இடுகைகள்

ஆன்மீகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு...

படம்
 மூத்த குடிமக்களுக்கு புரட்டாசி மாத கட்டணமில்லா ஆன்மீகப் பயணம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... புரட்டாசி மாதத்தில் வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிக பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம்... >>> விண்ணப்பப் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா - அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேட்டி...

படம்
  அறுபடை வீடுகளுக்கு இலவச சுற்றுலா - அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பேட்டி... "முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் பேரை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல உள்ளோம்.  முதற்கட்ட பயணம் வரும் ஜனவரி 28ஆம் தேதி துவங்குகிறது'' என அமைச்சர் சேகர்பாபு நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட துறை நிலை ஓய்வூதிய பணியாளர்களுக்கு பொங்கல் கொடை வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார்.  இப்புதிய திட்டத்தின் மூலம் 2,646 துறை நிலையிலான ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.  இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில், அறுபடை திருத்தலங்களுக்கு பக்தர்களை கட்டணமில்லாமல் ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இலவச சுற்றுலா: பின்னர் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: ஆட்சி அமைந்து இதுவரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 304 நிகழ்ச்சி நடந்து உள்ளது.  முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அறுபடை வீடுகளாக உள்ள திருப்பரங்குன்றம், த

ஆறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு (A special compilation of the benefits of worshiping Arupadai Murugan)...

படம்
 அறுபடை முருகனை வழிபட்டால் ஏற்படும் பலன்களின் சிறப்பு தொகுப்பு... 1. திருப்பரங்குன்றம் : இங்கு முருகப்பெருமானை வழிபட்டால் திருமணம் நடைபெறும். 2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும். 3. திரு ஆவினன்குடி (பழனி): இங்கு ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனி ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும். 4. சுவாமிமலை (திருஏரகம்): இங்கு தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம். 5. திருத்தணிகை (குன்று தோராடல்): இங்கு குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும். 6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு...

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...

படம்
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு - கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம் (Attention Ayyappa Devotees Visiting Sabarimala – Opening and Closing Times of Major Temples in Kerala)...  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  கவனத்திற்கு.... கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்...  காடாம்புழா  பகவதி கோயில்  காலை : 5am ➖ 11am  மாலை : 3:30Pm ➖ 7pm  குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்  காலை : 3 மணி ➖ 1 மணி  மாலை 3 மணி ➖ இரவு 9 மணி  திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்  காலை : 4.30AM ➖ 12pm  மாலை : 4.30Pm ➖ 8:30pm  கொடுங்களூர் பகவதி கோயில்  காலை : 4 மணி ➖ 12 மணி  மாலை : 4.30Pm ➖ 8pm  சோட்டானிக்கரை பகவதி கோயில்  காலை : 3:30AM ➖ 12pm  மாலை 4 மணி ➖ இரவு 8 மணி  கீழ்க்காவு குருதி  இரவு: 8.30 மணி  வைக்கம் மகாதேவர் கோயில்  காலை : 4 மணி ➖ 12 மணி  மாலை 5 மணி ➖ இரவு 8 மணி  கட்டுருத்தி மகாதேவர் கோயில்  காலை : 4 மணி ➖ 12 மணி  மாலை 5 மணி ➖ இரவு 8 மணி  மல்லியூர் கணபதிகோயில்  காலை : 4.30AM ➖ 12:30pm  மாலை : 4.30Pm ➖ 8pm  ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்  காலை : 4

சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)...

  சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil   சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)... தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்…. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம் திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற

>>>கார்த்திகை தீபம் ஏற்றும் முறையும் பலனும்!

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். தீப லட்சுமி துதி 1. தீபோ ஜோதி பரம் ப்ரம்ஹ த

>>>இன்று கார்த்திகைதீபம்...

விளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே "பெரிய கார்த்திகை' எனப் போற்றப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய சிவன், தனிப்பெருங்கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை. கார்த்திகைக்குரிய பிரசாதமாக கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பம், பாயாசம், பிடிகொழுக்கட்டை ஆகியவையும் நைவேத்யத்தில் இடம்பெறும். திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்க

>>>பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயகர் இவ்வளவு தகவல்களா * "வி' என்றால் சிறப்பு. "நாயகன்' என்றால் தலைவர். சிறப்பு மிக்க தலைவர் என்பது பொருள். கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். * மூவரும் தேவரும் போற்றும் தனிப்பெருந்தெய்வம் விநாயகப் பெருமான். ஓங்கார வடிவமுடையவர். போற்றுபவர் துயர் போக்கும் கடவுள். அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியும் கருணைக்கடல். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார். * விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார். * விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. * விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்தி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...