரத்த வங்கி மேலாண்மையை மேம்படுத்த கம்ப்யூட்டர்கள், டேட்டா கார்டுகளை முதல்வர்  வழங்கினார்.
இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தன்னார்வ ரத்த தான கொடை திட்டத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தரமான மற்றும் பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகள், தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடியாக சென்றடைவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. தமிழகத்தில் 85 அரசு ரத்த வங்கிகள், 180 தன்னார்வ தனியார் ரத்த வங்கிகள், 9 மத்திய, மாநில நிறுவன ரத்த வங்கிகள் என மொத்தம் 274 அரசு அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன.தமிழகம், கடந்த ஆண்டில் 7.11 லட்சம் ரத்த அலகுகளை தன்னார்வ ரத்த கொடை திட்டத்தின் மூலம் சேகரித்துள்ளது. மேற்கண்ட ரத்த வங்கிகள் மட்டுமல்லாமல், 196 அரசு மற்றும் 57 தனியார் என மொத்தம் 253 ரத்த சேமிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் ரத்தத்தை பாதுகாக்கவும், சேமித்து வைத்து நோயாளிகளின் அவசரகால ரத்த தேவைகளை பூர்த்தி செய்யவும் அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளது. 
அரசு ரத்த வங்கிகளின் செயல்பாடுகள் வலைதளத்தின் www.tngovbloodbank.in மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த வலைதளம் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் தங்கள் கொடை விருப்பத்தை (இ-ரிஜிஸ்ட்ரி) பதிவு செய்வதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும், இவ்வலைதளத்தில் உள்ள தன்னார்வ ரத்த கொடையாளர் விவரங்கள் அரசு ரத்த வங்கிகளின் அவசரகால ரத்த தேவையை பூர்த்தி செய்வதற்கு உதவியாக உள்ளது.இந்த  வலைதளம் அரசு ரத்த வங்கிகளின் ரத்த இருப்பு, ரத்த தான முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரம், ரத்த தான முகாம் அமைப்பாளர்களின் தொலைபேசி எண் போன்றவைகளை அனைவரும் அறியும் வண்ணம் அமைக்கப்பட்டு உள்ளது.
வலைதள ரத்த வங்கி மேலாண்மை முறையை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட 25 மடிகணினிகளையும், 25 இணையதள இணைப்பான்களையும் (டேட்டா கார்டு) அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.இந்த நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

>>>“சேது சமுத்திரத் திட்டம், தமிழரின் வரலாற்று உரிமை”


அனைவராலும் சேது சமுத்திரத் திட்டம் என்று அழைக்கப்படுகிற‌ சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தமிழரின் ஒரு நீண்ட கால கனவுத் திட்டமாகும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வணிகம் பெருகுவதற்கும், கரையோர மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கும், தமிழகக் கரையோர பயணிகள் கப்பல் போக்குவரத்து சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கும், சுற்றுலாத் தொழில் வளர்ந்து அரசுக்கு நல்ல வருவாய் கிட்டுவதற்கும்கூட இந்தத் திட்டம் மிகவும் தேவையான ஒன்று. இந்தத் திட்டத்தினால் விளையக் கூடிய நன்மைகள் பலவாகும்.

இத்திட்டத்தின் பயனைப் பற்றி இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தினுடைய‌ 1981-82ஆம் ஆண்டு மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வ‌றிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது:

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...